Thursday, January 24, 2019

வயர் கூடை - கைவண்ணம்

எப்பயுமே வெளில கிளம்பும்போது வயர்கூடையும், தண்ணி பாட்டிலும் எடுத்துக்கிட்டுதான் கிளம்புவேன். பழசு நைஞ்சு போக ஆரம்பிச்சதால வீட்டுக்குன்னு ஒரு கூடை பின்னிக்கிட்டு இருந்தேன். கூடை பின்னுறதை முன்னோட்டமா ஒரு பதிவும் போட்டிருந்தேன். பார்க்காதவங்க ஒரு எட்ட்ட்ட்ட்டு போய் பார்த்துட்டு வந்திருங்க.  அதை பார்த்த இன்னொருத்தங்க தனக்கு வேணும்ன்னு கேட்டாங்க. இப்ப பிளாஸ்டிக் பைகளுக்கு தடைன்னு சொன்னதால் கட்டைப்பைக்கு டிமாண்ட் வரும்ன்னு நினைச்சு இன்னும் ரெண்டு பேரு ரெண்டு கூடை கேட்டிருக்காங்க. 

ஒரு ரோல் வயர் 40 ரூபா.  சாதா மாடல்ன்னா 120ரூபா விக்கலாம். இல்ல கூடையில் டிசைன் போட்டாலோ இல்ல பூசணிக்காய், ட்யூப், நெல்லிக்காய், சிவன்கண், கோதுமை முடிச்சு, மல்லிகை முடிச்சுன்னு டிசைன் டிசைனா கூடை போட்டா 150 ரூபாய்ல இருந்து 175 வரை விக்கலாம். ரெண்டு ரோல் கூடைன்னா நாலு நாள்ல முடிச்சுடலாம். என்னைய மாதிரி சோம்பேறின்னா 15 நாள் ஒரு மாசம்கூட ஆகும். 
மார்க்கெட், பஜாருக்கு போக 21/2 ரோல்ல வீட்டுக்காக போட்ட கூடை...  5கிலோவுக்கு குறையாம காய்கறிகளை இதில் வாங்கலாம்.

பக்கத்திலிருக்கும் கடைக்கு, பால் வாங்க, கோவிலுக்கு கொண்டுப்போக 1 1/4 ரோல்ல வீட்டுக்காக  போட்ட  கூடை... ரெண்டு கிலோ அளவில் காய்கறிகள் இதில் பிடிக்கும்.
கூடை பின்னியதை பார்த்து இன்னொருத்தங்க தனக்காக கேட்டாங்க.  அவங்களுக்கு 2 ரோல்ல போட்ட கூடை. இந்த கூடையின் விலை 200ரூபா. இதை பார்த்து இன்னும் ரெண்டு பேர் கேட்டிருக்காங்க. அவங்களுக்கு இப்ப பிராசஸ்ல இருக்கு. அதுலாம் இன்னொரு பதிவில் பார்க்கலாம். 



மிச்சம் மீதியாய் வெட்டிப்போடும் துண்டு வயர்களில் வாசப்படி அலங்கார தோரணமும் செய்யலாம். அதும் பதிவா வரும்.  

முன்னலாம் பள்ளிகளில் கைத்தொழில்ன்னு ஒரு வகுப்பே நடக்கும். ஆண், பெண் பாகுபாடில்லாம எம்ப்ராய்டரி, கூடை பின்னுறது, தையல், புத்தகம் பைண்டிங்,  கிராஃப்ட்ன்னு அதில் சொல்லித்தருவாங்க. அன்னிக்கு இதுலாம் கத்துக்கும்போது முதல்ல ஆர்வமா இருக்கும். போகப்போக எரிச்சலா இருக்கும். மாலை நேரத்துல விளையாட விடாம இதுலாம் செய்ய சொல்லி டீச்சரும் அப்பா அம்மாவும் வற்புறுத்துறாங்களேன்னு.. ஆனா, இப்ப பைசாவுக்கு பைசாவும் ஆச்சு. நல்ல மைண்ட் ரிலாக்சேஷனும் ஆச்சு! சும்மாவா சொன்னாங்க!? கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்ன்னு!!!

நன்றியுடன்,
ராஜி

11 comments:

  1. முன்னலாம் பள்ளிகளில் கைத்தொழில்ன்னு ஒரு வகுப்பே நடக்கும். //

    யெஸ் யெஸ் எங்க பள்ளிக் கூடத்துல இப்படி ஆர்ட் வகுப்புன்னு உண்டு. தையல், எம்ராய்டரி, கூடை பின்னுதல்னு நமக்கு உபயோகமா இருக்கற விஷயங்கள்.அப்படி நான் நிறைய செஞ்சுருக்கேன். ஸ்கூல் சேல் எக்சிபிஷன்னு நடத்துவாங்க அதுல நாம செஞ்சத வைச்சு வித்துச்சுனா ஸ்கூல்லும் எடுத்துக்கிட்டு நமக்கும் தருவாங்க. இப்படி கூடைகள் நிறைய நான் பின்னியிருக்கேன் வீட்டுல. வீட்டு பயன்பாட்டுக்கு.

    அது சரி ப்ளாஸ்டிக் ஒழிப்புன்னுட்டு இதுவும் ப்ளாஸ்டிக் வொயர்தானே!! ராஜி?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதுக்குதான் ஐஞ்சுவை அவியல்லயே பதில் சொல்லிட்டேனே கீதாக்கா. இந்த வயர்கூட குறைஞ்சது 2 வருசம் வரும். தினத்துக்கு ரெண்டு பிளாஸ்டிக் கவர் குப்பைக்கு போறதுக்கும், ரெண்டு வருசத்துக்கு ஒரு வயர்கூடை குப்பைக்கு போறதுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு கீதாக்கா. நாம சின்ன பிள்ளையா இருந்தபோதும் இந்த கூடை இருந்துச்சு. அப்ப இப்படியா தெருவெங்கும் பைகள் இருந்துச்சு.

      Delete
  2. உங்க கை வண்ணம் சூப்பரா இருக்கு...நான் கலர் காம்பினேஷனும். நான் லை ப்ளூ ஆரஞ்சு சேர்த்து போட்டுருக்கேன்..க்ரீன் பிங்க்னு....லைட் ப்ளூ பிங்க்னு, ப்ளாக் க்ரீம், அப்புறம் டேபிள் மேல வைக்க பழக்கூடை மாதிரி அப்புறம் பூ பறிக்கற கோயிலுக்கு அர்ச்சனை சாமான் வைச்சுக் கொண்டு போற மாதிரி கூடை (ஓலைக் கூடை இருக்கும்ல அதே போல)...நிறைய...

    உங்க தொழில் நல்லா வளர வாழ்த்துகள் ராஜி! நல்ல விஷயம் செய்யறீங்க..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அடுத்து பச்சை ஆரஞ்ச் நிறத்துல கூடை போட்டுக்கிட்டிருக்கேன் கீதாக்கா. நீலம் பச்சைலையும் இன்னொரு கூடைக்கு வயர்கூடை போடனும். பூஜைக்கூடை எனக்கும் போடனும்... சின்ன வயசுல போட்டது. அளவுலாம் மறந்து போச்சு. யூட்யூப் பார்த்துதான் போடனும்.

      Delete
  3. கூடை பின்னுதல் சாதாரண வேலை இல்லை... மிகவும் பொறுமை வேண்டும்... எனக்கும் அனுபவம் இருக்கு சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வாவ்! சூப்பர்ண்ணா!

      ஆமாம் பொறுமைன்னா என்னண்ணா?! எனக்கும் அதுக்கும் எட்டாம் பொருத்தமாச்சுதே!

      Delete
  4. கையிலே திறமை இருக்க கவலை என்ன!

    ReplyDelete
  5. வாவ்.... எங்கள் பெரியம்மா இப்படி நிறைய செய்வார்.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. சூப்பரா இருக்கு ராஜி க்கா ..

    கலர் ரொம்ப அழகா இருக்கு ..

    எங்ககிட்டயும் அந்த மஞ்சள் ஆரஞ்சு கலர் கூடை இருக்கு மாமியார் வாங்கி தந்தாங்க 3 வருஷம் முன்ன...கார் ல போகும் போது தண்ணி பாட்டில் அதில் வச்சுட்டா சாயது ல அதுனால கூடையும் எங்க கூட ஊருக்கு வரும் எப்பவும்..

    ReplyDelete
  7. ப்ளாஸ்டிக் கூடைகள் நான் இது வரை பின்னியடில்லை என்மனைவி ஒருகாலத்தில் நிறையவே பின்னி இருக்கிறள் ஆனால் எதையும் விற்றதில்லை அன்பளிப்பாகத்தான் கொடுப்பாள் ஹரிக்கேன் விளக்கு பல்பை சுற்றி நூல் மாதிரி இருக்கும் வயரில் பின்னியது அமெரிக்காவுக்கெல்லாம் கொடுக்கப்பட்டுஇருக்கிறது

    ReplyDelete
  8. அருமை ராஜி. பழைய நினைவுகளை இரைமீட்க வைக்கிறீங்க. இங்கு வந்த பின் வயர் தேடுகிறேன். இன்னும் கிடைக்கவில்லை. இலங்கைக்குப் போகும் போது எல்லாம் தேடுகிறேன். என் கண்ணில் பட மாட்டேன் என்கிறது. 'அப்படி என்றால் என்ன?' என்று கேட்ட கடைக்காரரும் இருக்கிறார். சின்னதாக இரண்டு (பெரியது உள்ளங்கைக்குள் அடங்கும், சின்னது ஒரு அங்குலம் இருந்திருக்கும்) பின்னி ஒரு நட்புக்குக் கொடுத்தேன். மனசில ஒரு ப்ளான் இருந்துது. செயலாக்க மறந்துபோய் இருந்தேன். நினைவு படுத்தி இருக்கீங்க. :-) வேலையை முடிச்சதும் (முடிச்சால்) காட்டுறேன்.

    ReplyDelete