Friday, August 03, 2012

போவோமா ஊர்கோலம்?!




போவோமா? ஒரு திருமண
மண்டபத்திற்கு...
உண்மை பொருள்
உணர்ந்திட... 

உயிருடன் நடக்கும் கரும்பு
சக்கை.  அதோ
அவரே. பெண்ணிண் தந்தை...
அதோ மடியில் கட்டப்பட்ட
நெருப்பை அவிழ்த்து விட்டதாய்
கனவு காணும் பெண்ணின் தாயார்... 

உடற்பசிக்கும் பணப்பசிக்கும்
இலவசமாய் பெண் கிடைத்த
மகிழ்ச்சியில் அதோ மணமகன்... 


கடைசி பருக்கை வரை
பெண்ணின் வீட்டில் சுரண்டிய
தெம்பில் மணமகனின் தந்தை... 


வீட்டோடு இலவச வேலைக்காரி
கிடைத்த மகிழ்ச்சி களிப்பில்
அதோ மணமகனின் தாய்... 


வரதட்சணை வில்லேந்தி வந்த
ராமனையே கைப்பிடித்தாள் சீதையென்பதை
மறந்து வாழ்த்தும் கூட்டம்.. 


கடைசியாய் அவளும் சிரிக்கிறாள்
சி்ரிக்கட்டும் திருமண புகைப்படத்திற்காக...

29 comments:

  1. பெண்மையின் வேதனையில் மலர்ந்த கவி. இப்படி பெண்ணைப் பெற்றவர்களை கசக்கிப் பிழியாமல் உண்மையிலேயே பெண்ணை மதிப்பவர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.... என்ன. சதவீதத்தில் குறைவு. புன்னகை வரவழைத்தன உவமானங்கள். மனதைத் தொட்டது கவிதைக் கரு.

    ReplyDelete
    Replies
    1. கவிதையை ரசித்ததற்கு நன்றி அண்ணா. பேண்ணாஇ மதிப்பவர்களை பற்றி இக்கவிதையில் சொல்லலைண்ணா. பெண்ணை பெற்றவரிடம் முடிந்தவரை சுரண்டுபவரை மட்டுமே இக்கவிதை சாடுகிறது.

      Delete
  2. கடைசியாய் அவளும் சிரிக்கிறாள்
    சி்ரிக்கட்டும் திருமண புகைப்படத்திற்காக...

    காணாமலபோன கனவுகள் ...

    ReplyDelete
    Replies
    1. திருமண சந்தையில் சிலரின் கனவுகள் நிஜமாவே காணாமல் போய்விடுகிறது

      Delete
  3. //
    கடைசியாய் அவளும் சிரிக்கிறாள்
    சி்ரிக்கட்டும் திருமண புகைப்படத்திற்காக..

    //
    அவனுக்கும் அதே கதிதான்

    ReplyDelete
    Replies
    1. சொந்த ”நொந்த” அனுபவமோ?!

      Delete
  4. //கடைசி பருக்கை வரை
    பெண்ணின் வீட்டில் சுரண்டிய
    தெம்பில் மணமகனின் தந்தை... //

    உண்மைதான் இன்றும் பலபேர் இப்படித்தான் இருக்காங்க...

    ReplyDelete
    Replies
    1. என் கருத்தை ஆமோதித்தர்ஹற்கு நன்றி சகோ.

      Delete
  5. உண்மை தான் சகோ...
    முன்பை விட இப்போது சமுதாயம் மாறிக் கொண்டு வருகிறது...
    நன்றி…
    (த.ம. 4)

    ReplyDelete
  6. அடின்னா அடி சவுக்கடி - உண்மை தான் இதை உரக்க சொல்ல தயக்கமில்லை எனக்கு.

    ReplyDelete
  7. அருமை அருமை
    புகைப்படத்திற்காக சிரித்தாலும் கூட
    அத்தனையையும் மறந்து புகுந்த வீட்டிற்காக
    தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் இழக்கும்
    பெண்மையின் மேனமையை என்று அறியப்போகிறோம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இன்றய நிலையை அழகாக படம் படிக்கிறீர்கள் மிகவும் சிறப்பு இதற்குள்ளும் மிகப் பெரிய சித்தாந்தம் கொட்டிக் கிடக்கிறது எல்லப் பெண்களுமே மாப்பிள்ளையாக வருகின்றவர் நல்ல பொருள் வசதியுடனும் பொருளாதாரப் பின்னணியுடனும் கைநிறைய ஊதியத்துடனும் மாப்பிள்ளை வேண்டும் என்கிறார்கள் அதன் கொடுமைதான் நல்ல நிலயில் உள்ள ஒருபெண் நேர்மையான உண்மையான மனமகனை மணப்பெண் என எத்தனை பேர் முன்வருகிறார்கள் ? அதனால் தான் இந்த கொடுமைகள் .... சேம் சைடு கோலோ ? உண்மையை சொன்னேன் .

    ReplyDelete
  9. பெண்ணின் மன நிலை விளக்கும் அருமையான கவிதை (TM 6)

    ReplyDelete
  10. ஒவ்வொரு வரிகளிலும் உன்னதமாய் ஜொலிக்கும்
    உண்மையை விளம்பிய அருமையான கவிதை வரிகள்!!!...
    தொடர வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  11. உண்மை தாங்க.
    பெண்களுக்கு வாழ்க்கை
    ஒரு கனவாகத்தான் போய்விடுகிறது...
    அந்தக் கனவும் சில வாழ்க்கைணில்
    பாணாமல் போய்விடுகிறது.

    அருமையான கவிதை நட்பே.

    ReplyDelete
  12. நல்ல கவிதை. பல விஷயங்கள் இன்று மாறியிருந்தாலும், இன்னும் மாறவேண்டும் என்பது தான் எனது விருப்பமும்....

    த.ம. 8

    ReplyDelete
  13. சிறப்பான கவிதை! இன்றைய நடைமுறையை சாடும் வரிகள் அற்புதம்! நன்றி!

    ReplyDelete
  14. கவிதை நல்லா இருக்கு

    ReplyDelete
  15. ராஜி அக்காள் கலியாண வீட்டை இப்படி கோபமாக்கி கவிதையாக்கி விட்டா !ம்ம் நல்லா உறைக்க வேண்டும் வரதட்சனை கேட்போருக்கு!

    ReplyDelete
  16. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. நல்லதொரு கருத்துக்களை சொல்லி செல்லும் பதிவு

    ReplyDelete
  18. மாறாத மனிதர்களை மாறச் சொல்லும் கவிதை.
    கவிதை நன்றாக இருக்கிறது.
    மாற்றம் வர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. இப்போதாவது சிரிக்கட்டுமே!நன்று.

    ReplyDelete
  20. //கடைசியாய் அவளும் சிரிக்கிறாள்
    சி்ரிக்கட்டும் திருமண புகைப்படத்திற்காக... //
    அருமை வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. எந்த காலத்துல இருக்கீங்க???

    அவள் சிரிப்பின் அர்த்தம் வேறு நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க‌

    ஆகா நமக்கு ஒரு இளிச்சவாயன்( அடிமை) சிக்கிட்டான்னு நினைச்சு சிரிச்சு இருப்பா!!!

    ReplyDelete
  22. டைட்டிலை பார்த்ததும் சின்னத்தம்பி குஷ்பூ ஸ்டில் இருக்கும்னு வந்தேன் போச்சா போச்சா போச்சா?

    ReplyDelete
  23. "வரதட்சணை வில்லேந்திதான்" பலரும் இருக்கின்றார்கள்.

    ReplyDelete