சில பொழுதாவது சோகப்படு....,
ஆனந்தத்தின் அருமை புரியும்.
யாருக்காவது கண்ணீர் விடு.....,
புன்னகையின் பெருமை புரியும்.
ஆனந்தத்தின் அருமை புரியும்.
யாருக்காவது கண்ணீர் விடு.....,
புன்னகையின் பெருமை புரியும்.
ஒருநாளாவது பணமில்லாமல் ஊர்சுற்று....,
வறுமையின் கொடுமை தெரியும்.
மாளிகைவிட்டு மண் குடிசைக்கு வா....,
அன்றாடங்காய்ச்சியின் அழுகுரல் புரியும்.
மொழிபுரியாத தேசத்திற்க்குச் செல்....,
கல்வியின் அவசியம் தெரியும்.
அன்பிற்குரியவர்களிடமிருந்து விலகிப்பார்...,
மரணத்தின் வேதனை புரியும்.
குற்றவாளிகளின் கதறலைக் கேள்.....,
முன்கோபத்தின் பின்விளைவு புரியும்.
காலைப்பத்திரிகை விற்பனை பின்தொடர்....,
வாழ்க்கையின் வேகம்தெரியும்.
கடற்கரையில் குடிநீர் விற்பனைக் கேள்...,
வாழ்க்கையின் தாகம் புரியும்.
உழைக்கும் சிறுவர்களை உற்றுப்பார்....,
வாழ்க்கையின் அச்சம் தெரியும்.
உயர்ந்தவர்களின் வரலாறு படி..,
வாழ்க்கையின் வலி புரியும்.
//ஒருநாளாவது பணமில்லாமல் ஊர்சுற்று....,
ReplyDeleteவறுமையின் கொடுமை தெரியும்.
//
இதை அனுபவத்தில் கண்டுள்ளேன்
இன்று
ReplyDeleteவிஜய் அஜித் இணைந்து நடிக்க கதை தயார் : அம்புலி 3D பட இயக்குனர் ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டி பகுதி - 2
ஆஹா வாழ்க்கை தத்துவங்கள் மலையாக ச்சே மழையாக பொழிகிறதே....!!!
ReplyDeleteஅனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய அற்புதமான கருத்துக்கள்! நன்று!
ReplyDeleteவரிக்கள் அனைத்தும்
ReplyDeleteவாழ்வியல் கூறுகள்
புரிந்தால் நலமே
போதனை வளமே!
புலவர் சா இராமாநுசம்
அருமை அருமை
ReplyDeleteமிகவும் ரசித்த பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
கவிதை எழுது அது
ReplyDeleteஎவ்வளவு கஷ்டம்னு புரியும்(ச்சும்மா).
அனைத்து வரிகளுமே சிந்திக்கவைப்பவை.
சிந்திக்க வைக்கும் கவிதை வரிகள். சிறப்பாக இருக்கு, ராஜி.
ReplyDeleteராஜி உங்களின் இந்த கவிதையை படித்தால்
ReplyDeleteவாழ்க்கையின் தத்துவங்கள் புரியும்.
பணத்தின் மீது மோகம் அதிகரிப்பது என்றாவது அதன் அருமை தெரியும் போதுதான் ..!
ReplyDeleteraji!
ReplyDeleteazhakaakavum!
arththamaakavum-
sonneenga!
ithu kavithai alla!
pon mozhikal!
"அனைத்து வரிகளும் சிந்திக்க வைக்கும் அற்புத வரிகள் ! பாராட்டுக்கள் !"
ReplyDelete//மொழிபுரியாத தேசத்திற்க்குச் செல்....,
ReplyDeleteகல்வியின் அவசியம் தெரியும்.//
கல்விக்கும் மொழிக்கும் தொடர்பில்ல -:)
arppudhamaana vazhkkai vali padhivu
ReplyDeletenandri
surendran
>>உயர்ந்தவர்களின் வரலாறு படி..,
ReplyDeleteநான் 6 அடி உயர்ந்தவன், அப்போ என் டைரியை டெயிலி படிச்சா போதுமா? ஹி ஹி
வாழ்க்கை தத்துவங்கள் அருமை அக்கா
ReplyDeleteதெரியும்..தெரியும் என்று நற் கருத்துகள் தொடர். நல்ல கவிதை. நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமை ராஜி.
ReplyDeleteவாழ்க்கையை சுவைபட சொல்லியிருக்கும் விதம் சிறப்பு உண்மையில் உலகத்தை அப்போதுதான் முறையாக புரிந்து கொள்ள இயலும் சிறப்பு
ReplyDeleteபலவற்றை உணர்ந்ததுண்டு........உண்மை தான்!!!
ReplyDelete