Saturday, January 18, 2014

பிரபல பதிவர்கள் வீட்டு பொங்கல் பண்டிகை ஒரு கண்ணோட்டம் - 500வது பதிவு


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சமீபத்துலதான் நாம கொண்டாடினோம். பிரபல பதிவர்கள்லாம் அவங்கவங்க வீட்டுல எப்படி கொண்டாடுனாங்கன்னு பதிவா போட்டு இருப்பாங்க. நீங்களும் படிச்சு, பார்த்து ஆஹா, ஓஹோன்னு கமெண்ட் போட்டுட்டு வந்திருப்பீங்க. அதுலாம் பதிவுக்காக கொஞ்சம் மிகைப்படுத்தி இருக்கும்.

அதனால, நம்ம சக பதிவர்கள்லாம் நிஜமாவே எப்படி அவங்க  வீட்டுல எப்படி பொங்கல் கொண்டாடினாங்கன்னு கொஞ்சம் கஷ்டப்பட்டு தகவல் சேகரிச்சதால கொஞ்சம் லேட்டாகிட்டுது.., சாரி..., இனி ஒவ்வொரு பதிவரும் அவங்க வீட்டுல எப்படி கொண்டாடினாங்கன்னு அவங்கவங்க குடும்பத்தார்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டது...,

”மின்னல் வரிகள்” கணேஷ் அண்ணா வீட்டில்...,

சரிதா: ஏங்க! பொங்கல் வைக்க டைம் ஆகிட்டுது. எல்லாம் ரெடி.., அடுப்பை  பத்த வச்சு பொங்க பானை வெக்கலாம். வாங்கன்னு கூப்பிட்டா அங்க என்னத்தை தேடுறீங்க?! ஏங்க! ஏங்க!

கணேஷ் அண்ணா: நீ பட்டுப் புடவைக்கும், தங்க வளையலுக்கும் ஏங்குறது தெரிஞ்சும் கண்டுக்காமத்தானே இருக்கேன்..

சரிதா:  நான் கரடியா கத்துறது உங்க காதுல விழலியா?!

கணேஷ் அண்ணா: எனக்கு கரடி பாஷைலாம் தெரிஞ்சா நான் ஏன் இங்க இருக்கேன். சர்க்கஸ்ல போய் ரிங்க் மாஸ்டராகி நல்லா சம்பாதிச்சு வேற பொண்ணை கட்டி நல்லா இருந்திருப்பேனே!

சரிதா: என்னாது அங்க முணுமுணுப்பு??!! 

கணேஷ் அண்ணா: ஒண்ணுமில்லம்மா! சாண்டில்யன் தன்னோட ஒரு நாவல்ல பொங்கல் வைப்பதன் சிறப்பு என்ன? எப்படிலாம் வெக்கனும்ன்னு எழுதி இருக்கார் அதைதான் தேடிக்கிட்டு இருக்கேன்.

சரிதா: ம்க்கும்.., நீங்க எப்போ தேடி நாம எப்போ பொங்கல் வைக்குறது??!!  உங்க பாச மலர்கள்ல ஒண்ணு சசிக்கிட்ட போன் போட்டு கேட்டு பாருங்க...,

கணேஷ அண்ணா: அது பாவம், சின்ன பொண்ணு அதுக்கு ஒண்ணும் தெரியாது..,

சரிதா: அப்படின்னா, அடுத்த பாசமலர் ராஜிக்கிட்ட கேளுங்களேன்.

கணேஷ் அண்ணா: உன்னை கட்டிக்கிட்ட நாள் முதலா இன்னிக்குதான் உருப்படியா ஒரு யோசனை சொல்லி இருக்கே. ராஜிக்கு எல்லாம் தெரியும் அவளை கேட்டுட்டு வரேன்.



அவர்கள் உண்மைகள்” மதுரை தமிழன் வீட்டில்...,

ஹவுஸ் பாஸ்: ஏங்க! பொங்கல் வைக்க, கூட மாட ஒத்தாசை பண்ணாம அங்க என்ன செல்லை நோண்டிக்கிட்டு இருக்கீங்க.

மதுரை தமிழன்: வரேன் இரு.

ஹவுஸ் பாஸ்: ஏங்க, இங்க வந்து ஹெல்ப் பண்ணா சீக்கிரம் சாமி கும்பிடலாமில்ல!!

மதுரை தமிழன்:  பொங்கல் வச்சுட்டேன். ஏழு காய் போட்டு குழம்பு வச்சாச்சு. பூஜை ரூம்ல விளக்குலாம் ஏத்தி ரெடி பண்ணி வச்சுட்டென். நீ கற்பூரம் காட்ட வேண்டியதுதான் பாக்கி! வேற என்ன வேலை பாக்கி இருக்கு நான் உனக்கு ஹெல்ப் பண்ண!?

ஹவுஸ் பாஸ்: என்ன அங்க வாய் நீளுது!? நல்ல நாளும் அதுமா பூரிக்கட்டையை எடுக்கக் கூடாதுன்னு நினைச்சா எடுக்க வச்சுடுவீங்க போல!! இந்த கற்பூரத்தை யார் ஏத்தி தருவாங்க. 10000ல பட்டுச் சேலை எடுத்துக் கட்டி இருக்கேன். அது கசங்கக் கூடாது.

மதுரை தமிழன்: ம்க்கும், புடவை கசங்க கூடாது. ஆனா, புருசனை மட்டும் கசக்கி புழிவா!





” கோவை நேரம்” ஜீவா வீட்டில்..,

ஹவுஸ் பாஸ்: ஏனுங்க! இன்னிக்கு பொங்கல் பண்டிகை. சர்க்கரை பொங்கல் செய்யனும்.., பொங்கல் குழம்பு வைக்கனும்.., கொஞ்சம் மளிகை சாமான் வாங்கி வர்றீங்களா?!

ஜீவா: இதோ பாரும்மா! சர்க்கரை பொங்கல், நம்ம மூணவது தெருவுல இருக்குற -------   ஹோட்டல்ல நல்லா இருக்கும். காலையில  8 மணிக்கு கூட்டம் கம்மியா இருக்கும். அங்க வாங்கிக்கலாம்.பொங்கல் குழம்பு லாங்க் பஜார் ரோடுல இருக்குறா------- ஹோட்டல்ல நல்லா இருக்கும் அங்க வாங்கிக்கலாம். டேஸ்ட் கொஞ்சம் மட்டமா இருந்தாலும் கலர் கலரா அம்மணிகள்லாம் வருவாங்க.

ஹவுஸ் பாஸ்: !@#$%^  +)&^%$ !@#%^&&

ஜீவா: நல்ல நாளும் அதுவுமா, நிம்மதியா  ஒரு பக்கார்டியா  அடிக்க உடுறாளா?! நொய், நொய்ன்னு சே இதுக்கு நான் டூர் இருக்குன்னு வழக்கம்போல எங்கிட்டாவது கிளம்பி போய் இருக்கலாம்.



ஸ்கூல் பையன் வீட்டில்...,

ஹவுஸ் பாஸ்: ஏங்க! பொங்கல் வைக்க அடுப்பு ரெடி பண்ண சொன்னா வரலை. நானே ரெடி பண்ணி, பானை வாங்கி வந்து பொங்கல் வைக்க ரெடி பண்ணிட்டேன். நீங்க கற்பூரம் காட்டவாவது வாங்களேன்.

ஸ்கூல் பையன்: வர மாட்டேன் போடி!

ஹவுஸ்பாஸ்: என்னது போடியா!? 

ஜூனியர் ஸ்கூல் பையன்:: நல்ல நாள் அதுமா அப்பாவை அடிக்காதம்மா!

ஹவுஸ் பாஸ்: பையனுக்காக சும்மா வுடுறேன். நானும் பார்க்குறேன் ஒரு வாரமா நீங்க சரியில்ல. எது சொன்னாலும் எரிஞ்சு எரிஞ்சு விழுறிங்க. முஞ்சை தூக்கி எரவானத்துல வச்சிருக்கீங்க. நல்ல நாளும் அதுமா ஏங்க இப்படி அழிச்சாட்டியம் பண்ணுறீங்க.

ஸ்கூல் பையன்: அடிப்போடி, எனக்கு பிடிச்ச மாதிரி ட்ரெஸ் எடுத்துக் கொடுத்தியா!?

ஹவுஸ்பாஸ்: புரியலை!

ஸ்கூல் பையன்: என் பேர் என்ன!? ஸ்கூல் பையன். என் பேருக்கு தகுந்த மாதிரி  சட்டை, ட்ரவுசர் எடுக்காம வேட்டி ஃபேண்ட் எடுத்திருக்கியே! அதான் கோவம்.

ஹவுஸ் பாஸ்: ம்க்கும். நீங்க எனக்கு அடங்க மாட்டீங்க. இருங்க உங்க அக்கா ராஜிக்கு போன் பண்றேன். அப்பதான் அடங்குவீங்க.

ஸ்கூல் பையன்: அம்மா தாயே! உன்கிட்ட அடிகூட வாங்கலாம். அவங்கக் கிட்ட அட்வைஸ்ன்ற பேர்ல கடிலாம் வாங்கமுடியாது. இதோ வந்துட்டேன்.


கடல் பயணங்கள் சுரேஷ்குமார்....,

ஹவுஸ்பாஸ்: டேய் கண்ணா! உன் அப்பாவை கூப்பிடுடா. சாமி கும்பிடலாம்.

ஜூனியர் சுரேஷ் குமார்: ம்க்கும் உங்க வீட்டுக்காரர் எங்க இருக்கார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பதிவாக்க காரெடுத்து கிளம்பி ஒரு மணிநேரமாச்சு.

ஹவுஸ் பாஸ்: இந்தாள்கிட்ட இதே ரோதனையாப் போச்சு! 


ஆரூர் மூனா வீட்டில்...,

ஆரூர் மூனா அம்மா: ஏம்மா! அந்த பானையை எடுத்து மஞ்சள் துண்டு கோர்த்து கட்டும்மா

ஹவுஸ் பாஸ்: கட்டிடேனுங்க அத்தை. அரிசி களைஞ்சு வெச்சுட்டேன். குழம்பு வைக்க காய்லாம் கூட கட் பண்ணி வெச்சுட்டேன்.

 ஆரூர் மூனா அம்மா: பொங்க பானை அடுப்புல வெக்கனும் செந்தில் எங்கேம்மா!? கூப்பிடு அவனை!!

ஹவுஸ் பாஸ்: ம்க்கும். உங்க புள்ள எங்கே இங்க இருக்க போறார். இன்னிக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  12 படம் ரிலீஸ் அதனால, நேத்து நைட்டே பாய், தலைகாணிலாம் எடுத்துக்கிட்டு தியேட்டர் வாசல்லயே போய் படுத்துக்கிட்டார்.

திண்டுக்கல் தனபாலன் வீட்டில்...,

ஹவுஸ் பாஸ்: பொங்கல் பொங்கி வரும் போது எல்லாரும் சத்தமா சொல்லுங்க. பொங்கலோ பொங்கல்ன்னு...,

திண்டுக்கல் தனபாலன்: ஏய்! நீங்க யாரும் சொல்லக்கூடாது, நாந்தான் முதல்ல சொல்லுவேன். சீக்கிரம் பொங்கல் வை. அப்புறம் நமக்கு முன் மத்த வீட்டுலலாம் பொங்க வச்சிட போறாங்க.



  ”காணாமல் போன கனவுகள்” ராஜி மற்றும் வீட்டில் ...

பெரியப்பா: ஏம்மா தூயா! செங்கல் கொண்டு வாம்மா!

தூயா: இந்தாங்க பெரியப்பா.

பெரியம்மா: அந்த அரிசில இருக்குற கல்லு, நெல்லுலாம் பொறுக்கி சுத்தம் பண்ணும்மா.

தூயா: சரி பெரியம்மா. என்ன காய்கறின்னு சொன்னா.., நான் கழுவி நறுக்கி தருவேன்.

ராஜியோட ஹவுஸ் பாஸ்: ஏய் தூயா! நீதான் வேலை செய்யுறே. உங்கம்மா எங்கே?!

தூயா: ம்க்கும் அம்மா என்னிக்குப்பா வீட்டு வேலைகள் செஞ்சு இருக்காங்க?! அதோ பாருங்க பதிவுல போடுறதுக்காக வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்குறதை..., மனசுக்குள் பிரபல பதிவர்ன்னு நினைப்பு...,

ராஜியோட ஹவுஸ் பாஸ்:     1{@}%:&{)_!?$<>^&*&))()@<>{}][’;./,




டிஸ்கி: இது என்னோட 500 வது பதிவு. என்னையும் ஒரு ஆளாய் மதிச்சு நான் போடும் பதிவையும் படிச்சு ஆதரவு தரும் சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி! ஆளுக்கொரு கேக் துண்டு எடுத்துக்கோங்க. அமெரிக்காவுல இருந்து நீளும் கை மேல மட்டும் ஒரு கண் வச்சுக்கோங்கப்பா! அது ரெண்டு, மூணு கேக் துண்டு எடுத்துக்கும்.

64 comments:

  1. 500வது பதிவிற்கு வாழ்த்துகள்.

    பொங்கல் கலாட்டா சூப்பர், பொங்கலோ பொங்கல்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  2. 500 க்கு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி சகோ!

      Delete
  3. கொஞ்சம் சகோதரிகளையும் ஒரு கண் கவனிச்சு
    இருக்கலாம். வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. என்ன இருந்தாலும் சகோதரர்கள் கலாய்ப்பதை ஈசியா எடுத்துக்குற மாதிரி சகோதரிகள் எடுத்துக்குறதில்ல. அதான் வம்பே வேணம்ன்னு அந்த பக்கம் போறதில்ல.

      Delete
  4. முதலில் 500 பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோதரி...

    வீட்டில் அனைவரும் படித்து ஹா... ஹா...

    நண்பர்கள் ஜீவா + செந்தில் வீட்டில் செம... உண்மை என்றே படுகிறது... ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவை ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றி அண்ணா!

      Delete
  5. ஹா..ஹா.. கற்பனை என்றாலும் நகைச்சுவையாக இருந்தது. 500 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி சகோ!

      Delete
  6. 500 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்
    Carry on!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி அபயா!

      Delete
  7. ஹையா! அஞ்சு செஞ்சுரி அடிச்சாச்சா...? மகிழ்வான நல்வாழ்த்துக்கள்மா! (இன்னும் 15 போஸ்ட் எழுதினா நான் 3 செஞ்சுரி போட்ருவேன்) எல்லார் ஊட்டுப் பொங்கலையும் ஸ்பை கேமரா (ஸ்.பை.யோட கேமரா இல்ல...) வெச்சுப் பாத்த மாதிரி சூப்பராச் சொல்லிட்டம்மா...! அழகு!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா!. என் சகோதரர்கள் லட்சணம் தெரியாதா!? இதுக்கு ஸ்பையோட கேமராவை நான் கடன் வாங்கனுமா!?

      Delete
    2. ஸ்பையோட கேமராவா...... அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்..

      Delete
  8. 500வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் 500வது பதிவுக்கு பிரபலமான பதிவர்கள் தான் ஊறுகாய் ஆக ஆகிவிட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நம்ம சகோதரர்கள் இல்லாம ஒரு கொண்டாட்டமா!?

      Delete
  9. அப்ப ட்ரீட் எப்ப? சொல்லுங்க கிளம்பி வர்றோம்.. 500, 5000 ஆக வாழ்த்துகள் (ஜீவா கேட்டா தப்பா புரிஞ்சுப்பாரு, பார்த்துக்கோங்க. ;-)

    ReplyDelete
    Replies
    1. உங்க புத்தகம் வெளியிடும் அன்னிக்கு மாலை 6 மணிக்கு நம்ம வீட்டுல விருந்து. வந்திடுங்க ஆவி! வரும்போது ஜீவாக்கு பிடிச்ச 5000 வாங்கி வந்துடுங்க

      Delete
  10. வாழ்த்துகள் அக்கா .இன்னும் 1000,1000 பதிவுகள் இட வாழ்த்துகள் அக்கா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கு நன்றி சுபா

      Delete
  11. 500 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள். ட்ரீட் எப்ப எங்கே சொல்லுங்க வந்திடரோம்

    ReplyDelete
    Replies
    1. உங்க வீட்டு டைனிங் ரூம்தான். அவசியம் ட்ரீட்டுக்கு வந்திடுங்க.

      Delete
  12. 500 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! நான் கேக் சாப்பிட மாட்டேன்! உங்க வீட்டு பொங்கல் ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்துக்கறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கேக் நான் செய்யலை. கூகுள்ள சுட்டது. தைரியமா எடுத்துக்கோங்க சகோ!

      Delete
  13. நல்ல பதிவு. ரசித்து மகிழ்ந்தேன் பேஷ் பேஷ்!

    ReplyDelete
  14. 500 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ராஜி.. எல்லா நட்புகளின் பொங்கலும் அட்டகாசமா சுவையா இருந்தது...

    ReplyDelete
  15. ஹா ஹா... செம ஜாலி போங்க.... ஹவுஸ் பாஸ்னு சொல்றீங்களே, கரெக்டா பேரைச் சொல்லுங்க பார்ப்போம்....

    ReplyDelete
  16. பிரபல பதிவர்கள்னு சொன்னதில என்னை சேர்த்தது கொஞ்சம் ஓவரு.... நான் இது வரைக்கும் 65 தான் எழுதியிருக்கேன்... ஆச்சரியமா இருக்கா?

    ReplyDelete
  17. ஐநூறுக்கு வாழ்த்துக்கள்... மேலும் பல்லாயிரம் பதிவுகள் எழுதிடவேண்டும்...

    ReplyDelete
  18. ஐநூறாவது பதிவு பொங்கல்
    சிறப்புப் பதிவாக அமைந்ததே வெகு சிறப்பு
    ஆயிரம் ஆயிரமாய் தங்கள் பதிவுகள்
    பொங்கிப் பெருக மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. 500வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா.
    பொங்கலோ பொங்கல் சிறப்பாக இருந்தது.

    ReplyDelete
  20. 500 வது பதிவு பொங்கல் பதிவாக பொங்கியதற்கு இனிய வாழ்த்துகள்..!

    ReplyDelete
  21. ஹா..ஹா..ரசித்து சிரித்தேன் ராஜி.

    ReplyDelete
  22. 500க்குன் வாழ்த்துகக்ள்.சீக்கிரம் 1000 ஆகட்டுமாக!

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் ...
    +1

    ReplyDelete
  24. 500 பதிவு இன்னும் பல ஆயிரம் ஆகட்டும்!

    ReplyDelete
  25. பொங்கல் பட்டாசு போல பதிவர்கள் நிலை:)))

    ReplyDelete
  26. 500 பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. //ஆளுக்கொரு கேக் துண்டு எடுத்துக்கோங்க. அமெரிக்காவுல இருந்து நீளும் கை மேல மட்டும் ஒரு கண் வச்சுக்கோங்கப்பா!///

    பாவி பசங்க ஒரு துண்டு கூட வைக்காம காலி பண்ணிட்டாங்க

    ReplyDelete
  28. /பதிவுல போடுறதுக்காக வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்குறதை..///

    போட்டோ எடுக்குற வேலையை சகோ ராஜி செய்யுறாங்களா ஆச்சிரியமா இருக்கு அதுக்கு கூட ஆளை வைச்சுதான் எடுக்குறாங்கா என்று நான் நினைச்சேன்

    ReplyDelete
  29. ///பொங்க பானை அடுப்புல வெக்கனும் செந்தில் எங்கேம்மா!??///

    செந்திலை போய் பொங்க பானை என்று கிண்டலா பண்ணுறீங்க்...அடுத்த பதிவர் திருவிழா வரும் போது உங்களை பார்க்கும் போது பொங்கிற போகிறார்

    ReplyDelete
  30. ///நல்ல நாளும் அதுவுமா, நிம்மதியா ஒரு பக்கார்டியா அடிக்க உடுறாளா?!///

    ஜீவா கவலைபடாதீங்க அடுத்த பொங்கலுக்கு நாம் 2 பேரும் சேர்ந்து அடிச்சிடலாம்

    ReplyDelete
  31. ///என் பேர் என்ன!? ஸ்கூல் பையன். என் பேருக்கு தகுந்த மாதிரி சட்டை, ட்ரவுசர் எடுக்காம வேட்டி ஃபேண்ட் எடுத்திருக்கியே! அதான் கோவம்.///

    இந்த காலத்துல ஸ்கூல் பையன் எங்க டவுசர் போடுறாங்க எல்லாரும் பேண்ட் சட்டைதான் போடுறாங்க. டவுசர் போடுறதெல்லாம் வயசான ஆளுங்கதான்

    ReplyDelete
  32. பிரபல பதிவர்கள் பொங்கல். ..பொங்க. வைத்த நகைச்சுவை ரசித்தேன்...வாழ்த்துகள்

    ReplyDelete
  33. மதுரைத்தமிழன் வீட்டில் பொங்கல் :

    மனைவி : என்னங்க இன்னைக்கு பொங்கல்

    மதுரைத்தமிழன். : நீதான் தினமும் பொங்குறியே அதனால நம்ம வீட்டுல தினமும் பொங்கல்தானே

    மனைவி : என்ன சொன்னீங்க

    மதுரைத்தமிழன். : இல்லம்மா உன்னை தினமும் பார்க்கும் போது என் மனசு பொங்கலைப் போல பொங்குகிறது என்று சொன்னேன் அம்மா

    மனைவி : அதுதானே..

    மதுரைத்தமிழன். : பொங்கலுக்கு என்னம்மா நம்ம ஸாரி நான் என்ன பண்ணனும்?
    மனைவி : நீங்க பொங்கல் எல்லாம் பண்ண வேண்டாம். நம்ம பக்கத்துவீட்டுல உள்ளவங்க எல்லாம் பொங்கல் பண்ணி நமக்கு கொடுப்பாங்க. அப்ப நீங்க என்ன பண்ணுறீங்கன்னா எதிர்த்த வீட்டுல தரதை பக்கத்துவீட்டுலேயும் பக்கத்து தரதை அடுத்த வீட்டிற்கும் இப்படி ஒவ்வொரு வீட்டில் இருந்து வரதை மாற்றி மாற்றி நாம பண்னியதுன்னு சொல்லிக் கொடுத்திடுங்க...

    மதுரைத்தமிழன். அப்ப நமக்கு பொங்கல் நீ பண்ணப் போறியா?
    மனைவி : பொங்கல் மிகவும் ஸ்விட் அதெல்லாம் நமக்கு கொஞ்சம் கூட வேண்டாம்

    மதுரைத்தமிழன். என்னடி ஒரு நல்ல நாளு அதுவுமா இப்படி பண்ணுற

    மனைவி : இங்க பாருங்க இன்று நல்ல நாள் என்பதால்தான் நான் பொங்காமா உங்க கேள்விக்கு பொறுமையா பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன்.. இதுக்கு மேலே ஏதாவது பேசி என்னைப் பொங்க வைச்சிருராதீங்க..

    மதுரைத்தமிழன். ............................................................... ( வாயை முடிக் கொண்டு மனதில் ஏதோ பேசியதால் அவர் என்ன பேசினார் என்பது தெரியவில்லை


    டிஸ்கி : மதுரைத்தமிழன் வீட்டில் பொங்கல்,தீபாவளி,ரம்ஜான்,பக்கீரித் .(பிறந்நாள்)போன்ற பண்டிகைகள் எல்லாம் கொண்டாடுவது கிடையாது

    ReplyDelete
    Replies
    1. மிகவும் ரசித்தேன்.

      Delete
  34. ///கணேஷ் அண்ணா: உன்னை கட்டிக்கிட்ட நாள் முதலா இன்னிக்குதான் உருப்படியா ஒரு யோசனை சொல்லி இருக்கே. ராஜிக்கு எல்லாம் தெரியும் அவளை கேட்டுட்டு வரேன்.//

    ஹலோ ராஜிம்மா பொங்கல் எப்படிம்மா வைக்கிறது?

    அண்ணா அது ரொம்ப கஷ்டம் அண்ணா. ஒரு கரண்டியை எடுத்து பானையில் இருக்கிற பொங்கலை எடுத்து வாழை இலையில் நமக்கு வேண்டிய அளவு வைக்கனும். இப்படிதான் நான் எங்க வீட்டுல பொங்கல் வைப்பேன் இப்படி வைக்கிறதுக்கு திறமை வேணும் அண்ணா...


    கணேஷ்: ராஜியம்மா நீ ஸ்மார்ட் அம்மா இது கூட என் மனைவிக்கு தெரியலை அவளுக்கு நான் பொங்கல் எப்படி வைக்கணும் என்று சொல்லிதாரேன்

    சரிம்மா நான் அப்பவரேன்

    ReplyDelete
  35. ஐநூறு பதிவுகளா! மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. தங்களின் 500 வது பதிவிற்கும் அயராத உழைப்பிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. ஐ.......நூறா.....?

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐநூறு ஐம்பதாயிரம் ஆக அண்ணனின் ஆசிகள்....

    ReplyDelete
  38. இது பொங்கல் அல்ல....பதிவர்களை பொங்க வச்ச பதிவு அவ்வவ்....

    ReplyDelete
  39. 500வது பதிவிற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள், வளரட்டும் இன்னும் 500....

    அன்புடன்,
    பனிமலர்.

    ReplyDelete
  41. 500வது பதிவிற்கு வாழ்த்துகள் அக்கா!

    ReplyDelete
  42. [[காணாமல் போன கனவுகள்” ராஜி மற்றும் வீட்டில்]]

    நம்பிக்கை இருக்கோ இல்லையோ...சொந்தங்களுடன் பொங்கல் கொண்டாடுவது ஒரு தனி சுகம்--அதுவும் கிராமத்தில்..

    படத்தை ரசித்தேன்...தமிழ்மணம் +15

    ReplyDelete
  43. பொங்கல் இனிப்பு சுவையை விடவும் தூக்கலான சுவை உங்கள் நகைச்சுவை. ஒவ்வொருவர் வீட்டிலும் என்ன நடந்திருக்கும் என்று சரியாகவே சொல்லிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். திண்டுக்கல் தனபாலன் சொன்னதைக் கேட்டு வாய்விட்டு சிரித்துவிட்டேன். நல்ல நகைச்சுவையும் கற்பனை வளமும் உள்ள நீங்கள் இன்னும் பல ஆயிரம் பதிவுகள் எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள் ராஜி.

    ReplyDelete
  44. 500வது பதிவிற்கு வாழ்த்துகள். விரைவில் ஆயிரத்தை அடைய வாழ்த்துகள் அக்கா.

    ReplyDelete
  45. பிரமாதமான பதிவு... 500 விரைவில் 1000 ஆகட்டும்...மனமார்ந்த வாழ்த்துகள்..

    நகைச்சுவையை அள்ளி தெளித்திருக்கிறீர்கள்...

    ReplyDelete
  46. நல்ல சிரிக்க வச்சுட்டீங்க..
    500வது பதிவிற்கு வாழ்த்துகள் ராஜி!
    கேக்கிற்கும் நன்றி :)

    ReplyDelete
  47. நல்ல கற்பனை!

    500-வது பதிவிற்கு வாழ்த்துகள்......

    ReplyDelete
  48. 500-வது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்......சீக்கிரமே ஆயிரம் பதிவுகள் தொட வேண்டும் நீங்கள் !

    ஹா ஹா ஹா..... நான் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சென்றது உங்களுக்கு எப்படி தெரியும் ?!

    ReplyDelete