முன்பெல்லாம் எனை அணைத்த அலை,
இன்று
அடித்தது போலிருந்தது…..
காரணம் கேட்டபோது
“எங்கே உன் தோழன்? என்று
காட்டமாய் விசாரித்தது….
மேற்படிப்பிற்காய் மேல்நாடு போய் விட்டான் என்றேன்….
“உன்னை தனியாக விட்டு விட்டா???”
வினவியது அலை…..
“இல்லை அவன் நினைவுகள்
என்னுடன் என்றேன்”
அனுதாபமாக என்னை பார்த்த அலை
“முன்பெல்லாம் என் பாறை நண்பன்
மேல் உட்கார்ந்து பாடுவீர்களே….
இப்போ என்ன செய்வாய்????”
கேட்டது அலை….
அவனை பிரிந்த பின்பு – நானும்
பாறை தான் என்றேன் !!!
பதறிய அலை
சிதறி என்மேல் விழுந்து...,
“ஏனுனக்கு நானில்லையா?? – சரி, சரி
அடிக்கடி வந்து போவென்றது அன்பாக….!”
அலையின் அன்பில்
சிலிர்த்துப்போய் – மீண்டும்
அவன் நினைவுகளுடன் கரையெறும் போது…..,
என்ன நினைத்ததோ அலை
திரும்பவும் வந்து,
“அடித்தது ரொம்பவும் வலிக்குதோ???”
கேட்டது ஏக்கத்துடன்…!
இல்லை என சிரித்த எனை
சில்லென நீராட்டி தன் சந்தோஷம்
சொல்லிப்போனது அலை….!
ஆனாலும்……
அலைக்கென்ன தெரியும்
என் விஷயத்தில் “அவன்”
சிலையாகிப்போன கதை…….!!!!!
இன்று
அடித்தது போலிருந்தது…..
காரணம் கேட்டபோது
“எங்கே உன் தோழன்? என்று
காட்டமாய் விசாரித்தது….
மேற்படிப்பிற்காய் மேல்நாடு போய் விட்டான் என்றேன்….
“உன்னை தனியாக விட்டு விட்டா???”
வினவியது அலை…..
“இல்லை அவன் நினைவுகள்
என்னுடன் என்றேன்”
அனுதாபமாக என்னை பார்த்த அலை
“முன்பெல்லாம் என் பாறை நண்பன்
மேல் உட்கார்ந்து பாடுவீர்களே….
இப்போ என்ன செய்வாய்????”
கேட்டது அலை….
அவனை பிரிந்த பின்பு – நானும்
பாறை தான் என்றேன் !!!
பதறிய அலை
சிதறி என்மேல் விழுந்து...,
“ஏனுனக்கு நானில்லையா?? – சரி, சரி
அடிக்கடி வந்து போவென்றது அன்பாக….!”
அலையின் அன்பில்
சிலிர்த்துப்போய் – மீண்டும்
அவன் நினைவுகளுடன் கரையெறும் போது…..,
என்ன நினைத்ததோ அலை
திரும்பவும் வந்து,
“அடித்தது ரொம்பவும் வலிக்குதோ???”
கேட்டது ஏக்கத்துடன்…!
இல்லை என சிரித்த எனை
சில்லென நீராட்டி தன் சந்தோஷம்
சொல்லிப்போனது அலை….!
ஆனாலும்……
அலைக்கென்ன தெரியும்
என் விஷயத்தில் “அவன்”
சிலையாகிப்போன கதை…….!!!!!
அருமையான கவிதை
ReplyDeleteபிரிவாற்றாமையை அலையிடம் பகிர்ந்து கொள்ளுதல் கற்பனை ஆனாலும் நல்ல இருக்கு
எக்ஸலண்ட் தோழி. அலையையும் ஒரு கேரக்டராக, தோழியாக உருவகித்ததும், என் விஷயத்தில் அவன் சிலைதான் என்று இறுதியில் முடித்ததும்... ரொம்பவே ரசித்தேன். இன்னும் பல நல்ல கவிதைகளை நீங்கள் தர வாழ்த்துக்கள்...
ReplyDelete//“ஏனுனக்கு நானில்லையா?? – சரி, சரி
ReplyDeleteஅடிக்கடி வந்து போவென்றது அன்பாக….!”
அலையின் அன்பில்
சிலிர்த்துப்போய் – மீண்டும்
அவன் நினைவுகளுடன் கரையெறும் போது…..,
//
அழகான வரிகள்
அலை , சிலை, நிலை - நீங்க டி ஆர் பேத்தியா?
ReplyDeleteதமிழ் மணம் 100 .. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் 789 ல இருந்து அதுக்குள்ள 100!!!!
ReplyDeleteஅருமையான ரசிக்கும் கவி வரிகள். நன்று
ReplyDeleteநம்ம தளத்தில்:
ஐயோ, அத பத்தி அது, இதுன்னு ஒளறிட்டேனா?
அவன் சிலையாகி போனதை//
ReplyDeleteஇதுக்கு அந்த அலையும் பாறையுமே மேல் இல்லையா...???
இதயம் கனக்கும் கவிதை ராஜி, வாழ்த்துக்கள்...!!!
அருமையான கவிதை.
ReplyDeleteவாழ்த்துகள்.
அலைக்கென்ன தெரியும்
ReplyDeleteஎன் விஷயத்தில் “அவன்”
சிலையாகிப்போன கதை//
ரசித்தேன்...
வாழ்த்துக்கள் ராஜி...
அருமையான கவிதை
ReplyDeleteஅவன் என்னுள் உயிரற்று ஒரு பிம்பமாக மட்டுமே உள்ளான் எனப்தை
என்னுள் சிலையாக மட்டுமே உள்ளான் என்கிற வார்த்தை மூலம்
சொல்லிப் போனது மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 6
நீங்கள் கதை எழுத வேண்டும் ராஜி. இந்தக் கவிதை பல கேள்விகளை என்னுள் எழுப்ப்பிவிட்டது:(
ReplyDeleteஅருமையான அவளை நனைத்தது போல வே என் உள்ளத்தையும் நனைத்துவிட்டது. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
Arumai!
ReplyDeleteTamilmanam Vote 8.
ReplyDeleteநம்மை விசாரிக்கவும், அரவணைக்கவும் இயற்கையால் மட்டுமே முடியும். மனித மனம்தான் மாறிக்கொண்டே இருக்கும்.
ReplyDeleteவணக்கம் மேடம் இன்றுதான் உங்கள் தளத்திற்கு வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றது இனி தொடர்ந்து வருவேன்
ReplyDelete