Monday, April 16, 2018

இறைவன் இல்லா இடத்தில் துயில் கொள் மகளே! -ஆசிபா


அஞ்சுக்கும் பத்துக்கும், ஏன் உடல்பசிக்கு தானாய் முன்வரும் பெண்களை கொண்ட தேசத்தில் தினத்துக்கு ஒரு கற்பழிப்பு. அதும் உறுப்புகள் முழுதும் வளராத மொட்டுக்களை...  இதை சாதாரணமாய் கடந்து செல்லக்கூடியதில்லை.  வளர்ந்த பிள்ளைகள்கூட படிப்பு, பணிநிமித்தமாய் நள்ளிரவில் வீதிகளில் சுதந்தரமாய், பாதுகாப்பாய் உலாவரும் அதேவேளையில் மழலைமொழி மாறாத பிஞ்சுகள், குரங்கிடம் அகப்பட்ட பூமாலைப்போல கசங்கி நசுங்கி அழிந்து போவதென்பது எத்தனை கொடூரம்?!

சில செ.மீ நீளம் கொண்ட ஒரு மெல்லிய சவ்வுதான் கன்னித்திரை... அதைக்கொண்டு ஆணுக்கும், பெண்ணுக்கும் எத்தனை வேறுபாடு?! ஜெயகாந்தனின், சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலின் கதாநாயகி இதுப்போல கற்பழிக்கப்பட்டதும், வீட்டில் வந்து சொன்னதும், தலைக்கு தண்ணி ஊத்தி வீட்டுக்குள் கூப்புட்டுக்குறதா கனவு காண்பாள். ஆனா, நடமுறை வேறு. அதுமாதிரி, இந்த கற்பழிப்புகள்லாம் ஜஸ்ட் லைக் தட்ன்னு கடந்து போகனும்.  அதுக்காக, உடல் கொழுப்பெடுத்து சுத்தும் பெண்கள் கண்டிப்பா அதுக்கான தண்டனை பெறனும்.  உடல் சேர்க்கையின்மூலம் ஒரு உயிரை படைக்க வேண்டிய ஆண், அதே உடல் சேர்க்கையின் காரணமாய்  ஒரு உயிரை பறிப்பது முரண்.   எந்த ஜாதி, மதம், ஏழை, பணக்காரன்னு எங்கு நடந்தாலும் ஒரே நீதி வழங்கும் தெளிவும், துணிவும் நமது அரசுக்கு வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் டெல்லி நிர்பயா...  சென்னை ஹாசினி, விழுப்புரம் மாவட்டத்தின் ஆராயி மகள், உ.பி, குஜராத், கர்நாடகாவுல...ன்னு இன்னும் பெயர் தெரியா குழந்தைகளின் கற்பழிப்பு நீண்டுக்கிட்டே போகுது. எல்லா கற்பழிப்பையும் போல குழந்தைகள் கற்பழிப்பை ஏத்துக்கிட்டு சாதாரணமா கடந்துட முடியாது.,  உடலளவில் உறவுக்கு தயாராகி நிற்கும் பெண்களே, இந்த சமயத்தால் உடல், மனதால் பலவித பாதிப்புக்கு ஆளாகி மீண்டு வர நாளாகும்போது, சிறு குழந்தைகள் என்ன பாடுபடும்!?

உறுப்பு நுழைய முடியாத இடத்தில் உறுப்பை நுழைத்து என்ன சுகம் காணமுடியும்ன்னு உணராத மிருகம். ஐந்தறிவு ஜீவன்கூட இதுமாதிரியான இழிசெயலில் ஈடுபடாது.  ஆசிபா விசயத்தில்  நடந்த கற்பழிப்பு மட்டும் யோசிக்க வேண்டிய விசயமல்ல.  அது நடந்த இடம், அதை செஞ்ச ஆளுங்களும், அது நடக்க அவங்க சொன்ன காரணம், குற்றத்தை மறைக்க நடக்கும் பூசிமழுப்பல்கள், ஆணவத்தொனியில் அலட்சியமாய் சொல்லப்படும் பதில்களால் இன்னிக்கு இந்தியாவே ஆசிபாவுக்காக போராடுது.


ஏழு வயசு குழந்தை, எட்டு நாள், அன்ன ஆகாரமின்றி, திணிக்கப்பட்ட மயக்கம், எட்டு பேர் கொண்ட கும்பலின் வெறி, கடைசியில் கொலை, அதை மறைக்க சாட்சியங்கள் அழிப்பு, வெளியில் தெரிந்தபின்னும் குற்றவாளிகளுக்கு சப்போர்ட்..ன்னு மூணு மாசமாய் மறைக்கப்பட்ட உண்மை ஒரு நேர்மையான அதிகாரின்னு சொல்லுறதைவிட மனசாட்சியுள்ள ஆணால் வெளிவந்து இப்படியும் நடக்குமான்னு மனசை பதற வைக்குது. 

ஆசிபா அப்பா சொல்றார்.. நாங்க எல்லா இடத்திலயும் தேடினோம். ஆனா கோவில்ல தேடலை. ஏன்னா, அது புனிதமான இடம்ன்னு  நாங்க நினைச்சோம்ன்னு. கோவில்லயே இருக்குறவனுக்குதானே தெரியும்... அங்க இருக்குறது கடவுள் இல்லை, கற்சிலைன்னு!! ஆசிபாவின் குரலுக்கு அங்கிருக்கும் தெய்வமும் ஓடிவரல. ஆசிபாவின் குலதெய்வமும், மத வேறுபாட்டால் கோவிலுக்குள் நுழைய முடியாமல் வாசலிலே நின்று இந்த கருமத்தை பார்த்து கண்ணீர் விட்டதோ?! இந்த அவஸ்தைகளை எதிரி வீட்டு பிள்ளை பட்டிருந்தால்கூட,  பொங்கி இருப்பான்  மனசாட்சியுள்ள மனுசன்.  ஆனா, வினைப்பயன், கர்மான்னு நொள்ளை, நொட்டை சொல்லிக்கிட்டு , மிக்சர் தின்னுக்கிட்டே இதையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்திருக்கு அந்த கோவிலில் இருந்த கடவுள். அந்த கடவுள் இருக்குறதைவிட இல்லைன்னாலே நல்லா இருக்கும். எல்லா கோவிலையும் இடிச்சுட்டு பள்ளி, கல்லூரியா மாத்த வேண்டிய காலக்கட்டத்துக்கு வந்துட்டோம்ன்னு நினைக்குறேன்.

நட்ட நடு ராத்திரியில் தனியா போனாள், அதான் ரேப் பண்ணாங்க. அவ சரியா ட்ரெஸ் பண்ணலை அதனால ரேப் பண்ணாங்கன்னு சப்பைக்கட்டு கட்டுனவங்கலாம் ஏழு வயசு குழந்தைய எதைக்கண்டு ரேப் பண்றாங்கம்ன்னு சொல்லட்டும்.  இவனுங்களைலாம் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அடுத்த நொடி, கண் பார்வை, காதின் கேட்கும் திறன், வாய் பேசும் திறனை எடுத்துட்டு நெத்தில பச்சை குத்தி ரோட்டில் விட்டுடனும். அப்பதான் மத்தவங்க இப்படி செய்யமாட்டாங்க.


நாத்திகன்கூட கோவிலை இப்படி பாழ்படுத்தமாட்டான். மாற வேண்டியது சட்டதிட்டங்கள் மட்டுமில்ல. சமூகமும்கூட..., அதிலும் குறிப்பாக அம்மாக்கள்தான். பெண்குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் சொல்லி தரும் அதேவேளையில் .. பெண் என்பவள் சக மனுஷி. அவளுக்கும் ரத்தமும் சதையும், மனசும் இருக்கு. அவளை காயப்படுத்தக்கூடாதுன்னு சொல்லி புரிய வைக்கனும்.   அதைவிட்டு ஆம்பிளை பிள்ளைன்னு வீட்டில் செல்லம் கொடுத்தா வெளில இப்படிதான் செய்யும்.  அறிவுரை பெண்பிள்ளைகளுக்கு மட்டுமில்ல. ஆண்பிள்ளைக்கும்கூட சொல்லலாம். 

இனியொரு ஆசிபா உருவாகாமல் இருக்க கடவுளை நம்பாம தக்க நடவடிக்கை எடுப்போம்..  கமலாவது கடவுள் இல்லன்னு நான் எப்ப சொன்னேன், கடவுள் இருந்திருந்தா நல்லா இருக்கும்ன்னு அவர் படத்தில் சொல்லியிருக்காரு..  ஆனா, இனி நான் கடவுள் இல்லைன்னாலே எல்லாரும் நல்லா இருப்பாங்கன்னு சொல்வேன்.

ஆசிபா! இறைவனின் காலடியில் நீ பட்ட பாடு போதும். இறைவன் என்ற ஒருவன் இருந்தால் அவன் இல்லாத இடம் சென்று இளைப்பாறு மகளே! மனிதர்கள் மட்டுமல்ல இறைவனும் கயவனே!


நன்றியுடன்,
ராஜி

20 comments:

 1. தங்களது குமுறல் புரிகிறது.
  எனக்கு இந்த விடயம் கடவுள் இல்லை மனிதர்கள் கற்பனையாக உருவாக்கி கொண்டதே என்று தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. சொல்லி அழ ஆள் வேணும்ன்னு படைக்கப்பட்டதே கடவுள். மத்தபடி கடவுள்ன்னு தனியாய் இல்லை. பஞ்சபூதத்தால் உருவானது இவ்வுலகு, அப்படி பார்த்தா பஞ்சபூதங்கள்தான் கடவுள். இதை தெளிவா சொல்வதே நமது சிறுதெய்வ வழிபாடு. மத்தபடி சிவன், விஷ்ணு, அல்லா ஏசுலாம் மனித கற்பனையின் உச்சம்.

   Delete
 2. சூடு சொரணை என்று ஏதாவது இருந்தால் தானே...?

  ReplyDelete
  Replies
  1. அதான் இல்லன்னு ஊர், உலகமே கழுவி கழுவி ஊத்துறாய்ங்களே!

   Delete
 3. அவன் செய்தது மட்டுமல்ல தவறு, அவனது கொள்கை, அந்தக் கொள்கையை கொடுத்த அவனது முன்னோர், அதை முன்மொழிந்து வழிமொழிந்த அதிகார வர்க்கம், அதையே இன்றுவரை கேள்வி கேட்காமல் பின்பற்றும் தற்கால சமூகம் என்று எல்லாருமே ஒருவகையில் அந்தக் குழந்தைக்கு அநீதி செய்தவர்கள் தானே?

  ReplyDelete
  Replies
  1. அதை எல்லாம் பார்த்துக்கிட்டு இணையத்தில் பதிவாக்கிட்டு பத்தோடு பதினொண்ணா கடந்து போகும் நாமும் ஒரு காரணம்.

   வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 4. "இறைவன் இல்லா இடத்தில் துயில் கொள் மகளே! -ஆசிபா" இந்தப்பதிவை படித்து முடித்த போது பேச வார்த்தை வரவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டது.மனது கனத்துப் போனது. உங்கள் எழுத்திற்கு வலிமை உள்ளது. இந்த அவல நிலை மாறும் என்று நம்புவோம். "இனியொரு ஆசிபா உருவாகாமல் இருக்க கடவுளை நம்பாம தக்க நடவடிக்கை எடுப்போம்.. "

  ReplyDelete
  Replies
  1. மிக்சர் தின்னுக்கிட்டிருந்த கடவுள் இனி வேண்டாம். இனியாவது பிள்ளைகளை பொறுப்பாய் வளர்ப்போம்.

   Delete
 5. என்னத்த சொல்ல......கலிகாலம்....குழந்தைகளைத் தெய்வங்கள் என்போம்..ஆனால்........

  ReplyDelete
  Replies
  1. கலிகாலத்தைவிட மோசம்

   Delete
 6. ஏழு வயசா? ஏழு எட்டு மாதக் குழந்தையை எல்லாம் கற்பழித்த மிருகங்கள் வாழும் நாடு இது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்குச் சமம். தண்டனைகள் கடுமையாக்கப்பட்டாலொழிய ஐவகைக் குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை.

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொன்னது சரிதான் சகோ. கடுமையான தண்டனை இல்லங்குறதாலதான் இப்படிலாம் நடக்குது.

   Delete
 7. //ஆசிபா அப்பா சொல்றார்.. நாங்க எல்லா இடத்திலயும் தேடினோம். ஆனா கோவில்ல தேடலை. ஏன்னா, அது புனிதமான இடம்ன்னு நாங்க நினைச்சோம்ன்னு. கோவில்லயே இருக்குறவனுக்குதானே தெரியும்... அங்க இருக்குறது கடவுள் இல்லை, கற்சிலைன்னு... ஆசிபாவின் குரலுக்கு அங்கிருக்கும் தெய்வமும் ஓடிவரல. ஆசிபாவின் குலதெய்வமும், மத வேறுபாட்டால் கோவிலுக்குள் நுழைய முடியாமல் வாசலிலே நின்று இந்த கருமத்தை பார்த்து கண்ணீர் விட்டதோ?! இந்த அவஸ்தைகளை எதிரி வீட்டு பிள்ளை பட்டிருந்தால்கூட பொங்கி இருப்பான் மனுசன், ஆனா, வினைப்பயன், கர்மான்னு நொள்ளை, நொட்டை சொல்லிக்கிட்டு இதையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்த கடவுள் இல்லைன்னாலே நல்லா இருக்கும். எல்லா கோவிலையும் இடிச்சுட்டு பள்ளி, கல்லூரியா மாத்த வேண்டிய காலக்கட்டத்துக்கு வந்துட்டோம்ன்னு நினைக்குறேன்//

  நினைக்கிறதென்ன, வெகு சீக்கிரத்தில் நடக்கணும்; நடக்கும்.

  கட்டுப்படுத்த இயலாத வேதனையின் வெளிப்பாடு இந்தப் பதிவு.

  ReplyDelete
  Replies
  1. நிஜமாப்பா! என் அப்பாவின் ஃப்ரெண்ட் கடுமையான தி.க காரர். சாமி பூஜைன்னு சொன்னாலே திட்டுவார். ஆனா, என் அப்பா மாலை போட்டிருக்கும்போது குளிக்காம வீட்டுக்கு வரமாட்டார். தண்ணி, தம்ன்னு எதாவது சாப்பிட்டார்ன்னா அப்பாக்கிட்ட பேசமாட்டார்.

   இந்த பக்குவம், சாமி பூதம்ன்னு சொல்லிக்கிட்டு திரியுறவங்களுக்கு தெரில பாருங்க

   Delete
 8. Replies
  1. மனசு ஆறலை சௌந்தர்.

   Delete
 9. சகோதரி/ராஜி

  இவங்களை எல்லாம் சுட்டுக் கொல்லணும்...தூக்குத்தண்டனை கொடுத்து நீதி வழங்கப்பட வேண்டும். நம்மூரில் சட்டங்கள் நீதி வலுவாக இல்லை அதனால்தான் இப்படியான கொடும்பாவிகள் கயவர்கள் அரக்கர்கள் சுதந்திரமாகத் திரிகிறார்கள். இப்போதேனும் தண்டனை சிவியராக வழங்கபப்ட வேண்டும். உடனடியாக.... இழுத்தடிக்காமல்...

  ReplyDelete
  Replies
  1. தண்டனையை இழுத்தடிச்சாலும் பரவாயில்ல. தையல் மெஷின் கொடுப்பாங்களே! அதை நினைச்சால்தான்...

   Delete
 10. //எல்லா கோவிலையும் இடிச்சுட்டு பள்ளி, கல்லூரியா மாத்த வேண்டிய காலக்கட்டத்துக்கு வந்துட்டோம்ன்னு நினைக்குறேன்.//

  பள்ளி , கல்லூரியிலும் பாதுகாப்பு இல்லை .
  யாரைத்தான் நம்புவது என்று இருக்கிறது.
  பக்கத்துவீட்டு அண்ணனென்று நம்பி விளையாட போன குழந்தை காணவில்லை.
  ஆசிரியர் என்று நம்பினால் நான் மிருகம் என்கிறார்.
  ஆசிரியர் தாய் மாதிரி என்றால் அவர் புரோக்கர் ஆகிறார்.

  வேலியே பயிரை மேய்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம் என்ன சொல்லன்னு தெரிலம்மா. பேசாம உலகமே அழிஞ்சு போனா நல்லா இருக்கும்ம்மா

   Delete