Saturday, August 03, 2019

முட்டை ஓட்டிலும் கைவண்ணம் காணலாம்- சுட்ட படம்

நாயக்கண்டா கல்லை காணோம், கல்லை கண்டா நாயக்காணோம்ன்னு நம்மூரில் ஒரு பழமொழி சொல்வாங்க. அதுக்கு அர்த்தம்,  நாம  ஒரு கல்லை நாம பார்க்கும்போது வெறும் கல்லாதான் தெரியும். அதே ஒரு சிற்பியின் கண்ணுக்கு அது  கடவுள் சிலையாய், நாட்டியப்பெண்ணாய், யானையய், குரங்காய்,நாயாதான் தெரியும். அந்த கல்லை செதுக்கி எப்படி அழகா அந்த உருவத்தை கொண்டுவரலாம்ன்னு யோசிப்பாராம். 

அதுமாதிரிதான், கலையார்வம் உள்ளவங்க கண்ணும்.. எதை பார்த்தாலும் இதில் என்ன செய்யலாம்ன்னு யோசிப்பாங்க. ஒரு கோழிமுட்டையை சமைச்சு சாப்பிட்டு அதன் ஓட்டை தூக்கி குப்பையில் போடுவோம்.  இல்லன்னா, ரோஜாச்செடியில் போடுவோம்., ரோஜா செடிக்கு போட்டால் அதிகமா பூ பூக்கும்ன்னு சொல்வதால் போடுவோம்.

ஆனா, கலையார்வம் கொண்டவங்க எப்படியெல்லாம் அந்த முட்டை ஓட்டை அழகுப்படுத்தி இருக்காங்கன்னு பாருங்க..












அழகா இருக்குதா?! நமக்கு ஏன் இதெல்லாம் தோண மாட்டேங்குது?!

நன்றியுடன்,
ராஜி

6 comments:

  1. முட்டை ஓடு டிசைன்ஸ் செம.

    என் கல்லூரி காலம் நினைவுக்கு வருது. அப்ப இருந்த கலர், பாசி எல்லாம் வைச்சு செஞ்சதுண்டு. அதுவும் படிச்ச பள்ளி கிறித்தவ பள்ளி என்பதால் கிறிஸ்துமஸ் கு அலங்காரம் செய்யறப்ப மரத்துல தொங்க விட்டு அலங்காரத்திற்குச் செய்ததுண்டு...இப்ப இன்னும் செய்யலாம்...அத்தனை சாமான் கிடைக்குது.

    நல்லாருக்கு ராஜி...

    கீதா

    ReplyDelete
  2. அடடே...

    எல்லாமே வெகு அழகு.

    ReplyDelete
  3. அழகு.

    முன்பு வர்ணங்கள் அடித்து செய்ததுண்டு.

    ReplyDelete
  4. ஆஹா... அழகா இருக்கே... முட்டையிலும் கலைவண்ணம்! அக்கலைஞருக்கு பாராட்டுகள்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  5. ஆஹா...அனைத்தும் அழகு

    ReplyDelete