இன்னிக்கு ஆடி மாசம் பதினெட்டாம் நாள். பதினெட்டு என்பது வெற்றியை குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வதங்கள். பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், குருஷேத்திர போர் நடந்தது 18 நாட்கள், மகாபாரத போரில் ஈடுபட்ட சைனியங்களின் எண்ணிக்கை 18, சபரிமலையின் படிகட்டுகள் 18. போகர், அகத்தியர், உள்ளிட்ட புகழ்பெற்ற சித்தர்கள் 18, நம்மை நல்வழிப்படுத்தும் திருக்குறள், நாலடியார், நாண்மணிக்கடிகை, உட்பட 18 நூல்களை பதினெண்கீழ்கணக்கு என சொல்றோம். மெய் எழுத்துகள் 18... இப்படி பதினெட்டுக்கென பல சிறப்புகள் இருக்கு. அந்த வரிசையில் ஆடி மாதம் 18ம் நாளில் கொண்டாடப்படும் பண்டிகைக்கும் ஆடிப்பெருக்குன்னு பேரு. இந்த நாளில் ஆடி 18, ஆடிப்பெருக்கு, ஆடிப்பட்டம்ன்னு அழைப்பாங்க.
அம்பிகையின் மகிமையை விளக்கும் ஸ்ரீமத் தேவிபாகவதத்தில், இரண்டு காலங்களை யமனுடைய கோரைப்பற்கள் என வியாசர் கூறியிருக்கிறார். அதில் ஒன்று கடும் காற்றடித்து மழை கொட்டத் துவங்கும் காலமான தட்சிணாயண காலம். அடுத்தது, வெயில் வீசிக் கொளுத்தத் தொடங்கும் காலமான உத்தராயண காலம். வெயிலில்கூடத் தப்பிடலாம். ஆனா, மழைக்காலத்தில்?! அதுவும் புதுத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும்போது, அந்தப் புது நீர் பல வகையான நோய்களை வரவழைச்சுடும். அதன் காரணமாகவே தட்சிணாயண காலத் தொடக்கமான ஆடி மாதத்தில் அம்பிகைக்கு (காப்பவள் தாய்தானே!) விசேஷமான வழிபாடுகள் நடத்தப்படுது. அதிலும் ஆடி 18 மிக விசேசமானது. அன்றைய அம்மனை வழிப்பட்டு குடும்ப நலனுக்கும், தாலி பாக்கியம் வேண்டியும் மாங்கல்ய சரடை மாற்றிக்கொள்வர்.
தாயை பழித்தாலும் தண்ணியை பழிக்காதன்னு நம்மூர்ல ஒரு பழமொழி உண்டு. இதோட அர்த்தம் நாம சொல்லுற மாதிரி அம்மாவை கடுஞ்சொல்லால் திட்டினாலும், தண்ணியை திட்டாதன்னு கிடையாது. தாயை அசிங்கப்படுத்தினாலும், அவளை கவனிக்காம விட்டாலோ அல்லது அவள் அழிவுக்கு காரணமா இருந்தால் தாய் மட்டும் இல்லன்னா அவளோடு சேர்ந்து அவள் குடும்பம் மட்டுமே பாதிக்கும். ஆனா, தண்ணியை அசிங்கப்படுத்தி, கவனிக்காம விட்டு அதோட அழிவுக்கு காரணமானா நம் வம்சமே இல்லாம போகும். இந்த அர்த்தம் உண்மையா பொய்யான்னு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை....
பொங்கி வரும் நீரினால் ஆற்றிலிருக்கும் கழிவுகள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு, ஆறு சுத்தமாகிடும். அதுமாதிரி, மனதிலிருக்கும் அழுக்குகள் நீங்கவும், வாழ்க்கையிலிருக்கும் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி, குடும்ப நலனுக்காக அனைவரும் வேண்டிக்கொள்ளும் நாளே இந்த ஆடிப்பெருக்கு.
ஆடியும், விவசாயமும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதது. 'ஆடியில் காத்தடித்தால் ஐப்பசியில் மழை பொழியும்' என, நம் முன்னோர் கணித்து 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்றனர். வானம் பார்த்த பூமியில் பயிரிடும் விவசாயிகள் ஆடி மாதம் துவங்கியதும் வறண்ட பூமியை ஆழமாக உழுது மானாவரி சாகுபடிக்காக சூரிய பகவானை வணங்கி வானத்தை பார்த்து பூமியில் விதைகளை விதைப்
புதிதாக திருமணமாகும் மணப்பெண் அணிந்திருக்கும் மாங்கல்யத்தின் இருபுறமும் லட்சுமிக்க்காசு, மணி, பவளம் கோர்த்து, அவரது கழுத்தில் சுமங்கலிப் பெண்கள் அணிவிப்பதுதான் தாலி பெருக்குதல் வைபவம். முதன்முதலில் மஞ்சள்கயிற்றை மாற்றும் சடங்கு இது. புதிதாக மாற்றும்போது மங்களகரமான தாலியுடன், லட்சுமிக்காசு, மணி ஆகியவற்றை சேர்ப்பதன் மூலம் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இதை ஒற்றைப்படை மாதத்தில் மணமகன் வீட்டில் நடத்துவர். பெரும்பாலும் திருமணமான மூன்றாவது மாதத்தில் இந்த வைபவம் நடக்கும். ஆடிப்பெருக்கன்று இதனை செய்வது சிறப்பு. ஆடிப்பெருக்கன்று நதிகளில் நீர் பெருக்கு ஏற்படும் என்பது நம்பிக்கை. அன்று நதிக்கரைகளில் வழிபாடு நடத்தப்படும். அந்த நாளில் நதிக்கரைகள், கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் மரபு இருந்துள்ளது. புதிய திருமண தம்பதிகள் நதிக்கரையில் அன்று இரவு நிலாச்சோறு சாப்பிடும் பழக்கமும் உண்டு. அன்றைய தினம் பெண்கள், கோயில்களில் தாலிக்கயிற்றை மாற்றி புதிய தாலி கயிறு அணிவதுண்டு. திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணம் ஆக வேண்டும் என அம்மனை வேண்டி மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வர்.
ஆட்டனத்தி ஆதிமந்தி
சகல உயிர்களுக்கும் தண்ணிதான் உயிர் வாழ முக்கியம்ன்றதால நதியான தான் உயர்ந்தவள்ன்ற எண்ணம் காவேரியின் அடிமனசிலிருந்ததால், ஒருமுறை அகத்திய முனிவரை சந்திக்கும்போது காவேரி எடுத்தெறிந்து பேசியதால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் காவிரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைத்தார். நதி இல்லாமல் உயிரினம் எப்படி வாழுமென்பதால் தேவர்கள் அனைவரும், விநாயகரிடம் சென்று முறையிட்டனர். வினாயகரும் காக்கை ரூபத்தில் வந்து அகத்திய முனிவரின் கமண்டலத்தை தள்ளி விட்டதால் காவிரி தாய் மீண்டும் பூமியில் ஓடி சகல உயிர்களையும் வாழ வைத்தாள். மற்ற நதிகளைப்போல இல்லாம காவிரி புண்ணிய நதியாகும். காவிரி புனிதத்தன்மை பெற்று மக்களின் பாவத்தை எப்படி போக்குவதுன்னு இனி பார்ப்போம்.
மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி, நீராடி மக்களின் பாவம் அனைத்தும் கங்கையின் மீது சேர்ந்து பாவத்தின் பாரம் சுமக்க முடியாத அளவுக்கு போனது. தன்னுடைய பாவம் தீர என்ன செய்ய வேண்டுமென விஷ்ணுபகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு மகாவிஷ்ணு நீ காவிரியில் நீராடு. உன் பாவங்கள் நீங்கும் என யோசனை செய்தார். அந்த சமயம் கர்ப்பவதியாக இருந்த காவேரி, விஷ்ணுவின் யோசனையை கேட்ட்டு சந்தோசப்பட்டாள். பெருமானை தரிசிக்க காவேரி நதி பொங்கி வந்தது. கர்ப்பிணியாக இருந்த காவிரி தாய்பெருமானை தரிசித்த நாளே ஆடிப்பெருக்காகும். அதேப்போல வருடா வருடம் தன் தங்கையை காண ஆவலோடு இருப்பார் அரங்கன்.
சகல உயிர்களுக்கும் தண்ணிதான் உயிர் வாழ முக்கியம்ன்றதால நதியான தான் உயர்ந்தவள்ன்ற எண்ணம் காவேரியின் அடிமனசிலிருந்ததால், ஒருமுறை அகத்திய முனிவரை சந்திக்கும்போது காவேரி எடுத்தெறிந்து பேசியதால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் காவிரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைத்தார். நதி இல்லாமல் உயிரினம் எப்படி வாழுமென்பதால் தேவர்கள் அனைவரும், விநாயகரிடம் சென்று முறையிட்டனர். வினாயகரும் காக்கை ரூபத்தில் வந்து அகத்திய முனிவரின் கமண்டலத்தை தள்ளி விட்டதால் காவிரி தாய் மீண்டும் பூமியில் ஓடி சகல உயிர்களையும் வாழ வைத்தாள். மற்ற நதிகளைப்போல இல்லாம காவிரி புண்ணிய நதியாகும். காவிரி புனிதத்தன்மை பெற்று மக்களின் பாவத்தை எப்படி போக்குவதுன்னு இனி பார்ப்போம்.
ராமனுக்கும், ,இராவணனுக்கும் நடந்த போரில் பல உயிர்களையும் ராமன் கொல்லநேர்ந்தது. ராமன் கொன்றது அசுரர்களைதான் என்றாலும் யுத்தத்தால் பலர் கொல்லப்பட்டதால் ராமனுக்கு பிரம்மஹத்திதோசம் பிடித்துக்கொண்டது. இந்த தோசத்திலிருந்து தான் விடுபட என்ன செய்ய வேண்டுமென வசிஷ்ட முனிவரிடம் ராமன் கேட்டான். இந்த பாவத்திலிருந்தும், தோசத்திலிருந்தும் விடுபட காவிரியில் ஆடிப்பெருக்கு நாளில் நீராடினால் உன்னை பிடித்திருக்கும் தோசங்கள் நீங்குமென கூறினார் வசிஷ்டர். முனிவர் கூறியது போல ஆடிப்பெருக்கு நாளில் காவிரியில் நீராடி தன் பாவத்தை போக்கிக்கொண்டார்.
இந்நாளில் சகோதரர்கள், தங்கள் சகோதரிகளையும், அவர்தம் கணவரையும் வீட்டிற்கு அழைத்து விருந்திட்டு, தங்களால் முடிந்த புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், பூக்கள், நகை, பாத்திரமென சீர் செய்வர். சாதாரண மனிதனே இவ்வாறு சீர் செய்யும்போது , காவிரியை தங்கையாய் ஏற்றுக்கொண்ட ரங்கநாதர் சும்மா இருப்பாரா?!
தங்கைக்கு சீர் செய்ய யானைமீதேறி, சீர்வரிசை பொருளோடு அம்மா மண்டபத்தில் எழுந்தருள்வார். தங்கைக்கு சீராக தர புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பூ பழம் போன்றவற்றை யானை மீது கொண்டு வருவதாக புராணம் சொல்கிறது. அதன் நினைவாகவே இன்றும் சகோதரிக்கு சகோதரர்கள் ஆடிச்சீர் செய்வது.(எத்தனை பதிவு போட்டும்,எத்தனை கெஞ்சியும்,எனக்கு ஒருபயலும் ஒருஸ்பூன்கூட வாங்கிக்கொடுக்கல)
ஆடி மாதத்தில் புண்ணிய நதியான காவிரி கர்ப்பவதியாக இருப்பதால் அவளுக்கு பலவகையான உணவுகளை படைத்து, மஞ்சள், காதோலை, கருகுமணி மாலை, வளையல், தேங்காய், பூ, பழங்கள், அரிசி, வெல்லம் வைத்து , அதோடு மஞ்சள் சரடையும் காவிரிக்கரையில் வைத்து தீப ஆராதனை செய்து காவிரியை பூஜிப்பர்.
ஆடி மாதத்தில் புண்ணிய நதியான காவிரி கர்ப்பவதியாக இருப்பதால் அவளுக்கு பலவகையான உணவுகளை படைத்து, மஞ்சள், காதோலை, கருகுமணி மாலை, வளையல், தேங்காய், பூ, பழங்கள், அரிசி, வெல்லம் வைத்து , அதோடு மஞ்சள் சரடையும் காவிரிக்கரையில் வைத்து தீப ஆராதனை செய்து காவிரியை பூஜிப்பர்.
அம்மன் கர்ப்பவதி என்பதால் அவள் நாவுக்கு சுவையாய் புளிசாதம், எலுமிச்ச சாதம், மாங்காய் சாதம், ஊறுகாய், வடை, பாயாசம், கற்கண்டு சாதம், சர்க்கரைபொங்கல்ன்னு விதம் விதமா கொண்டு வந்து நைவேத்தியம் செய்து மத்தவங்களுக்கு கொடுத்து குடும்பத்தோடு காவிரிக்கரையில் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம்.
திருமணமான பெண்ணுக்கு, தாலி கோர்த்துக் கட்டும் நிகழ்ச்சியும் நடைபெறும். மாங்கல்யம் பெண்ணின் கழுத்தில் இணையும் சமயம், மூத்த சுமங்கலிகள், அப்பெண்ணை இல்லறம் நல்லறமாகட்டும் என்றும், இக்கயிறுப்போல தம்பதிகள் பிரியாமல் இருக்கட்டும் என்றும் வாழ்த்துவார்கள். ஆடி பதினெட்டிற்குப் பத்து நாட்கள் முன்பாக நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது எரு கலந்து மூடி வைப்பார்கள். அது வெண்மையாக முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி என்பார்கள். ஆடி18 அன்று பிற்பகல் வேளையில் முளைபாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். ஆற்றங்கரையை அடைய மூன்று மணி நேரமாகும்.
ஆற்றங்கரையில் தூய்மையான ஓரிடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பர். அவரின் முன்னால், முளைப்பாலிகைகளை வரிசையாக வைப்பார்கள். அது முடிந்ததும்.... பச்சரிசி, சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின் முன்னால் வைத்து வேண்டுவார்கள். வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார். சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக கட்டிக் கொள்வார்கள். அதன் பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகமணி ஆகியவற்றை நீரில் விடுவர். நுரைத்துச் சுழன்று வரும் காவிரித்தாயின் வரவால் பயிர் பச்சை எல்லாம் தழைக்கப் போகின்றன. இப்போது அவள் மசக்கையாக இருக்கிறாள் என்ற ஐதீகத்தில் தான், இவையெல்லாம் செய்யப்படுகின்றன. அதேசமயத்தில் சிறுவர்கள் சப்பரம் என்ற ஒன்றை (தேர் போல சிறியதாக இருக்கும்) அழகாக அலங்கரித்து, அதிகாலையில் இருந்தே வீதிகளில் சத்தமிட்டு இழுத்தபடி ஓடுவார்கள். மாலையில், அந்தச் சப்பரத்தின் உள்ளே, ஒரு சிறிய அகல்விளக்கை வைத்து மெதுவாக இழுத்து வருவார்கள். தெருவெங்கும் அகல் விளக்குகள் மிதந்து வருவதைப் போல இருக்குமாம்.
அட்சய திருதியை மட்டுமில்லாம இன்றைய நாளும் நகைகள் வாங்க உகந்தது.(லாக் டவுன், மந்தமான பணப்புழக்கம், கட்டுக்கடங்காத தங்க விலை உயர்வு..ன்னு இருக்கும் இக்கட்டான இச்சூழலில் இந்த பதிவை காட்டி யாரும் தங்கம் வாங்கி தரச்சொல்லி வூட்டுக்காரரை இம்சிக்காதீங்க) நகைகள் மட்டுமில்லாம, வீட்டு உபயோகபொருட்கள் வாங்கவும், புதுத்தொழில் தொடங்கவும் இந்நாள் சிறந்தது. ஆடிமாதத்தில் புதுத்தொழில் எதும் தொடங்கப்படுவதில்லை. ஆனா, ஆடிப்பெருக்கு மட்டும் விதிவிலக்கு. இந்நாளில் செய்யப்படும் எதுமே பல்கிப்பெருகும். அதனால, பொருள்தான் வாங்கனும்ன்னு இல்ல. தான தர்மங்களும் செய்யலாம். அனைவரையும் வாழ வைக்கும் காவிரித் தாயை வழிபட்டு நன்றி செலுத்துதல், குடும்ப ஒற்றுமை, ஊர் ஒற்றுமை, குதூகலமான வாழ்வு ஆகியவை மக்களிடையே பரவுவதற்கு ஆடிப்பெருக்கு விழா தூண்டுகோலாக இருக்கிறது. இனியேனும், தண்ணீருக்கு மரியாதை கொடுப்போம். ஆறுகளைச் சுத்தமாக்குவோம். ஆடிப்பெருக்கன்று பழைய களை கட்டட்டும்!
கல்கியின் பொன்னியின் செல்வன் கதை தொடங்குவது இந்நாளில்தான். ராஜராஜசோழன் பெருமை இருக்கும்வரை வந்தியத்தேவனின் புகழும் மறையாம இருக்கும். அதேப்போல, அந்நிய ஆட்சியை எதிர்த்தும், தமிழர் நிலத்தை தமிழரே ஆளும் பொருட்டும் போர் புரிந்து, பல போர்களில், வெள்ளையனை ஓட ஓட விரட்டியடித்த தீரன் சின்னமலை, அவர் தம்பி மார்கள் தம்பி, கிலோத்தர் மற்றும் வீரத் தளபதி கருப்பன் சேர்வை தூக்குக்கயிற்றை முத்தமிட்ட தினமும் இன்றுதான். அட்சய திருதியை விட இன்னாளில் நகை, பொருட்கள், தொழில் தொடங்க நல்ல நாள். ஏன்னா பெருக்குதல், சுத்தம் செய்தல் என பொருள்படும்.
இந்த ஆடிப்பெருக்கு நாளில் பிள்ளைகள் சப்பரமிடுதலும் ஒரு சடங்கு. எங்க ஊரில் ஆறே இல்லன்னு சொன்னாலும் சரி, இல்லை எங்க ஊரு ஆறு மாதிரி தண்ணியே இல்லன்னாலும் ஒன்னும் செய்யமுடியாது. அதனால், அவரவர் இல்லத்தில் இருந்தபடியே காவிரித்தாயை மனசில் நினைச்சுக்கிட்டு இந்நாளை மகிழ்ச்சியான நாளாய் மாற்றுவோம். அப்படியே இப்படியொரு அசாதாரண சூழல் இனிவரும் எந்த தலைமுறையும் சந்திக்கக்கூடாதுன்னும் வேண்டிப்போம்.
நன்றியுடன்,
ராஜி
இந்த வருடம் எங்கும் செல்ல முடியாது... ம்...
ReplyDeleteஆடிப்பெருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஆடிப் பெருக்கு வாழ்த்துகள்
ReplyDeleteதாமதமான ஆடிப்பெருக்கு வாழ்த்துகள். தகவல்கள் நன்று
ReplyDeleteதுளசிதரன்
ஆறுகள் படம் அப்புறம் லைவ் அருவி கொடுத்திருக்கீங்க பாருங்க அதுதான் செம. ரசித்தேன். செமையா இருக்கு.
கீதா
ஆடிப் பெருக்கு வாழ்த்துகள்.
ReplyDelete