Tuesday, June 02, 2020

மொறுமொறுப்பான வாழைக்காய் வறுவல் -கிச்சன் கார்னர்


என்னதான் நிறைய வெங்காயம், தக்காளின்னு சேர்த்து வாழைக்காய் பொரியல் செஞ்சாலும் அது சீந்துவார் இல்லாமதான் இருக்கும் எங்க வீட்டில். பஜ்ஜி சுட்டால் மறுப்ப்பு சொல்ல மாட்டாங்க. ஆனா,. அடிக்கடி வாழைக்காய் கிடைக்கும்.  கிடைக்கும் வாழைக்காயை வச்சு என்ன செய்ய?!

பிரண்டு ஒருத்தங்க வீட்டில்  வாழைக்காய் வறுவல் சாப்பிட்டேன். சூப்பரா இருந்துச்சும்மா, நீயும் அதுமாதிரியே செய்யேன்னு மகனார் கேட்க, அவங்கக்கிட்ட செய்முறையை கேட்டு வாங்கி சமைச்சது. நல்லாவே வந்தது. இனி இதுமாதிரி செஞ்சுதான் வாழைக்காயை காலி செய்யனும்.

தேவையான பொருட்கள்:
வாழைக்காய்
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
தூள் உப்பு
எண்ணெய்
பெருங்காயம், 
கரம் மசாலா
கடுகு
உ.பருப்பு

வாழைக்காயினை தோல் சீவி கொஞ்சம் பெரிய துண்டுகளா வட்ட வடிவில் வெட்டி உப்பு சேர்த்து கால் பதத்துக்கு வேக வைக்கனும்..
வெந்த வாழைக்காயினை தண்ணி வடிச்சு, ஆற விட்டு அதோடு மிளகாய் தூள் சேர்க்கனும்...
மஞ்சள் தூள் சேர்க்கனும்....
கொஞ்சம் உப்பு சேர்க்கனும்...
கரம் மசாலா அரை ஸ்பூன் சேர்க்கனும்...

பெருங்காயப்பொடி ஒரு சிட்டிகை சேர்க்கனும்,...
மிளகை பொடிச்சு வாழைக்காயில் சேர்த்து மசாலாக்கள்லாம் நல்லா பிசிறி விடனும்...

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடனும், உ.பருப்பு போட்டு சிவக்க விடனும்...
கருவேப்பிலை சேர்த்துக்கனும்...

மசாலா கலந்த வாழைக்காயை போட்டு சிவக்கவிட்டு எடுக்கனும்...
மொறுமொறுப்பான வாழைக்காய் வறுவல் ரெடி...

வாழைக்காயை வேக வைக்காமலும் மசாலா சேர்த்து எண்ணெயிலேயும் வதக்கலாம், கூடுதல் நேரமெடுக்கும். வாழைக்காய் துண்டுகள் மெல்லிசா இல்லாம கொஞ்சம் கனமா இருக்கனும் இல்லன்னா உடைஞ்சு போகும், தோசைக்கல்லிலும் வாழைக்காயை போட்டு வறுவல் செய்யலாம்...

வாழைக்காய் வறுவலின் சுவையை கூட்ட கூடுதல் டிப்ஸ் கொடுக்கலாம். தப்பில்ல!!

நன்றியுடன்,
ராஜி

7 comments:

  1. எனக்கு இது பிடித்தமானது சகோ

    ReplyDelete
  2. மிகவும் பிடித்தமானது

    ReplyDelete
  3. மொறுமொறுப்பா தெரியலயே...

    ம்...? !

    ReplyDelete
  4. சிறப்பான வழிகாட்டல்

    ReplyDelete
  5. DD சொல்வதுபோல ரொம்ப மொறுமொறுப்பாய் இருக்காது போல...    இருந்தாலும் மாறுபட்ட சுவையில் நன்றாய் இருக்கும் என்று தெரிகிறது.

    ReplyDelete
  6. மொறுமொறுப்பாக இருக்க வேண்டும். என் நண்பர் ஒருவர் இதைச் சிறப்பாகச் செய்வார்.

    ReplyDelete
  7. மிகவும் பிடிக்கும். ஆனா ராஜி இது வாழைக்காய் வதக்கல் என்று சொல்லுவோம். வறுவல் என்றால் மொறு மொறுவென்று இருப்பதைத்தான் வறுவல் என்று சொல்வது.

    கீதா

    ReplyDelete