Monday, July 16, 2018

திருவள்ளுவர் பொய் சொல்லிட்டாரா?! ஐஞ்சுவை அவியல்

என்ன புள்ள! என்னிக்கும் இல்லாத திருநாளா விளக்கு வச்சும் படுத்துக்கிட்டு இருக்கே! 

பல்லு வலி தாங்க முடில மாமா. அதான்.

எதுமே நம்மோடு இருக்கும்வரை நமக்கு அலட்சியம்தான்.  அதுல எதாவது கோளாறுன்னா மட்டும் அழுது புலம்புவோம்.  அது பல்லு விசயத்துலயும் நிஜம். முதுகெலும்புடைய எல்லா உயிரினத்துக்கும் பல் இருக்கும். பல்லின் பயன்பாடு பெரும்பாலும் உணவை கிழித்து, நொறுக்கி, பிரட்டி உண்ண உதவுது. பல்லின் அடுத்த பயன்பாடு தற்காப்புக்கு பயன்படுது. மனிதர்களுக்கு மட்டும் பிஸ்கட், சிப்ஸ் கவரை பிரிக்க, நூலை கட் பண்ண பயன்படுது. பூனைக்கு தன் குட்டியை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு மாத்த உதவுது.  மனுசங்களுக்கு  இருமுறை பல் முளைக்கும். குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் முளைக்கத் தொடங்குது. சில குழந்தைகள் பல்லோடவே பிறக்கும்.  சுறாக்களுக்கு மட்டும் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பல் முளைக்கும்.  பல்லு வெள்ளையா இருக்க பேஸ்ட் யூஸ் பண்றோம். ஆனா, ஆரோக்கியமான பல் லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும்.  பல் கால்சியத்தால் ஆனது. மனுசங்களுக்கு  மொத்தம் 32 பல்லு. இதுல மேற்தாடையில் இடப்புறம் 8 பல்லும், வலப்புறம் 8 பல்லும் இருக்கும். இதேபோல் கீழ்த்தாடையிலும் இரு புறமும் எட்டு, எட்டாக மொத்தம் 16 பல்லு இருக்கும்.

நம்ம பல்லை ஆரோக்கியமா வச்சுக்க தினமும் ரெண்டு முறை பல் துலக்கனும். பல் துலக்கிய பின்னும், சாப்பிட்ட பின்னும் நல்லா வாயை கொப்பளிக்கனும்.  வருடத்துக்கு ஒருமுறை பல் டாக்டரை பார்க்கனும். பல்லை இடம் வலமா துலக்காம மேலும் கீழுமாய் துலக்கனும். நல்ல சத்தான காய்கறிகள், கனிகளை சாப்பிடனும். முக்கியமா எலுமிச்சை, சாத்துக்குடி மாதிரியான அமிலங்களை கொண்ட மாங்காய் மாதிரியான எச்சிலை தூண்டும் உணவுகள் பல்லின் ஆரோக்கியத்துக்கு நல்லது. சாப்பிட்டதும் தண்ணீரை சரியான அளவுக்கு குடிப்பதால்  ஈறுகளில் தண்ணீரின் அளவு பாதுகாக்கப்படுகின்றது. மற்றும் தண்ணீர் உங்களின் பல் அரிப்பை தடுக்கிறது. பாலில்  அதிகளவிலான கால்சியம், பாஸ்பேட், மற்றும் விட்டமின் டி இருக்கு. இது நம்ம உடம்பு கால்சியத்தை அதிகளவில் உறுஞ்சுவதை உறுதி செய்யுது.  அதன் காரணமாக உங்களின் எழும்புகள் மற்றும் பற்கள் வலுவடையுது. தினசரி பால் அல்லது சோயா பால் குடிப்பது பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதேமாதிரி பாலாடைக்கட்டியை சாப்பிட்டு வந்தால் பல்லில் குழி விழுவதை தடுக்கலாம். ஆரஞ்சு பழத்திலிருக்கும் சிட்ரஸ் அமிலம் பல்லின் ஆரோக்கியத்துக்கு நல்லது.  இந்த பழத்தினுடைய சாறு வாயில் உள்ள தீங்கு புரியும் பாக்டீரியாக்களை அழிக்குது. இதில் கவனிக்கத்தக்க ஒரு அம்சம் என்னெவெனில், ஆரஞ்சுப் பழம் அமிலம் நிறைந்ததால இதை சாப்பிட்டதும்   வாயை கழுவுவது மிகவும் முக்கியம். ஆப்பிள் சாப்பிடுறதால   வாயிலிருக்கும் எச்சிலின் அளவை அதிகரிப்பதோடு பற்களில் குழி வராமல் தடுக்குது. ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பற்களின் ஒட்டுமொத்த சுகாதாரத்தை மேம்படுத்த உதவுது.  நட்ஸ் என்னும் விதைகளில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருக்கு.  வேர்கடலை, பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி கொட்டைகளில்  பற்களுக்குத் தேவையான நார்ப் பொருட்கள், தயாமின், வைட்டமின்கள், முதலியன அதிக அளவில் இருக்கு.  ஆனாலும் நட்ஸ்களை சாப்பிடும்போது  அதிக அழுத்தம் பற்களுக்கு கொடுக்கக்கூடாது. அப்படி செய்தால் அது பற்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். பச்சை, கருப்பு டீயில் பாலிபினால்கள் அதிகமா இருக்குறதால வாயில் பாக்டீரியாக்களை தடுத்து தகடு வராம தடுக்குது.  இதன் காரணமாக பற்களை சிதைக்கும் அமிலம் உருவாவது தடுக்கப்படுகின்றது. பச்சை மற்றும் கருப்பு தேநீர் ஆகிய இரண்டிலும் பல் தகடு கட்டமைப்பை எதிர்த்துப் போராடும் திறன் இருக்கு. டார்க் சாக்லேட்டில் உள்ள டானின் ஈறுகளின் வீக்கத்தை குணப்படுத்துது. அதன்மூலம் பல் அரிப்பு மற்றும் சிதைவு தடுக்கப்படுது. சாக்லேட்டில் உள்ள கொக்கோ வாயில் அமிலங்கள் உருவாவதை தடுக்குது. மேலும் டார்க் சாக்லேட் ஈறுகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்குது. அதனால இனி இதுலாம் சேர்த்துக்க.  இதில்லாம பல் பிரச்சனைக்கு ஜீன் பிராப்ளமும் முக்கிய காரணம்.

உன்னை கட்டி வந்த நாளிலிருந்து நான் பேஸ்ட் பிரஷ்சுன்னு எந்த குறையும் இல்லாமதான் பார்த்துக்குறேன். இது உன் ஜீன் பிராப்ளம் அதான் அடிக்கடி பல் பிரச்சனை வருது உனக்கு.   உங்க குடும்பத்துக்கே பல்லு ஏதுடி?! பல்லும் கிடையாது சொல்லும் கிடையாது. உங்க வீட்டில்  யாராவது பேசினா புரியுதா?!

இதப்பாருங்க. என்னை என்ன வேணும்ன்னாலும் சொல்லுங்க. என் குடும்பத்தை பத்தி மட்டும் சொல்லாதீங்க. கவரிமான் பரம்பரை எங்களுது. 

மயிர்நீப்பின்   வாழாக் கவரிமா அன்னார் 
உயிர்நீப்பின் மானம் வரின்..ன்னு குறளுக்கு அர்த்தம் தன் உடலிலிருக்கும் முடி தன் உடலை விட்டு நீங்கிட்டா தற்கொலை பண்ணிக்கும். அதுமாதிரி மானமுள்ளோர் தனக்கு, தன் குணத்துக்கு ஒரு அவமானம்ன்னா உயிர் போக்கிப்பாங்கன்னு அர்த்தம் வருது. அப்படி வள்ளுவர் சொன்ன கவரிமான்  எந்த புத்தகத்திலாவது படிச்சிருக்கியா?!  படம் பார்த்திருக்கியா?!

ம்ஹூம் பார்த்ததில்லை மாமா. 

ம்ம்ம் அப்ப வள்ளுவர் பொய் சொன்னாரா?! இல்ல. அவரு சொன்னது கவரிமான் இல்ல.  வள்ளுவர் சொன்னது கவரி மா..ன்னு ஒரு விலங்கு. அது இமயமலை பக்கத்துல இருக்கு. புற நானூற்றில் இதுக்கான குறிப்பு இருக்கு. 
 நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
தண் நிழல் பிணி யோடு வதியும்
வட திசை யதுவே வான் தோய் இமயம்"….
இமயமலை பகுதியில் , கவரிமா என்ற விலங்கு நரந்தை எனும் புல்லை உண்டு , தன் துணையுடன் வாழும்ன்றது இந்த பாடலின் அர்த்தம். ஆக, கவரிமா என்னும் விலங்கு இருப்பது உண்மையாகுது. கவரி மா குறித்து பதிற்றுப்பத்து போன்றவற்றிலும் குறிப்புகள் இருக்கு. முடி சடை போல தொங்க கூடிய விலங்குதான் கவரிமா. இந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம். கவரி என்பதில் இருந்துதான் சவரி முடி என்ற சொல் உருவானது. அதேமாதிரி இந்த கவரி மா’கூட மான் இனமல்ல. மாடு வகையை சேர்ந்தது.  மா ன்னா மிருகம்ன்னு அர்த்தம்.  அப்படி பார்த்தால் குறளுக்கான நேரடி அர்த்தம் பனி பிரதேசத்தில் வாழும் கவரிமாவுக்கு , அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்குது. அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும். அதேப்போல சில மனிதர்கள், அவர்கள் தன்மானத்துக்கு இழுக்கு வந்தால் அவர்கள் உயிர் வாழ்வது இல்லைன்னு அர்த்தம். 

இனி சரியான அர்த்தம் தெரியாம தத்துபித்துன்னு எதாவது உளறாத.

ம்க்கும். நானே பல்லு வலிக்குதுன்னு சொல்றேன். இப்படி கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்கியே!  உன்னைலாம்.. உன்கிட்ட பேசுறதுக்கு நான் பேஸ்புக்ல சொல்லி இருந்தாலாவது வலிக்கு எதாவது வைத்தியம் சொல்லி இருப்பாங்க.

ம்ம் பேஸ்புக்தானே?! அங்க போனவங்கலாம் போட்டிருக்கும் மீம்சை பாரு.
அதேமாதிரி, பேஷன்ற பேர்ல ஆண்களும், பெண்களும் அடிக்குற லூட்டி  பத்தியும் மீம்ஸ் பாரு.. 



மீம்ஸ்சே பார்த்துக்கிட்டு சிரிச்சுக்கிட்டு பொழுது போக்கிட்டு  இருந்தா எப்படி?! 


மத்தவங்களுக்கு உதவ பணமும், நேரமும் முக்கியமில்ல. மனசிருந்தா போதும்ன்னு சொல்லும் ஒரு அழகான குறும்படம். அதையும் பாரு.  நான் போய் ஃப்ரெஷ்சாகிட்டு வரேன். நாம ஹாஸ்பிட்டல் போய் பல் டாக்டரை பார்க்கலாம்.....

நன்றியுடன்,
ராஜி. 

10 comments:

  1. கொஞ்சம் பொறு சகோதரி... ஒரு வீம்பு பிடித்த பஞ்சாயத்து ஓடிட்டிருக்கு...(?) அது முடியட்டும், பிறகு வருகிறேன்...(!)

    ReplyDelete
    Replies
    1. வம்பா?! சண்டையா?! எங்க ?! எங்க?! சொல்லுங்கண்ணே நானும் துணைக்கு வரேன்.

      Delete
  2. கடைசி ஜோக் உட்பட எல்லாவற்றையும் ரசித்தேன். கவரிமா சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி சகோ

      Delete
  3. நல்ல தகவல்கள் ராஜி க்கா..

    கவரிமா சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா அனு

      Delete
  4. ராஜி, பல்வலி இப்ப கொண்டைகடலை சாப்பிட முடியுமா? என்று அதிராவின் திங்கள் பதிவில் போட்டீர்கள் . பலவலி தந்த அனுபவம் பல்லை பாதுகாக்கும் பதிவு ஆகிவிட்டது. எல்லா செய்திகளும் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி. அனுபவமே சிறந்த பாடமில்லையாம்மா?! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

      Delete
  5. உடலின் எந்த உறுப்பும் தன் இருப்பைநினவு படுத்தச்க் கூடாது அப்படி நினைவு படுத்தினால் ஏதோ கோளாறு என்று அர்த்தம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ப்பா. எந்திர வாழ்வில் நித்தம் ஒரு வலி மனிதனுக்கு...

      Delete