Monday, November 07, 2011

நீயும் நானும் நட்பென்ற எல்லையில்!?...,


வார்த்தைகளை
உணர்ச்சிகளாய் வெளிபடுத்தவோ
உள் உணர்வுகளை
வார்த்தைகளாய்
வெளிபடுத்தவோ
காதலில் மட்டுமே முடியும்.

நமக்காக நாம்
வரையறுத்து கொண்ட
நட்பென்ற எல்லையில்
இவை, சாத்தியமில்லாமல் போனதில்
வருத்தமே மிச்சம்.

இங்கே, எந்த உணர்வுகளும் சரி
எந்த வார்த்தைகளும் சரி
நாகரிகம் கருதி
நமக்கு நாமே புதைத்து கொண்டதை
நம் மனம் மட்டுமே அறியும்!?.

இருப்பினும்
நீ சொல்ல தயங்கியதை நானும்...,
நான் சொல்லாத வார்த்தைகளை நீயும்..,
புரிந்துகொண்டமையால் தான்
வளர்ந்து கொண்டு இருக்கிறது
நம் நட்பெனும் உறவு....,

18 comments:

  1. இந்திய பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக போஸ்ட்க்கு லேபிள்ல விரக்தின்னு போட்டு சாதனை படைத்ததற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. உண்மையில் அற்புதமான கவிதை...

    நட்பென்ற எல்லை பிளவுபடாமலும் சுருங்காமலும் பார்த்துக் கொள்ள அவர்ரவர் படும் பாடுகள் சுருக்கமாக கவிதை மிளிர்கிறது..

    ReplyDelete
  3. >>நீ சொல்ல தயங்கியதை நானும்...,
    நான் சொல்லாத வார்த்தைகளை நீயும்..,

    2 பேரும் டியூப்லைட்ஸ் போல , அய்யோ பாவம்

    ReplyDelete
  4. நட்பு உடைப்படும் போதுதான் காதல் மிளிர்கிறது..

    காதலும் உடைப்படும் பேர்து...

    என்னவாகும் யாருக்கும் தெரியாது..

    ReplyDelete
  5. >>நமக்காக நாம்
    வரையறுத்து கொண்ட
    நட்பென்ற எல்லையில்

    ஆமா, அவரு உகாண்டோ நாட்டு அதிபரு.. நீங்க அமெரிக்கா பிரதமர்.. எல்லை களை பிரிச்சு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  6. நட்பினை மிக அருமையாக சொன்னீர்கள், அருமையான உணர்வுகள்...!!!!

    ReplyDelete
  7. சி.பி.செந்தில்குமார் கூறியது...
    >>நீ சொல்ல தயங்கியதை நானும்...,
    நான் சொல்லாத வார்த்தைகளை நீயும்..,

    2 பேரும் டியூப்லைட்ஸ் போல , அய்யோ பாவம்//

    ஹா ஹா ஹா ஹா டேய் அடங்குடா மூதேவி....

    ReplyDelete
  8. சி.பி.செந்தில்குமார் கூறியது...
    >>நமக்காக நாம்
    வரையறுத்து கொண்ட
    நட்பென்ற எல்லையில்

    ஆமா, அவரு உகாண்டோ நாட்டு அதிபரு.. நீங்க அமெரிக்கா பிரதமர்.. எல்லை களை பிரிச்சு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

    அடப்பாவி நீ உருப்படிவியா....

    ReplyDelete
  9. சிலரால்தான் உணர்வதை நினைப்பதை
    படிப்பவர்களும் உணரும்படி மிகச் சிறப்பான
    படைப்பாக்கித் தர முடிகிறது
    உங்களைப்போல
    மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்
    த.ம 4

    ReplyDelete
  10. //நீ சொல்ல தயங்கியதை நானும்...,
    நான் சொல்லாத வார்த்தைகளை நீயும்..,
    புரிந்துகொண்டமையால் தான்
    வளர்ந்து கொண்டு இருக்கிறது
    நம் நட்பெனும் உறவு....,//

    ஆஹா..உங்க உணர்வுகளின் வெளிப்பாடு அருமை.

    ReplyDelete
  11. புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி,

    ReplyDelete
  12. //இருப்பினும்
    நீ சொல்ல தயங்கியதை நானும்...,
    நான் சொல்லாத வார்த்தைகளை நீயும்..,
    புரிந்துகொண்டமையால் தான்
    வளர்ந்து கொண்டு இருக்கிறது
    நம் நட்பெனும் உறவு....,//

    கலக்கல் வரிகள்

    ReplyDelete
  13. நீ சொல்ல தயங்கியதை நானும்...,
    நான் சொல்லாத வார்த்தைகளை நீயும்..,
    புரிந்துகொண்டமையால்//

    சி பி க்கு நெட் கனக்சன் கட் பண்ணுங்க...

    ReplyDelete
  14. #நமக்காக நாம்
    வரையறுத்து கொண்ட
    நட்பென்ற எல்லையில்# கவிதை அருமை ..நட்பை பற்றிய என் கவிதை .நட்பிற்கினியவளே... படிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன் ....http://pesalamblogalam.blogspot.com/2011/08/blog-post_07.html

    ReplyDelete
  15. சொல்ல வார்த்தைகள் இல்லை.....

    அருமை அருமை

    ReplyDelete
  16. நட்பென்றாலும்,காதலென்றாலும், பரஸ்பரப் புரிதல் முக்கியம்தானே!
    அருமை.

    ReplyDelete
  17. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete