பெங்களூரில் உள்ள ஒரு முடிதிருத்தும் நிலையத்துக்கு ஒரு பூச்செண்டுகளை விற்கும் கடைக்காரர் முடிதிருத்தப்போனாராம். முடிதிருத்துபவரோ மிகவும் முதியவர். ஆனாலும், அவருக்கு சிறப்பாக முடிதிருத்திவிட்டாராம்.
பணிமுடிந்ததும் அந்தப் பூக்கடைக்காரர், அந்த முதியவரிடம் முடி வெட்டியதற்குப் பணம் கொடுத்தாராம். அதற்கு அந்த முதியவர், எனக்குப் பணமெல்லாவாம் வேண்டாங்க. நான் இந்தத்தொழிலை ஒரு சேவையாகத்தான் செய்கிறேன் என்றாராம். வற்புறுத்தியும் வாங்க மறுத்த அந்த முதியவருக்கு நன்றிசொல்லிவிட்டுப் போனாராம் பூக்கடைக்காரர்.
அடுத்தநாள் காலையில் அந்த முதியவர் தனது முடிதிருத்தும் நிலையத்துக்கு வந்தபோது மூடியிருந்த கதவருகில், ஒரு டஜன் அழகான ரோஜாக்களால் செய்த பூங்கொத்தும், ஒரு நன்றிக்கடிதமும் இருந்ததாம்.
மறுநாள் ஒரு இனிப்புகள் விற்கும் கடைக்காரர், முதியவரிடம் முடிதிருத்த வந்தாராம். அவருக்கும் முடிதிருத்திவிட்டு, வழக்கம்போலப் பணம் வாங்க மறுத்துவிட்டாராம் முதியவர். அந்த இனிப்புக்கடைக்காரரும் அவரைப் பாராட்டிவிட்டு மகிழ்ச்சியுடன் போனாராம்.
அடுத்தநாள், முதியவர் கடையைத் திறக்கச் சென்றபோது கதவருகில், ஒரு நன்றிக்கடிதமும், அடைப்பெட்டியில் ஒரு டஜன் கேக்குகளும் இருந்ததாம்.
மூன்றாவது நாள் ஒரு, சாஃப்ட்வேர் இஞ்சினீயர் முதியவரிடம் முடிதிருத்த வந்தாராம். அவருக்கும் முடிதிருத்திவிட்டு, தான் பணம்வாங்குவதில்லையெனச்சொல்லி மறுத்தாராம் முதியவர்.
அதற்கு அடுத்தநாள் காலையில் கடையைத் திறக்கச்சென்றபோது,...
........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
என்ன நடந்திருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க???
அங்கே, ஒரு டஜன் சாஃப்ட்வேர் இஞ்சினியர்கள், கையில் முந்தியநாள் வந்தவர் அனுப்பிய மின்னஞ்சலின் பிரதியுடன், இலவசமாக முடிதிருத்திக்கொள்ள கியூவில் நின்றார்களாம்!!!!!
No comments:
Post a Comment