Monday, November 22, 2010

பிரதிபலிப்பு

எந்த ஒரு
விசயத்திலும்..,
உன் முகம் காட்டும்..,

கோபமோ, மகிழ்ச்சியோ
மட்டுமே நான் பிரதிபலிக்கிறேன்..??!!

பெண்ணாகப் பிறந்ததைவிட,
நீ பார்க்கும் கண்ணாடியாகப்
பிறந்திருக்கலாம்??!!!..,

வலிகளாவது மிஞ்சியிருக்கும்.,



(இந்த வாரம் விகடனில்)

வெறுமையின் மொழியில்...

பகிர்தலுக்கு எதுவுமற்றுப் போனாலும்
ஒரு வெற்றுக்
குறுஞ்செய்தி அனுப்பு.

என் அலைபேசி
ஒலி எழுப்பட்டும்
எங்கோ உன்
இருப்பை அறிவித்து!

நிறுத்தம்

அலைபேசி அழைப்பில்
'எங்கே இருக்கிறாய்?'
எனக் கேட்கிறாய்
நீ விரல் பிடித்து
அழைத்துச் சென்று
நிறுத்திய இடத்தில்தான்
இருக்கிறேன் இன்னமும்...

சொல்...
நான் எங்கே இருக்கிறேன்?



எப்படி மறந்தாய்?

ஒரு வார்த்தையோ சிறு அசைவோ
போதுமானதாக இருக்கிறது
என் மீதான உனது வன்முறைக்கு...

எப்போதும் கூரிய ஆயுதங்களுடன்
எனைத் தாக்கக் காத்திருக்கிறாய்
காரணங்களுக்காக...

எப்படி மறந்தாய்
என்னிடமும் உண்டு
காரணங்களும் சில ஆயுதங்களும் என!


9 comments:

  1. இது கவிதைன்னு சத்தியம் பண்ணுங்க

    ReplyDelete
  2. ரமேஷ் கூறியது
    இது கவிதைனு சத்தியம் பண்ணுங்க//
    சிரிப்புபோலீஸ் பிளாக் மேல சத்தியம் இது கவிதைதான். வரிகளுக்கிடையில் இடைவெளி விட்டு, கமா, ஆச்சர்யக்குறி, கேள்விக்குறிலாம் போட்டிருக்கேனே இன்னும் என்ன டவுட்

    ReplyDelete
  3. //ராஜி சொன்னது…

    ரமேஷ் கூறியது
    இது கவிதைனு சத்தியம் பண்ணுங்க//
    சிரிப்புபோலீஸ் பிளாக் மேல சத்தியம் இது கவிதைதான். வரிகளுக்கிடையில் இடைவெளி விட்டு, கமா, ஆச்சர்யக்குறி, கேள்விக்குறிலாம் போட்டிருக்கேனே இன்னும் என்ன டவுட்
    ///

    சிரிப்பு போலீஸ் பிளாக் மேல சத்தியம் பண்ற அளவுக்கு அவ்ளோ பிமசான பிளாக்கா அது. யார் அந்த ஒனறு. பெரிய ஆளா?

    ReplyDelete
  4. //எப்படி மறந்தாய்
    என்னிடமும் உண்டு
    காரணங்களும் சில ஆயுதங்களும் என!///

    உண்மையான வரிகள்.

    ReplyDelete
  5. ரமேஷ் கூறியது//
    சிரிப்பு போலீஸ் பிளாக் மேல சத்தியம் பண்ற அளவுக்கு அது என்ன அவ்ளோ பிமசான பிளாக்கா அது. யார் அந்த ஒன்று. யார் அது//

    ஆமாம் ரொம்ப "பிமசான" பிளாக் தான். பிரிவு கவிதை னு போட்டிருக்கேன். பேமஸ் னு டைப் பண்ணத்தெரியாமல் பிரபல பதிவராகி இருக்கும் சிரிப்பு போலிஸ்தான் அது

    ReplyDelete
  6. நாகராஜசோழன் M.A. கூறியது
    உண்மையான வரிகள்@

    நன்றி. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

    ReplyDelete
  7. //பெண்ணாகப் பிறந்ததைவிட,
    நீ பார்க்கும் கண்ணாடியாகப்
    பிறந்திருக்கலாம்??!!!..,//

    ஏங்க இப்படி???

    ReplyDelete
  8. அன்பரசன் கூறியது// ஏங்க இப்படிஃஃ

    சில நேரங்களில், சில இடங்களில், சில பெண்களின் நிலை இதுவே

    ReplyDelete