Tuesday, May 15, 2018

வெண்டைக்காய் மோர் குழம்பு - கிச்சன் கார்னர்.

வெயில் காலத்துல வீட்டுல தயிர் அதிகமா புழங்கும். சிலநேரத்தில் தயிர் அதிகமா சேர்ந்து புளிச்சு போகும். அந்த மாதிரி நேரத்தில் பச்சை மிளகாயை உப்பு போட்டு அவிச்சு தயிரை மோராக்கி ஊற வச்சு மிளகாய் வத்தல் செய்யலாம். அதேமாதிரி கொத்தவரங்காய்லயும் வத்தல் செய்யலாம். கசப்பு சுண்டைக்காயை மோர்ல ஊறவச்சு சுண்டைக்காய் வத்தல் செய்யலாம். பொடுகு போக தலைக்கு தேய்ச்சு குளிக்கலாம். இத்தனை செஞ்சும் தயிர் மீந்திருந்தால் மோர்  குழம்பு செய்யலாம். 

இப்ப கல்யாண பூசணிக்காய், வெண்டைக்காய் சீசன் வேற! அதனால, இப்ப மோர் குழம்பு செஞ்சா நல்லா இருக்கும்.

தேவையான பொருட்கள்...
துவரம்பருப்பு
வெண்டைக்காய்
பமிளகாய்,
இஞ்சி
பூண்டு,
வெங்காயம்
தக்காளி
கறிவேப்பிலை, கொத்தமல்லி
பெருங்காயம்
மஞ்சப்பொடி
உப்பு
எண்ணெய் 
கடலைப்பருப்பு
உளுத்தம்பருப்பு
கடுகு
காய்ந்த மிளகாய்
துவரம்பருப்பை ஊற வச்சுக்கனும், பூண்டை உரிச்சுக்கனும். இஞ்சி தோல் சீவிக்கனும். வெங்காயம் தக்காளியை வெட்டிக்கனும். புளிச்ச தயிரை ஏடு, கட்டியில்லாம நல்லா கடைஞ்சுக்கனும். துவரம்பருப்பை கழுவி, ப,மி, இஞ்சி, பூண்டை கரகரப்பா அரைச்சுக்கனும்.
 ஃப்ரெஷ்சான வெண்டைக்காயா பார்த்து துண்டாக்கி, எண்ணெயில் போட்டு பொரிச்சு எடுத்துக்கனும்.

அடிகனமான, அகலமான பாத்திரம் இல்லன்னா வாணலியை அடுப்பில் வச்சு காய்ஞ்சதும் கடுகு போட்டு வெடிச்சதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவக்க விடனும்.
பூண்டை நசுக்கியும், கிள்ளிய காய்ந்த மிளகாய், கீறின ப.மிளகாயும் சேர்த்துக்கனும்..

வெட்டிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமா வதக்கனும்..
அடுத்து தக்காளி சேர்த்து நல்லா வதக்கனும். 
அரைச்சு வச்சிருக்கும் துவரம்பருப்பு விழுதை சேர்த்துக்கனும்..


 உப்பு மஞ்சப்பொடி சேர்த்து நல்லா வதக்கி, தேவையான அளவுக்கு தண்ணி சேர்த்து பச்சை வாசனைலாம் போகுமளவுக்கு கொதிக்க விடனும்.

 பச்சை வாசனை போனதும் கடைஞ்சு வச்சிருக்கும் தயிரை சேர்த்துக்கனும்..

 ஃப்ரை பண்ணி இருக்கும் வெண்டைக்காய், பெருங்காயம் சேர்த்துக்கனும்...

ராஜி சீரகமே சேர்க்கலை. இதுல சீரகம் இருக்கேன்னு யோசிக்குறவங்களுக்கு.. குழம்பு வச்ச களைப்புல குழம்பை படமெடுக்க மறந்துட்டேன். இது கூகுள்ல சுட்ட படமாக்கும்.

# எங்க வீட்டு எஜமானர்களுக்கு வெண்டைக்காய் க்ரிஸ்பியா இருந்தால்தான் பிடிக்கும். அதனால நான் ஃப்ரை பண்ணி கடைசியா சேர்த்திருக்கேன். வெங்காயம் தக்காளி வதக்கும்போதே வெண்டைக்காயை சேர்த்து வதக்கிக்கலாம். இதேமாதிரி கல்யாணபூசணி, சௌசௌ சேர்த்தும் செய்யலாம்.
# சிலர் பச்சரிசி, தேங்காய்லாம் துவரம்பருப்போடு  சேர்த்து அரைப்பாங்க. அது குழம்பை ரொம்ப கொழகொழன்னு ஆக்கிடும்ங்குறதால நான் சேர்க்குறதில்ல.

# மோர் சேர்த்தபின் அதிக நேரம் கொதிக்கவிடப்படாது.

# மோர்குழம்புல மெதுவடை அல்லது மசாலா வடையை சேர்த்து ஊற வச்சு சாப்பிட்டா செம டேஸ்ட். எங்க வீட்டில் மசாலா வடையை விட மெதுவடையை சேர்க்குறதுதான் பிடிக்கும்.

அடுத்த வாரம் வேற ஒரு ரெசிப்பியோட வரேன்..

நன்றியுடன்
ராஜி (காந்திமதி)


10 comments:

  1. நமக்குத் தெரிஞ்ச (காண்பித்த ) மோர்க்கொழப்பு தயிரைக் கரைச்சுட்டு குழம்பு போல தாளிக்கிறது மட்டும் தான்... இருக்கட்டும் இருக்கட்டும் இன்னிக்கி வீட்ல போயி இருக்கு.. என்னைய அவ அடிக்க அவ என்னைய அடிக்க....

    ReplyDelete
    Replies
    1. ஈசியான பக்குவம்தான் சகோ. ஆனா செம டேஸ்ட். அதிலும் மெதுவடை சேர்த்து சாப்பிட்டு பாருங்க டிவைன்..

      Delete
  2. மோர்க்குழ்ம்பு ரொம்பப் பிடிக்கும். அடிக்கடி செய்வதுண்டு நிறைய வெரைட்டி மோர்க்குழம்பு...செய்வதுண்டு. ஆனால் வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்க்காமல் அரிசியும் சேர்க்காமல் செய்வதுண்டு. கேரளத்து புளிசேரி மோர்க்கூட்டான் என்றும் தமிழ்நாட்டுதும்.

    வெங்காயம் தக்காளி பூண்டு சேர்த்து தயிர் சேர்த்து கடி(thi) எனும் நார்த் மோர்க்குழம்பு ஆனால் அதில் பருப்பு கிடையாது மஹாராஷ்ற்றியன், ராஜஸ்தானி, பஞ்சாபி கthi செய்வதுண்டு

    இது ஸவுத் அண்ட் நார்த் இரண்டும் கலந்தது போன்று உள்ளது செய்து பார்த்துடறேன்....சூப்பர் னோட் பண்ணிக்கிட்டேன்..ராஜி நன்றி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இதான் நம்ம வூட்டு ரெசிப்பி கீதாக்கா. அவாள் வீட்டில் பச்சரிசி சேர்ப்பாங்க. அது என்னமோ ரொம்ப கொழகொழன்னு இருக்க மாதிரி ஒரு ஃபீல். அதான். அதேப்போல பருப்பை ரொம்பவும் நைசா அரைச்சுடப்படாது. கொரகொரப்பா இருக்கனும். அதான் முக்கியம்

      Delete
    2. //அவாள் வீட்டில் // - பூண்டும் சேர்க்க மாட்டாங்க. நான் படித்தபோது, என்ன பூண்டு வாசனையில் மோர்க்குழம்பா என்று முகம் போனது. ஹாஹா

      Delete
  3. நானும் வெங்காயம் தக்காளி சேர்க்க மாட்டேன் ராஜிக்கா..இவ்வோளோ பூண்டும் வதக்க மாட்டோம்..

    அரைக்க கொஞ்சம் து.பருப்பு,அரிசி, தேங்காய், இஞ்சி, ஒரு பல் பூண்டு சேர்ப்பேன் அவ்வளவு தான்

    இது வேற விதம்..

    ReplyDelete
    Replies
    1. வெங்காயம் தக்காளி சேர்க்காம குழம்பா?!

      Delete
  4. மோர்க்குழம்பு சுவையான சமையல் குறிப்பு.

    ReplyDelete
  5. Replies
    1. உங்க மகள் நல்ல மார்க் எடுத்து 12வது வகுப்பு பாஸ் பண்ணியதற்கு வாழ்த்துகள்ண்ணா.

      Delete