ஐஞ்சுவை அவியல், மௌன சாட்சிகள், புண்ணியம் தேடி, தெரிந்த கதை தெரியாத தகவல்ன்ற தொடர் பதிவுகள்லாம் பக்கம் பக்கமா எழுதுறது.. தினத்துக்கும் நீளம் நீளமா பதிவு வந்தால் படிக்குறவங்க டயர்டாகிடுவாங்களே! அதான் இணையத்துல பார்த்து மனசுல பதிஞ்ச, பாதிச்ச படங்களை பதிவா போடுறேன்.
மனசை பாதித்த படம்ன்னு அடிக்கடி இணையத்துல பார்த்திருக்கோம், உண்மையிலேயே பாதிச்சது இந்த படம்தான். உணவுப்பொருட்களை வாங்க வழியில்லாம தவிக்கும் கூட்டம் இருக்கும் நாட்டில் பல குடும்பங்கள் பல மாசம் வச்சு சாப்பிடுமளவுக்கான உணவுப்பொருள் வீணாகுது. எத்தனை பேரின் உழைப்பும், வருமானமும் வீணாகுது?!
எதுவா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும்..
ஒரு மனிதன் மகிழ்ச்சியுடன் இருப்பது குழந்தை பருவத்தில்தான். பொறந்ததுமே தேவையா இந்த சுமைகள்?!
இம்புட்டுதான் வாழ்க்கை...
டிவி, பத்திரிக்கை, ட்விட்டர், பேஸ்புக்ன்னு எங்க பார்த்தாலும் தென்படும் திடீர் நல்லவங்களை பத்தின பதிவுதான் தென்படுது. துப்புரவு பணியாளர்களுக்கு பாதை பூஜைம், சால்வை, புடவை, வேட்டி, சமையல் பொருட்கள் வழங்கின்னு ஏக கலாட்டா. துப்புரவு வேலை செய்யும் ஒரு வயதான பெண்மனிக்கு ஒரு தொழில் அதிபர் பாதபூஜை செய்யும்போது , அந்தம்மா உடல் கூசி அவங்க சங்கடப்பட்டதை டிவியில் பார்க்க முடிந்தது. அவங்க எதிர்பார்ப்பது இதுமாதிரியான அதிகபட்ச மரியாதையை இல்லை.
துப்புரவு பணியாளர்கள் எதிர்பார்ப்பது சக மனிதன் என்ற குறைஞ்ச பட்ச மரியாதையைத்தான். அவங்க செய்யுறது கேவலமான வேலை இல்லைன்ற நாம உணரனும். நம்ம வீட்டுல சாக்கடை அடைப்பை சரிசெய்ய வர்றவங்கக்கிட்ட பேரம் பேசாமல் அவங்க கேட்கும் நியாயமான கூலியை கொடுக்கலாம். குப்பைகளை தரம் பிரிச்சு போடலாம். பீங்கான், கண்ணாடி, கத்தி, பிளேடு மாதிரியான கூர்மையான பொருட்களை குப்பையில் போடும்போது அட்டைப்பெட்டியில் போட்டு பேக் பண்ணி மேல பேர் எழுதி போடனும். அப்படி செஞ்சா அவங்க கைகளில் குத்தி கிழிக்காம இருக்கும். சானிட்டரி நாப்கின், டயாப்பர்களை பேப்பரில் சுருட்டி போடனும். ஏன்னா, மலம், ரத்தக்கசிவுலாம் கைகளில் படாம இருக்கும். முடிஞ்சா கையுறைகள் வாங்கி கொடுங்க. குடிக்க தண்ணி, சாப்பாடு கொடுங்க. பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கலாம். ஊதியத்தை உயர்த்தி தரச்சொல்லலாம். அதைவிட்டு வீண் பப்ளிச்சிட்டிக்காக பாதபூஜை, மாலை மரியாதைன்னு அட்ராசிட்டி பண்ண வேண்டாம்
நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகமாகும் இந்நாளில் அரசாங்கம் சொல்றபடி வீட்டிலேயே இருப்போம். வெளியில் போனால் தகுந்த இடைவெளி விட்டு போவோம். அடிக்கடி கை கழுவுவோம். கண்ட இடத்தில் எச்சி துப்பாம இருப்போம். இன்னும் நாம கொரோனா வைரஸ்சின் வீரியத்தை புரிஞ்சுக்காம அலட்சியமா இருக்கோம். டாக்டர் சொல்றதை கேளுங்க...
எனக்குலாம் கொரோனா வராது. அப்படியே வந்தாலும் மாத்திரை எடுத்துப்பேன், மூச்சு திணறல் வந்தால் ஆக்சிஜன் மாஸ்க் வச்சிட்டா சரியா போகுதுன்னு அலட்சியமா நினைக்கும் பலருக்கு சினிமாவில் காட்டுற மாதிரி அப்படியே அந்த மாஸ்க்கை மூக்கில் வைக்கமாட்டாங்க எப்படி வைப்பாங்கன்னு இந்த வீடியோவில் டாக்டரே சொல்றார். கேட்டுக்கோங்க.
என்னிக்கா இருந்தாலும் போற உசிருதானே?! கொரோனாவில்தான் போகட்டுமேன்னு சொல்றவங்களுக்கு... இறந்தபின் இறுதி மரியாதைகூட கிடைக்காது. அவரவர் சடங்குபடி அடக்கம் செய்ய மாட்டாங்க. கட்டி அழக்கூட முடியாது, வீட்டுக்கு உடலை கொண்டு வரமுடியாது. சொந்தம், நண்பர்கள்ன்னு நெருங்கிய ஆட்கள்கூட கடைசியா முகத்தை பார்க்க முடியாது. அம்புட்டு ஏன் தொட்டு தூக்கி அடக்கம்கூட செய்யமாட்டாங்க. குழிதோண்டு தொபுக்ன்னு தள்ளிடுவாங்க. இதுலாம் தேவையா?!
சனிப்பொணம் தனியா போகாதுன்னு சொல்வாங்க. கொரோனாவுக்கு இலவச இணைப்பா ஸ்ரீலங்காவையும் நம்மாட்கள் தாரை வார்த்து கொடுப்பாங்க போல!!
ஊரடங்கு சட்டமோ, கோரோனா வைரஸ் பயமோ அல்லது இந்த மொக்கை பதிவின் தாக்கமோ எதுவா இருந்தாலும் உங்களை ரிலாக்ஸ் பண்ணிக்க இந்த வீடியோ.
அனைத்தும் இணையத்துல சுட்டது..
நன்றியுடன்,
ராஜி
துப்புரவு பணியாளர்கள் என்றுமே வணங்கப்பட்ட வேண்டியவர்கள் தான் -மருத்துவர்களும் செவிலியர்களும் ,காவலர் பணியில் உள்ளவர்களும் ,ஏன் (ஒழுங்காக பொருளை ஜனங்களுக்கு கொடுக்கும் )ரேஷன் கடை வேலை பார்ப்பவர்களும் பாராட்டப்படவேண்டியவர்கள் -என்ன போனை எடுத்தால் இருமல் சத்தம் கேட்டவுடனே வியாதி வந்து விட்ட FEELING !முதல் அமைச்சர் உங்களிடம் தொலைபேசியில் பேசினாரா ? என்னிடம் பேசி விட்டார் -அதனால் கேட்டேன் சகோதரி !சரி ,நீங்கள் எழுதிய இந்த கட்டுரை நாடெங்கும் ஏன் உலகெங்கும் உள்ள துப்புரவு பணியாளர்கள் தமக்கு அர்ப்பணிப்பு செய்வோம் !
ReplyDeleteஅடுத்த வாரம் இன்னும் என்னென்ன நடக்குமோ...? காலை 9 மணிக்கா...? இரவு 8 மணிக்கா...?
ReplyDeleteஅன்று மாடியில் பக்கத்துவீட்டு பையன், வெகுநேரம் கைபேசியில் Torch ஆன் செய்து வானத்தை நோக்கி காட்டிக் கொண்டிருந்தான்... இதில் "கொரோனா ஓடிப்போ ஓடிப்போ" என்று அவ்வப்போது கத்தினான்... இதை தேசபக்தி என்பதா...? கடவுள்பக்தி என்பதா...?
ஆங்கிலப்படத்தில் பேயோட்டுவதைப் பார்த்துக் கெட்டுப் போயிருக்கிறான் போல...!
Deleteராஜி உண்மைய சொல்லணும்னா உங்க பதிவுல அந்தப் பெயர் வந்ததுமே (நான் பெயர் கூடச் சொல்லுவதில்லை..) எதையும் பார்க்கலை.
ReplyDeleteகடைசி அந்தப் பாப்பா க்யூட். மனசை அள்ளுது.
கீதா
கடைசி வீடியோவைப் பார்க்கும் மனம் கூட இல்லை என்பதே உண்மை.
ReplyDeleteதுப்புறவுப் பணியாளர்கள் என்றுமே போற்றத் தக்கவர்கள்
ReplyDeleteநான் என்றுமே துப்புறவுத் தொழிலாளர்களை சக மனிதனாகவே நினைப்பவன் இப்போது மட்டுமல்ல எப்பொழுதுமே...
ReplyDeleteநலமே விளையட்டும்....
ReplyDelete