Monday, November 05, 2012

நான் ஒரு இல்லத்தரசி

                                                                                 

வாம்மா சுஜி! நல்லாயிருக்கியாடி குழந்தே?!

ம் ம் ம் ஏதோ இருக்கேன் மாமி..,

என்னம்மா ஏன் சுரத்தேயில்லாம சொல்றே? வீட்டுல எதாவது பிரச்சனையா?! உங்காத்துக்காரர் எதாவது சொன்னாரா?

ஐயோ அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமி.

அப்புறம் உங்க மாமனார்.., மாமியார்? இல்லை பிள்ளைகளுக்கு எதாவது உடம்புக்கு முடியலையா?

ம்ஹூம்..

அப்புறம் ஏண்டியம்மா! ஒரு மாதிரி இருக்கே. உன் பிரசனை என்னன்னு  சொன்னாத்தானே எதாவது செய்ய முடியும்! ம் சொல்லுடியம்மா!

மாமி! விடிகாலை எழுந்து..,  வீடு வாசல் கூட்டி..,  சமைச்சு.., பசங்களையும்..., வீட்டுக்காரரையும் தயார் பண்ணி அனுப்பி...,  மாமியார், மாமனாரை கவனித்து.., துணி துவைச்சு, பாத்திரம் கழுவி, பால்காரன், கேஸ்காரனுக்கு பதில்சொல்லி, மாவரைச்சு.., துணி மடிச்சு..,குடும்ப நலனுக்காக  கோவ்லுக்கு போய் பூஜை செய்து.., மறுபடியும் நைட்டுக்கு சமைச்சு..,ன்னு ஒரே மாதிரியான வாழ்க்கை!! சலிப்பா இருக்கு மாமி. வேலைக்கு போற பொண்ணுங்களைலாம் பார்த்தா பொறாமையாவும் ஏக்கமாவும் இருக்கு மாமி.

ஏண்டியம்மா? அவங்களை பார்த்து பொறமைப்படுறே?!

விதம் விதமா சேலை.., சம்பளம், மேக்கப், தன் சம்பள பணத்தை அப்படியே  பொறந்த வீட்டுக்கு குடுத்து உதவலாம். வீட்டு பிடுங்கள்ல  இருந்துகொஞ்ச நேரத்துக்கு எஸ்கேப்பாகலாம்.

ஆனா, பகட்டை மட்டும் பார்த்து ஏக்கப்படுறியே! நீ நாள் முழுக்க செய்யுற வேலையை காலைலயே முடிச்சு., வீட்டுக்காரர், பிள்ளைகளை ரெடி பண்ணி அனுப்பி.., வீட்டுல பெரியவங்க இருந்தா அவங்களுக்கு சமைச்சு வெச்சு.., சாப்பிட்டும், சாப்பிடாம ஆஃபீசுக்கு கிளம்பி...,  பஸ்சுல, ஷேர் ஆட்டோல ”இடி மன்னர்கள்”ட்ட இடி பட்டு...,

சின்ன தப்புக்கு கூட நீயெல்லாம் ஏன் வேலைக்கு வர்றே?! வீட்டுல உக்காந்து சட்டி பானை கழுவ வேண்டியதுதானே?!ன்னு மேலதிகாரிக்கிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டு.., தனக்கு உடம்புக்கு முடியலைன்னு ஹோட்டல்ல இருந்து சாப்பாடு வாங்கிட்டு போனா..., ஹூம் எல்லாம் சம்பாதிக்கும் திமிருன்னு வீட்டுல இருக்குற பெருசுங்க முணுமுணுக்கும். புருசன் காரன் சரியா அமையலைன்னா கொஞ்சம் லேட்டா வந்தாலும், நல்லதா புடவை கட்டுனாலும் திட்டு விழும்.., தன்னோட சம்பாத்தியத்துல கொஞ்சத்தை தன் வீட்டுக்கு குடுக்க முடியாத சூழல்ல இன்னிக்கும் நிறைய பெண்கள் இருக்காங்கடியம்மா.

ஓ இவ்வளவு பிரச்சனை இருக்கா. 

உனக்கு உடம்புக்கு முடியலைன்னா வீட்டு வேலைகளை கொஞ்சம் தள்ளி வச்சுட்டு ரெஸ்ட் எடுத்துக்குறே. ஆனா, அவாலாம்  லீவு போட  முடியாம் ஆஃபீசுக்கு போகனும்.  முடியலைன்னா உனக்கொரு கஷ்டம்ண்ணா.., உன் ஆத்து மனுஷா இல்லாம அக்கம் பக்கத்துல நாங்க இருக்கோம். வீட்டைவிட்டு வெளியே போன பொண்ணுக்கு யார் துணைக்கு வருவாங்க? அப்படியே வர்றவால எத்தனை பேர் நல்லவாலா இருப்பா சொல்லு?!

அதுமட்டுமில்லாமா.., ஆத்துல இருக்குற பொம்மனாட்டிகளுக்குலாம் இப்போ வர்ற அரசாங்கள் கூட எவ்வளவு சலுகைகள் டருது. வாரத்துல ஒரு நாள் லீவ், சம்பளம் குடுக்கனும்லாம் கூட சொல்லுறங்க. இவ்வளவு ஏன் நம்மளை மாதிரியான பொம்மனாட்டிகளை மதிச்சு “HAPPY HOUSEWIFE DAY"லாம் ஒவ்வொரு வருசமும் நவம்பர் 2 நாள்  கொண்டாடுறாங்க.


அட, ஆமாம் மாமி இதெல்லாம் நான் யோசிக்கவே இல்லை.


ம் ம் ம் வேலைக்கு போறவாளோ?! இல்ல போகாதவாளோ?! பொம்மனாட்டியா பொறந்துட்டா ஒரே நேரத்துல பத்து அவதாரம் எடுக்கனும்டி புரிஞ்சுதா சுஜி?! அதனால், எல்லா பெரியவாளும் சொல்றாப்புல கடமையை செய்ய ஒரு போதும் சலிச்சுக்காதேடியம்மா.., இந்தா சூடா, ஸ்ட்ராங்கா ஒரு ஃபில்டர் காஃபி குடிச்சுட்டு போய் தெம்பா வேலை செய்.


இப்போ மனசு தெளிஞ்சு போச்சு மாமி.., நான் வீட்டுக்கு போய் வேலைகளை மளமளன்னு முடிச்சுட்டு வரேன்.

டிஸ்கி: கடந்த வெள்ளிக்கிழமை WORLD HOUSE WIFE DAY வாம். அன்னிக்கே பதிவு போடனும்ன்னு நினச்சு டைப் பண்ணி வெச்சேன். ஆனா, பதிவிட முடியலை. இருந்தாலும், நாமளே சோம்பேறி. ஒரு போஸ்ட் டைப் பண்ண ஒரு வாரம் ஆகும். டைப் பண்ணது வேஸ்டா போயிடக்கூடாதேன்ற  சுயநலத்துல  கொஞ்சம் லேட்டாவாது பதிவு போடலாம்ன்னு போட்டுட்டேன்.


22 comments:

  1. ம்ம்ம் ..நல்லா இருக்கு சகோ

    ReplyDelete
  2. சோம்பேறி//

    அண்ணனுக்கு தப்பாத தங்கச்சி, ஹே ஹே ஹே ஹே உலகம் இனி உருப்பட்டுரும் ஹி ஹி...!

    ReplyDelete
  3. இல்லத்துக்கு அரசிகளின் பணியை சாதாரணமாகச் சொல்லிவிட முடியுமா என்ன? குடும்பத்தைக் கவனிப்பதுடன் நாளைய தலைமுறையை சீரிய முறையில் வளர்த்து உருவாக்குவதும் அவர்கள் தானே...? அருமையா சுஜிக்கு மட்டுமில்லாம எங்களுக்கும விளக்கம் கொடுத்தாங்க மாமி. சூப்பரு,

    ReplyDelete
  4. நீங்க பதிவு போட்டதால தானே எங்களுக்கும் அந்த தினம் பற்றி தெரிந்தது....
    தெரியப்படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  5. நல்லா சொன்னீல் போங்கோ

    ReplyDelete
  6. எந்த காலமா இருந்தாலும் பெண்களுக்கான அவதாரங்கள் எத்தனை இருந்தாலும் அத்தனையும் அனுபவிச்சு தான் ஆகனும். நல்ல அலசல் நாத்தனாரே மனசு எனக்கும் கொஞ்சம் லேசா ஆச்சு.

    ReplyDelete
  7. @ பால கணேஷ்

    நாளைய தலைமுறையை சீரிய முறையில் வளர்த்து உருவாக்குவதும் அவர்கள் தானே...?
    ///////////////////////////////////////////

    சின்ன தொரு திருத்தம் கனேஷ் சார்....

    நாளைய தலைமுறையை மெகா சீரியல் முறையில் வளர்த்து உருவாக்குவதும் அவர்கள் தானே...?

    ReplyDelete
    Replies
    1. நான் சீரியல் மட்டுமில்லை.., டிவி பக்கமே அதிகம் போறதில்லை சகோ. பசங்களும் டிவி முன் அதிக நேரம் செலவிடுறதை தவிர்த்துடுறென்.

      Delete
  8. "அவதாரம் எடுக்கும் அரசிகள்' நல்ல அலசல்.

    வேலைக்கு போகிறார்களோ இல்லையோ எல்லோருமே இல்லத்து அரசிகள்தாம்.

    ReplyDelete
  9. ///பொம்மனாட்டியா பொறந்துட்டா ஒரே நேரத்துல பத்து அவதாரம் எடுக்கனும்டி புரிஞ்சுதா சுஜி///

    ஒன்று இரண்டு அவதாரத்தையே தாங்க முடியலை.. இதிலே பத்து அவதாராமா ? பத்து அவதாரம் எடுக்குற மாமி யாரு? அவங்க கணவரிடம் என் அனுதாபத்தை சொல்லிவிடுங்கள்

    ReplyDelete
  10. வேலைக்கு போறவாளோ?! இல்ல போகாதவாளோ?! பொம்மனாட்டியா பொறந்துட்டா ஒரே நேரத்துல பத்து அவதாரம் எடுக்கனும் ----

    நிதர்சனமான பகிர்வு .. பாராட்டுக்கள்...

    ReplyDelete
  11. ஒரு அலசு அலசி இருக்கீங்க

    ReplyDelete
  12. கடைசி பாராவில் தந்த ஒப்புதல் வாக்குமூலத்துக்கு நன்றி

    ReplyDelete
  13. // பொம்மனாட்டியா பொறந்துட்டா ஒரே நேரத்துல பத்து அவதாரம் எடுக்கனும்டி புரிஞ்சுதா சுஜி?!//

    கோபப்படும் போது தெரிவது பல அவதாரம் :))

    ReplyDelete
  14. ம்ம்ம்.... நல்ல தான் சொல்லி இருக்கீங்க! இரண்டு பக்கத்திலும் பிரச்சனை தான்..

    ReplyDelete
  15. பத்து அவதாராமா ?

    ReplyDelete
  16. அலசிக் காயப்போட்டுட்டிங்க :-))

    ReplyDelete
  17. அலசல் நல்லா இருக்கு

    world house wife day

    செய்திக்கு நன்றி

    ReplyDelete
  18. house wife day!

    ippothuthaan theriyum...

    nalla karuththum kooda serththeerkal-
    arumai...

    ReplyDelete
  19. November 3 falls on Saturday, not friday......wrong information

    ReplyDelete