Monday, March 19, 2012

யார் அந்த சீமாட்டி?.... ஐஞ்சுவை அவியல்



    அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார் என்று கூறி கொடுத்தார்.
    உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள். திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத் தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான். அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள். 

   அந்த சமயத்தில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை.

     அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்? எனச் சொல்ல, போடா! அவன் மனதில் நான் தான் இருப்பேன், என பீமன் வம்புக்குப் போக, இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன், என தர்மர் பிடிவாதமாய் சொல்ல, ஏன்... அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன், என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி. எல்லாரும் ஆர்வமாயினர்.

    கண்ணனைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தினர். என்ன ஆச்சரியம்! யாருக்கு கண்ணனை அறவே பிடிக்காதோ, யாரொருவன் கண்ணனைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறானோ அந்த சகுனி கண்ணாடியில் தெரிந்தான். 

   கண்ணா! மாயம் செய்கிறாயா? என அனை வரும் ஒரே நேரத்தில் கேட்டனர். இல்லை..இல்லை... என்னைக் கொன்றே தீர வேண்டுமென தூக்கத்தில் கூட என்னையே சிந்தித்துக் கொண்டிருக்கிறான் சகுனி. என்னை எப்படி எண்ணுகிறார்கள் என்பது முக்கியமல்ல! கணநேரமும் என்னை மறவாதவர்கள் என் இதயத்தில் இருப்பவர்கள், என்றான் கருணையுள்ள கண்ணன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
 
ஒரு சைவ ஜோக்:-

பள்ளியில் டீச்சர் மாணவனிடம் கேட்கிறார்...

டீச்சர்:- கடல் நடுவுல ஒரு மாமரம் இருக்கு, அதில இருக்கிற மாங்காய் பறிச்சிட்டு வரணும்னா நீ என்ன செய்வ...?

மாணவன்:- என்னோட ரெண்டு ரெக்கையையும் விரிச்சிகிட்டு பறவை மாதிரி வானத்துல பறந்து போய் மாங்காய் பறிப்பேன் சார்..

டீச்சர்:- திடீர்னு உனக்கு ரெண்டு ரெக்கையை உங்க அப்பனா வந்து கொடுப்பான்?

மாணவன்:- கடல் நடுவுல போய் மாமரத்த யார் வச்சது சார், உங்க அப்பனா?

டீச்சர்:- ?????????!!!!!!!!!!!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
                                  
என் பையனுக்கு  அப்போ வயசு 3. காலையில என் வீட்டுக்காரருக்கும், பெரிய பொண்ணுக்கும் மதியம் லஞ்ச் கட்டி 8 மணிக்கிள்ள ஆபீசுக்கும், ஸ்கூலுக்கும் குடுத்தனுப்பனும். அன்னிக்குன்னு பார்த்து என் பையன் என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு இருந்தான். டைமோ 7.30 ஆகிடுச்சு. சமையல் ரெடி. லஞ்ச் பாக்ஸுல போட விடாம அமர்க்களம் பண்ணிக்கிட்டு இருந்தான்.

அதனால, டேய் அப்பு, மணி இப்பவே 7.45. அப்பா ஆபீசுக்கு போக டைம் ஆகிடுச்சுன்னா அவரு பறப்பாருடான்னு சொல்லவும் என் வீட்டுக்காரர் வரவும் சரியா இருந்துச்சு. அவரை பார்த்து ஓன்னு அழ ஆரம்பிச்சுட்டான்.
ஏண்டி குழந்தையை அடிச்சியான்னு கோவமா கேட்டுக்கிட்டே, என்ன அப்புன்னு கேட்டார். அவன் அப்பா நீ பறப்பியாமே, ஏன் என்கிட்ட இத்தனை நாள் பறந்துக் காட்டலைன்னு சொல்லி அழுதான். அவனை சமாதானபடுத்துறதுக்குள்ள முழி பிதுங்கி அன்னிக்கு ஆபீசுக்கு மட்டம் போட்டு ”பிள்ளைங்ககிட்ட எப்படி பேசுறதுன்னு தெரியலையான்னு? என்னை கரிச்சு கொட்டுனதெல்லாம் பதிவுக்கு அப்பாற்பட்ட விஷயம்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


                                    
 யார் அந்த சீமாட்டி?
பட்டையை பட்டையை நீக்கி...,
 பதினாறு பட்டையை நீக்கி...,
முத்துப்பட்டையை நீக்கி...,
முன்னால் வருவாள் சீமாட்டி...,
அவள் யார்? 
விடை வழக்கம்போல் அடுத்த பதிவில்...,
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஒழுங்காய் சமைக்க...,
  கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.     தேங்காய் சட்னி செய்யும் போது, பச்சை மிளகாயை எண்ணெயில் வதக்கிய பின் அரைத்தால், சுவை கூடுதலாக இருக்கும்.நன்றாக முற்றிய தேங்காயை துருவுவதற்கு கஷ்டமாக இருக்கும். அதற்கு தேங்காயை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து பிறகு துருவினால், மிகவும் எளிதாகத் துருவலாம்.பொங்கல் செய்யும் போது நீர் அதிகமாகி விட்டால், அதில் வறுத்த ரவையை ஒன்று அல்லது இரண்டு கைப்பிடி போட்டு கிளறினால் பொங்கல் நன்கு சேர்ந்து கெட்டியாகி விடும்.

24 comments:

  1. வித்தியாசமான சுவையில் அவியல்! அருமை தோழி! :)

    http://karadipommai.blogspot.in/

    ReplyDelete
  2. அப்புறம்... அப்புவுக்கு முன்னால ‘அவர்’ பறந்து காட்டினாரா இல்லையான்னு சொல்லவே இல்லயே... ஹி.. ஹி... புதிரின் விடை... குழப்புதே! வாழைப் பூவாம்மா? கிருஷ்ணர் பத்தின கதை ஏற்கனவே கேட்டதுன்னாலும் படிக்க சுவாரஸ்யம். அந்த மாமர ஜோக்கும் அருமை.

    ReplyDelete
  3. அவியல் அசத்தல்...

    அந்த சீமாட்டி பலாப்பழ்மா ?????

    ReplyDelete
  4. அவியல் சுவாரஸ்யம்...ஜோக் அருமை...விடை?

    ReplyDelete
  5. கலந்து கட்டி கலக்கியிருக்கீங்க சகோ. தொடருங்க. சைவ ஜோக் அருமை.


    கடுமையான பணிப்பளு காரணமாக கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக வலைப்பூக்கள் பக்கம் வர முடியவில்லை. சாரி!

    ReplyDelete
  6. அப்ப யார் அப்பன் செமக்கமடி

    ReplyDelete
  7. ssss!

    avichuddenga!

    comedy-
    kalakkal!

    ReplyDelete
  8. அசத்தல் அவியல். ஜோக் நல்ல ரசனை. சமையல் டிப்ஸ் அத்தனையும் உபயோகமாக உள்ளது.

    புதிருக்கு விடை பலாப்பழம்? நாக்கு?

    சரியா தெரியலை. விடைக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  9. அசத்தல் அவியல்
    இருமுறை சாப்பிட்டேன்
    மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ராஜி அக்கா இந்தி அவியல் பிரமாதம்... வித்தியாசமான சுவையாக இருந்தது

    ReplyDelete
  11. // ஒரு சைவ ஜோக்//

    ஜோக்கு சூப்பர் கோவத்திலும் மரியாதையை

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. என்ன நீங்கள் அவியல் போட்டு கலக்குறிங்க உங்கள் அண்ணன் மிக்ஸர் போட்டு கலக்குறார். சபாஷ் சரியான போட்டி

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. ஐஞ்சுவை அவியல் அருமையோ அருமை.அந்த ஜோக்கும்,உங்கள் பையன் அடித்த கூத்தும் ஒரே சிரிப்புத்தான்.

    ReplyDelete
  16. கண்ணா.....
    அட! உங்க சார் பறப்பாரா?

    ReplyDelete