ஒவ்வொரு முறையும் புது வருசம் பொறக்கும் போதும்.., அதை செய்யனும் இதை செய்யனும்னு ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும்,இந்தவருஷமாவது 'இதைச் செய்யனும்',
'இதைமுடிக்கனும்','இதை செய்யக்கூடாது' ன்னு புதுசு, புதுசாஏதாவது ஒண்ணை சபதமா எடுத்துக்குறது, நினைவு தெரிஞ்சு பழக்கம்..ஏதோ "புதுப் பொண்டாட்டி" கதையா ஆரம்பத்துல சபதத்தை
கடைபிடிச்சுட்டு, ரொம்பப் பெருமையா எல்லார்கிட்டயும் சொல்லிகிட்டுத்
திரிவேன். . கொஞ்சநாள் போன பின்னாலே "பழையக்குருடி கதவத்திறடி"ன்னு புத்தாண்டு சபதத்தை காத்துல விட்டுடுவேன். மத்தவங்க கேக்க மாட்டாங்க. அப்படியே கேட்டாலும் நமக்கா சமாளிக்க தெரியாது. கேட்டா அதுக்கு ஏதாவது காரணத்த
உண்டாக்கி சொல்லிடுவேன்.
அதனால, இந்த புது வருஷத்துக்கு எந்த சபதமும் எடுக்கக் கூடாதுன்னு சபதம் எடுத்திருக்கிட்டேன்.இருந்தாலும்
மனசுக் கேக்கல ஏதாவது புதுசா செய்யனும்னு உறுத்திகிட்டே இருந்திச்சு. சரி உடம்பு வெயி குறைக்கலாம்ன்னு பார்த்தேன். அதுவும் முன்ன சொன்ன மாதிரி 'சுறு சுறுப்பா'
ஆரப்பிச்சு 'கடுகடுப்பா' முடிஞ்சுடும். என்ன பண்ணலாம்னு ரொம்ப நேரம் யோசிச்ச பின்.., யோசிச்ச பின்..., யோசிச்ச பின்னும் ஒண்ணும் தோணலை.:-(
சமைக்குற, கூட்டுற, துவைக்குற வேலைன்னு எது எஞ்சாலும் நல்லா இல்லைன்னு பேர் வாங்குற நாம.., கிடைக்குற வார்த்தைகளை உடைச்சு போட்டு கமா, ஆச்சர்ய குறி லாம் போடு எழுதுறதையும்.., சகோதரி மனசு கஷ்டப்பட கூடாதுன்னு நல்ல இருக்குன்னு சொல்ற மாதிரி ஏதொ கொஞ்ச நல்ல பேர் வாங்கி வெச்சிருக்கேன்.அதனால.., இந்த நல்ல பேரை தக்க வெச்சுக்கிட்டா போதும்ன்னு புது வருசத்துல சபதம் எடுத்துக்கிட்டு.., கவிதைன்ற பேருல எதோ எழுதி பதிவை போட்டுட்டேன். இந்த புது வருசத்துலயும் இந்த சகோதரி மனசு கஷ்டப்படாம பார்த்துப்பீங்கன்னு நம்புறேன்.
போதும் பில்ட் அப் முதல்ல கவிதையை போடு. சகோதரியாகிட்டதால நல்லா இருந்தா பாராட்டுவோம். இல்லாட்ட்டி ஓங்கி நடு மண்டைல கொட்டுவொம்ன்னு சொல்ற உங்க மைண்ட் வாய்ஸை நான் புரிஞ்சுக்கிட்டேன்.... படிச்சு பார்த்து நல்ல முடிவை எடுங்க...,
புத்தாண்டு வாழ்த்துமே நீ உன்னை உண்மை அறிந்தால்..,
கடற்கரையில் கொண்டாட்ட கேளிக்கை:
காண நூறு பேர் வாடிக்கை
பன்னிரண்டு மணிக்கு பட்டென்று
வெடிக்கிறது வானவேடிக்கை
புத்தாண்டு ஆரம்பம்??!!!
காது கிழிக்கும் பேரிரைச்சல்,
மங்கிய விளக்கொளி:
நட்சத்திர ஓட்டலில் நடனம்..,
ஆடவர்/பெண்டிர் பேதம் இல்லாமல்..,
சமஉரிமை இங்கே சமனாக்கப் படுகிறது??!!
குடும்பத்தோடு கொத்தளத்தில் கொண்டாட்ட குதூகலம்..,
தமிழ் கலாச்சாரம் இங்கே தனித்துவம் பெறுகிறது??!!
மது வாங்கி,மதி மயங்கி மகான்மியம் தேடும் நவயுக நாகரீகம்
மது விலக்கு இங்கே மௌனம் சாதிக்கிறது??!!
கண்டிப்பாய் இவை இல்லாமல்
வரமாட்டேன் என்கிறது...,
சண்டித்தனமாய் இவர்களுக்கு மட்டும்..,
சண்டித்தனமாய் இவர்களுக்கு மட்டும்..,
இன்னும் ஒரு 365??!!
கையில் பீர் பொங்கினால் தான் பொங்கும்??!!
அடங்காத காளையருக்கு..,
இன்பம் தரும் இன்னுமொரு 365.
இன்பம் தரும் இன்னுமொரு 365.
ஆடைக் குறைப்பினால்தான்??!!
நிறையும் அங்கயர்க் கன்னிகளுக்கு...,
அம்சமான இன்னுமொரு 365.
அம்சமான இன்னுமொரு 365.
வாழ்த்துஅட்டை குவித்துதான் ஆரம்பமாகும்??!!
அன்பின் தூவர்களுக்கு..,
அடுத்த ஒரு சில 365.
அடுத்த ஒரு சில 365.
நள்ளிரவு சாகசத்திற்குப் பின்தான் நகருகிறது??!!
நகரத்துஆசாமிகளுக்கு..,
நச்சென்ற புது 365.
இதோடு நின்றால் பாரம்பரியத்திற்கே இழுக்கென்று??!!
தொலைக்காட்சியில் தொல்லையாய் காட்சிகள்..,
பார்த்து தம் பாவம் தொலைக்கும் பரிதாப மக்கள்.
போர் மேகங்கள்,பொருளாதாரப் புயல்ககள்,
அரசியல் அடிதடிகள்,முதலாளித்துவ முகமூடிககள்,
கடும் விலையேற்றம்,கிளர்ந்தெழும் தொழிலாளர் போராட்டங்கள்,
பணவீக்கம்,அத்தியாவசிய பொருட்கள் முடக்கம்..,
அரசியல் அடிதடிகள்,முதலாளித்துவ முகமூடிககள்,
கடும் விலையேற்றம்,கிளர்ந்தெழும் தொழிலாளர் போராட்டங்கள்,
பணவீக்கம்,அத்தியாவசிய பொருட்கள் முடக்கம்..,
இவை எல்லாம் எப்போதுமே இங்கே உண்டு
பழைய வருடத்தில் பழையனவாய்.
புதிய வருடத்தில் மீண்டும் பழையனவாய்.
எப்பொழுதும் போல் ஆண்டு வரும்,
ஆண்டு போகும் இது இயற்கை.
மாண்டு போகும் மனிதனே
மாண்டு போகும் மனிதனே
உனக்குத் தெரிய வேண்டாமா??!!
ஆண்டு ஓடினால்..,
வயது மூப்பு தான் வரும் என்று...,
ஒரு நொடி இறந்து..,
ஒரு நொடி இறந்து..,
மறுநொடி பிறக்கும்..,
ஒரு பிறப்பு..
அந்த பிறப்பிற்கு..,
பித்து பிடித்து அலையும் நீ..,
அந்த ??!! இறப்பிற்கு துக்கம்
அந்த ??!! இறப்பிற்கு துக்கம்
அனுஷ்டிக்க வேண்டாமா???
ஓர் இரவுக்குள், புது அவதாரம் எடுத்து
புதிய விதி செய்திடுவாயோ?
பார் எங்கும் புதிய சிந்தனை கொடுத்து..,
பார் எங்கும் புதிய சிந்தனை கொடுத்து..,
புரட்சி ஒன்றைத் தந்திடுவாயோ ??!!
உன்
புத்தாண்டு கேளிக்கை கொடுக்குமா??!!
இனியும் ஒரு புதிய விதி???
புரட்சி தடைபடுமா??! இல்லை..,
புரட்சி தடைபடுமா??! இல்லை..,
புதிய சிந்தனை ஏற்படுமா???
பின்
ஏனிந்த தூக்கம்கெடுத்து..,
துக்கம் கொடுக்கும் ஒழுக்கக் கேடு???
சனவரிக்கு சனவரி மட்டும் ஏன் இந்த பரிவர்த்தனம்??!!
புத்தாண்டு வந்தாலே எனக்கு கவலைகள் வந்துவிடும்.காரணம் கடந்து முடிந்த ஆண்டுகளை பார்க்கும் போது நாம் சாதித்தது என்ன வென்று பார்க்கும் போது மனஸ் சங்கடங்கள் தான் மிஞ்ச்சுகின்றன. நான் எப்பொதும் தீர்மானம் எடுப்பதில்லை
ReplyDelete"ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்" இதை மறக்கத்தான் கொண்டாட்டம்
ReplyDeleteunmaithaan sako....
ReplyDeletesumma sollalai unmaithaan...
kavithai sinthikka vaiththathu ....
vaazhthukkal...
ReplyDeleteஉரத்த சிந்தனை.மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDeleteஆத்தி...தலைப்பும், கவிதையா... சரி....நல்லாதேன் இருக்குங்கோ
ReplyDeleteகுத்திக் காட்டல்கள்... +
ReplyDeleteநீண்ட நேரம் தலையைக் கவுத்துக் கொண்டு சிந்திக்க வேண்டிய வரிகள்
நல்ல பேரை தக்க வெச்சுக்கிட்டா போதும்ன்னு புது வருசத்துல சபதம் எடுத்துக்கிட்டு.., கவிதைன்ற பேருல எதோ எழுதி பதிவை போட்டுட்டேன். இந்த புது வருசத்துலயும் இந்த சகோதரி மனசு கஷ்டப்படாம பார்த்துப்பீங்கன்னு நம்புறேன்.//
ReplyDeleteவாழ்த்துகள்...
அருமையான கருத்துள்ள கவிதை, அருமை, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்மா.
ReplyDeleteஉங்களுடைய புத்தாண்டு சபதம் அருமை, அத்தோடு அருமையான பதிவையும் கொடுத்துவிட்டீர்கள் நன்றி.
ReplyDeleteஅப்போ இந்த வருடம் சிறப்பான பதிவுகள் அதிகம் வரும் என்று சொல்றீங்க அப்படிதானே காத்திருக்கோம். காத்திருக்கோம்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் கொஞ்சம் திரும்பி பாருங்க...
நன்றி.
புத்தாண்டு கொண்டாடும் நிலையிலா இன்று நாடு இருக்கிறது!?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅருமை கருத்துக்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteசிந்திக்க வேண்டியவை சகோதரி...
ReplyDeleteஇன்றைக்கு கொண்டாட்டங்கள் என்பது
குடித்து கும்மாளம் அடிப்பது என்றே ஆகிவிட்டது..
ஆக்கப்பூர்வ வழியில் வரும் ஆண்டுகளை
எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும்
அம்சமான கவிதைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
புது வருஷத்தன்னைக்கு தூங்கிட்டு இப்போ போஸ்ட்
Deleteஅருமை! லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க!
ReplyDeleteதேவை தேவையில்லை அது நமக்கு தேவையில்லை யாருக்கு தேவையில்லை தேவையில்லை புத்தாண்டு கொண்டாட்டம்.
ReplyDeleteஅவசரமான ஆர்பாட்டங்கள் தேவையில்லை அதற்காக இரவு பன்னிரண்டு மணிக்கு இதை எழுதி சொல்லவும் வேண்டியதில்லை காலையில் சொல்லாமே
ReplyDeleteசிந்தனையைத் துாண்டும் வரிகள்.
ReplyDeleteஅருமை.
நன்றாகச் சொன்னீர்கள்.
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்.