ஹோட்டல், கல்யாண விருந்துல இந்த காரக்கொழம்பு இருக்கும். மணத்தக்காளி கீரைல மிளகு போல இருக்கும் விதையை வெயில்ல காய வச்சும் எடுத்து வச்சுக்கலாம் இல்லாட்டி கடைலயும் கிடைக்குது. விலை மட்டும் கொஞ்சம் அதிகம்.
இந்த கீரையும். இந்த விதையும் சாப்பிட்டா வாயில், வயத்துல இருக்கும் புண் ஆறும்ன்னு சொல்வாங்க. வாய்ல புண் இருக்குறவங்க காலைல வெறும் வயத்துல மணத்தக்காளி கீரை இலை இல்லாட்டி இதன் விதை, பழம் சாப்பிட்டு வந்தா சீக்கிரமே குணமாகும். இனி பதிவுக்கு போகலாம்...,
நாலு பேர் கொண்ட குடும்பத்துக்கு செய்ய தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி விதை - 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் - 1 பெரிசு
தக்காளி - 2 பெருசு
பூண்டு - 10 பல்,
மிளகாய் தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சத்தூள் - சிறிது
உப்பு- தேவையான அளவு,
புளி - சிறியஎலுமிச்சை அளவு,
தேங்காய் - 2 சில்லு
வேர்க்கடலை - கொஞ்சம்
முந்திரி - 5
கடுகு- சிறிது
உப்பு- சிறிது
கறிவேப்பில & கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
மணத்தக்காளி விதையை வாணலில எண்ணெய் ஊத்தி வறுத்து எடுத்து வைக்கவும், புளியை ஊற வைக்கவும், தேங்காய், முந்திரி, வேர்க்கடலையை அரைத்து எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்க...,
கடுகு பொரிஞ்சதும் பூண்டு போட்டு வதக்குங்க...,
பூண்டு வாசனை போனதும், வெங்காயம் போடுங்க. கூடவே கொஞ்சம் உப்பை போட்டுக்கோங்க. வெங்காயம் ஒண்ணை போல சிவக்கும்..,
நறுக்கி வச்ச கறிவேப்பிலை, கொத்தமல்லியை போட்டு வதக்குங்க..,
தக்காளி சேர்த்து வதக்குங்க.(இப்ப வரும் தக்காளி என்னதான் வதக்கினாலும் மசிய மாட்டேங்குது, அதனால, காரக்குழம்பு, குருமா வகைகளுக்கு மிக்சில அரைச்சு சேர்க்குறது என் வழக்கம்)
தக்காளி நல்லா வதங்கினதும் மிளகாய் தூள் சேருங்க...,
அடுத்து மஞ்சப்பொடி சேர்த்து எண்ணெயிலயே லேசா வதக்குங்க.
தண்ணி, உப்பு சேர்த்து கொதிக்க விடுங்க...,
மிளகாய் தூள் வாசனை போனதும் ஊறவச்சிருக்கும் புளியை கரைச்சு சேர்த்துக்கோங்க.
நல்லா கொதிச்சு புளி வாசனை போனதும் அரைச்சு வச்சிருக்கும், தேங்காய், முந்திரி, வேர்க்கடலை விழுதை போட்டு லேசா கொதிக்க விடவும். கொழம்பு கொதிச்சதும் வறுத்து வச்சிருக்கும் மணத்தக்காளி விதையை சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி அடுப்பை ஆஃப் பண்ணிட்டு இறக்கிடுங்க.
டிஸ்கி:
1. முந்திரி, வேர்க்கடலை சேர்த்துக்கிட்டா குழம்பு திக்கா வரும் கூடவே ருசியும் நல்லா இருக்கும். இந்த குழம்பு எங்க வீட்டு பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும்
2. தேங்காய் சேர்த்த பின் ரொம்ப நேரம் கொதிச்சா குழம்பு தண்ணியாகிடும்.
3. சூடான சாதத்தோட நெய் சேர்த்து இந்த குழம்பு ஊத்தி சாப்பிட்டா நல்லா இருக்கும்.
அடுத்த வாரம் வேற ஒரு ஈசியான ரெசிபியோட வரேன்
படிக்கும்போதே எச்சில் ஊறுது புள்ள....
ReplyDeleteஎப்டிப்பா இத்தனை பொறுமையா ஒவ்வொரு கட்டத்திலும் படம் எடுக்கறீங்க. அருமையா இருக்கு படம் பார்க்கும்போதே அள்ளுகிறது மனதை....
தேங்கா, வேர்க்கடலை,முந்திரி மூணுமே ஹை கொலஸ்ட்ரால் இல்லையாப்பா? சாப்பிடலாமா?
ஏன்னா வீட்டில் அம்மா சாப்பிடுவதால் நான் சமையலில் முந்திரி வேர்க்கடலை தேங்கா சேர்ப்பதில்லை...
படமே இவ்ளோ அழகா இருக்குன்னா சுவைப்பற்றி கேட்கனுமா என்ன?
அன்பு நன்றிகள் ராஜி சுவையான பகிர்வுக்கு...
மிக நன்றாகவே சமைக்கறீங்கப்பா!
ReplyDeleteபார்க்கும் போதே நல்ல ருசி இருக்கும் என்று தெரிகிறது... இதை நான் சமைத்து முதலில் யாரிடம் கொடுப்பது... குருவிடம் சமர்ப்பிப்பது தானே முறை ... விரைவில் !
ReplyDeleteகுழம்பு நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஇப்ப தான் ஆசியா உமர் பக்கத்துல மணத்தக்காளி குழம்பு படிச்சுட்டு வந்தேன். இங்கேயும் அதைப் பயன்படுத்தி ஒரு ரெசிப்பி...... :)
ReplyDeleteஇரண்டு விதமாவும் செஞ்சுடலாம்! :)
பகிர்வுக்கு நன்றி.
Thanks Raji for the health tips and recipe!!
ReplyDeleteஅருமை சாப்பிட வேண்டும்போல் இருக்கிறது
ReplyDeleteஅருமை சாப்பிடவேண்டும்போல் இருக்கிறது
ReplyDeleteஎங்க ஊர்ல காரகுழம்பு எல்லாம் கிடையாது வத்தல் குழம்பு தான் செய்வாங்க சென்னை வந்துதான் காரகுழம்பு என்னனு தெரிஞ்சு கிட்டேன் அது என்னனா எங்க ஊர்ல சாதரணமா வைக்கும் புழி குழம்புன்னு .
ReplyDeleteசெய்முறையும் படங்களும் அருமை. செய்து சாப்பிட்டுவிட வேண்டியதுதான்.
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.html
ReplyDeleteஒரு வேளையாவது அழைத்து சோறு போட்டாதானே தெரியும் சுவை!
ReplyDeleteமணத்தக்காளி வற்றல்,சுண்டை வற்றல் இப்படிப் பல காரக்குழம்புகள்!விளக்கிய விதம் நன்று
ReplyDeleteகேமராவும் கையுமாதான் சமையலா ! செயமுறை சொல்லிய விதம் சிறப்பு !
ReplyDelete