Tuesday, February 04, 2020

காயம் ஆற்றும் அவரைக்காய்+துவரம்பருப்பு பொரியல் -கிச்சன் கார்னர்

அவரைக்காய் வீட்டில் காய்த்து தொங்குது. பிஞ்சு அவரைக்காய்க்கு புண்களை ஆற்றும் சக்தி இருக்குன்னு அம்மாக்கிட்ட யாரோ சொன்னாலும் சொன்னாங்க.  இட்லி சாம்பார்ல அவரைக்காய், பொரியலாய், அவியலாய், கூட்டாய்,சூப்பாய்..... அவரைக்காய் பல ரூபமெடுக்குது.  அட! நைட் குருமாவிலும் அவரைக்காய்ன்னா அம்மாவோட அக்கறையை!! என்ன சொல்ல?!. நல்லவேளையா காபில அவரைக்காயை கலந்து கொடுக்காம விட்டுச்சேன்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான். 

புண்களை ஆற்றும் திறன்கொண்ட அவரைக்காய் பொரியல் செய்யுறது எப்படின்னு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்..
பிஞ்சு அவரைக்காய்-1/4 கிலோ
பெரிய வெங்காயம்- 1
பூண்டு பற்கள்
காய்ந்த மிளகாய்- காரத்திற்கேற்ப
துவரம்பருப்பு-1/2 ஆழாக்கு
தேங்காய் துருவல் - கொஞ்சம்
கடுகு
கடலைப்பருப்பு’
உளுத்தம்பருப்பு
எண்ணெய்
உப்பு

அவரைக்காயை கழுவி பொடியா நறுக்கிக்கனும்,, துவரம்பருப்பை அதிகம் குழையாம வேக வச்சு எடுத்துக்கனும்..

அடுப்பில் வாணலியை வச்சு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடனும். அடுத்து கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு போட்டு சிவக்க விடனும்.
காரத்திற்கேற்ப காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு சிவக்க விடனும்..
பூண்டு பற்களை போட்டு வதக்கனும். பூண்டை நசுக்கி போட்டால் நல்லது.
வெங்காயம் போட்டு வதக்கனும்..
கறிவேப்பிலை கொத்தமல்லி போடனும்..
பொடியா நறுக்கின அவரைக்காயை கொட்டி வதக்கனும்..
தேவையான அளவு உப்பு சேர்த்து, தேவையான அளவுக்கு தண்ணி சேர்த்து வேக விடனும்..
காய் வெந்த, தண்ணி சுண்டினதும் வெந்த துவரம்பருப்பை சேர்த்துக்கனும்
தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கிடனும்,...
சுவையான அவரைக்காய் பொரியல் ரெடி..
செஞ்சு சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க..

நன்றியுடன்,
ராஜி

3 comments:

  1. சுவை. 

    பெரும்பாலும் வெங்காயம் பூண்டு போடாமல் செய்து வழக்கம்.  நிறைய நேரங்களில் வெந்தயக்குழம்பு, சாம்பார்தான்

    ReplyDelete
  2. ரொம்ப நல்லா இருக்கு ராஜி அக்கா...
    எங்க அம்மாவும் இப்படி செய்வாங்க...

    ReplyDelete
  3. துவரம்பருப்பு சேர்த்து அவரைக்காய்! இது வரை செய்ததில்லை. சாதாரணமாக வெங்காயம், தக்காளி, இஞ்சி சேர்த்து செய்வதுண்டு - இன்றைக்குக் கூட நாட்டு அவரை தான் சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள!

    ReplyDelete