Monday, February 14, 2011
அன்பர்கள் தின வாழ்த்துக்கள்
நேசிக்கப்படுகிறோம் என்ற உணர்வு எல்லாரையும் கர்வப்பட வைக்கும்..,
பெற்றோரோ, ஆசிரியரோ, பிள்ளையோ,ஏன் நம்ம வீட்டு நாய்க்குட்டியாக இருக்கலாம். அதுவும், எதுவும் புரியாத பதின்ம வயதில் வரும் எதிர்பாலினரின் மீதான நேசம் நம்மை றெக்கை கட்டி பறக்க சொல்லும்..,
மைண்ட்வாய்ஸ் : ஏய் ஸ்டாப், ஸ்டாப் இப்ப எதுக்கு இங்க இதை சொல்றே ?
நான்: இன்று காதலர் தினம். அதுக்கு ஒரு கருத்து சொல்லலாமினு..,
மைண்ட்வாய்ஸ் : உதைப்படறடுக்குள்ள ஓடிப்போயிடு. ஏற்கனவே பலப் பேரு காதலர் தினத்தையும் , காதலையும் சோப்பு போட்டு நனைச்சு , அலசி, காயப்போட்டுட்டங்க. நீ எதுவும் புதுசா சொல்ல தேவை இல்ல.
நான்: ஒரு கவிதையாவது ...?
மைண்ட்வாய்ஸ் : ஒண்ணும் வேணாம். அதுவும் ஓராயிரம் கொட்டி கிடக்கு பிளாக்குல. நீ வேற கழுத்தறுக்காத ஓ.கே
நான்: ப்ளீஸ் ப்ளீஸ் ..,
மைண்ட்வாய்ஸ் : சரி சரி தொலைஞ்சு போ. ஆனால் சொந்த சரக்கை mattum போட்டு நல்ல நாளை கெட்ட நாளா மாத்திடாதே
நான்: சரி சரி
தபூ சங்கரின் சில கவிதைகள்:
நம் காதலுக்குக்காக
நீ ஒன்றும் செய்ய வேண்டாம்..,
நீ சம்மதம் மட்டும் சொல்..,
உனக்கும் சேர்த்து நான்
காதலித்துவிட்டு போகிறேன்.?!!
உன்னை கேலி செய்பவனைக் கூட
முறைத்துப் பார்க்கிறாய்..,
ஆனால்
உன்னை உயிராய்
காதலிக்கும் என்னை
சாதரணமாய் கூட
பார்க்க மறுக்கிறாயே ஏன்?
இனி தொலைப்பேசியில்
முத்தம் தராதே..,
அது..,
உன் முத்தத்தைஎல்லாம்
எடுத்துக் கொண்டு,
எனக்கு சத்தத்தை
மட்டுமே
தருகின்றது..,
நீ பேருந்து நிலையத்தில்
கசக்கி போட்ட
பயணச் சீட்டு கண்ணீர்
விடுகின்றது..,
பயணம் முடிந்ததே
என்ற ஏக்கத்தில்...,
தபூ சங்கர்ங்கறது என் புனை பெயர்
ReplyDeleteதான்னு யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க..
:)
பிளாகர் வெங்கட் கூறியது...
ReplyDeleteதபூ சங்கர்ங்கறது என் புனை பெயர்
தான்னு யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க..
:)
///////////////////////////
சரி சரி. ஆனால் ஏன்? இந்த தன்னடக்கம்
>>>>நேசிக்கப்படுகிறோம் என்ற உணர்வு எல்லாரையும் கர்வப்பட வைக்கும்..,
ReplyDeleteகேச்சிங்க் பாயிண்ட்
வெங்கட் சொன்னது…
ReplyDeleteதபூ சங்கர்ங்கறது என் புனை பெயர்
தான்னு யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க..
:)//
நீங்கதான் தப்புதப்பா எழுதுற சங்கர் ஆச்சே. ஏன் இந்த வெட்டி விளம்பரம். எங்க இப்ப சொந்தமா ஒரு கவிதை சொல்லுங்க பாப்போம்?
Superappu
ReplyDeleteAathrai
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ReplyDeleteவெங்கட் சொன்னது…
தபூ சங்கர்ங்கறது என் புனை பெயர்
தான்னு யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க..
:)//
நீங்கதான் தப்புதப்பா எழுதுற சங்கர் ஆச்சே. ஏன் இந்த வெட்டி விளம்பரம். எங்க இப்ப சொந்தமா ஒரு கவிதை சொல்லுங்க பாப்போம்?
////////////////////
காதலில் விழாதவங்களுக்கெல்லாம் வெங்கட் சார் கவிதை எழுதி தருவதில்லை.
பெயரில்லா கூறியது...
ReplyDeleteSuperappu
Aathrai
//////////////////////
thanks
பெயரில்லா கூறியது...
ReplyDeleteSuperappu
Aathrai
//////////////////////
thanks