எனக்கு கடவுள் பக்திலாம் அவ்வளவா கிடையாது. ஆனா, அதுக்காக கடவுள் இல்லைன்னு சொல்ற ஆளும் கிடையாது. அப்புறம் எப்படி கோவிலுக்கு போய் பதிவுலாம் போடுறென்னு கிராஸ் கொஸ்டின்லாம் கேக்கப்படாது. அது ஃபேமிலி டூர் போகும்போது பெரியவங்களை சமாதானப்படுத்த போறது. எனக்கும் உம்மாச்சிக்குமான தூரம் ஹாய்! ஹலோ!ன்ற அளவுதான். கோவிலுக்கு போகும்போதுகூட சாமி கும்பிடுறதைவிட அங்கிருக்கும் சிலை, படம் இதுலாம் பார்த்துக்கிட்டு நின்னுட்டு திட்டு வாங்குவேனே தவிர, ஒழுங்கா மனசு ஒருநிலைப்படுத்தி சாமி கும்பிடமாட்டேன்.
அப்படி இருக்கும் என் எதிரில்லாம் கடவுள் தோன்றுவாரா?!ன்னு தெரியல. கடவுள்ன்னா க்ரீடம், நகை, வேல், அம்பு, பட்டாடை, நகை போட்டு ஹெவி மேக்கப்புலதான் வருவாங்களா!? ஆனா, நான் பல நேரங்களில் கடவுளை என் அப்பா, அம்மா ரூபத்துல பார்த்திருக்கேன். இப்பவும் பார்த்துக்கிட்டிருக்கேன்.
எல்லா கடவுளும் கேட்டப் பின்தான் வரம் கொடுக்கும், ஆனா, என் கடவுள்கள் நான் கேட்காமலே எனக்கு தேவையானதை கொடுக்க முதல் ஆளாய் நிக்கும். அதனால, இதுவரை யார்கிட்டயும் கேட்டுப் பழக்கமில்ல. கடவுள் உட்பட....,
அப்பேற்பட்ட என்னையும் உங்க ஆசை என்னன்னு கேட்க ஒரு ஆள் இருக்கேன்னு மனசுக்குள் சந்தோசம் ரெக்கைக் கட்டி பறக்குது. தேங்க்ஸ் கிரேஸ்!! எம்புட்டோ யோசிச்சு பார்க்குறேன்...., என் தேவைகள் என்னன்னு?! நிஜமா தெரிலப்பா!!
பொதுநலத்துக்காக யோசிக்க, பாடுபட நிறைய பேர் இருக்காங்க..., என் வீட்டுக்கு யோசிக்க அம்மா, அப்பா இருக்காங்க...,
எல்லாமே கிடைச்சாலும் சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல வர ஜெயம் ரவி மாதிரி எனக்குள்ளும் சின்ன சின்ன ஆசை உண்டு...,
7,8,9 மணிக்குன்னு எங்க வீட்டுல பள்ளி, வேலைக்கு கிளம்புவாங்க. அதனால, கண்ணு முழிக்குறதே அடுப்புலதான். 5 மணிக்கு எழுந்தால்தான் 7மணிக்கு டப்பா கட்ட சரியாய் இருக்கும். வேலைநாட்களில் லேட்டா எட்டு மணிக்கு எழுந்திருக்கும் ஆத்துக்காரர் ஞாயிறு அன்னிக்கு மட்டும் டான்னு 5 மணிக்கு எந்திருச்சு வாசல் கதவை திறந்து வச்சுட்டு வாசல் தெளி, டீ கொண்டான்னு இம்சிப்பாங்க. அதனால, ரூம் கதவை பூட்டிக்கிட்டு, காலை குளிருக்கு இதமா போர்வைக்குள் சுருண்டு படுத்திருக்கனும்...,
பக்கத்து தெருவுக்கு கூட அப்பா, அம்மா, பையன், வூட்டுக்காரர்ன்னு எஸ்கார்ட் கூட போயே பழகிட்டேன். அதனால, தனியா வெளி ஊருக்கு போய் கடைக்கு போய் நான் என் இஷ்டபட்டதை வாங்கி வரனும்..
புகுந்த வீடு, பொறந்த வீடு, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா, அக்கா, நாத்தனார், மூத்தார், கொழுந்தனார் வீடுலாம் சுத்தி 20 கிமீக்குள்ளயே இருக்குறதால ஒரு நீண்ண்ண்ண்ண்ட பயணம் போகனும். அதும், ரயில், பஸ் பிரயாணம் போகனும்....,
வெளிய எங்கிட்டாவது போகும்போது பசங்கலாம் ஜன்னல் சீட்டை பிடிச்சுக்குதுங்க. கூடவே இயர் ஃபோனையும் பிடுங்கிக்குதுங்க. அதனால, யாருமில்லாம குளிர், மழை நேரத்துல பஸ் பயணம் போகனும். ஜன்னலோர சீட், இயர் ஃபோனோடு ஃபுல் சார்ஜ்ல மொபைல் இல்ல ஐபாட். கூடவே இளையராஜா, கார்த்திக், பிரபு, கமல், ரஜினி மெல்லிசை பாட்டும் வேணும்.
என் வீட்டு எதிர்க்க வெறும் கழனிக்காடுதான் இருக்கு. அதனால, கடல், ஆறு, அருவி பக்கத்துல ஒரு வீடு வேணும். என் வீட்டுல இருந்து பார்க்கும்போதே தெரியனும்.
காலைல ஆளுக்கொரு நேரத்துல சாப்பிட்டு போவாங்க. நைட் சாப்பாடு ஒண்ணா சாப்பிடுவோம். தோசை, சப்பாத்திலாம் செஞ்சு வச்சு சாப்பிட மாட்டோம். ஒவ்வொண்ணா சுட்டு சாப்பிடுவோம். பிள்ளைங்கலாம் சாப்பிட லேட் ஆகும். அதனால, எனக்கு தேவையானதை நானே சுட்டுக்கனும்:-( அதனால, நான் போதும் போதும்ன்னு சொல்லும்வரை தோசை, பூரி, சப்பாத்தி யாராவது சுட்டு போடனும், நான் சாப்பிடனும்.
அப்பாக்கு, வீட்டுக்காரருக்கு புத்தகம் படிச்சா பிடிக்காது. சத்தம் அதிகமா வச்சு பாட்டு கேட்டாலும் திட்டு விழும். அதனால, எனக்கே எனக்குன்னு ஒரு ரூம்ல 80ல வந்த மெல்லிசை பாட்டு சிடிக்களும், நிறைய புத்தகங்களும் வேணும்.
எங்க வீட்டுல புத்தகம் படிச்சு விமர்சிக்க யாரும் இல்ல. அதனால, மாலை வேளையில் சூடான காஃபி, நொறுக்கு தீனியோடு, கைக்கோர்த்து கதை பேச ஒரு தோழி வேணும்.
மழை நாள்ன்னு ஐஸ் வாட்டர், கூல் ட்ரிங்க்ஸ்க்கு தடா போட்டுடுவாங்க. அதனால, ஃப்ரிட்ஜ்ல ஐஸ் வாட்டரும், கூல்ட்ரிங்க்ஸும் இருக்கனும். மிட்நைட்ல எழுந்து குடிக்கனும்.
என் பொண்ணுங்க சில நாட்களில் சமைப்பாங்க. ஆனா, கிச்சன் க்ளீன் பண்ண மாட்டாங்க. துணி துவைக்க மெஷின் இருக்கு. அதனால, கிச்சன், துணி லாம் மடிச்சு எடுத்து அந்தந்த இடங்களில் வைக்க ஒரு ஆள் வேணும்.
எல்லோரோடவும் டூர் போனால் ஒரு நாளைக்கு நாலு கோவில், அஞ்சு ஊர்ன்னு அவசர அவசரமா பார்ப்பாங்க. அதனால, சிவகாமி, நரசிம்ம பல்லவன், மகேந்திர பல்லவன், பரஞ்சோதியோடு நான் மட்டும் மகாபலிபுரத்தையும்..., அருள்மொழிவர்மன், வல்லவராயன், குந்தவை, பூங்குழலியோடு தஞ்சாவூரையும் சுற்றிப் பார்க்க ஆசை.
ஸ்ஸ்ஸ் அபா! என் ஆசைலாம் இவ்வளவுதான். நான் லேட்டா பதிவு போட்டதால யாரைக் கூப்பிடுறது. எல்லோரையும், எல்லாரையும் கூப்பிட்டதால என் பதிவுக்கு வரும் எல்லோரையும் கூப்பிடுறேன்.
பொதுநலத்துக்காக யோசிக்க, பாடுபட நிறைய பேர் இருக்காங்க..., என் வீட்டுக்கு யோசிக்க அம்மா, அப்பா இருக்காங்க...,
எல்லாமே கிடைச்சாலும் சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல வர ஜெயம் ரவி மாதிரி எனக்குள்ளும் சின்ன சின்ன ஆசை உண்டு...,
(என்னோட கடவுள்கள்..,)
7,8,9 மணிக்குன்னு எங்க வீட்டுல பள்ளி, வேலைக்கு கிளம்புவாங்க. அதனால, கண்ணு முழிக்குறதே அடுப்புலதான். 5 மணிக்கு எழுந்தால்தான் 7மணிக்கு டப்பா கட்ட சரியாய் இருக்கும். வேலைநாட்களில் லேட்டா எட்டு மணிக்கு எழுந்திருக்கும் ஆத்துக்காரர் ஞாயிறு அன்னிக்கு மட்டும் டான்னு 5 மணிக்கு எந்திருச்சு வாசல் கதவை திறந்து வச்சுட்டு வாசல் தெளி, டீ கொண்டான்னு இம்சிப்பாங்க. அதனால, ரூம் கதவை பூட்டிக்கிட்டு, காலை குளிருக்கு இதமா போர்வைக்குள் சுருண்டு படுத்திருக்கனும்...,
பக்கத்து தெருவுக்கு கூட அப்பா, அம்மா, பையன், வூட்டுக்காரர்ன்னு எஸ்கார்ட் கூட போயே பழகிட்டேன். அதனால, தனியா வெளி ஊருக்கு போய் கடைக்கு போய் நான் என் இஷ்டபட்டதை வாங்கி வரனும்..
புகுந்த வீடு, பொறந்த வீடு, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா, அக்கா, நாத்தனார், மூத்தார், கொழுந்தனார் வீடுலாம் சுத்தி 20 கிமீக்குள்ளயே இருக்குறதால ஒரு நீண்ண்ண்ண்ண்ட பயணம் போகனும். அதும், ரயில், பஸ் பிரயாணம் போகனும்....,
வெளிய எங்கிட்டாவது போகும்போது பசங்கலாம் ஜன்னல் சீட்டை பிடிச்சுக்குதுங்க. கூடவே இயர் ஃபோனையும் பிடுங்கிக்குதுங்க. அதனால, யாருமில்லாம குளிர், மழை நேரத்துல பஸ் பயணம் போகனும். ஜன்னலோர சீட், இயர் ஃபோனோடு ஃபுல் சார்ஜ்ல மொபைல் இல்ல ஐபாட். கூடவே இளையராஜா, கார்த்திக், பிரபு, கமல், ரஜினி மெல்லிசை பாட்டும் வேணும்.
என் வீட்டு எதிர்க்க வெறும் கழனிக்காடுதான் இருக்கு. அதனால, கடல், ஆறு, அருவி பக்கத்துல ஒரு வீடு வேணும். என் வீட்டுல இருந்து பார்க்கும்போதே தெரியனும்.
(எதிர் வீட்டு குட்டி)
என் வீட்டு குட்டிலாம் பெருசாகிட்டு என் சொல்பேச்சு கேக்குறதில்ல. அதனால, இப்போ என் சின்னக்குட்டியாய் எதிர்வீட்டு குழந்தைதான் இருக்கான். அவனுக்கு எப்பவுமே வயசாகக் கூடாது. வயசானால் என் சொல் பேச்சு கேட்க மாட்டான்.காலைல ஆளுக்கொரு நேரத்துல சாப்பிட்டு போவாங்க. நைட் சாப்பாடு ஒண்ணா சாப்பிடுவோம். தோசை, சப்பாத்திலாம் செஞ்சு வச்சு சாப்பிட மாட்டோம். ஒவ்வொண்ணா சுட்டு சாப்பிடுவோம். பிள்ளைங்கலாம் சாப்பிட லேட் ஆகும். அதனால, எனக்கு தேவையானதை நானே சுட்டுக்கனும்:-( அதனால, நான் போதும் போதும்ன்னு சொல்லும்வரை தோசை, பூரி, சப்பாத்தி யாராவது சுட்டு போடனும், நான் சாப்பிடனும்.
அப்பாக்கு, வீட்டுக்காரருக்கு புத்தகம் படிச்சா பிடிக்காது. சத்தம் அதிகமா வச்சு பாட்டு கேட்டாலும் திட்டு விழும். அதனால, எனக்கே எனக்குன்னு ஒரு ரூம்ல 80ல வந்த மெல்லிசை பாட்டு சிடிக்களும், நிறைய புத்தகங்களும் வேணும்.
எங்க வீட்டுல புத்தகம் படிச்சு விமர்சிக்க யாரும் இல்ல. அதனால, மாலை வேளையில் சூடான காஃபி, நொறுக்கு தீனியோடு, கைக்கோர்த்து கதை பேச ஒரு தோழி வேணும்.
மழை நாள்ன்னு ஐஸ் வாட்டர், கூல் ட்ரிங்க்ஸ்க்கு தடா போட்டுடுவாங்க. அதனால, ஃப்ரிட்ஜ்ல ஐஸ் வாட்டரும், கூல்ட்ரிங்க்ஸும் இருக்கனும். மிட்நைட்ல எழுந்து குடிக்கனும்.
என் பொண்ணுங்க சில நாட்களில் சமைப்பாங்க. ஆனா, கிச்சன் க்ளீன் பண்ண மாட்டாங்க. துணி துவைக்க மெஷின் இருக்கு. அதனால, கிச்சன், துணி லாம் மடிச்சு எடுத்து அந்தந்த இடங்களில் வைக்க ஒரு ஆள் வேணும்.
எல்லோரோடவும் டூர் போனால் ஒரு நாளைக்கு நாலு கோவில், அஞ்சு ஊர்ன்னு அவசர அவசரமா பார்ப்பாங்க. அதனால, சிவகாமி, நரசிம்ம பல்லவன், மகேந்திர பல்லவன், பரஞ்சோதியோடு நான் மட்டும் மகாபலிபுரத்தையும்..., அருள்மொழிவர்மன், வல்லவராயன், குந்தவை, பூங்குழலியோடு தஞ்சாவூரையும் சுற்றிப் பார்க்க ஆசை.
ஸ்ஸ்ஸ் அபா! என் ஆசைலாம் இவ்வளவுதான். நான் லேட்டா பதிவு போட்டதால யாரைக் கூப்பிடுறது. எல்லோரையும், எல்லாரையும் கூப்பிட்டதால என் பதிவுக்கு வரும் எல்லோரையும் கூப்பிடுறேன்.
அளவான ,,,,அழகான .....
ReplyDeleteசொல்ல வந்ததை முழுசா சொல்லிடுங்க சகோ.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகுடும்பத்தலைவியின் கஷ்டங்கள் விலகி ஆசைகள் கைகூடட்டும்! நியாயமான ஆசைகள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி சகோ!
Deleteஒழுங்கா மனசு ஒருநிலைப் படுத்தி சாமி கும்பிட மாட்டேன்......///
ReplyDeleteசரியில்லையே முதல்ல இதை ஒழுங்க செய்ங்க அப்புறம் நீங்க நினைக்கிற காரியங்கள் கைகூடும்.
நான் சாமி கும்பிடனும்ன்னு அவசியம் இல்ல சகோ. கடவுளே என்னோடுதான் இருக்காங்க.
Deleteஉங்களின் ஆசைகளை ப் படிக்கும் போது உண்மையில் எனக்கு கவலையாக இருந்தது தோழி.
ReplyDeleteஒரு குடும்பத்தலைவி என்றால் இவ்வளவு சின்னச்சின்ன ஆசைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத வாழ்க்கையை வாழ்கிறோம் .
கவலைப்படாதீங்க தோழி. உங்கள் ஆசைகளை நிறைவேற்ற கடவுள் வரவேண்டாம். நான் இந்தியா வந்தால் நிறைவேற்றி வைக்கிறேன்.
வாங்க அருணா! நீங்க வந்து மாமாகிட்டயும், அப்பா, அம்மாக்கிட்ட சொல்லி என் ஆசைய நிறைவேத்துங்க.
Deleteஹலோ அருணா மேடம் ராஜியின் ஆசைகளை நிறைவேற்ற நீங்க முதலில் உங்க வீட்டுகாரருக்கு பூரி தோசை எல்லாம் சுட்டுப் போட்டு டிரெய்னிங்க் எடுத்துக்கோங்க... அதுக்கு அப்புறம் சகோ ராஜியின் ஆசைகளை நிறைவேற்றலாம் சரியா
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteராஜி! உங்களுக்குத் தோசை, பூரி (அவர் நல்லா சமைப்பாரு தெரியும்ல...) எல்லாம் உங்க ஆசைதீர சுட்டுப் போட நம்ம சகோ உங்க அண்ணன் மதுரைத் தமிழன் இருக்கும் போது என்ன கவலை.....ஒரு அழைப்பு அங்க விடுவீங்கனு பார்த்தா அதை நீங்க ஆசைல சேர்க்கவே இல்லையே...சே ரொம்ப மோசம்...ஹஹஹ
Deleteகீதா
பூரிக்கட்டையோடு மல்லாடவே எங்கண்ணனுக்கு நேரமில்ல. இதுல எனக்கு பூரி சுட்டு போடனுமா?! அண்ணனை கஷ்டப்படுத்த வேணாம்ன்னுதான் விட்டுட்டேன்.
Deleteதலைப்புக்கு ஏற்றவாறு சின்ன ஆசைகள் தானோ.... ? இருந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தது பகிர்வுக்கு நன்றி
ReplyDelete- கில்லர்ஜி
தமிழ் மணம் 3
நிஜமாவே என் ஆசைகள் இவ்வளவுதான் சகோ. பதிவை ரசித்தமைக்கும் ஒரு பதிவு தேத்த வாய்த்தமைக்கும் நன்றி சகோ!
Deleteமனது - குழந்தை மனதாகி விட்டால் அனைத்தும் சரியாகி விடும் சகோதரி...!
ReplyDeleteநான் ஏற்கனவே அப்படித்தான் விளையாட்டுத்தனமா இருக்கேன். இன்னுமா?!
Deleteவாவ்... அக்கா எனக்கு இருக்க பாதி ஆசைகள் உங்களுக்கும் இருக்கு... ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்...
ReplyDeleteஆஹா! என்னை போல இன்னொருத்தி?!
Deleteமூன்றாவதின் முதல் பாதிக்கு நான் ஏங்குகிறேன் :-)
ReplyDeleteஆறில் சொல்லியிருப்பது போல் அடுத்தவீட்டுக் குட்டி வேண்டும்.
ஒன்பதாவது ஆசை எனக்கும், நாமிருவரும் அருகருகே இருக்கலாமோ..
பத்தாவது செம! நானும் வருவேன் :-)
குடும்பத்தலைவியின் ஏக்கங்களைச் சொல்லும் ஆசைகள், மனதிலிருந்துக் கொட்டிய ஆசைகள்! நிறைவேற வாழ்த்துகள் ராஜிக்கா. நான் அங்கு வந்தவுடன் டிரெய்ன் ஏறி என் வீட்டிற்கு வந்துடுங்க, தோசை/பூரி, பாடல், புத்தகம் ஆசைகளை நிறைவேற்றிவிடலாம்.
அழைப்பை ஏற்று அழகான ஆசைகளைப் பதிவிட்டதற்கு மனமார்ந்த நன்றி அக்கா.
பக்கத்து வீடாய் இருந்தால் என் இம்சைகளை தாங்கனுமே!! பர்ர்ர்ர்ர்வாயில்லையா?!
Deleteவித்தியாசமான ஆசைகள்! உங்களைப் போலத்தான் நானும் பழங்கால சிற்பங்கள், கட்டிட வேலைப்பாடுகள், கோயிலின் காலம், அதைக்கட்ட பயன்படுத்தப்பட்ட மனித உழைப்பு, செலவிடப்பட்ட செல்வம் இதைக்காணத்தான் கோயிலுக்குப் போவது வழக்கம். மற்றபடி எனக்கும் கடவுளுக்குமான தூரமும் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் வீட்டிலுள்ளவர்களின் விருப்பத்துக்கு மாறாக நடப்பத்தில்லை.
ReplyDeleteமனதை ஒருநிலைப்படுத்தி சாமி கும்பிடுவதில்லை... எல்லாருக்குமே அதே நிலைதானே அக்கா... அங்க போனாத்தானே ஆயிரத்து எட்டு அது வேணும்.. இது வேணுமின்னு தோணும்.... பக்கத்துல நிக்கிறவன் எப்படி சாமி கும்பிடுறான்னு பார்க்கத்தோணும்... இன்னும் இன்னுமாய்....
ReplyDeleteஉங்கள் ஆசைகள் அனைத்தும் அருமை...
இன்னும் உங்களுக்குள் இருக்கும் அந்த மகேந்திர பல்லவ மன்னன், சிவகாமி, மகாபலிபுரம் – பொன்னியின் செல்வன் ப்ரம்மை நீங்கவில்லை போலிருக்கிறது. எப்படியோ உங்கள் ஆசைகள் நிறைவேறினால் சரி.
ReplyDeleteகவலை வேண்டாம் நான் பூரி சுட்டுத்தரேன்...சின்னச்சின்ன ஆசைகள் கூட நிறைவேறாத நிலைதான் பெண்களுக்கு என்பதைத் தெளிவாகக்காட்டியுள்ளீர்கள்மா..ஆசைகள் நிறைவேறட்டும்.
ReplyDeleteகொஞ்சம் பயந்தே போயிட்டேன் நான் பூரிக்க்கட்டையை எடுத்து தாரேன் என்பது மாதிரி இருந்தது, அப்புறம் நிதானமாக படித்த போதுதான் புரிந்தது கீதா அவர்கள் பூரி சூட்டு தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள் ஹும்ம் எப்படி எல்லாம் பயப்பட வேண்டி இருக்கிறது
ReplyDeleteஹலோ நீங்க உங்க தங்கச்சிக்குச் சுட்டுத் தருவேன்னு சொல்லுவீங்கனு நினைச்சா இப்படியா...அஹஹ்ஹ்ஹ்..மேல பாருங்க இப்பதான் ராஜிக்கிட்ட சொல்லிட்டு வர்ரேன்...
Deleteகீதா
///என் வீட்டு எதிர்க்க வெறும் கழனிக்காடுதான் இருக்கு. அதனால, கடல், ஆறு, அருவி பக்கத்துல ஒரு வீடு வேணும். என் வீட்டுல இருந்து பார்க்கும்போதே தெரியனும்.//
ReplyDeleteசென்னையில ஒரு வீடு வாங்கி போட்டுருங்களேன்.. இப்ப பாருங்க எல்லாவிட்டு பக்கத்திலேயும் ஆரு அருவி எல்லாம் இருக்குதுங்க
உங்கள் ஆசைகள் அனைத்தும் எல்லா பெண்களின் ஆசையாகவே பார்க்கிறேன். பொதுவாக நம் குடும்பங்களில் பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளை கண்டுகொள்வதே கிடையாது. என் மனைவியிடமும் பலமுறை இதை சொல்லி சொல்லி கேட்டதால் கடந்த சில வருடங்களாகத்தான் சொல்லத் தொடங்கியிருக்கிறார். எல்லாமே சிறிய ஆசைகள் என்பதால் என்னால் நிறைவேற்ற முடிந்தது. இந்த பதிவை இல்லத்தரசிகளின் ஒட்டுமொத்த ஆசையாக கடவுள் நிறைவேற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை வைப்போம்.
ReplyDeleteத ம 8
பொதுவாக எல்லா பெண்களுக்கும் உள்ள் ஆசைகளைச் சுவைபட சொல்லிவிட்டீர்கள். எல்லாரது ஆசைகளும் கில்லர்ஜி லிஸ்டில் சேர்ந்துவிட்டது. அவர் நிறைவேற்றிவிடுவார்...பாருங்கள்...சகோ!
ReplyDeleteகீதா: ..இதில் உங்கள் 8 ஆவது ஆசைக்குச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்னையும்...மற்றவையும் உண்டு என்றாலும் இது தான் ரொம்ப...
நல்ல நல்ல ஆசைகள்..... சின்னச் சின்ன ஆசைகள்...
ReplyDeleteஅனைத்தும் நிறைவேறட்டும்!