Monday, July 03, 2017

காக்காவுக்கு சோறு வைக்க இதான் காரணம்- ஐஞ்சுவை அவியல்.

மாமா! எனக்கு ஏழரை சனி ஆரம்பிச்சிருக்காம். அதனால, கெட்டது நடக்காம இருக்கு காக்காவுக்கு சோறு வச்சிட்டு,, சாமி கும்பிட்டு அப்புறமா என்னை சாப்பிட சொல்லி இருக்காங்க. 

ம்ம்ம் மத்த பறவையை விட்டுட்டு காக்காவுக்கு ஏன் சோறு வைக்குறாங்கன்னு சொல்லு பார்க்கலாம்... 

சனி பகவானோட வாகனம்ங்குறதால சோறு வைக்குறாங்க. அதுமில்லாம நம்ம மூதாதையர்கள்லாம் காக்கா ரூபத்துல வருவாங்கன்னு சொல்றதாலயும் சோறு வைக்க சொல்றாங்க. அதுமட்டுமில்லாம, காக்காவுக்கு விருந்தாளிங்க வர்றது தெரியும். அதானலயும் சோறு வைக்க சொல்றாங்க. 

ம்க்கும், வாட்ஸ் ஆப், ஐ.எம்.ஓ, வீடியோ கால்ன்னு உலகம் போகுது. காக்கா வந்து உனக்கு தகவல் சொல்லுதா?!  ஆன்மீக காரணத்தை தாண்டி அறிவியல் காரணம் ஒன்னு இருக்கு. அது என்னன்னா, காக்காவுக்கு பய உணர்ச்சி இல்ல. பழக்காமயே மனிதர்களோடு சட்டுன்னு நெருங்கிடும். அதனால, வீடு, வாசல், தோட்டம்ன்னு மனிதர்கள் புழங்குற இடத்துல காக்காவும் புழங்கும். காக்கா செத்த பூச்சி, பல்லி, கரப்பான், எலி, பாம்பு, தவளைன்னு பாச்சைலாம் சாப்பிடும் குணம் கொண்டது.  சோறு சாப்பிட வரும் காக்கா வீட்டுல செத்து விழுந்திருக்கும் பல்லி கரப்பான், பாச்சைகளை சாப்பிட்டு சுத்து சூழலை சுத்தமா வச்சிக்க உதவுறதாலயும் காக்காவை வீட்டுக்கு வர வைக்குற உத்திக்காகத்தான் அப்பிடி சொல்லுறாங்க.

ஓஓஒ இதுல இப்பிடி ஒரு காரணமிருக்கா?! அப்ப போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை.. வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலைன்னு சொல்றாங்களே அதுக்கு என்ன அர்த்தம்ன்னு உனக்கு தெரியுமா?!

ம்ம்ம்  போக்கு + கற்றவன் அதாவது எவனெவன் எந்த மாதிரி நடந்துப்பான், என்ன மாதிரி நடந்திருக்கும்ன்னு யூகிக்க தெரிஞ்சவன்  போலீஸ் வேலைக்கு தகுதியானவன்.  வாக்கு +கற்றவன்.. வாக்குன்னா எல்லாத்தை பத்தியும் தெரிஞ்சுக்கிட்டிருந்தாலும் எல்லாருக்கும் புரியுற மாதிரி சொல்ல முடியாது அந்த  மாதிரி புரிய வைக்கும் திறமையை கொண்டவனுக்கு வாத்தியார் வேலை சரிப்பட்டு வரும்ன்னு சொல்லுறதுதான் இந்த பழமொழி... 

ம்ம்ம்ம் சரிதான். அடிக்காத பிள்ளை... அலறி துடிக்குது அது என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்.... 

கடைசில சொல்லுறேன். சரி , காலை, மாலை, ராத்திரின்னும் விருந்தாளி வரும்போதும்ன்னும் பால்காய்ச்சுறியே அதுல கவனிக்க வேண்டியது இருக்கே. அது என்னன்னு தெரியுமா?!

ம்க்கும் அது பெரிய கம்ப சூத்திரம் பாருங்க... சுத்தமான பாத்திரத்துல பாலை ஊத்தி அடுப்புல வச்சு பால் பொங்குனதுக்கப்புறம் அடுப்பை ஆஃப் பன்ணிட்டா வேலை முடிஞ்சது.

பாதி கரெக்ட்..  சுத்தமான பாத்திரத்துல பாலை காய்ச்சனும். காஃபிக்கு  பால்  ரொம்ப நேரம் கொதிக்க கூடாது.  ஆறின பால் அல்லது இளஞ்சூட்டிலதான் தயிருக்கு உரை ஊத்தனும். ஃபிரிட்ஜ்ல இருந்து எடுத்த உடனே பால் காய்ச்சக்கூடாது. ரூம் டெம்ப்ரேச்சருக்கு வந்தப்புறம்தான் பாலை காய்ச்சனும். பால் கொதிக்கும் வரை பக்கத்துல இருக்க முடியாதப்பா பால் இருக்கும் பாத்திரத்தில் சுத்தமான எவர்சில்வர் ஸ்பூனை போட்டு வைத்தால் பால் பொங்கி வராது. எதாவது டெக்னிக்கல் பால்ட்ல பால் திரிஞ்சு போய்ட்டா கீழ ஊத்திடாம பால்ல இருக்கும் தண்ணிய கீழ கொட்டிட்டு பால் கட்டிகளை லேசா சூடாக்கி சர்க்கரை, ஏலக்க்காய் சேர்த்து கிளறினா திரட்டுப்பால் ரெடி. சர்க்கரை பாகு காய்ச்சும்போது கொஞ்சம் பால் விட்டா சர்க்கரைல இருக்கும் அழுக்குலாம் மேல மிதந்து வந்திரும். காய்ச்சாத பால் கொண்டு முகத்தை கழுவினா ஸ்கின்ல இருக்கும் அழுக்குலாம் வெளிவந்திரும்.  பால் காய்ச்சுன பாத்திரத்துல   சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சாலோ இல்ல  பால் கொஞ்சம் சேர்த்து மாவு பிசைஞ்சாலும் சப்பாத்தி சாஃப்டா இருக்கும்.  

சாப்பிட்டா எப்படி இருக்கும் மாமா?!

நக்கலு?! நான் சொன்னது சாஃப்ட். எப்பப்பாரு திங்குற நினைப்புலயே இரு.

சும்மா ரொம்ப லெந்தா பேசிக்கிட்டே இருந்தியே அதான் கூல் பண்ணலாம்ன்னு....

கூல் பண்ணனும்ன்னா இதுமாதிரியான படங்களை அனுப்பனும். 


வல்லவனுக்கு ஸ்கூட்டரும் ஆயுதம்ன்னு புதுமொழிய உண்டாக்கி இருக்காங்க நம்மாளுங்க...


சரிங்க மாமா. துணி ஊற வெச்சு ரொம்ப நேரமாச்சு. போய் துவைச்சு போட்டுட்டு வரேன்.

துணி துவைக்கும்போது.....

ஐய்ய்ய்ய்ய்ய்யா சாமி ஆளை விடு....

தமிழ்மணம் ஓட்டுப்பட்டை..


நன்றியுடன்,
ராஜி.

19 comments:

  1. //கடைசில சொல்லுறேன்//

    'மாமா’ சொன்னதுகளில் எனக்குத் தெரியாத நல்ல தகவல்கள் நிறையவே இருக்கு. நன்றி. “கடைசியில் சொல்லுறே”ன்னு சொன்னாரே, அதைச் சொல்லவே இல்லையே?

    நீங்களும் சொல்லல. வேறு யாரும் சொல்லுவாங்கதானே?

    ReplyDelete
    Replies
    1. நம்ம டிடி சொல்லிட்டாருப்பா

      Delete
  2. சமையல் குறிப்பு பயனுள்ளது சகோதரி...

    அந்த பிள்ளை : ஊஊஊஊஊஊ (சங்கு)

    ReplyDelete
    Replies
    1. விடை சரிதான்ண்ணே

      Delete
  3. வல்லவனின் ஸ்கூட்டர் ஸூப்பர்
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ண்ணே. புதுசா இருக்கு. வண்டிய வெச்சு ஏர் உழுவுற படத்தை பார்த்திருக்கேன். செக்குல ஸ்கூட்டரை பூட்டி இப்பதான் பார்க்குறேன்

      Delete
  4. காக்காய் இல்லாத இடமும் உண்டா ராஜி? காக்காய்க்கு சோறு போட சொன்ன உதாரணம் அசத்தல். செக்குல சுத்தும் ஸ்கூட்டர் எப்பவோ பார்த்து ரசித்த படம் தான்பா. நம்மாட்கள் புத்திசாலிகள் தான்.

    ReplyDelete
    Replies
    1. நியூசிலாந்துல காக்கா இல்லன்னு கேள்விப்பட்டிருக்கேன் நிஷாக்கா.

      Delete
  5. போக்கத்தவனையும் , வாக்கத்தவனையும் மிகவும் ரசித்தேன்.

    தம +1

    ReplyDelete
    Replies
    1. வாக்கத்தவனையும், போக்கத்தவனையும் இப்பதானா இதை கேள்விப்படுறீங்க?! நம்ப முடியலியே!

      Delete
  6. வல்லவனுக்கு ஸ்கூட்டரும்.....வித்தியாசமான சிந்தனை. ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நானும்தான்பா ரசித்தேன். அதான் பகிர்ந்தேன்

      Delete
  7. வல்ல்வனுக்கு ஸ்கூட்டரும் ஆயுதம் அருமை.பகிர்ந்த செய்திகள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  8. இரசித்தேன்! சுவை தேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி உரைத்தேன்

      Delete
  9. காக்கா குறித்த தகவல்கள் அருமை
    கெட்டுப்போன பால் குறித்த தகவலும்
    மாமாவுடன் பயனுள்ள அரட்டை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  10. வல்லவனுக்கு ஸ்கூட்டரும் ஆயுதம்ன்னு புதுமொழிய உண்டாக்கி இருக்காங்க நம்மாளுங்க...//
    ஹஹஹஹ்ஹ...அது போன்று பேச்சத்தவன், வாக்கத்தவன் ஹாஹ்ஹ

    ஐஞ்சுவை அவியலை ரசித்தோம்...இருவருமே!!

    ReplyDelete
    Replies
    1. பதிவை படித்து ரசித்தமைக்கு நன்றிங்க...

      Delete