அன்றைய தினம் பெளர்ணமி. வானவெளியின் நீலப்பரப்பில் முழு நிலா சிறு களங்கமுமின்றி தன் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் கண்சிமிட்டும் விண்மீன்களின் மினுமினுப்பு சற்று குறைந்துதான் காணப்பட்டது. பல்லவ மன்னனான முதலாம் மகேந்திர வர்மனும், அவனின் மனதுக்கினிய தலைமை சிற்பியான ஆயனாரும் மெல்லிய கடற்காற்றை எதிர்கொண்டு அந்த மண்ணில் உலவிக்கொண்டு அந்த ஏகாந்தத்தை அனுபவித்து கொண்டிருந்தினர். சற்று தூரத்தில் தெரிந்த குன்றிலிருந்த கற்கள் ரதமாகவும், கோவிலாகவும், விஷ்ணுவாகவும், சிவனாகவும், யானையாகவும், குரங்கு இன்னபிற உயிரினமாகவும்.., பல்லவ மன்னனுக்கு தோன்றியது. பல்லவ மன்னன் தனக்குள் தோன்றிய கற்பனையை ஆயனாரிடம் சொல்ல மகாபலிபுரம் உருவானது..
சின்ன வயசில் அனுபவித்த மண்ணெண்ணெய் விளக்கு, மாட்டுவண்டி, அம்மி, ஆட்டுரல்லாம் இன்னிக்கு இருந்த தடம் தெரியாம அழிஞ்சு போச்சு. இன்றைய தலைமுறையினருக்கு இதுமாதிரியான நிறைய பொருட்கள் என்னன்னே தெரியாம போய்ட்டுது. இவையெல்லாம் இன்றைய சமூகம் கண்ட வளர்ச்சின்னு நாம பெருமிதம் கொண்டாலும் மறுபுறம் நாகரீகம்ன்ற பெயரில் இவ்வளர்ச்சி பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. மகாபலிபுரத்தின் அன்றைய தோற்றத்தையும் இன்றைய தோற்றத்தையும் இந்த பதிவில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இன்று பார்க்கலாம்..
General view from the south-west of the Dharmaraja Ratha, Mamallapuram, Tamil Nadu - c.1885
24 செப்டம்பர் 2013 - ல் நான் எடுத்த தர்மராஜா ரதம் போட்டோ ..
ஐவர் ரதம் ன்னு சொல்லப்படுற பஞ்சபாண்டவர் ரதம். இவை தனித்தனியா இருக்கும் ஐந்து ஒற்றைக்கல்லுல கோயில்களாக செதுக்கப்பட்டவை. கோவில் மட்டுமல்லாம சில விலங்குச் சிற்பங்களும் இங்க இருக்கு . இவை தெற்கிலிருந்து வடக்காச் சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கி இருக்காங்க. இந்த ஐந்து இரதங்களும் பஞ்சபாண்டவர்கள் ரதங்கள்ன்னு சொன்னாலும் மகாபாரதத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்தை உடையது தர்மராஜா ரதம் மற்றும் அர்ச்சுன ரதம். சாலை வடிவிலான சிகரத்தை உடையது பீம இரதம்,. சதுரமான குடிசை போன்ற சிகரத்தை உடையது திரௌபதி இரதம். கஜபிருஷ்டம் (யானையின் பின்பக்கம்) போன்ற சிகரத்தை உடையது சகாதேவ இரதம்.
General view of the entrance to the Pancha Pandava Mandapa, Mamallapuram, Tamil Nadu - c.1885
அர்ச்சுனன் தபசு பாறை சிற்பத்துக்கு அருகில் கிருஷ்ண மண்டபம்ன்ற மண்டபம் இருக்கு. இதுக்கு உள்ளதான் கோவர்த்தன சிற்பத் தொகுதி இருக்கு. பல்லவர் காலத்தில் செதுக்கப்படும்போது இந்தச் சிற்பமும் வெளிப்புறப் புடைப்புச் சிற்பமாகத்தான் இருந்ததாம்.. பின்னார் விஜயநகர ஆட்சியின்போது இதன்மீது மண்டபம் ஒன்று கட்டப்பட்டதாம்.
Unidentified Cave Temple, Mamallapuram in Tamil Nadu - c.1885
இந்த பெரியக் கல்லைத் தாண்டி மண்டபத்திற்குள் போகும்போது, அங்கங்க நிறைய கற்பாறைகள் சிதறி கிடக்குற மாதிரி இருக்கு. கூடவே காதலர்களும் சிதறி கிடக்குற மாதிரி ஒவ்வொரு கல்லிற்கு பக்கத்திலையும் லவ்விட்டு இருக்காங்க.. லவ்வுறதை ஓரக்கண்ணால் பார்த்துக்கிட்டே இதையெல்லாம் தாண்டிப்போனால் சில அடி தூரத்துல அழகான சிவன் கோவில் ஒண்ணு இருக்கு. இந்த கோவிலோட பேரு அதிரண சண்டகோவில். இது ஒரு குடவரை கோவில். மிகவும் சக்தி வாய்ந்த சிவன் கோவிலாம்.
View from the South-West of the Arjuna Ratha and the Draupadi Ratha, Mamallapuram, Tamil Nadu - c.1885
குடிசை போன்ற தோற்றத்தையுடைய திரௌபதி ரதம் சின்னதா இருக்கு. இந்திரனுக்கு வடிக்கப்பட்டதாகச் சொல்லும் சகாதேவ ரதம் கொஞ்சம் முற்றுப்பெறாத நிலையில்இருக்கு. அர்ஜுனன் ரத்தத்தில் கிழக்குச் சுவரிலும் தெற்குச் சுவரிலும் பெண்களின் உருவங்கள் சிறந்த கலைப்படைப்புகளா இருக்கு.
General view from the south-west of the Bhima Ratha, Mamallapuram, Tamil Nadu - c.1885.
பஞ்ச பாண்டவர் ரதங்களிலேயே மிகவும் பெரியதும், மிகவும் அழகு வாய்ந்ததும் தர்மராஜா ரதம்தான். இந்த ரதத்தில் மூன்று தளங்கள் இருக்கு. மேல உள்ள இரண்டு தளங்களும் முழுவதுமா முடிக்கப்பட்டிருக்கு. தரைத்தளம் முழுவதுமா செதுக்கலை. மேல் இரு தளங்களிலும் ஒவ்வொரு கருவறை இருக்கு. அதனுள் சோமாஸ்கந்தர் சிற்பங்கள் இருக்கு. அவை தவிர இரு தளங்களின் சுற்றுகளிலும் மிக அற்புதமான சிற்பங்கள் நிரம்பியிருக்கு. ஆனா மேல உள்ள தளங்களுக்குச் செல்லப் படிகள் கிடையாது. பொதுமக்களுக்கு இந்த இடத்துக்குச் சென்று பார்க்கும் அனுமதியும் கிடையாது.
மகாபலிபுரத்தில் இருக்கும் கலங்கரை விளக்கத்திலிருந்து நேரே தெரிகிற குன்றின்மேல் ஏறிப்போனால் கற்களால் ஆனா இடிந்த கட்டிடம் போன்ற அமைப்பு இருக்கு..இது முன்பு கலங்கரை விளக்கமாக பயன்பட்டது ன்னு சொல்றாங்க. இங்க கற்கள் அழகா செங்கற்களை போல் அடுக்கி வைக்கப்பட்டு காற்று வருவதற்கு துளைகளும் உள்ள நான்கு பெரிய தூண்களும், மேல வரிக்கற்களும் வைத்து மூடப்பட்ட நிலையில் அழகாவும் அதே நேரம் கவனிபாராற்றும் இருக்கு.
இதற்கு கீழே ஓலக்கணீசர் ன்ற பெயருள்ள சிவப்பெருமான் கோயில் இருக்கு. அதன் சிற்பங்கள்லாம் மிகவும் அழகாக செதுக்கப்பட்டு இருக்கு. கோவிலுக்குள் சிங்க முகங்கள் கொண்ட தூண்களும், உள்பக்கம் சிற்பங்கள் செதுக்கப்பட்ட சில மாடங்களும் காணப்படுது அதனுள் விக்ரகங்கள் இல்ல. பக்கவாட்டில் படிக்கற்கள் இருக்கு. ஆனா அவை மேலே போகாமலயே முடிஞ்சு போகுது.
Unidentified Cave Temple, Mamallapuram in Tamil Nadu - c.1885
இந்த இடம் திருமூர்த்தி கோவில் போகும் பகுதியின் மறுபக்கம். பாறை முடியும் பகுதி. இந்த இடத்துக்கும் யாரும் போறதில்ல போல! ஏன்னா, இது மலைமீது இருக்கும் கோவில்களின் மறுபக்கம் இருக்கு. கோவிலை பத்தின குறிப்புகள் ஏதுமில்ல. தொல்பொருள் துறையினரின் எச்சரிக்கைப் பலகை மட்டும் இருக்கு.
Unidentified Cave Temple, Mamallapuram in Tamil Nadu - c.1885
பார்வையாளர்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவுன்றதால ’குடி’மக்களும் சாரி இப்பதான் மதுப்பிரியர்கள்ன்னு பேர் மாத்தியாச்சே!, சமூக விரோதிகளும் இங்க அதிகம் இருப்பாங்க போல, உடைஞ்ச சரக்கு பாட்டில்களும், சைட் டிஷ் சாப்பிட்ட குப்பைகளுமா சேந்து அழகான மண்டபத்தை அலங்கோலமா ஆக்கி வச்சிருக்காங்க. இந்தத் தூண்களில் சிங்கம் மற்றும் பல்வேறு அழகான சிலைகளும் செதுக்கப்பட்டு அழகா காட்சியளிக்குது. இந்த கோவில் பற்றிய தகவலும் தெரியல.
General view of the entrance to the Varaha Cave Temple, Mamallapuram, Tamil Nadu - c.1885
இதுவும் அர்ச்சுனன் தபசு பாறைக்கு பக்கத்திலிருக்கும் மண்டபம்தான்..
Conflict of Durga with Mahishasur - Mahishasuramardini Cave Temple, Mamallapuram, Tamil Nadu - 1880
மகிஷாசுரமர்த்தினி மண்டபத்திலிருக்கும் மிக அழகான சிற்பத்தொகுதி இதுவாகும். துர்க்கை (சக்தி) சிங்க வாகனத்தில் ஏறி, மகிஷன் என்னும் எருமைத்தலை கொண்ட அரக்கனை வதம் செய்யும் காட்சி. மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படும் சக்தி, பத்து கைகளுடன் இருக்கிறாள். ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபமாகச் செதுக்கப்பட்டிருக்கு.
மகிஷாசுரமர்த்தினி சிற்பத் தொகுதி
மாமல்லபுரத்தின் எல்லா சிற்பத்தொகுதிகளையும் 360 டிகிரி ஆங்கிள்ல ,சுத்தி போட்டோ எடுத்துட்டேன்னு நினைச்சேன் ,ஆனா இதில் என் கேமராவுக்குள் சிக்காத சில சிற்ப தொகுப்புகளும் இருக்குன்னு பழைய படங்களை பார்க்கும்போதுதான் தெரிஞ்சுது. அடுத்த முறை செல்லும்போது ,இவைகளையும் படம் பிடிக்கவேண்டும் என்பது என் ஆசை .
Small Temples North of the Village of Mamallapuram
Unfinished Cave Temple, Mamallapuram in Tamil Nadu - c.1885
இத்துடன் மாமல்லபுரத்தின் பழைய/புதிய படங்களின் தொகுப்பு பதிவு முடிஞ்சுது.. மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கலாம்..
நன்றியுடன்,
ராஜி
அடுத்த முறை செல்லும் போது இரு பதிவுகளையும், வழிகாட்டியாக வைத்துக் கொள்ளலாம் போல... விளக்கங்கள் அருமை சகோதரி...
ReplyDeleteஅன்றும் இன்றும்
ReplyDeleteகருப்பும் வண்ணமும்
அருமை
அன்றும் - இன்றும் படங்களின் அணிவகுப்பு சிறப்பு. பார்க்கப் பார்க்க அலுக்கவில்லை.
ReplyDeleteமகாபலிபுரத்தை ரசித்து எழுதியுள்ள விதம் அருமை. பழைய புகைப்படங்கள் மிகவும் சிறப்பு.
ReplyDeleteஅன்றைய படங்களும் இன்றைய படங்களும் அழகுதான்.
ReplyDeleteகீதா
நான் தங்களது பதிவுகளை எவ்வாறு தவறவிட்டேன் என தெரியவில்லை. திருக்கழுக்குன்றம் பற்றிய தங்களின் முந்தைய பதிவு அருமை சகோதரி...மீண்டும் திருக்கழுக்குன்றம் வந்தால் அவசியம் எனது இல்லம் வருகைதாருங்கள்.
ReplyDeleteநன்றி
வாழ்க வளமுடன்
வேலன்.
அன்றைய படங்களுடன் பகிர்வு சிறப்பு.
ReplyDelete