அன்புள்ள சகோதரனே,
நீ நலமா? நான் நலம். அங்கு உன் உற்றார் நலமா?
தாயின் கருவறை என்னும் இருட்டறையில் பத்து மாதம் தனித்திருந்தேனே.., அப்போது துணைக்கும், உயிரமுதத்தை போட்டியிட்டு பருகவும் நீ வரவில்லை..,
தத்தி நடக்கும்போது விரல்பிடித்து நடைப்பழக்கவும், ஓடி விளையாடும்போது கீழே விழும் என்னை தாங்கி பிடிக்கவும் நீ வரவில்லை, கொட்டாங்கச்சியில் மணலைக் கொட்டி சுட்ட இட்லியையும், கருவேல மரத்து இலையை அரைத்து வைத்த சட்னியை உண்ணவும், இன்னொரு இட்லி கேட்டு நீ அடம்பிடிக்க நான் தர மறுக்க, காலால் இட்லியை சிதைக்கவும் நீ வரவில்லை..,
பள்ளியில் பல்பத்தை தின்றதையும் , சிலேட்டை எச்சிலால் அழித்ததையும், சைக்கிள் பழகி பாவடைக் கிழித்துக் கொண்டு வந்து அம்மாக்குத் தெரியாமல் மறைத்ததையும் அம்மாவிடம் போட்டுக் குடுத்து நான் அடிவாங்குவதைக் கண்டு ரசிக்கவும் நீ வரவில்லை.., ,
என் உண்டியல் காசை நீ திருடி சினிமா பார்த்ததையறிந்து, உன்னைக் கண்டிக்க, அப்பிடித்தாண்டி செய்வேன் னு நறுக்கென்று என் தலையில் கொட்ட, வலித்தாங்காமல் அழும் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அப்பாவிடம், நிலைப்படியில் இடிச்சுக்கிட்டேன்பா எனப் போய்ச்சொல்லி உன்னை நான் காப்பாற்ற.., கண்களால் நன்றியுரைக்க நீ வரவில்லை..,
நான் சடங்காகி "குச்சி வீட்டுக்குள்" அமர்ந்திருக்கையில், அவளைத் தீண்டதேடானு சொன்ன கோடி வீட்டு ருக்குப் பாட்டிக்கு தெரியாமல் உள் நுழைந்து, எனக்கு தந்த பலகாரங்களையெல்லாம் என் வாய் பொத்தி திண்ணவும் நீ வரவில்லை..,
தெருமுனையில் காலிப் பசங்க கிண்டல் பண்றாங்க, நீ துணைக்கு வாடா பயமா இருக்குனு உன்னை கெஞ்ச, ஆமாம் இவ பெரிய உலக அழகி இவளைப் பார்க்க வர்றாங்கன்னு ,ச்சீப் போடின்னு என்னை துரத்திவிட்டுட்டு, என் பின்னாடியே வந்து, அவர்களைப் புரட்டி எடுக்க நீ வரவில்லை. ..,
பரிட்சைக்கு செல்கையில் பாசாகி என் மானத்தை காப்பாத்துடின்னு விபூதியிட்டு, என்னை பரிட்சை எழுத அனுப்பிவிட்டு, பள்ளி வாசலில் நான் வரும்வரை கால்கடுக்க காத்திருக்க நீ வரவில்லை..,
இந்த மாப்பிள்ளையதான் நீ கட்டிக்கிடணும்னு சொல்லி அப்பா அதட்ட, நான் விசாரிச்சுட்டேன், இவன் சரியில்லை, அவளுக்கு கோடி வீட்டு தமிழைத் தான் பிடிச்சிருக்கு அவன் நல்லவன் அவனுக்கே கட்டி வச்சுடுங்க அவ நல்லா இருப்பாள்னு எனக்கு பரிந்துக் கொண்டு பேச நீயில்லை...,
மசக்கையில் வாந்தி எடுக்கும்போது கையிலேந்திப் பிடிக்கவும், ஒன்பதாம் மாதம் பூமுடிக்கையில் எங்கோ ஒரு மூலையில் சாம்பார் வாளியைக் கையில் ஏந்திக்கொண்டு என் மேடிட்ட வயிற்றைக் கண்டுப் பூரிக்கவும் பிரசவ வேதனையில் துடிக்கும்போது, நான் இருக்கேண்டா பயப்படாதேடா னு என் கைப்பிடித்து ஆறுதல் சொல்ல நீ வரவில்லை..,
மருமகப் பிள்ளையை நடுங்கும் விரலுடனும் கண்ணீர் துளிகளுடனும் ஏந்திக் கொள்ளவும், மடியிலிருத்தி காது குத்தவும், தங்கை மகளுக்கு "குச்சுக் கட்டி சீர் செய்யவும்" நீ வரவில்லை..,
இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடிந்த என்னால்..,
தரையில் படுக்க வைத்தால் ஈ, எறும்பு கடிக்குமென மார்மீதே உறங்க வைத்து, தன் தோள் மீதேற்றி.., இந்த உலகை காண வைத்த தந்தை, இன்று "படுத்த படுக்கையில்"...,,
மகளேயானாலும், என்னாலும் செய்ய முடியாத பணிவிடைகள் "சில" உண்டு.
அதைச் செய்ய இயலாமல், தத்தளித்து , தடுமாறி, தோள்சாய ஆளின்றி தவிக்கிறேன்,
ஒருவேளை இன்று நீ என்னருகில் இருந்திருந்தால் .., கை கொடுத்திருப்பாயா??!! சகோதரா?
இப்படிக்கு,
உன்னுடன் பிறந்து , உன் மடியில் தவழ்ந்து, உன் விரல் பிடித்து வளர்ந்து வாழும் பாக்கியத்தை இழந்த,
துரதிர்ஷ்டசாலியான சகோதரி.
உன்னுடன் பிறந்து , உன் மடியில் தவழ்ந்து, உன் விரல் பிடித்து வளர்ந்து வாழும் பாக்கியத்தை இழந்த,
துரதிர்ஷ்டசாலியான சகோதரி.
feel very bad
ReplyDeleteI cannot control my Self :(
ஆறுதலுக்கு தோள் கொடுக்க நான் இருப்பேன் சகோதரனாய் எப்பவும்
ப்ரியமுடன் வசந்த் கூறியது...
ReplyDeletefeel very bad
I cannot control my Self :(
ஆறுதலுக்கு தோள் கொடுக்க நான் இருப்பேன் சகோதரனாய் எப்பவும்
>>
நன்றி சகோதரா
அருமை சகோ!
ReplyDeleteஜீ... கூறியது...
ReplyDeleteஅருமை சகோ!
>>
நன்றி சகோதரா
ஒரு சகோதரியின் வலி அழகாய் உணர்த்துகிறது... நிறைய வலிகளுடன்...
ReplyDelete!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
ReplyDeleteஒரு சகோதரியின் வலி அழகாய் உணர்த்துகிறது... நிறைய வலிகளுடன்...
>>
நன்றி சகோதரா
இந்த பதிவுக்கு என்னால் லைக் போட முடியாது, மனசு ரணமாய் அழுது கண்ணீர் கொட்டுகிறது.....
ReplyDeleteகவலை படாதீர்கள் மக்கா எல்லாம் சரியாகிவிடும்.....நாம் பிரார்த்திப்போம்....
நிறைய கமெண்ட்ஸ் போட ஓடிவந்தேன், அதை கண்ணீராய் கொட்டிதீர்த்து விட்டேன்....
ReplyDeleteஇதுவரை எழுதிய பதிவுகளில் மகுடப்பதிவு இதுவே.. இயல்பான எழுத்து. வலி காட்டும் நடை
ReplyDeleteஎல்லோருக்கும் எல்லாம் அமைந்து விடுவதில்லை,
ReplyDeleteஅமைந்தாலும் சரியாய் இருப்பதில்லை,
சரியாய் இருந்தாலும் பலருக்கு அருமை தெரிவதில்லை,
இல்லாதவர்களுக்கு தான் அருமை தெரியும்,
என் நெஞ்சை உலுக்கி விட்டது இந்த பதிவு செந்தில் குமார் சொன்னபடி இது தான் சிறந்த பதிவு,
இதற்கு என் கண்ணீர் துளிகளை காணிக்கை ஆக்குகிறேன்.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
ReplyDeleteஇந்த பதிவுக்கு என்னால் லைக் போட முடியாது, மனசு ரணமாய் அழுது கண்ணீர் கொட்டுகிறது.....
கவலை படாதீர்கள் மக்கா எல்லாம் சரியாகிவிடும்.....நாம் பிரார்த்திப்போம்....
>>
ஆறுதலுக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி சகோ.
MANO நாஞ்சில் மனோ கூறியது...
ReplyDeleteநிறைய கமெண்ட்ஸ் போட ஓடிவந்தேன், அதை கண்ணீராய் கொட்டிதீர்த்து விட்டேன்....
>>
உங்களை கலங்க வைத்துவிட்டேனா, மன்னிச்சுக்கோங்க சகோ
சி.பி.செந்தில்குமார் கூறியது...
ReplyDeleteஇதுவரை எழுதிய பதிவுகளில் மகுடப்பதிவு இதுவே.. இயல்பான எழுத்து. வலி காட்டும் நடை
>>
கருத்துக்கு நன்றி Cp
திருவாதிரை கூறியது...
ReplyDeleteஎல்லோருக்கும் எல்லாம் அமைந்து விடுவதில்லை,
அமைந்தாலும் சரியாய் இருப்பதில்லை,
சரியாய் இருந்தாலும் பலருக்கு அருமை தெரிவதில்லை,
இல்லாதவர்களுக்கு தான் அருமை தெரியும்,
என் நெஞ்சை உலுக்கி விட்டது இந்த பதிவு செந்தில் குமார் சொன்னபடி இது தான் சிறந்த பதிவு,
இதற்கு என் கண்ணீர் துளிகளை காணிக்கை ஆக்குகிறேன்.
>>
கருத்துக்கு நன்றி திருவாதிரை
கண்கள் கலங்கியது..
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
ReplyDeleteகண்கள் கலங்கியது.
>>
கலங்க வைத்ததுக்கு சாரி
இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடிந்த என்னால்..,//
ReplyDeleteவலி காட்டும் நடை.feel bad.
மனித மனம் கல்லாய் மாறிப்போனதா..?
ReplyDeleteஅவரிடம் நேரில் சென்று ஒருமுறை
பேசிப்பாருங்களேன்..
உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_03.html
ReplyDeleteமற்றொரு இராஜி இருக்காங்கனு இன்னைக்குதான் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteதங்களின் இந்த பதிவு தங்கள் சகோதரரை சென்றடைய வேண்டும்.
அவர் வருவதற்கு பிராத்திப்போம்.
உணர்ச்சி பூர்வமாய் ஒரு பகிர்வு சகோவைப் பற்றி. நன்றி.
ReplyDeleteநிறைவான கவிதை
ReplyDeleteவலியை சொன்னாலும்
வலிமையாய் சொன்னவிதம் அற்புதம்
சகோதரத்துவம்
சகிக்கும்
சந்தோஷ
சங்கமங்கள்
சங்கமிக்காததை
சந்திக்காததை
சொன்ன விதம்
நெகிழ்வு
வாழ்த்துக்கள்
மனதை கனக்க செய்த கவிதை கட்டுரை
ReplyDeleteஒவ்வொரு வரியும் அற்புதம்!
ReplyDeleteவலியை உணரமுடிகிறது..இதயம் சிந்தும் கண்ணீர் உப்புக்கரிக்கவில்லை..சுடுகிறது
ReplyDeleteஉன் மனதின் வலி எனக்கும் தெரிகிறது..
ReplyDeleteகவலை வேண்டாம்...என்னை சகோ வாக நினைத்துக் கொள்..என் ஆதரவு என்றும் உண்டு..
http://zenguna.blogspot.com
contact me..
வலியை உணரமுடிகிறது
ReplyDelete