அந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டில்...,
ஏன் கவிதாம்மா! பாப்பா அழுதுக்கிட்டே இருக்கு?!
தெரியலை வாட்ச்மேன்,
பசிக்குதோ?!
இல்லையே இப்போதான் செரிலேக் ஊட்டினேன்.
ஒருவேளை எறும்பு கடிச்சிருக்கா? இல்லை வயத்து வலியான்னு பாருங்கம்மா.
எல்லாம் செக் பண்ணி பார்த்துட்டேன். அதெல்லாம் ஒண்ணுமில்லை. ஆனா அவளை சமாதான படுத்தவே முடியலை வாட்ச்மேன்.
கவிதாம்மா! பாப்பாவை கொண்டாங்க. நான் ஒரு விளையாட்டு விளையாடுறேன் அழுகையை நிப்பாட்டுதான்னு பார்க்கலாம்...,
என்ன விளையாட்டு வாட்ச்மேன்?
கொஞ்சம் நினைவு தெரிய ஆரம்பிச்ச உடனே பாப்பாக்களுக்கு விளையாட்டு காட்ட..., பெத்தவங்களும், தாத்தா பாட்டிகளும் ”நண்டூறுது, நரியூறுது..,”ன்ற விளையாட்டை விளையாடுவாங்கம்மா. பாப்பாவும், கோவம், பசி, வலி மறந்து சிரிக்க ஆரம்பிக்கும.
முதல்ல பாப்பாவோட கைவிரல் ஒண்ணொண்ணையும் தொட்டு..., இது சோறு,
இது பருப்பு, இது நெய், இது குழம்புன்னு 10 விரலுக்கும் 10 விதமான சாப்பாட்டு பேரை சொல்லனும்....,இது பாப்பாவோட தொடு-உணர்வை வலிமை பெறச் செய்யும்.
அப்புறமா, பாப்பாவோட கையை லேசா விரிச்சுப் பிடிச்சுக்கிட்டு நம்ம முழங்க மூட்டால தேச்சிக்கிட்டே....,பப்பு கடை..., பப்பு கடைன்னு பாடனும்..., இது மாதிரி செய்யும்போது மூளைக்கு ரத்தம் கொண்டு போற நரம்பு தூண்டப்படுது. அதனால, மனசுக்கு மகிழ்ச்சியும் குடுக்குமாம்....,
உள்ளைங்கையிலிருந்து கொஞ்சமா எதையோ எடுக்குற மாதிரி எடுத்து , பாப்பாக்கு ஒரு வாய், அப்பாவுக்கு ஒரு வாய், அம்மாவுஒரு வாய், பாட்டிக்கு ஒரு வாய்,தாத்தாவுக்கு ஒரு வாய், பாப்பாவுக்கு ஒரு வாய், அண்ணாக்கு ஒரு வாய்ன்னு பாடிக்கிட்டே ஊடுற மாதிரி நடிப்பாங்க. இதுப்போல செய்றது நம்மை அறியாமலே பாப்பாக்கு ”பகிர்ந்துண்ணல்” பத்தி சொல்லி தரோம்.
அப்புறம் உள்ளங்கயை தடவி, கழுவி கழுவி நாய்க்கு ஊத்த்து..., கழுவி கழுவி பூனைக்கு ஊத்து, கழுவி கழுவி காக்காக்கு ஊத்துன்னு சொல்லனும். இதனால, பாப்பாக்கு ஐந்தறிவு ஜீவன் களுக்கும் பசியாத்தனும்ன்னு சொல்லி குடுக்குறோம்.
அப்புறமா, பாப்பா கையை நீட்டி பிடிச்சுக்கிட்டு.., நம்ம ஆள்க்காட்டி விரலாலயும், நடு விரலாலயும் லேசாக நடத்திக் நண்டூருது..., நரியூறுதுன்னு பாடிக்கிட்டே கூசுமாறு செய்யனும். அப்பவும் பாப்பாக்கு கூச்சம்
வரலைன்னா கைகளுக்குக் கீழ அக்குளை தொட்டு
கூசுமாறு செய்யனும். அப்போ பாப்பா தன் வலி, பசி, கோவம் மறந்து சிரிக்கும். ஒரு முறை பாப்பாக்கு செஞ்சு பாருக்க சிரிக்குதான்னு பார்க்கலாம்.
நீங்க சொன்னது சரிதான் வாட்ச்மேன். பாப்பா சிரிக்குது வாட்ச்மேன்.
இதுப்போல பாப்பாக்களை சிரிக்க வைக்க நிறைய விளையாட்டுக்கள் இருக்கு. எங்க வூட்டம்மாவை கூட்டி வந்து உனக்கு சொல்லி தர சொல்றேன் கவிதாம்மா. நீ வேலைக்கு போறதால உனக்கெங்கே தெரிய போகுது கவிதாம்மா!
பால்ய காலத்துல நம்ம பக்கத்துல
உக்காந்து, அம்மாவோ இல்ல பாட்டியோ சாப்பாடு ஊட்டும்போது கூடவே சாப்பிட்டு,
கதை கேட்டு, பக்கத்துல படுத்து தூங்கிய நிலா, நாம வளரும்போது, கொஞ்சம்,
கொஞ்சம் நகர ஆரம்பிச்சு த்த்த்த்தூரமா விலகி வானத்துல போய் எட்டா உயரத்துல
உக்காந்துக்கும்.
அதுப்போல
சின்ன புள்ளைல நாம ரசிச்ச பல அற்புத விஷயங்களை கால ஓட்டத்தில் நாம
தொலைச்சுட்டோம்ம்மா. நாம தொலைச்சதுமில்லாம, அந்த பொக்கிஷங்கள் நம்ம
குழந்தைகளுக்கு கிடைக்காத மாதிரியும் பண்ணிட்டோம் கவிதாம்மா. நீயாவது நம்ம பாப்பாக்கு அதெல்லாம் குடு தாயி.
சரிங்க வாட்ச்மேன் தாத்தா!
இந்தக் கதைகள் யாவும் இப்போதைய கால கட்டத்தில் அழிந்து கொண்டிருக்கின்றன என்பதே நிதர்சனமான உண்மை சகோ.!
ReplyDeleteமுன்னோர் வகுத்த வழியை மறந்து தான் உலகம் பயணிக்கின்றதேயொழிய முன்னோர் வகுத்த வழியைக் கூட்டிச் சென்றதன்று.
பயனுள்ள பகிர்வு.
பகிர்ந்தமைக்கு நன்றி
//முதல்ல பாப்பாவோட கைவிரல் ஒண்ணொண்ணையும் தொட்டு..., இது சோறு, இது பருப்பு, இது நெய், இது குழம்புன்னு 10 விரலுக்கும் 10 விதமான சாப்பாட்டு பேரை சொல்லனும்....,
ReplyDeleteஅப்புறமா, பாப்பாவோட கையை லேசா விரிச்சுப் பிடிச்சுக்கிட்டு நம்ம முழங்க மூட்டால தேச்சிக்கிட்டே....,பப்பு கடை..., பப்பு கடைன்னு பாடனும்..., //
நாங்க விளையாடிருக்கோம்
பப்பு கடைஞ்சி பப்பு கடைஞ்சி இது அம்மாக்கு இது அப்பாவுக்கு இப்படித்தானே நாத்தனாரே இது எனக்கு தெரியுமே அய்யோ அய்யோ இப்ப தான் இவங்க கத்துகுறாங்க பா.
ReplyDeleteம்
ReplyDeleteநன்றி
ம்
ReplyDeleteநன்றி
இப்போ, வாம்மா அப்பா விளையாட்டு காட்டுறேன்னு கூப்பிட்டா, மரியாதையா லேப்டாப்பை ஒப்பன் பண்ணி கேம்ஸ் ஒப்பன் தான்னு கேக்குதுங்க...! ம்ம்ம் நாமதான் சொல்லிகுடுக்கத் தவறிட்டோமோ?
ReplyDeleteநம்ம பிள்ளைங்க நிறைய விளையாட்டுகளை மிஸ் பண்ணிட்டாங்க, நாமளும்தான்...!
ReplyDeleteஉண்மையில் நான் மட்டும்தான் இல்ல....எங்க ஊர்ல மட்டும்தான் இந்த விளையாட்டுக்கள் இருக்கும் என்னு நினைச்சிருந்தேன்...
ReplyDeleteஎல்லா இடத்திலயும் இது இருக்கிறது இன்னைக்குத்தான் எனக்குத் தெரிஞ்சது..
மறக்க முடியாத விளையாடு இன்றும் என் வீட்டு குழ்ந்தைகளுடன் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறேன்
பகிர்வுக்கு நன்றி
இன்னும் பல விளையாட்டுக்கள் குழந்தைகளிடம் விளையாடி கொண்டு தான் இருக்கிறோம்... நன்றி சகோதரி...
ReplyDeleteகொடுக்கலாம் சின்ன வயது நினைவுகளை,ஆனால் அன்றைக்கு பிள்ளைகள் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டார்கள்,இன்றைக்கு பிள்ளைகளை தொலைக்காட்யும்,சினிமாவும்,ஊடகங்களும் வெளி உலகமும் வளர்க்கிறது.தவைர இன்றக்கு இருக்கிற அவசர உலகில் ஓடிக்கொண்டேயிருக்கிறோம் எதை நோக்கிய ஓட்டம்,ஏன் இந்த ஓட்டம் என்கிற இலக்கு இல்லாமலேயே/நல்ல படைப்பு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆமாங்க நரக வாழ்க்கையில ச்சே..நகர வாழ்க்கையில எல்லாம் குழந்தைகளும் கம்பியூட்டர் கேம் ஆடக் கிளம்பிதுடுங்க.நண்டூறுது நரியூறுதுன்னு பக்கத்து வீட்டு குழந்தைக்கிட்ட சொல்லப்போயி குழந்தை திரு திருன்னு முழிச்சு அழ ஆரம்பிச்சுட்டுது என்ன கொடுமை..
ReplyDeleteஐ... இது எனக்கும் தெரியும்... நானும் ஷாமும் மாத்தி மாத்தி விளையாடிக்குவோம் :-)
ReplyDeleteபட் தற்போதைய குழந்தைகளூக்கு நம் காலத்திய சிறு சிறு சந்தோஷங்களும் கிடைப்பதில்லை தான் :(
கி கி கி
ReplyDeleteஒரு சிறந்த ஆக்கத்தினூடாக எம்மை மழைப் பருவத்திற்கே
ReplyDeleteகொண்டுபோய் விட்டு விட்டீர்கள் தோழி .மிக்க நன்றி பகிர்வுக்கு .
நாமதான் குழந்தைகளுக்கு பழக்கம் காட்டனும்னு நினச்சாலும் குழந்தைகலுக்கு இப்ப சுமை எக்கசக்கம்.ஹோம் ஒர்க் வேர இருக்கும். நிதானமா விளையாட டைம் கிடைக்கரதில்லே என்பதுதான் உன்மை
ReplyDeleteஅதுப்போல சின்ன புள்ளைல நாம ரசிச்ச பல அற்புத விஷயங்களை கால ஓட்டத்தில் நாம தொலைச்சுட்டோம்ம்மா.//
ReplyDeleteஉண்மைதான்! அருமையான குழந்தைப் பருவ நினைவுகளை கண்முன் கொண்டு வந்த பதிவு! நன்றி! என் வலைப் பக்கத்தில் என்னுடைய மகளின் கவிதையும் என் கவிதையும் பகிர்ந்துள்ளேன்! நன்றி!
அழகான பகிர்வு..
ReplyDeleteஇந்தக் காலத்துக் குழந்தைகள் எவ்வளவு தொலைத்திருக்கிறார்கள்..
இன்றுதான் தங்கள் வலைப்பக்கம் வந்தேன்..
இந்த இடுகையே என்னைக் கட்டிப்போட்டுவிட்டது..
நல்ல பகிர்வு.
ReplyDeleteநல்ல பகிர்வு தோழி.
ReplyDeleteஎங்க காலத்திலயே இதுவெல்லாம் அழிய ஆரம்பிச்சுட்டுது..இப்போ முழுமையா அழிஞ்சுபோயிருச்சுன்னு நினைக்கிறேன்!
ReplyDeleteகுழந்தைகளுக்கும் நமக்குமான உறவை அழகாய் பலப்படுத்தும் விளையாட்டுகள். பழைய நினைவுகளுக்குள் அழைத்துப்போனப் பதிவு. பகிர்வுக்கு நன்றி ராஜி.
ReplyDelete