Tuesday, June 26, 2018

ரெண்டே நிமிசத்துல தயாராகும் சட்னி - கிச்சன் கார்னர்

ஒருத்தருக்கு இட்லி, இன்னொருத்தருக்கு தோசை, அப்பாக்கு சப்பாத்தி, அம்மாக்கு கிச்சடின்னு வெரைட்டியா செய்யுறதுகூட ஈசி. ஆனா அதுக்கு தொட்டுக்க சட்னி, சாம்பார் என்ன செய்யலாம்ன்றதுதான் கஷ்டம். தலைய பிச்சுக்க வைக்கும் வேலையும்கூட.... காலை நேரத்துல, குறைஞ்ச பொருட்களை கொண்டு ஈசியா தயார் செய்யுற மாதிரி சில சட்னி வகைகளை இன்னிக்கு பார்க்கலாம்.

மிளகு, தக்காளி சட்னி...
பழுத்த தக்காளி
மிளகு
மிளகாய்
வெந்தயம் 
உப்பு
நல்ல எண்ணெய்
உப்பு
கடுகு
கறிவேப்பிலை



வாணலில எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்   மிளகு, வெந்தயம், மிளகாய் போட்டு சிவக்க விடனும். வெந்தயம் சும்மா பத்து போட்டால் போதும். அதிகமா போட்டா சட்னி கசந்திடும். 
வெட்டி வச்சிருக்கும் தக்காளி சேர்க்கனும்.

 உப்பு சேர்த்து நல்லா வதக்கனும்.  தக்காளி வெந்ததும், அடுப்பை அணைச்சு, தக்காளி ஆறினதும் மிக்சில நைசா அரைச்சுக்கனும்.
தாளிக்குற கரண்டில நல்ல எண்ணெய் ஊத்தி கடுகு போட்டு பொறிஞ்சதும் கறிவேப்பிலை போட்டு தாளிச்சு சட்னில கொட்டிக்கனும். காரசாரமா வித்தியாசமான மணத்துல இருக்கும் இந்த சட்னி.  வெந்தயம், நல்ல எண்ணெய்லாம் சேர்க்குறதால உடலுக்கும் குளிர்ச்சி. சட்னி காரசாரமா இருந்தாலும் மிளகு சேர்த்திருப்பதால் வயித்துக்கும் கெடுதல் இல்ல.

வேர்க்கடலை சட்னி...
வறுத்து தோல் நீக்கிய வேர்கடலை..
பூண்டு  சில பல்
புளி கொஞ்சூண்டு
உப்பு
காய்ந்த மிளகாய்
உப்பு
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை.

 மிக்சில  மிளகாய், புளி, பூண்டுலாம் சேர்த்து லேசா அரைச்சப்பின், அதோடு  வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையும், உப்பும், தண்ணியும் சேர்த்து கரகரப்பா அரைச்சுக்கனும்.  முதல்லியே லேசா தண்ணி ஊத்தி சட்னி அரைச்சுக்கோங்க. இல்லன்னா, பிசுபிசுன்னு மிக்சில சட்னி ஒட்டிக்கும். 
கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிச்சுக்கனும். வேர்கடலை சட்னி கெட்டியா இல்லாம தண்ணியா இருந்தால்தான் இட்லி, தோசைக்கு சேர்த்தால் நல்லா இருக்கும். வேர்க்கடலை சட்னில லேசா புளி சேர்த்துக்குறதால, வேர்க்கடலைல இருக்கும் மூக்கால உண்டாகும் பித்தத்தை தவிர்க்கலாம்.

வெங்காயம், பொட்டுக்கடலை சட்னி...
தேங்காய்
பெரிய வெங்காயம்
தக்காளி
காய்ந்த மிளகாய்
பொட்டுக்கடலை
பூண்டு
புளி
உப்பு
எண்ணெய்
கடுகு
கறிவேப்பிலை


தேங்காய், வெங்காயம், மிளகாய், பூண்டு, புளிலாம் சேர்த்து மிக்சில அரைக்கனும். கொஞ்சம் மசிஞ்சதும், தக்காளி, உப்பு சேர்த்து கரகரப்பா அரைச்சுக்கனும். 
தேங்காயும் வெங்காயமும் சரிசமமா இருக்கனும். பொட்டுக்கடலை கொஞ்சமா சேர்த்துக்கிட்டால் போதும். சட்னி கொஞ்சம் கெட்டியா இருந்தால் நல்லா இருக்கும். கடுகு கறிவேப்பிலை போட்டு தாளிச்சுக்கனும்.  இது சப்பாத்தி, பொங்கலுக்கும் நல்லா இருக்கும்.

நன்றியுடன்,
ராஜி

11 comments:

  1. பார்க்கலாம் இதன் சுவைளை...

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்கும்ண்ணே. செஞ்சு பாருங்க.

      Delete
  2. அருமை.......செஞ்சு பாத்துடுவோம்........என்ன,டைம் வேணும்......

    ReplyDelete
    Replies
    1. இதுக்கே டைம் வேணுமா?! ரொம்ப நல்லது

      Delete
  3. செம ரெசிப்பிஸ் ராஜி. இந்த மூனுமே செய்வதுண்டு....உங்க குறிப்பையும் எடுத்து வைச்சுக்கிட்டேன்...

    கீதா

    ReplyDelete
  4. செய்திருக்கோம்.

    அதுசரி, முஹல் இரண்டு ரெசிப்பிகளிலும் ரெண்டு ரெண்டு வாட்டி உப்பு, உப்புன்னு போட்டிருப்பதற்கு ஏதும் விசேஷ காரணம் உண்டா?!!!

    ReplyDelete
    Replies
    1. // முஹல் //

      ச்சே... "முதல்..."

      Delete
    2. உப்பிட்டவரை உள்ளளவும் நினைன்னு சொல்வாங்க. அதான், நிறைய உப்பு போட்டுட்டேன்.

      Delete
  5. வணக்கம் !

    அடடா எத்தனை வகை செய்து காட்டி இருக்கீங்க இதையெல்லாம் செய்து பார்க்க எப்போ முடியும்ன்னு தெரியலையே பார்க்கலாம் .......

    பகிர்வுக்கு நன்றி ராஜி வாழ்க நலம்

    ReplyDelete