Friday, December 17, 2010

என்னை உணர்வாயா?






"கண்ணில்" வழிந்த "காதலையும்,"

"வார்த்தைகளில்" உதிர்ந்த "பாசத்தையும்,"

"செயலில்" நிறைந்த "அக்கறையும்",

"கோபத்தில்" வெளிவந்த 'அன்பையும்"..,

உணராமல் சென்றவனே,

என் மரணத்திற்குபின்
என் உடலை
"நாயும், நரியும்" தோண்டியெடுத்து...,

காக்கையும், கழுகும் போட்டியிட்டுக் கொண்டு என் அங்கங்களை கொத்தித் திண்ணுகையில்...,

வெளிவந்திருக்கும்
சிதைந்துப் போன
என் இதயத்தை,

தற்செயலாய் காண நேரிடும் போதாவதாவது!!

உணர்வாயா??

"இது உன்னால் சிதைந்த இதயமென்று"?!?!

6 comments:

  1. கவிதை இல்லாமல் காதல் இல்லை..,
    காதல் இல்லாமல் கவிதை இல்லை..

    ஆனால் உங்கள் கவிதைகளில்
    மட்டும் காதல் சோகமாய் மட்டுமே
    இருக்கிறதே..

    காதலை சந்தோஷமாய் சொல்லி
    ஒரு கவிதை ப்ளீஸ்..

    ReplyDelete
  2. எவன் ஒருவனையும் முதலில் கவிதை எழுத தூண்டுவது காதல் தான். காதலால் தான் கவிஞர்கள் உருவாகிறார்கள்.

    வெங்கட் கூறியது தான் நிஜம்.. பெரும்பாலானோர் எழுதும் காதல் கவிதைகளில் வெறும் சோகம் மட்டுமே தலை காட்டுகிறது...

    ஆனாலும் கவிதை நல்லாயிருக்கு..

    ReplyDelete
  3. நல்லா இருக்குங்க. ஆனா சோகம் அதிகமா வெளிபடுதே. :-(

    ReplyDelete
  4. கவிதை நல்லா இருக்குங்க :)

    ReplyDelete
  5. நல்ல நடை ஆனால் சோகம் வழிந்தோடுவது ஏன்?

    நீங்கள் இந்த கவிதையை இன்னும் நன்றாக செதுக்கலாம் என்பது என் எண்ணம்!

    ஆதிரை (வேறு கணக்கிலிருந்து )

    ReplyDelete
  6. கண்டிப்பாக உணர்வார்

    ReplyDelete