Friday, August 14, 2020

தழுவிய மகாதேவர்கோவில்- வடசேரி -புண்ணியம் தேடி ஒருபயணம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல மகாதேவர் கோவில்கள் இருந்தாலும் அதில் தாணுலிங்கம்தழுவியலிங்கம்பூதலிங்கம் போன்ற ஆலயங்கள் இம்மாவட்டத்தில் புகழ்பெற்ற சிவதலங்களாகும். தாணுலிங்கம்சிவதாணுபூதலிங்கம்ன்ற பேர்கள் குழந்தைகளுக்கு சூட்டுவது இம்மாவட்டாத்தாரின் வழக்கம். 

கடந்த சிலவாரங்களில் ஆடிமாதமென்பதால் முதலில் வந்த வெள்ளிக்கிழமையில் ஆடிமாதத்தில் கூழ் வார்க்கும் பழக்கம் உண்டானது எப்படி?என்பது பற்றிய பதிவினையும்இரண்டாம்வாரம் வெள்ளிக்கிழமையில் அதிர்ஷ்டத்தினை அள்ளித்தரும்ஆடிப்பெருக்கு-ஆடி18 ஸ்பெஷல்  பதிவினையையும் பார்த்தோம். அதனால கன்னியாகுமரி மாவட்ட புண்ணிய யாத்திரை பதிவினை தொடர்ச்சியாக பார்க்கமுடியாமல் போய்விட்டது. அதற்கு முந்தைய வாரம் கிருஷ்ணன் கோவிலில் சிறப்பாக தரிசனம் செய்தோம்.சாமி தரிசனம் முடிச்சுட்டு இங்க பக்கத்துல எதாவது கோவில் இருக்கான்னு விசாரிக்க, நடந்துப்போற தொலைவில்தான் தடிமார் கோயில் இருக்கிறதுன்னு ஒருபெரியவர் சொன்னார். அப்பா என்னை தடிமாடேன்னு திட்டுறதால தடிமாட்டை தெரியும்.இதென்ன தடிமார்?!பேரே வித்தியாசமா இருக்கே!இது என்ன கோவிலா இருக்கும்?!அங்கிருப்பது என்ன சாமின்னு தெரிந்துகொள்ளும் ஆவலில் உடனே ரெடி ஜுட்ன்னு வண்டியை கோவிலுக்கு விடசொன்னால்கீதாக்காதுளசிசார்,மனோஅண்ணா ஊர்க்காரங்க,ஊரின் நல்லபெயரை எப்படி நாசமாக்குறது என்பதில் கில்லாடிங்க போலன்னு நினைச்சுக்கிட்டேன்.நாகர்கோயிலை நாரோயில்ன்னு சொன்னமாதிரி, இந்த கோவிலின் அழகான பெயரான தழுவிய மகாதேவர் கோவில் என்பதை தடிமார்கோவில்ன்னு சொல்றாங்க.ஆமா இன்னைக்கு நாம தரிசனம் செய்யப்போற கோவில், நாகர்கோவிலின் பிரதான பகுதியான, வடசேரியில் அமைந்திருக்கும் தழுவியமாகதேவர் கோவில் தான்.         

கிழக்கு நோக்கிய ஆவுடையார் கொண்ட இந்த சிவதலம் இரண்டு பிரகாரங்களை கொண்டது. கோவிலில் புதியதாக புனரமைக்கப்பட்ட ராஜகோபுரம் அழகாக இருக்கு. இந்த கோவில் ஒரு அக்ரகார தெருவின் ஆரம்பத்திலயே இருக்கு. இந்த திருக்கோவிலில் இருந்துதான் இந்த தெரு தொடங்குகிறது. இந்த அக்ரகார தெருவுக்கு ஒரு சிறப்பு உண்டு.அது என்னென்னா இந்த தழுவிய மகாதேவர்கோயில் சன்னதி வீதியில் உள்ள தெருவில் தான் 'தினமலர்' நிறுவனரான டி.வி.ராமசுப்பையர் பிறந்து வளர்ந்தார்வாங்க! நாம இப்ப கோவிலுக்குள் செல்லலாம். இந்த திருக்கோவிலின் உள்ளே நுழையும்போதே புதியதாக அமைக்கப்பட்ட ஒரு அழகான நந்தி வெளிப்பிரகாரத்தில் இருக்கிறது. பிரதோஷ வழிபாடு இந்த நந்திக்குத்தான் செய்யப்படுகிறது.

வெளிப்பிரகாரத்தின் மேற்குபுற வாயிலில் ஒரு வழி இருக்கிறது. அது இந்த கோவிலின் தெப்பக்குளத்திற்கு செல்கிறது. 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்த தெப்பக்குளம் பராமரிப்பில்லாமல் கழிவுகளை கொட்டும் இடமாக இருந்ததாம். குளத்தின் அருமையை உணர்ந்த மக்கள் அதை சுத்தம் செய்து இப்ப, நல்லமுறையில் பராமரித்து வருகின்றனர். வெளிப்பிரகார சுற்றில் நாகருக்கென ஒரு சன்னதி  இருக்கிறது. பிரகாரங்கள்லாம் அழகாக பராமரித்து வருகின்றனர், வாங்க!  நந்தியை  வணங்கிட்டு கோவிலின் உள்பிரகாரத்திற்கு போகலாம்.

உட்கோயில் வாசலின் இருபக்க சுவர்களில் விநாயகரும்சுப்பிமணியரும் அருள்பாலிக்கின்றனர். உட்பிரகாரத்தில் கன்னி விநாயகர்,  சுப்பிரமணியர்சண்டேஸ்வரர்சனீஸ்வரர்ஜுரதேவர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். ஜுரதேவர் என்பது சிவரூபத்தில் உள்ள சம்ஹார மூர்த்தியின் ஒரு விசேஷ அம்சமாகும். சில சிவன் கோவில்களில் மட்டுமே இந்ததிருவுருவத்தை நாம் தரிசிக்கமுடியும். இந்த மூர்த்திரூபம் மூன்று தலைஆறு கண்கள்மூன்று கைகால்கள் என தெளிவாக காணமுடியும். வலதுபக்கம் இரண்டு கைகள் மற்றும் கால்கள் தெளிவாக தெரியும். இடதுபக்கம் ஒரு கையும், ஒரு காலும் இருப்பதை காணமுடியும். இடது கையில் ஒரு ஓலைச்சுவடியும்உள்வலது கையில் ஒரு சிறிய மணியும்வெளி வலது கையில் திரிசூலமும் உள்ளது. உட்பக்கமுள்ள வலது கால் தூக்கிய நிலையில் உள்ளது. ஒருமுறை கொடிய ஜுரம் ஏற்படுத்தும் அம்பு ஒன்றை சிவன்மீது திருமால் ஏவினாராம்அப்பொழுது அதை அப்படியே சிவபெருமான் தாங்கிப் பிடிக்க ஜுரதேவரின் உருவம் சிருஷ்டியானது என்ற வரலாற்று கதை சொல்கின்றது.

நாட்பட்ட காய்ச்சல்மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் இவரிடம் முறையிட்டால் நிவர்த்தியாகும்.  இந்த ஜுரதேவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். நேர்த்திக்கடனாக மிளகினை அரைத்து ஜுரதேவர் தலையில் பூசுவது இங்கு வழக்கமாம். ஜுரம் வந்தவர்களுக்காக அவர்களவது உறவினர்கள் பாலில் மிளகு போட்டு அரைத்து ஜுரதேவரின் நெற்றியில் சந்தனம் போல் அப்பிவிடுவார்களாம் அதை எடுத்து மறுநாள் ஜுரம் வந்தவர்கள் கஷாயமிட்டு சாப்பிட்டால் நோய் ஓடிப்போய்விடும் என்று மக்கள் நம்புகிறார்கள். இவரது சந்நிதியில் மிளகுப் பால் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது ..

ஜுரதேவர் அருகில் குரு தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் பக்தர்கள் இவருக்கு மஞ்சள் ஆடையும் கொண்டைக்கடலை மாலையும் அணிவித்து வழிபாடு செய்கினறனர். இங்கிருக்கும் சனிபகவான் வித்தியாசமான அமைப்புடன் பாலசனியாக, சாந்தமாகக் காக்கை வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். காகத்தை கையிலும் ஏந்தியிருக்கிறார். இவரை வணங்கினால் பாலாரிஷ்டம், குழந்தைகளுக்கு வரும் தீராத நோய்கள் போன்றவை குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இத்திருத்தலத்தில் உள்ள  மூலவர் தழுவிய மகாதேவர் சுயம்பு லிங்கமாகும். அருகில் இருக்கும் அம்பாள் அழகோ அழகு, ஆவுடையம்மையாள் இங்கு தனிசன்னதியில் இருந்து மூலவரின் தேவியாக நின்ற கோலத்தில் பக்தருக்கு அருள்பாலித்து வருகிறார்.

ந்த மூலவருக்கு தழுவிய மகாதேவர் என்ற  பெயர்வர காரணம் மிகவும் சுவாரஸ்யமானது. பார்வதி தேவியார் ஆவுடையம்மையாக இந்த ஊரிலேயே அவதரித்தார் என்றும், அவர் தினமும் மகாதேவர் ஆலயத்துக்கு தரிசனத்துக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். கன்னிப்பெண் ஆவுடையம்மாள் தவறாமல் இந்தச் சிவனைக் காண வருவாள். ஈசன்மேல் அளவில்லாத காதல் அவளுக்கு. ஆண்டாள் அந்த ஸ்ரீரங்கநாதனிடம் எத்தனை அன்பு வைத்திருந்தாளோ அதுப்போல் இவளும் ஆடலரசனின் மேல் அளவில்லாத காதல் கொண்டு தினமும் காலையும் மாலையும் பூஜை செய்து இறைவனை கண்ணார கண்டு பிறகு வீடுபோவது இவளது தினசரி வழக்கமாக இருந்ததாம்.  
பூஜையுடன் . மணிக்கணக்காய் பாடல்களும் பாடஅவளது பக்தி அங்கு பிரதிபலிக்குமாம். ஒருநாள் ஈசன்மேல் நெஞ்சுருகிப் பாடிக்கொண்டிருக்கும்போது அந்த பரம்பொருளான ஆதிசிவன் ஆவுடையம்மனின் அன்பில் தன்னை மறந்து அவள் முன்தோன்றிஅப்படியே அவளை அணைத்தபடி மறைந்தார். இதனால்அன்றைய தினத்திலிருந்து இந்த தலத்து மூலவரை  ‘தழுவிய மகாதேவர்’  என மக்கள் அழைக்கின்றனர். இங்கு ஈசன் ஆவுடையம்மாளை அன்புடன் தழுவியபடிக் காட்சி அளிப்பதால் இந்த மகாதேவரைத் தொழுதால் இல்லறம் சுகம் பெறும். இனிமை கூடும் என்பது ஐதீகம்.
இக்கோயிலின் தல விருட்சம் வில்வ மரம். அதுவும் மிக அபூர்வமாக, இந்த வில்வ மரத்தின் இலை இருபத்தொரு தளங்கள்(இலைகள்) கொண்டதாக இருக்கிறது. வெளிபிரகாரத்தில் சாஸ்தா மற்றும் நாகர் சன்னதிகள் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்கத்தில் காந்தி பார்க் என்னும் பூங்கா உள்ளது முன்பு எல்லாம் இது திறந்துதான் இருக்குமாம். ஸ்கூல்க்கு கட்டடித்து வரும் பசங்க இங்கதான் பொழுது போக்குவார்கள் என்பதால் இப்பொழுது பூட்டுப்போட்டு குறிப்பிட்ட சிலசமயங்களில் மட்டுமே பொதுமக்களுக்கு திறந்துவிடுகிறார்களாம். பக்கத்தில் உள்ள மலையாள ஸ்கூல் மற்றும் எஸ் எம் ஆர் வி பள்ளிக்கூடங்களில் உள்ள பிள்ளைகள் எல்லாம் மதியம் சாப்பாட்டுநேரம் இங்கே வந்து சாப்பிட்டு செல்வார்களாம்.

அந்த பார்க்கினை  தாண்டி வடக்குப்பக்கமாக ஒரு நீண்ட பாதை செல்கிறது .அந்த பாதை வழியே சென்றால் தந்தநதிஓடுகிறது. தேவேந்திரனுடைய யானை தனது தந்தத்தால் தண்ணீருக்காகப் பூமியைக் கீறியதில் உண்டான நதி என்பதால் இந்தப் பெயராம். சிலர் இதை கோட்டாறு என்றும் சொல்வார்கள்அதாவது கோடு என்றால் யானைதேவேந்திரனுடைய யானை தேவேந்திரன் பூஜை செய்ய நீர்கொண்டுவர தன் தந்தத்தை கொண்டு கோடு கிழித்து ஒரு நதியை உருவாக்கியது என்றும்கோடு-கீறிய நதி ஆதலால் கோட்டாறு என்றும் சிலரால் சொல்லப்படுகிறதுஅதேசமயம் கோட்டாறு என்ற இடம்தான் முன்பு நாகர்கோயிலில் பெரிய வாணிகத்தலமாக இருந்திருக்கிறது. இந்த நதி மிகப்பழமையான நதி என்பதால் பழையாறு என்றும் அழைக்கப்படுகிறதாம்.(இதுலாம் சரியான்னு கீதாக்காதான் சொல்லனும்)

ஒருவழியாக ஆலயதரிசனம் எல்லாம் முடித்துக்கொண்டு பழையாற்றின் கரைவழியாக அடுத்த கோவிலுக்கு சென்றுகொண்டிருக்கிறோம் .மீண்டும் அடுத்தவாரம் வேறு ஒரு கோவிலிலிருந்து உங்களை சந்திக்கிறேன் .

நன்றியுடன்,

ராஜி 

11 comments:

  1. நீங்கள் பெற்ற புண்ணியத்தில் எங்களுக்கும் கொஞ்சம் பங்கு கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நான் புண்ணிய யாத்திரை போறதே,என் அண்ணாக்கள் எல்லாம் நல்லா இருக்கிறணுங்கிறதுக்காகத்தானே,கூடவே பதிவுக்காகவும் தான் ..

      Delete
  2. படங்கள் அனைத்தும் சிறப்பு - தகவல்களும்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா..படங்கள் பெரும்பாலானவை இணையதளங்களில் இருந்து எடுக்கவேண்டியதாயிற்று,ஆகவே அந்த பாராட்டுக்கள் எல்லாம் படம் எடுத்தவர்களுக்கே போய் சேரட்டும் ...

      Delete
  3. சிறப்பான தகவல்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி அண்ணே,இந்தப்பக்கமாய் சுத்திக்கிட்டே இருப்பேன் ,திடீர்ன்னு வடஇந்தியபக்கம் வந்து பதிவு எழுதுவேன் பார்த்துக்கோங்க.. .

      Delete
  4. நல்ல சிறப்பான தகவல்கள்

    படங்கள் மிக நன்றாக இருக்கின்றன. நான் சொன்னேனா? தடிமார் கோயில் என்று மறந்துவிட்டது. தழுவியமஹாதேவர் கோயில் தானே அது!!

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. கீதாக்கா மாதிரி இல்லாம,நீங்களாவது ஊர் பெயரை மாறாமல் சொன்னீர்களே அதுக்கு உங்களுக்கு நன்றி ....

      Delete
  5. கீதாக்கா, துளசிசார்,மனோஅண்ணா ஊர்க்காரங்க,ஊரின் நல்லபெயரை எப்படி நாசமாக்குறது என்பதில் கில்லாடிங்க போலன்னு நினைச்சுக்கிட்டேன்.//

    ஹா ஹா ஹா ஹா ராஜி! நாரோயில், தடிமார் கோயில்னு சொல்லி சொல்ல்ப் பழகிடுச்சு. தழுவிய மஹாதேவர் கோயில்னு தெரியும்தான் இருந்தாலும் பழக்கதோஷம்!! எங்க ஊரையும் திருவண்பரிசாரம் திருப்பதிசாரம்னு ஆகி அதையும் திருப்பியாரம்னு சொல்றவங்களும் உண்டே!!! கன்னியாகுமரி - கன்யாமரின்னுதானே ஹா ஹா ஹா

    ஆமா எங்க ஊர்ல சிவதாணுப்பிள்ளை, தாணுமாலயன், பூதலிங்கம் (பூதப்பாண்டி கோயில் இறைவன் பெயர்) பெயர் எல்லாம் ரொம்ப காமன். அது போல எங்க கிராமத்துல திருவாழி.

    நல்ல தகவல்கள் ராஜி. கோயில் ல மாற்றங்கள் தெரியுது.

    கீதா


    ReplyDelete
    Replies
    1. நாங்கள் செல்லும் போது இருந்த கோவிலை விட இப்பொழுது எல்லாமே மாற்றம் ,நன்றாக பராமரிக்கின்றனர் .ஆகையால் பெரும்பான்மையான படங்கள் கேட்டு வாங்கவேண்டியதாயிற்று.இருந்தாலும் நீங்கள் அடிக்கடி செல்ல வாய்ப்பு இருக்காது என்றுதான் நினைக்கிறன்.எப்பொழுதும் நாம் பெரிய,பெரிய கோவிலுக்கு செல்வோம்,பதிவு செய்பவர்கள் கூட சிறிய கோவில்களை விட்டுவிடுவார்கள்.ஆனால் நான் அங்கோர்வார்ட் கோவிலிலிருந்து அரசமரத்து விநாயகர் வரை எல்லா கோவில்களை எழுதவேண்டும் என்பது என் ஆசை.உங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றிங்க கீதாக்கா ... ,

      Delete
  6. உங்கள் தரிசனத்தில் நாங்களும் கண்டு கொண்டோம்.

    ReplyDelete