Wednesday, November 30, 2011

உன்னை நான் அறிவேன்....,


தெருவடைத்துப் பந்தல்.
சூரியஒளியைத் தவிர,
உலகே திரண்டு வந்தது போன்ற கூட்டம்.
அத்தனைக் கண்களும் காணும் அவனை
எதேச்சையாக என் கண்களும் காண -
ஓ, எனக்குத் தெரியும் அவனை....,

அந்த சன நெரிசலில்,
வெள்ளை உடையில்
ரோஜா மாலையுடன் அவன் மட்டும்
வித்தியாசமாய்த் தெரிந்தான்.
எதற்காக நெளிகிறான்? -
ஓ, ரோஜா வாசம் அவனுக்கு பிடிக்காதே,
அதனாலா?
எனக்குத் தெரியும் அவனை…,

வருவோரின்
ஒவ்வொரு கைக்குலுக்கலின் போதும்
அவன் முகம் சுளிக்கிறான்.
அந்த முகச்சுளிப்புக்கு காரணமே
கைக்குலுக்கல் தான்.
கைக்குலுக்கல் அவனுக்குப் பிடிக்காது -
எனக்குத் தெரியும் அவனை…,

எவரோ ஒருவர்
பழச்சாறு கொண்ட கோப்பையை
அவனுக்கு நீட்ட, அவன் கண்கள்
மற்றவர்களுக்கு அளிக்கப்படும்
பெப்சி மெதுபானத்தின் மேல்
மேய்வதை நான் அறிவேன்.
எனக்குத் தெரியும் அவனை…

அவன் இடப்பக்கம்
அமர்ந்திருக்கும் மணப்பெண்ணின்
பச்சை நிறப் புடவையைப் பார்த்தேன்.
நிச்சயமாக அது அவனுடைய தேர்வு அல்ல.
எனக்குத் தெரியும் அவனை…

எதேச்சையாக அவன் பார்வை
என்னைத் தீண்ட -
வியப்புடன்!?
துளிர்த்த கண்ணீரை
தூசு துடைப்பதுபோல்
துடைத்துக்கொள்கிறான்.
எனக்குத் தெரியும் அவனை…

 

15 comments:

  1. கவிதை அருமை

    இது காதலி எழுதினதா!!? இல்லை அம்மா எழுதின கவிதையா!!?

    ReplyDelete
  2. காதலனின் திருமணதிற்கு சென்ற காதலி???

    ReplyDelete
  3. மனவலிகள் தெளிவாக தெரிகிறது வரிகளில்...!!!

    ReplyDelete
  4. காதலின் பிரிவை அனுபவித்தவன் நான், எனக்கு அந்த வேதனை புரிந்து கண்ணில் கண்ணீரை பெருக்குகிறது...!!!

    ReplyDelete
  5. லவ்வரோட மெரேஜ்க்கு போன ஃபிகரோட கவிதை போல மீ கண்டு பிடிச்சிங்க்

    ReplyDelete
  6. துரோகிகள் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது

    ReplyDelete
  7. எனக்கும் தெரியும் அவனை…-:)

    Awesome...

    ரசித்தேன்..வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. அழகான கவிதை

    ReplyDelete
  9. அசத்தலான கவிதை,
    ஆமா இது யாருக்கு யார் எழுதினது?

    ReplyDelete
  10. இது நிச்சயமாக ஒரு காதலியின் மனக்குமுறல்தான்...

    ReplyDelete
  11. மெல்லிய உணர்வுகளை
    எளிய சொற்களைக் கொண்டே
    மிக மிக அழுத்தமாக்ச் சொல்வதற்கு
    அதிக திறமை வேண்டும்
    அது உங்களுக்கு இயல்பாக வாய்த்திருக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த,ம 7

    ReplyDelete
  12. "தூசு துடைப்பதுபோல்
    துடைத்துக்கொள்கிறான்.
    எனக்குத் தெரியும் அவனை…"
    அருமை Sir!
    நம்ம தளத்தில்:
    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

    ReplyDelete
  13. இந்த கவிதை உங்களுடையது தானா? வெட்டி ஒட்டியிருந்தால் குறைந்த பட்சம் எழுதியவரின் பெயரையாவது போட்டிருக்கலாமே.

    http://movingmoon.com/node/124

    ReplyDelete