Sunday, August 11, 2019

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்.. பாட்டு புத்தகம்

புன்னகை மன்னன் படத்தை விசிஆர்லதான் பார்த்தேன். அப்பாவின் நண்பர்கிட்ட கேசட் அப்பா வாங்கி வந்தார். கேசட் இருந்தவரைக்கும் பொழுதன்னிக்கும் இந்த படம்தான் போகும்.  எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. கமல், ரேகா, ரேவதி, ஸ்ரீவித்யான்னு அத்தனை பேரும் அழகா இருப்பாங்க. நல்லாவும் நடிச்சிருப்பாங்க. இந்த படத்தின் எல்லா பாட்டுகளும் சூப்பர் டூப்பர் ஹிட்.  அப்பத்திய ஆட்களுக்கு மட்டுமல்ல, இப்பத்திய பசங்களுக்கும்கூட பிடிக்குது. அதும் இந்த படத்தோட பி.ஜி.எம்.. சான்சே இல்ல. மௌனராகம், கோபுரவாசலிலே, அமரன், இப்படி ஒருசில படங்களோட பி.ஜி.எம்க்கு அடுத்து இந்த படத்தோடபி,ஜி.எம் பிடிக்கும்.

இந்த படத்தின் எல்லா பாட்டுக்களை போலவே, ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்.. பாட்டும் பிடிக்கும்.  படத்துல கமல்-ரேகா போர்ஷன் அஞ்சு நிமிசம்தான் வரும்.  அதும் ஒரு பாட்டுலயே முடிஞ்சுடும். ரேகா-கமல் மலையிலிருந்து குதிச்சு, ரேகா செத்து, கமல் ஜெயிலுக்கு போனப்பொறவு டைட்டில் ஆரம்பிக்கும். டைட்டில் சாங்க்தான் இன்னிக்கு பார்க்கப்போற பாட்டு.. பாட்டுல மீண்டும் கமல்-ரேகா போர்ஷன் வரும். எனக்கென்னமோ இந்த பாட்டு வலிந்து திணிக்கப்பட்டதாவே இருக்கும். கமல் ஜெயிலுக்கு போனப்பிறகு சோகமா வயலினோ இல்ல வீணையையோ ஒலிக்க விட்டிருந்தா இன்னும் கொஞ்சம் எஃபக்டிவ்வா இருந்திருக்கும்ன்னு என் கருத்து. எது எப்படியோ! பாட்டு ரொம்ப பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்கும்ன்னு நினைக்குறேன்.

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்....

உன் கையில் என்னை கொடுத்தேன்...

நீதானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
பண் பாடும் பாடகன் நீயே!!
உன் ராகம் நானே!!
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்..
உன் கையில் என்னை கொடுத்தேன்

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்..

உனை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்..

தூக்கம் விழிக்கிறேன்..
பூக்கள் வளர்க்கிறேன்..
சில பூக்கள் தானே மலர்கின்றது..
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது...
பதில் என்ன கூறு...
பூவும் நானும் வேறு...

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்..
உன் கையில் என்னைக் கொடுத்தேன்...

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வா!!

கை நீட்டினேன் என்னை கரை சேர்க்க வா!!

நீயே அணைக்கவா!
தீயை அணைக்க வா!
நீ பார்க்கும்போது பனியாகிறேன்!!
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்!!
எது வந்த போதும்
இந்த அன்பு போதும்.

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்...

திரைப்படம்: புன்னகை மன்னன்
இசைஇளையராஜா

பாடியவர்சித்ரா
எழுதியவர்: வைரமுத்து
நன்றியுடன்,
ராஜி

6 comments:

  1. சித்ராவின் குரலில் ஒரு அற்புதமான பாடல். எனக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
  2. புன்னகை மன்னன் படத்தில் எல்லா பாடல்களுமே பிடித்தவை. இந்தப் பாட்டும்!

    ReplyDelete
  3. இனிமையான பாடல்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  4. மிகவும் ரசித்த ரசிக்கும் பாடல்...

    ReplyDelete
  5. நல்ல பாட்டு ராஜி...மிகவும் பிடித்த பாடல் சித்ராவை சும்மாவா சின்னக்குயில் நு சொல்றாங்க

    கீதா

    ReplyDelete
  6. இந்த ஒரு பாட்டு போதும் 😍😍😍

    ReplyDelete