Sunday, May 05, 2019

காதல் வழிச்சாலையிலே.. வேகத்தடை ஏதுமில்லை - பாட்டு புத்தகம்



அங்காடித்தெரு படம் பார்த்துக்கிட்டிருந்தேன். அதில் ஹீரோ, ஹீரோயின் நடந்து  வரும்போது கடைகளில் இருக்கும் ரேடியோவில் காதல் வழிச்சாலையிலே  வேகத்தடை ஏதுமில்லை....ன்ற   பாடல்வரி   கேட்க நேர்ந்தது. அந்த பாடலின் இசை, அழகான வார்த்தைகள், குரலின் குழைவுலாம் சேர்ந்து ரெண்டு நாளாய் அந்த பாடலை முணுமுணுக்க வைத்தது. கூகுள் ல சர்ச் பண்ணி பார்த்ததும்தான் தெரிஞ்சது  அந்த பாட்டு  ராமன் அப்துல்லா படத்துல இருந்து முத்தமிழே!! முத்தமிழே!! ன்னு.. எனக்கு பிடிச்ச அந்த பாட்டை கேட்கலாமா?!... 

அதிகம் புழக்கத்தில் இல்லாத அழகான தமிழ் வார்த்தைகளை கேட்கும்போது அத்தனை மகிழ்ச்சியாய் இருக்கும்.  அத்தனை அழகான தமிழ் வார்த்தைகளையும் சேர்த்து ஒரு பாடலாய் வந்தால் கேட்க எத்தனை இனிமையாய் இருக்கும்?!

காதல் டூயட்  பாடல்களைக்கூட விரசமில்லாமல் எழுத அறிவுமதியால் மட்டுமே முடியும். ஆனா, சினிமாவில் அவர் அதிகம் சோபிக்காதது வேதனையே!!   

மெல்லிசைப்பாடல்கள்கூட  கடினமான இசையை தரும் தவில், நாதஸ்வரம்ன்னு இசை இருக்கும். ஆனா, இந்த பாடல் முழுக்க மென்மையான இசையை தரும் வீணை, வயலின், புல்லாங்குழல்.. மட்டுமே ஒலிக்கும்..  நல்ல பாட்டு ஆனா அதிகம் கவனிக்கபடாமல் போயிற்று

முத்தமிழே!! முத்தமிழே!!
முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன?!
முத்த தமிழ் வித்தகியே!
என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன?!
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன?!
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே...
முத்தமிழே! முத்தமிழே!
முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன?!
முத்த தமிழ் வித்தகியே!
என்னில் வந்து உன்னை பார்ப்பதென்ன

காதல் வழி சாலையிலே...
வேகத்தடை ஏதுமில்லை.
நாணக்குடை நீ பிடித்தும்
வேர் வரைக்கும் சாரல் மழை!!
தாகம் வந்து பாய் விரிக்க
தாவணி பூ சிலிர்க்கிற
மோகம் வந்து உயிர் குடிக்க
கை வளையல் சிரிக்கிறதே
உந்தன் பேரை சொல்லித்தான்
காமன் என்னை சந்தித்தான்.
முத்தம் சிந்த சிந்த ஆனந்தம் தான்…

முத்தமிழே!! முத்தமிழே!!
முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன?!


கனவு வந்து காத்திருக்குு..
தூங்கிகொள்ள மடி இருக்கா?!
ஆசை இங்கு பசித்திருக்கு..
இளமைக்கென்ன விருந்திருக்கா?!
பூவைகிள்ளும் பாவனையில்
சூடிக்கொள்ள தூண்டுகிறாய்!!
மச்சம் தொடும் தோரணையில்
முத்தம் பெற தீண்டுகிறாய்..
மின்னல் சிந்தி சிரித்தாய்..
கண்ணில் என்னை குடித்தாய்..
தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய் ஆஹா….

முத்தமிழே முத்தமிழே (என்ன)
முத்த சந்தம் ஒன்று கேட்பதென்ன?!..

படம் : ராமன் அப்துல்லா
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: அறிவுமதி.
பாடியவர்கள் : சித்ரா, எஸ்.பி.பி.

நன்றியுடன்,
ராஜி

6 comments:

  1. அழகான இதம் தரும் பாடல்...

    ReplyDelete
    Replies
    1. அதிகம் பேசப்படாத பாடல்

      Delete
  2. கேட்டிருக்கிறேன் இந்தப் பாடல்... ரசித்திருக்கிறேன். இதில்தான் "உன் வீட்டு ஜன்னல் ஏன் வாடுது?"

    ReplyDelete
    Replies
    1. என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பார்க்கிறே?!

      இதான் அந்த பாட்டோட வரிகள்

      Delete
  3. wow...one of the best so far ...

    ReplyDelete
  4. பாடல் கேட்டதில்லை ராஜி. இப்பத்தான் கேட்கிறேன் பாட்டு கேட்டதுமே இது ராஜா பாடல் போல இருக்கேனு நினைச்சுப் பார்த்தா ராஜாவேதான். நல்லாருக்கு பாட்டு. ரசித்தேன்

    கீதா

    ReplyDelete