Tuesday, January 10, 2012

தாய்மை உணர்வு யாருக்கு சொந்தம்?


         ஒரு தாத்தா தன் பேருல இருக்குற சொத்தையெல்லாம், தன் தங்கையோட புகுந்த  வீட்டிற்கு எழுதி வைக்குறார்.  அந்த குடும்பத்துல யார் கடைசியா இறக்குறாங்களோ அவங்க விருப்பப்படிதான் செலவு பண்ணனும்ன்னு உயில் எழுதி வச்சு செத்து போயிடுறார்.

         அந்த குடும்ப உறுப்பினர்கள் வரிசையா இயற்கையாவே இறந்துடுறாங்க. கடைசியில் அந்த தாத்தாவோட, தங்கையும், அவங்க 2 வயது குழந்தயும் மட்டுமே உயிரோட இருக்காங்க. அவங்களும், ஒரு ஆற்றை கடக்கும்போது வெள்ளத்துல சிக்கி இறந்துடுறாங்க. 

        இப்போ அவங்க சொத்து வழக்கு அந்த ஊர் பெரியவர்கிட்ட வருது.  யார் கடைசியா உயிர் விட்டது தாயா? குழந்தையா?ன்னு. இப்போ மாதிரி போஸ்ட்மார்ட்டம், டி.என்.ஏ டெஸ்ட்டுன்னு விஞ்ஞான வளர்ச்சி இல்லாத கால கட்டம் அது.
      யார் யாரெல்லாமோ எப்படி எப்படியோ வாதாடுறாங்க. என்னென்னமோ சாட்சிகளை வைக்குறாங்க. ஆனால், அந்த ஊர் பெரியவரோட தீர்ப்பு அந்த குழந்தைதான் கடைசியா இறந்திருக்கும்.அதனோட தாய் முதல்லயே இறந்துட்டிருப்பாங்கன்னு தீர்ப்பு சொல்றார்.

        எப்படின்னு எல்லாரும் எதிர்த்து கேள்வி கேட்குறாங்க. ஆத்துல வெள்ளம் வர ஆரம்பிச்ச உடனே குழந்தையை அந்தம்மா முதல்ல இடுப்புல தூக்கிக்கிட்டு ஆற்றை கடக்க முயற்சி பண்ணி இருப்பாங்க.   வெள்ளம் அதிகம் வரும்போது, தோளில் தூக்கி வச்சுக்கிட்டு இருப்பாங்க. இன்னும் அதிகமா வெள்ளம் வரும்போது தலைக்கு மேல குழந்தையை தூக்கி வச்சுக்கிட்டு இருப்பாங்க. 

       அந்தம்மா மூக்கு வாயெல்லாம் தண்ணி ஏறி அவங்க மயங்கி விழுந்தபின்தான் குழந்தை தண்ணில விழும். அதற்கப்புறம் அந்த குழந்தை மூக்கு வாயெல்லாம்  தண்ணி ஏறி இறப்பதற்குள் அந்த தாய் செத்து போய் இருப்பாங்க. அதனால கடைசியா இறந்தது குழந்தைதான்னு தீர்ப்பு சொன்னேன்னு சொன்னதும் எல்லாரும் ஆமோதிச்சாங்கன்னு ரொம்ப நாளைக்கு முன்னாடி ரேடியோவில் தென்கச்சி சுவாமிநாதன் ஐயா சொல்லும்போது கேட்டது...,

தாய்மை உணர்வு என்னவோ மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமானது அதிலும் பெண்களுக்கு மட்டுமே சொந்தமானது என இதுநாள்வரை நினைத்திருந்தேன். இப்போலாம் பெண்கள்கிட்டயே தாய்மை உணர்வு மறைந்து வரும் கால கட்டம் இது. 

     ஆனால், அந்த தாய்மை உணர்வு எல்லா உயிர்களுக்கும் சொந்தமானதுன்னும், தன் குழந்தைக்கு ஆபத்து நேரும்போது  ஐந்தறிவு ஜீவன் கூட போராடும்ன்னு எனக்கு வந்த மெயில் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்..

ரோட்டை கடக்க முயற்சிக்கும்போது வண்டியில அடிப்பட்ட தாய் குரங்கு, தன் குட்டியை மிஸ் பண்ணிடுது.

                                
                                              
தன்னால் முடிஞ்சவரை இழுத்து பார்க்குது. ஆனால், அடிப்பட்ட குட்டி குரங்கால் நகர முடியாமல் கதறுது....

                               

எங்கிருந்தோ வந்த நாய் ஒண்ணு, அந்த குட்டி குரங்கை கடிச்சு குதற பார்க்குது. அதை தடுக்க, தாய் குரங்கு போராடுது...,

                              
தாய் குரங்கோட போராட்டம் தொடருது...,

                              

நாயோட சண்டை போட்டு, நாயை துரத்திவிட்டுட்டு.., குட்டியை காப்பாத்தி, தன் குட்டியை காப்பாற்றிவிட்ட பெருமிதத்தில்  தாய் குரங்கு.
                              
இப்போ சொல்லுங்க தாய்மை உணர்வு மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமா?

21 comments:

  1. //தாய்மை உணர்வு எல்லா உயிர்களுக்கும் சொந்தமானதுதான்.//

    சிறப்பான பதிவு.படங்களை பார்த்தபொழுது சிலிர்த்தது.

    ReplyDelete
  2. தாய்மை போற்றும் பதிவு..ஐந்தறிவு ஜீவிகளுக்கும் தாய்மை இருக்குங்கிறதுக்கு இதை விட வேறென்ன படங்கள் வேணும்..
    வந்தேன்..தென்கச்சியின் கதையை வாசித்தேன்.. வாக்கிட்டேன்.. நன்றி..

    சந்தேகம்

    ReplyDelete
  3. // தாய்மை உணர்வு எல்லா உயிர்களுக்கும் சொந்தமானதுதான். //


    Very true

    ReplyDelete
  4. தாய்மை போற்றுதும் குரங்கும் ஒரு தாய்

    ReplyDelete
  5. சின்னப்பையனா இருந்தப்ப நீதிக்கதைகள் படிச்சேன், அதுக்குப்பிறகு உங்க பிலாக்ல தான் எல்லாம் கத்துக்கிட்டேன் ஹி ஹி

    ReplyDelete
  6. தாய்மை உணர்வு விலங்குகளுக்கும் உண்டென்பது படங்களைப் பார்க்கையில் உணர முடிகிறது. மிகவும் மனம் மகிழ்ந்தேன் தங்கையே. ஆனால் மனித மனங்களில்தான் பாசம் குறைந்து வருகிறதோ என்ற சந்தேகம் தங்கை மலிக்காவின் இந்தப் பதிவைப் படிக்கையில் எழுந்தது. இன்னும் மனதில் உறுத்திக் கொண்டிருக்கிறது இந்தப் பதிவு.

    http://niroodai.blogspot.com/2011/12/blog-post.html

    பாசத்தை உணர்த்திய பதிவைப் படித்ததில் மகிழ்ச்சிம்மா.

    ReplyDelete
  7. அன்னையை மிஞ்சிய தெய்வம் இல்லை ..

    ReplyDelete
  8. கருத்துக்களை அழகாகவும் அருமையாகவும் பதிவு செய்துள்ளீர்கள் சகோதரி.

    ReplyDelete
  9. தாய்மை உணர்வு என்பது உயிர்களுக்கானது
    அது மனித இனத்திற்கு மட்டும் நிச்சயம் உரித்தானது இல்லை
    தங்கள் வளக்கக் கதையும் நெகிழ்ச்சியூட்டும் படங்களும்
    அதற்கான சுருக்கமான விளக்கமும் மிக மிக அருமை
    மிகச் சிறந்த பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. தாய்மை உனர்வு என்பது எந்தத் தாய்க்கும் -மனிதரோ,மிருகமோ-ஒன்றுதான்.
    நன்று.
    த.ம.8

    ReplyDelete
  11. 1000 Kavithaigalaal vilakka mudiyaatha Thaimai unarvai ungal pathivu undaakki vittathu. Vaalthukkal Sago.

    TM.

    ReplyDelete
  12. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி...

    மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..
    வாழ்த்துக்கள்...
    பாசத்தை உணர்த்திய பதிவைப் படித்ததில் மகிழ்ச்சி சகோதரி..

    ReplyDelete
  13. சில விதிவிலக்குகளைத்த தவிர தாய்மை எல்லோருக்குள்ளும்,எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கு ராஜி !

    ReplyDelete
  14. தாய்மை உணர்வு மனித குலத்துக்கு மட்டுமே சொந்தமா?

    உயிரினங்கள் அனைத்துக்கும் சொந்தமானது தாய்மை உணர்வு..

    படங்களும் கருத்தும் அற்புதமான பகிர்வு..

    ReplyDelete
  15. பதிவு ரொம்ப டச்சிங்’கா இருக்கு...

    ReplyDelete
  16. மனம் நெகிழ்த்திய பதிவு. பொதுவாகவே விலங்குகள், பறவைகளுக்கு தாய்மை அடைந்த நிலையில் மூர்க்கம் அதிகமாக இருக்குமென்று சொல்வார்கள். நம் வீட்டில் வளர்க்கும் கோழிகளிடமே இதைக் காணலாம். அடைகாக்கும் நேரத்தில் கிட்ட ஒருவரும் போகமுடியாது.அதன் எச்சரிக்கைக் குரலே படு ஆக்ரோஷமாக இருக்கும்.

    அந்தக் குரங்குக் குட்டியை நாயிடமிருந்து காப்பாற்ற முனையாமல் இத்தனைபேர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் இன்னும் வேதனையாக உள்ளது.

    ReplyDelete
  17. I just shed tears when reading this article. Nice post. Thankyou

    ReplyDelete
  18. படங்களை பார்த்ததும் உணர்ச்சிவசப்படாமல்
    இருக்க முடியவில்லை..

    " அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே..! "

    ReplyDelete