உலகம் இப்படியும் மாறுமாவென தெரியாமல் கைக்கு கிடைத்தவற்றை தேவைகளுக்கு பயன்படுத்தி மனநிறைவுடன் வாழ்ந்து, அறிவியலின் பிரம்மாண்ட வளர்ச்சியினையும் அனுபவித்துக்கொண்டே மனநிறைவு இல்லாமல் வாழும் பாவப்பட்ட ஜென்மங்கள்தான் நடுத்தர வயதினர். இப்படியும் வாழ்ந்தோமான்னு நினைச்சு பார்க்க வைக்கும் நினைவு மீட்டல்தான் இந்த கிராமத்து வாழ்க்கை பதிவு...
எங்க ஊரில் லாரி டிரைவர்கள் அதிகம், வடநாட்டுல இருந்து வந்த டிரைவர்களை செக் பண்ண ஆம்புலன்ஸ் வந்திச்சு. உடனே, வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு கொரோனான்னு சொன்னாங்க. டெல்லி மாநாட்டுக்கு போய் வந்த இருவரை நேத்து மாலையில் செக்கப்புக்காக கூட்டி போனாங்க. இன்னிக்கு காலையில் 2 பேருக்குமே கொரோனா பாசிட்டிவ்ன்னு வந்திடுச்சு. போலீஸ் அந்த தெருவில் கூடி இருக்கு, பாதையை அடைச்சுட்டாங்கன்னு சொன்னாங்க. இப்படிதான் வதந்தி பரவுது போல! தென் தமிழகத்தில் கொரோனா செக்கபுக்காக கூட்டி போனவருக்கு கொரோனான்னு வதந்தி பரவினதுல அவர் வெறுத்து போய் தற்கொலை பண்ணிக்கிட்டார். அதனால், தேவையற்ற வதந்திகளை பரப்பாம இருப்போம். பொதிகை தூர்தர்ஷனாய் இருந்த காலத்தில் வந்த கார்ட்டூன் சொல்லும் வதந்தி எப்படி பரவுதுன்னு....
பாண்ட்ஸ், குட்டிக்யூரா பவுடலாம் அலுமினிய டின்லதான் வரும். எப்பவாவது வெளிமாநிலத்திலிருந்து வருவாங்க. அவங்கக்கிட்ட பவுடர் டின், எண்ணெய் டின், டால்டா டின்னுலாம் கொடுத்தால் சின்னதும் பெருசுமா முறம் செஞ்சு தருவாங்க. மிச்சம் மீதி டின், அலுமினிய பாத்திரத்தை கொடுத்தால் உருக்கி வாணலி, தோசைக்கல்லா செஞ்சு தருவாங்க. கிருஷ்ணர், பிள்ளையார், லட்சுமி, சரஸ்வதின்னு பொம்மை செஞ்சு தருவாங்க. படத்தில் இருக்கும் பொம்மை துளசியம்மா பேஸ்புக்ல பகிர்ந்தது.
வீட்டில் இருபது, முப்பது கோழிகள்ன்னு இருந்தாலும் இந்த கலர் கோழிக்குஞ்சு மேல் அலாதிப்பிரியம். பழைய நோட்டு புத்தகத்துக்குகூட வாங்கி இருக்கேன். என்னதான் பார்த்து பார்த்து வளர்த்தாலும் முழுசா வளர்ந்து நான் பார்த்ததில்லை.காக்கா, பருந்துக்கு போனதைவிட நோய் தாக்கி இறந்துடும்.
என்ன ஆச்சு?! குழந்தை அழுதது. வுட்வர்ட்ஸ் கொடுக்க சொல்லு நீ குழந்தையா இருக்கச்சொல்ல அதான் கொடுத்தேன். இப்ப இந்த விளம்பரமும் இல்ல. கிரேப் வாட்டர் கொடுக்கும் பழக்கமுமில்லை. குழந்தைகளின் ஜீரணத்துகாக கொடுப்பாங்க. குழந்தையை குளிக்க வச்சதும் கிரேப் வாட்டர் கொடுப்பது வழக்கம். பிறக்கும்வரை குழந்தையின் குடல் சிறுசா இருக்கும். குழந்தை பிறந்தபின்னர் தானாய் பால் குடிக்க ஆரம்பித்தபின் குடல் விரிவடைய ஆரம்பிக்கும். அப்படி குடல் விரிவடையும்போது குழந்தைக்கு வயிறு வலிப்பது வழக்கம். அந்த சமயத்தில் கிரேப் வாட்டரை கொடுப்பாங்க. ஆனா, அப்படி கொடுப்பதால் குழந்தையின் வயிற்றில் பேக்டீரியா வளரும் வாய்ப்பு இருக்குறதால் கிரேப் வாட்டர் கொடுக்காதீங்கன்னு சொல்றாங்க.
மத்திய வயதினருக்கு சட்டுன்னு எந்த பொருளையும் தூக்கி போட மனசு வராது. கிழிந்த உடைகளை தச்சு போட்டுப்போம். பக்கெட் ஓட்டையானால்கூட ரோடு போடும் தார் இல்லன்னா துணியை வச்சு அடைச்சு யூஸ் பண்ணுவோம். செருப்பு அறுந்துட்டா மட்டும் விட்டுடுவோமா?! சேஃப்டி ஹூக்கை வச்சி பயன்படுத்துவோம். ஆனா, இப்பத்தைய பிள்ளைகள் செருப்பு அறுந்தால் அதை தச்சு போட அசிங்கப்படுதுங்க. போடும் ட்ரெஸ்சுக்கு ஏத்தமாதிரி போட்டுக்க குறைஞ்சது அஞ்சு செருப்பு வச்சிருக்குதுங்க. இந்த அவசர காலத்தில் பொருட்கள் முதற்கொண்டு உறவுகள் வரை எல்லாமே யூஸ் அண்ட் த்ரோன்னு ஆகிட்டுது!! :-(
கொசுவர்த்தி மீண்டும் ஏற்றப்படும்..
நன்றியுடன்,
ராஜி
வதந்திகளை நம்பாமல் இருப்போம்
ReplyDeleteநல்ல பதிவு
நன்றி சகோதரி
நினைவுகள் இனியவை...
ReplyDeleteதிண்ணை - கிழவி ???
திண்ணை-கிழவி?!
Deleteவரும். வராமலும் போகலாம்.
வதந்திகள் - இவற்றை பரப்புவதற்காகவே இப்போது முகநூலும் வாட்ஸப்பும்! பெரும்பாலானவை அர்த்தமற்றவை - உண்மையா பொய்யா எனத் தெரியாமல் பலரும் அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.
ReplyDeleteநல்லதொரு தொகுப்பு.
வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டரால் பல நல்லது நடந்தாலும் இதுமாதிரி சில இம்சைகளை தாங்கித்தான் ஆகனும். ஆனா, வதந்தி எது, நிஜம் எதுன்னு நாமும் கொஞ்சம் யோசிச்சு மத்தவந்தவங்களுக்கு ஷேர் பண்ணனும்.
Deleteவதந்திகளைச் சுட்டி
ReplyDeleteஉறவுகள் பின்பற்றாதிருக்க முயற்சிப்போம்
நாமும் ஒரு விசயத்தை மத்தவங்களுக்கு சொல்லும்முன் அதன் உண்மைத்தன்மையை கொஞ்சம் யோசிக்கனும்.
Deleteவதந்தி பரப்புவதற்கு நம்ம மக்களுக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்? அதுவும் இப்ப இருக்கும் சமூக வலைத்தளங்கள் அதை நன்றாகவே செய்கின்றன. வதந்தி தவிர கூடவே இவர்களாகக் கற்பனை செய்யும் கட்டுக்கதைகளும்...
ReplyDeleteகீதா
ம்ம் படுத்துறாங்க கீதாக்கா. வதந்தியால் பல கெடுதல் நடந்தும் நம்மாளுங்க இன்னும் விடுறதாயில்ல!
Deleteகிரேப் வாட்டரா, கிரைப் வாட்டரா? பவுடர் டப்பா முறங்கள் அப்போல்லாம் ரொம்ப பேமஸ்..்். சுவாரஸ்யமான நினைவுகள்.
ReplyDeleteகிரைப் வாட்டர்தான். ஆனா, கிரேப் வாட்டர்ன்னு சொன்னால்தான் புரியும். கிரேப் வாட்டர்ன்னுதான் சின்ன வயசில் சொல்வோம்.
Deleteவதந்தியினால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை நானும் படித்தேன், மிகவும் கஷ்டமாக இருந்தது. எப்படித்தான் நாக்கில் நரம்பில்லாமல் இம்மாதிரியான வதந்திகளை பரப்புவார்களோ. வாய் மூலமாக வதந்திகளை பரப்பும் காலம் போய் சமுகவலைத்தளங்கள் மூலமாக பரப்பும் காலமும் வந்து விட்டது.
ReplyDeleteஇந்த இக்கட்டான நேரத்திலும் வதந்தி பரப்புறது ஏன்னு புரியல. நடக்காததை நடந்த மாதிரி சொல்லி என்ன பயன் அனுபவிக்க போறாங்க?!
Delete