Saturday, October 27, 2018

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?!


காகத்துக்கு அடுத்தபடியா மனிதனுக்கு தெரிஞ்ச பறவைன்னு சொல்லப்பட்டது  ”சிட்டுக்குருவி”. இதுக்கு வீட்டுக்குருவி, அடைக்கலக்குருவி, ஊர்க்குருவி, தவிட்டுக்குருவின்னுலாம் பேரு. மனிதர்களோடு வாழ்ந்தாலும் கிளி, புறா மாதிரி மனிதர்களோடு பழகுவதில்லை. சின்னஞ்சிறிய உடல்,  குட்டியான இரு கால்கள், குட்டியூண்டு அலகோடு பழுப்பு சாம்பல், மங்கலான வெள்ளைன்னு இருக்கும் ஆண்குருவி.   சராசரியா 40லிருந்து 50 கிராமுக்குள் இருக்கும். மேற்பாகம் தவிட்டு நிறத்திலும், மஞ்சளும் கறுப்பும் கலந்த கோடுகளோடு இருக்கும் பெண்குருவி. 

ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா கண்டத்துலலாம் குருவி இனம் இருக்கு. சராசரியா 13 ஆண்டுகாலம் வாழும் இது. மரத்தில், வீடுகளில் மறைவான இடத்தில் கூடுகட்டி நம் கண்பார்வையிலே வாழ்ந்தாலும் இதை செல்லபிராணியா வளர்க்கமுடியாது. ஏன்னா அதுக்குலாம் இது செட்டாகாது. கிண்ண மாதிரியான வடிவத்தில் கூடு கட்டி வாழ்ந்தாலும் குளிர்காலத்தில் கூட்டமா  இருந்து குளிரை சமாளிக்கும்.  புழு, பூச்சி, நெல், கம்பு மாதிரியான தானியங்களை உண்டு வாழும்.  ஒரு நேரத்தில் 3லிருந்து 5 முட்டை வரை இட்டு குஞ்சு பொரிக்கும். பச்சை கலந்த வெள்ளை நிறத்துல இருக்கும். முட்டையை அடைக்காத்து குஞ்சுகள் பெருசாகி பறக்கும்வரை அவைகளை பாதுகாப்பது தாய், தந்தை குருவியை சாரும்.  பறக்க ஆரம்பிச்சுட்டா அது ஃப்ரீ பேர்ட்தான். அம்மா அப்பா பேச்சை கேட்கனும்ன்னு இல்ல. 

மெல்லிய கோடுகளைக் கொண்டது புல்வெளிக் குருவிகள், மாலைச் சிட்டுகள், காட்டில் வாழும் நரிச் சிட்டுகள், வெண்கொண்டையும் வெண்மையான தொண்டையும் கொண்ட குருவிகள், கறுப்புச் சிட்டுகள், வெள்ளைக் கோடுகள் உடைய கொண்டையை கொண்ட குருவின்னு விதம் விதமா இருக்கு. இனப்பெருக்க காலம் வந்ததும், தனக்கு பிடிச்ச மாதிரியான பெண்குருவியை  தேர்ந்தெடுக்கும். 

தன்னோட லவ்வை சொல்லி, அந்த பெண்குருவிக்காக கூடு கட்டும்.  வைக்கோல், புல், குச்சிகளை கொண்டு கிண்ணம் மாதிரி கூடு கட்டி, உள்ள, களிமண்ணால் மொழுகி படுக்கையை ரெடி பண்ணும். வெளிச்சத்துக்கு மின்மிணி பூச்சியை கொண்டு வந்து கூட்டுக்குள் வைக்கும். இப்படி பக்காவா கூட்டை ரெடி செஞ்சு பெண்குருவியை கொண்டு வந்து காட்டும். கூடு  பெண்குருவிக்கு பிடிச்சிருந்தா மட்டுமே டும்டும்டும்தான், பாலும் பழமும்தான்., குவாகுவாதான். இல்லன்னா தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடின்னு பாடிக்கிட்டு திரியவேண்டியதுதான். கூடு கட்டிக்கிட்டிருக்கும்போது எதிர்பாராத விதமா அந்த கூடு கீழ விழுந்துட்டா, அதை எடுத்து வச்சு மீண்டும் கூடு கட்டாது.
வளர்ப்பு பறவையை தவிர வேறெந்த பறவையும் வீட்டுக்குள் வரத்தயங்கும். ஆனா, சிட்டுக்குருவி அப்படியில்லை. சர்வசாதாரணமாய் வீட்டுக்குள் வலம் வரும். புழு, பூச்சியை சாப்பிட்டாலும் அதோட முழுமையான உணவு கம்பு, சோளம், நெல் மாதிரியான தானியங்கள்தான்.  அப்படின்னா வயல்வெளிகளில்தானே இருக்கனும்ன்னு நினைக்கலாம். வருடத்தின் அத்தனை நாளும் தானியம் விளையாதே! ஆனா, வீடுகள் அப்படியில்லை. சதாசர்வகாலமும் தானியங்கள் புழங்கும்.
ஒரு இருபது வருடங்களுக்கு முன்னலாம் தானியங்கள்  அறுவடையாகி வீட்டுக்கு வருவதும், அதை காய வைக்க, தோல் நீக்க, புடைக்க, குத்த, அரைக்கன்னு பல வேலைகள் தினத்துக்கும் நடக்கும்.  அப்ப சிந்துனது, சிதறுனதை சாப்பிடவே குருவிகள் வீட்டுக்கு வரும். ஆனா, இப்ப அப்படி இல்ல.  சூப்பர் மார்க்கெட்ல இருந்து டைரக்டா பாக்கெட்ல இருந்து வாங்கி வந்து பயன்படுத்துறோம். உணவில்லாதபோது குருவி எப்படி வீட்டுக்கு வருமாம்?! சரி, வயல்வெளிகளில் உண்டு கழிக்கலாம்ன்னு பார்த்தா, நாமதான் அதையெல்லாம் ரியல் எஸ்டேட்டாக்கி பாழ்படுத்திட்டோமே!

அப்படியே அங்கொன்னும், இங்கொன்னுமா நடக்கும் விவசாயம்கூட, கம்பு, கேழ்வரகு, சோளம்ன்னு விளைவிக்காம கரும்பு, சவுக்கு, கத்திரி, வெண்டை, தக்காளின்னு ஆகிட்டுது.  அப்படியே, கம்பு, சோளம்ன்னு பயிரிட்டாலும் கை அறுவடை இல்லாம, மெஷின் அறுவடைன்னு கதிர் அடிக்க, தூத்தன்னு எல்லா வேலையும் முடிஞ்சு ஒரு மணிகூட சிந்தாம சிதறாம அப்படியே வீட்டுக்கு கொண்டு வந்துடுறாங்க.  இதுல விவசாயிக்கு லாபம்ன்னு சந்தோசப்பட்டாலும், அவனை அண்டி வாழும் சின்னஞ்சிறிய உயிர்களான எலி, குருவி மாதிரியான உயிர்கள் பட்டினி.. பின்னர் அதோடு இனமும் அழிஞ்சுக்கிட்டு வருது. தான் மட்டுமே வாழனும்ன்ற சுயநலமே இதுக்கு காரணம். 

மனுசன் சல்லிப்பயன்னு புரிஞ்சதாலோ என்னமோ அவனை நம்பி இருக்கும் ஜீவன்களாலேயே அவன் உயிரை எடுக்கும் வேலையை இயற்கை செய்யுது. முன்னலாம் சாமி படங்கள் உட்பட அனைத்து படங்களும், கண்ணாடிலாம் ஒரு 50டிகிரி சாய்மானத்துல சாய்ச்சு வச்சு சுவத்துல ஆணியோடு ஒரு கம்பி வச்சி இணைச்சிருப்பாங்க. ஆனா, இப்பலாம் லேமினேஷன் பண்ணப்பட்ட படங்கள். அதேப்போல, பெண்டுலம் வச்ச கடிகாரம் இருக்கும். அதுமேலயும் கூடு கட்டும். அதில்லாம, ஓட்டு வீட்டு கூரையில் கட்டும், தாழ்வாரம்ன்னு கொஞ்சம் மறைவான இடத்துல கட்டும். இப்பலாம் அதுலாம் இல்லாததால் அதுக்கு கூடு கட்ட வாய்ப்பே இல்ல. 
சிட்டுக்குருவி இனம் அழிய செல்போன் டவர் காரணம்ன்னு சொல்லப்பட்டாலும் இன்னமும் விஞ்ஞானரீதியா அது நிரூபிக்கப்படலை. சிட்டுக்குருவி இனம் அழிய பல காரணங்கள் உண்டு. வருசத்துக்கு மூன்று முறைதான் இது முட்டை இடும். ஒருமுறை 3 லிருந்து 5 வரை முட்டையிடும். அத்தனை முட்டையும் குஞ்சு பொரிக்க தகுதியானதில்லை. சில கூமுட்டைகளும் உண்டு. அப்படியே தகுதியான முட்டைகள் கூட்டிலிருந்தாலும் காகம் அந்த முட்டைகளை கீழ தள்ளிடும். மிச்சம்மீதி குஞ்சு பொரிச்சாலும் பாம்பு, காகம் மாதிரியான பிராணிகளுக்கு உணவாகிடுது.  எப்படியோ தப்பித்தவறி உசுரு பொழைச்சாலும், தாய்க்குருவி கொடுக்கும் உணவு நஞ்சாகிடும். அது எப்படின்னா, நாமதான் பூச்சி மருந்துகளை வயலுக்கு தெளிக்குறோமே! அதான் காரணம்.
சரி, தானியம் வேணாம்ன்னுட்டு புழு பூச்சி சாப்பிட்டு உசுர் வாழலாம்ன்னு பார்த்தா, வாகனங்கள், தொழிற்சாலைன்னு வெளியிடும்  மெத்தைல் நைட்ரேட்  என்னும் நச்சு புகை புழு, பூச்சிகளை கொன்னுடுது.  அப்புறம் எப்படி அது உயிர்வாழுமாம்?! அப்படியே வாழ்ந்து வந்தாலும் அடுத்த ஒரு ஆபத்து அதை நோக்கி இருக்கு. அது ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் சிட்டுக்குருவி லேகியம் வடிவில்... 
குறிப்பிட்ட 15க்கும் மேற்பட்ட மூலிகைகளை இடித்து, குடல், இறகுலாம் சுத்தம் செய்யப்பட்ட குருவியின் வயிற்றில் இந்த மூலிகை பொடியினை வைத்து தைத்து,  மண்சட்டியில் பசுநெய்யில் இந்த குருவியை வறுத்தெடுத்து, நூலினை நீக்கி, உரலில் விட்டு இடிச்சு வரும் மருந்தோடு சரிக்கு சமமா பனங்கற்கண்டு சேர்த்து, அரைலிட்டர் பால் கொதிச்சதும்,  இதை போட்டு சரியான பதம் வந்ததும், குருவியை பொறிச்ச மிச்ச நெய்யும், தேனும் சேர்த்து கிளறினா சிட்டுக்குருவி லேகியம் தயார்.  மனுச குலம் தழைக்க குருவி குலத்தை அழிச்சிக்கிட்டிருக்கோம். காக்கையும், குருவியும் எங்கள் சாதின்னு பாரதி பாடினான். நாமதான் நம்ம சாதிக்காரன் பொழச்சு வந்தாலே வயிறு எரியும் ஆட்களாச்சே! அப்புறம் குருவி, காக்கையையா வாழவிட்ருவோம்?!
விட்டு  விடுதலை யாகிநிற் பாயிந்தச்

20 comments:

  1. சிட்டுக்குருவி அழிந்து வருது என்று சொல்லிவிட்டு சிட்டுகுருவி லேகியம் செய்யும் முறை போட்டால் நியாயமா?

    ReplyDelete
    Replies
    1. என்னென்ன மூலிகை பொருட்கள்ன்னு சொல்லலியே1 அதுமில்லாம ஒரு நொடி தவறினாலும் லேகியம்லாம் பாழ். அதான் சித்த மருத்துவத்தின் ஸ்பெஷாலிட்டி. செய்முறைலாம் வித்தியாசமா, அதிக நேரமெடுக்குறதா இருந்ததால் சொன்னேன். நம்மாளுங்க இத்தனைலாம் மெனக்கெட மாட்டாங்க. பைசா கொடுத்தோமா!> கடையில் போய் வாங்கினோமான்னுதான் இருப்பாங்க.

      Delete
  2. உங்களது தவிப்பிற்கும், நல்ல மனதிற்கும் பாராட்டுக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. பொதுவா நம் வீட்டில் குருவி கூடு கட்டினா நல்லதுன்னு சொல்வாங்க. மங்கலகரமான நிகழ்ச்சி நடக்கும்ன்னும் சொல்வாங்க. ஆனா, எங்க வீட்டில் சண்டையும், பிரச்சனையும்தான் வரும். ஆனாலும் இதுவரை கூட்டை பிரிச்சதில்லை. குருவி பறந்து போயிட்டுதுன்னு தெரிஞ்சபின் தான் பிரிப்பேன்.

      Delete
  3. அப்படியே கோயிலுக்கு போயிட்டு வாங்க சகோ யானைப்பாகனிடம் யானைபடும் பாட்டைக்கண்டால் பெரிய பதிவு வரலாம்.

    ReplyDelete
    Replies
    1. நான் பெருசா பதிவு போடுறேன்னு கிண்டல் பண்ணுறீகளா?! யானையை பத்திதான் ஆல்ரெடி பதிவு போட்டாச்சுதே?! பார்க்கலியா?!

      https://rajiyinkanavugal.blogspot.com/2018/06/blog-post_11.html

      Delete
  4. சுயநல மனிதன் தான் வாழ பிற உயிர்களைத் தொந்தரவு செய்யத் தயங்குவதில்லை. பூமியின் வாழ்க்கைச் சுழற்சியே இதனால் பாதிக்கப்படும் என்பதை பற்றிக் கவலையில்லை அவனுக்கு.

    ReplyDelete
    Replies
    1. தான் மட்டுமே வாழ்ந்தால் போதும்ன்னு நினைக்குறான்.ஆனா, அவனுமே நிம்மதியாயில்லை. அதான் உண்மை

      Delete
  5. மனிதனின் சுயநலம்..... அது தானே இங்கே தலைவிரித்து ஆடுகிறது!

    நல்ல தகவல்கள். படங்களும் அழகு. தேர்ந்தெடுத்து சேர்த்திருக்கும் பாடல்கள் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      பணமும், நகையும், வீடும் எதிர்கால சந்ததிக்கு சேர்த்து வச்சிட்டா போதும்ன்னு நினைக்குறோம். ஆனா, உணவு, தண்ணி, காத்துன்னு அதுங்க அல்லல்படப்போகுதேன்னு கொஞ்சமும் உணரலை.

      Delete
  6. வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

    இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

    அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

    நன்றி..
    Tamil US
    www.tamilus.com

    ReplyDelete
    Replies
    1. பயன்படுத்திக்கிறேனுங்க சகோ

      Delete
  7. உங்களின் சிட்டுக்குருவியினைப் பற்றிய அதன் மேலான தவிப்பு, அருமையான பதிவினைத் தந்துள்ளது. செல் டவர் என்பதானது சிட்டுக்குருவிக்கு மட்டுமல்ல, அனைத்து பறவையினங்களுக்கும் எமனே. எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் சிட்டுக்குருவிகளை பார்த்து ரசிப்பதுண்டு. ஆனால் இப்போதுதான் இக்குருவிகளைப் பற்றி அறிந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அது தத்தி, தத்தி வீட்டுக்குள் வலம் வருவதே ஒரு அழகுப்பா! நாகரீக வளர்ச்சி சக உயிரினங்களை பதம் பார்க்குது. ஆனா, அதுலாமில்லாமயும் நம்மால் இனி வாழமுடியாதே! என்ன செய்ய?!

      Delete
  8. வளர்ச்சி என்னும் பெயரில் பறவையினங்களை அழித்துக் கொண்டே இருப்பது வேதனைதான் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. பாலூட்டி இனமும் அழிஞ்சுக்கிட்டே வருதுண்ணே. அடுத்த ஐம்பது வருசத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலூட்டி இன உயிர்கள் முற்றிலும் அழிஞ்சிடும்ன்னு தகவல்கள் சொல்லுது

      Delete
  9. வரும் சந்ததியினர் படம் பார்த்துதான் சிட்டுக்குருவி பற்றி தெரிந்து கொள்ளமுடியும்ஆமாம் சிட்டுக் குருவிலேகியம் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்பதெல்லாம் நம்பக் கூடியதா

    ReplyDelete
    Replies
    1. அதுலாம் சும்மா. சின்ன வயசுல வண்டி ஓட்டும்போது முதல் இரண்டு நாள் பின்னாடி இருக்கவுங்க தயவில் வண்டி ஓட்டுவோம். ஆனா, பழகிட்டபின் அவங்க பிடிக்காம இருந்தாலும் நாம வண்டி ஓட்டுவோம். ஆனா, அவங்க பின்னாடி இருக்காங்கன்னு ஒரு தைரியம். அவங்க இல்லன்னா தடுமாறி விழுவோம். அதுமாதிரிதான் இதும் மனசு சார்ந்தது.

      Delete