Tuesday, May 16, 2017

எல்லா வகை கேக்குக்கும் முன்னோடி நம்ம இண்டியன் கேக் - கிச்சன் கார்னர்


பளிச்சுன்னு இருக்குறதாலயும், ருசிக்காகவும் வெள்ளை விஷம்ன்னு சொல்லப்படுற சர்க்கரையை நாம இப்பலாம் யூஸ் பண்றோம்.  ஆனா, நம்ம முன்னோர்கள் வெல்லத்தைதான் இனிப்புக்காக பயன்படுத்தினாங்க. வெல்லம் பனைமரத்திலிருந்தும், கரும்பிலிருந்தும் கிடைக்குது. வெல்லம்ன்றது இலங்கை வட்டார வழக்கு சொல்லாகும். வெல்லம் 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் இருக்கு.  நம்மூர்ல இதுக்கு கருப்பட்டின்னு பேரு. 

வெல்லத்திலிருக்கும் சத்துகள்...

வெல்லத்திலிருந்து கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், குரோமியம், கோபால்ட் மற்றும் சோடியம் இருக்கு. இதுமட்டுமில்லாம நம் உடலுக்கு தேவ்வையான அதிமுக்கியமான தாது சத்துகள், வைட்டமின் பி3, நியாசின், வைட்டமிம் பி6, தயாமின், ரிபோஃப்ளேவின், கார்போஹைட்ரேட்டும் இருக்கு. கொஞ்சூண்டு கொழுப்புசத்தும், நார்சத்தும்கூட இருக்கு.

வெல்லத்தின் மருத்துவ பயன்கள்..
 கரும்பிலிருக்குற தாமிரம், இரும்புச்சத்து ரத்த விருத்தியை அதிகரித்து ரத்த சோகையை நீக்குது. ரத்த ஓட்டத்தை சீராக்குது. ரத்தத்தை சுத்தம் செய்யுது.
இதிலிருக்கும் தாமிரம் ரத்தத்தில் இருக்குற ஹீமோக்குளோபின் அளவை அதிகரிக்க செய்து உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜனை கிடைக்க்க செய்து வளர்சிதை மாற்றத்துக்கு உதவுது.
உமிழ்நீரை பெருக்கி, சாப்பிட்ட உணவை எளிதில் ஜீரணிக்க உதவுது. உணவுக்குழாய், வயிறுன்னு உடல் உள் உறுப்ப்புகளை சுத்திகரிக்குது.
வெல்லத்தில் இருக்குற ஆன்டிஆகிஸிடன்ட்கள் வயிற்றுப்புண்களை ஆற்றுது. இதிலிருக்குற சோடியம், பாஸ்பேட் போன்றவை மலச்சிக்கலை போக்குது. மேலும் ஆன்டிஆகிஸிடன்ட்கள் இருப்பதால் புத்துநோய் செல்களை எதிர்த்து போராடும். கூடவே இதயம் சம்பந்தமான நோய்களையும் போக்குது. 
வெல்லத்திலிருக்கும் கால்சியம், இரும்புசத்துகள் எலும்புகளை வலுவாக்கும். ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis)  மாதிரியான எலும்பு சம்பந்தமான நோய்களை வராமல் தடுக்குது. 
மெக்னீசயத்தின் குறைப்பாட்டால் வரும் உயர் ரத்த அழுத்தம், தலைவலி, தசைப்பிடிப்பை சரி செய்யுது. உடல் சோர்வை நீக்குது. இதுமட்டுமில்லாம இதிலிருக்கும் மாங்கனீஸ் ஆண்களின் பாலியல் ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிக்குது. நரம்பு மண்டலங்களை சீராய் செயல்பட வைக்க உதவுது. விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை போக்குது.
இதிலிருக்கும் கால்சியம், மக்னீசியம் மாதிரியான சத்துகள் அதிகமா இருக்கு. இது பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ரத்தப்போக்கால் வரும் ரத்த சோகை, கால்சீயம் பற்றாக்குறையால் வரும் எலும்புத்தேய்மானம், மூட்டுவலி மாதிரியான நோய்களுக்கு தீர்வு தருது. கர்ப்பிணிகளின் எடை கூடாமல் உடலுக்கு தேவையான வலுவினை கொடுக்குது.

முன்னலாம் யார் வீட்டுக்காவது விருந்தாளியாய் போனாலும், இல்ல டூர், கோவில் குளம்ன்னு  போனாலும் சில உணவுகளை நம்ம ஆளுங்க கொண்டு போவாங்க. தாளிச்ச இட்லி, புளிசாதம், அதிரசம், முறுக்கு, பொருள்விளங்கா உருண்டை, குழிப்பணியாரம், சீடை, வெல்லம் இட்லி,... இதுலாம் ரெண்டு மூணு நாள் தாங்கும். வயித்துக்கும்  கேடு செய்யாது. 

இண்டியன் கேக்ன்னு செல்லமா சொல்லப்படுற வெல்லம் இட்லியோட செய்முறையைதான் இன்னிக்கு பார்க்கப்போறோம்...

தேவையான பொருட்கள்;
அரிசி,
வெல்லம், 
கடலைப்பருப்பு,
உளுத்தம்பருப்பு,
வெந்தயம்,
ஏலக்காய் பொடி,
உப்பு, 
தேங்காய்...


அரிசியோடு ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்க்கனும்....


ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு சேருங்க...

ஒரு டீஸ் பூன் கடலைப்பருப்பு சேர்த்து ஊற வைங்க. 

கொஞ்சம் கடலைப்பருப்பை தனியா ஊற வைங்க. 



வெல்லத்தை பொடி பண்ணிக்கோங்க. 


அரிசியை கழுவி தண்ணி விடாம கொஞ்சம் அரைச்சுட்டு, கொஞ்சம் மசிஞ்சப்பின்  வெல்லம், கொஞ்சமா உப்பு சேர்த்து அரைச்சுக்கனும்.

ஏலக்காய் பொடியையும் சேர்த்து அரைச்சுக்கோங்க. 

நல்லா மசிஞ்சதும் ஆப்ப சோடா மாவு சேர்த்துக்கோங்க.

ஊற வெச்ச கடலைப்பருப்பை தண்ணியில்லாம வடிச்சுக்கோங்க. 

தேங்காயை சின்ன சின்ன துண்டுகளா வெட்டி மாவுல சேர்த்து கலக்கிக்கோங்க. 

இட்லி தட்டில் எண்ணெய் தடவி முக்கால்வாசி அளவுக்கு மாவு ஊத்தி  வேக விடுங்க. 


சுவையான இட்லி தயார்.

குறிப்பு; மாவு கொஞ்சம் கொரகொரப்பா இருக்கனும். சாதாரண இட்லியவிட இந்த இட்லி வேக கொஞ்சம் டைம் எடுக்கும். கடலைப்பருப்பும், தேங்காயும் நிறைய இருந்தால் சாப்பிட  நல்லா இருக்கும். தேங்காய் கடிக்க முடியாதவங்க துருவலாவும் சேர்த்துக்கலாம். வெளில வெச்சாலும் ரெண்டு நாளைக்கு தாங்கும். மாலை நேரத்துக்கு ஏத்த நல்ல உணவு. 

தமிழ்மணம் ஓட்டு பட்டை தெரியாதவங்களுக்காக....

நாளைக்கு யதுகுலத்தின் முடிவை தெரிஞ்சுப்போம்..
நன்றியுடன்,
ராஜி.

21 comments:

  1. வெல்லத்தின் பயனை அறிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே. உங்களுக்கு தெரியாத தகவலா?!

      Delete
  2. ///வெளில வெச்சாலும் ரெண்டு நாளைக்கு தாங்கும்.///

    ஏன் ஆடு மாடு நாய்கள் கூட திங்காதா என்ன? ஹீஹீ அப்ப நான் வரறேன் இல்லைன்னா மாமி பூரிக்கட்டையை எடுத்துடுவா

    ReplyDelete
    Replies
    1. நாங்க ஆடு, மாடு, நாய்க்குலாம் அது திங்குறது எதுவோ அதை போடுவோம். சமர்த்தா இருக்கும். உங்க வீட்டு நாய், ஆடு, மாடு, பூனை எப்படின்னு எனக்கு தெரியாது. அதனால வெளில வைக்குறதும் பேங்க் லாக்கர்ல வைக்குறதும் உம்ம இஷ்டம்.

      Delete
  3. வெல்லம் பத்திக் கொஞ்சம் தெரியும். உங்க இந்தப் பதிவின் மூலம் நிறையத் தெரிஞ்சிகிட்டேன். என் இல்லக்கிழத்தியையும் படிக்கச் சொல்லியிருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கடந்த பதிவில்[கடவுள் சிலையை...], ‘ரெண்டாவதா ஓடிட்டிருக்கும் ராஜா...’ என்பதற்கு, ஓட்டப் பந்தயத்தில் ‘2 ஆவது தடவையா’[2 ஆம் இடம் அல்ல] என்று அர்த்தம் பண்ணனுமா?

      நீங்க விடை சொல்லலையே![அந்தப் பதிவை இப்போதுதான் படித்தேன்].

      Delete
    2. சுரேஷ், ராஜாக்குண்டான இடம் மட்டுமே பொருள் கொள்ளனும்ப்பா

      Delete
  4. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  5. செய்து பார்க்கிறோம் சகோதரி...

    துணைவிக்கு உங்கள் பேச வேண்டும் என்கிற ஆவல்...!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பேசுறேன் அண்ணே.

      Delete
  6. காரடையான் நோன்பிற்கு செய்வது தானே இது!

    ReplyDelete
    Replies
    1. அது எண்ணெய்ல போட்டுதானே பொரிச்சு எடுப்பாங்க

      Delete
    2. இல்லை ராஜி காரடையான் நோன்புக்கு செய்வதும் இதெ போன்றுதான் என்ன அதில் காராமணி ஊறவைச்சு சேர்ப்பதுண்டு...கொஞ்சம் மெலிதாகத் தட்டி ஆவியில் வேகவைப்பது. ஆனால் அரிசி மாவை வெல்லத் தண்ணில கொதிக்கவைத்து மாவு போட்டுக் கிளறி மெலிதாகத் தட்டி ஆவியில் வேக வைப்பதுதான்....கிட்டத்தட்ட அதே ப்ரொசீஜர்தான்....

      கீதா

      Delete
  7. வெல்லம் இட்லியோட செய்முறைக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அனு

      Delete
  8. வெல்லம் இட்லி ரெசிப்பி சூப்பர். இதில் கொஞ்சம் உளுந்து சேர்த்தும் செய்வதுண்டு....அதுவும் நல்லாருக்கு. அதே போல நார்மல் இட்லி மாவுல கொஞ்சம் ஊத்திட்டு நடுல பயறு இனிப்புச்க் சுண்டல் பூரணம் இல்லைனா காரத்துக்கு வெஜிடபிள் மசாலா அல்லது உருளை மசாலா வைத்து மேல ஒரு கரண்டி மாவு ஊத்தி வேக வைச்சும் செய்வதுண்டு....இதே வெல்ல இட்லி மாவை ஊத்தப்பம் போலவும் கொஞ்சம் நெய் விட்டு தோசைக்கல்லிலும் செய்யலாம்...நீங்க சொல்லியிருப்பது போல தேங்கா நிறைய போட்டா டேஸ்ட் நல்லாருக்கும்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நானும் உளுந்து சேர்த்திருக்கேன் . இதே மாவை க.பருப்பு, தேங்காய் சேர்க்காம குழிப்பணியாரமாவும் ஊத்திக்கலாம்

      Delete
  9. வெல்லம் இட்லி! செய்ததில்லை இதுவரை. சுவையான குறிப்புகள்.

    தம +1

    ReplyDelete
    Replies
    1. சாப்பிட நல்லா இருக்கும். உடலுக்கு ஆரோக்கியமானதும்கூட

      Delete