அது ஒரு பெயிண்ட் விளம்பரம். பெயிண்ட் அடிச்சா வீடு அழகா இருக்கும், மழை வெயிலுக்கு பல வருசம் தாங்கும்ன்னு சொல்றதுதானே வழக்கம். இந்த பெயிண்ட் விளம்பரத்துல கெட்ட காத்தை சுத்தம் செஞ்சு நல்ல காத்தாக்குமாம். ஒரு பெயிண்ட் எப்பிடிடா காத்தை சுத்தம் பண்ணும்?! உங்க அக்கப்போருக்கு அளவேயில்லையா?!
காதலிக்கும்போது வாடா, போடான்னு பேசுறது சகஜம். கல்யாணத்துக்கு பிறகு காதலிச்சவனையே கைப்பிடிச்சாலும் வாடா போடான்னு பேச மாட்டாங்க. ஆசைக்கு தனிமைல இருக்கும்போது வேணும்ன்னா டா போட்டு பேசுவாங்க. சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சி தன் புருசனான சரவணனை டா போட்டுதான் பேசுது. அதும் சரவணன் அப்பா, அம்மா, தாத்தான்னு மொத்த குடும்பத்து முன்னாடியும் கூப்பிடுது. மீனாட்சியை கண்டாலே பிடிக்காத, எல்லாத்துக்கும் குறை சொல்ற அவ மாமனாரும் இதுக்கு மறுப்பு சொல்றதில்ல. அதேப்போலதான் தெய்வ மகள் சீரியல்லயும் மாமனார் மாமியார் முன்னாடியே வூட்டுக்காரரை பேர் சொல்லி கூப்பிடுறது...
காமெடி சேனல்களில், காமெடி நிகழ்ச்சிகளில் வரும் தொகுப்பாளர்களுக்கு எது காமெடின்னு கொஞ்சம் கிளாஸ் எடுத்து அனுப்புங்கப்பா. எதிர்த்து பேசுறதும், ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்குறதும், சத்தமா பேசுறதும்தான் காமெடின்னு யாரோ இவங்க ஆழ்மனசுல பதிய வெச்சுட்டாங்க போல. எரிச்சலா இருக்கு. அதும் விஜய் டிவில ஜாக்குலின், பிரியங்கா சிரிக்குற சிரிப்பிருக்கே. யப்ப்ப்ப்ப்பா முடில.
நியூஸ் 7ல திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4 மணிக்கு ‘என்ன படிக்கலாம்.. எங்கு படிக்கலாம்’ன்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகுது. இது 10, ப்ளஸ் டூ பரிட்சை எழுதியிருக்கும் மாணவர்களுக்கு பேருதவியா இருக்கும். மத்திய மாநில அரசு கல்லூரிகள், பட்ட மற்றும் பட்டய படிப்புகள் பற்றிய சந்தேகங்கள் இந்த நிகழ்ச்சியின் தெரிந்துக்கொள்ளலாம். இது மட்டுமில்லாம கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு, நுழைவுத்தேர்வுக்குண்டான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி எங்கு நடக்குது மாதிரியான பயனுள்ள தகவல்களை இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம். நேயர்களின் கேள்விகளுக்கு தொலைக்காட்சி வாயிலாக பதில் சொல்றாங்க. இந்நிகழ்ச்சியை மறுநாள் காலைல மறு ஒளிபரப்பும் செய்றாங்க.
டிஸ்கவரி, அனிமல் பிளேனட், நேஷனல் ஜியாகரபி மாதிரியான உலக அளவில் பிரபலமான சேனல் ‘டிராவல் எக்ஸ்பி’ ஆங்கிலத்தில் ஒளிப்பரப்பாகி வந்த இந்த சேனல் இப்ப தமிழ்லயும் ஒளிப்பரப்பாகுது. ’கிரேஸி புட்ஸ்’ன்ற தலைப்புல இந்திய சமையலை ஒளிப்பரப்புறாங்க. இந்தியாவின் ஊர் சார்ந்த உணவுகளையும் ஊர் பெருமைகளையும் சொல்றாங்க.
கிரிக்கெட் சீசன்ங்குறதால ரிமோட் வீட்டு ஆண்கள் வசம். அதனால, டிவி நிகழ்ச்சிகளை அதிகமா பார்க்க முடில..
திங்கள் ஐஞ்சுவை அவியலில் சந்திப்போம்...
நன்றியுடன்...
ராஜி.