நான் நேசிப்பவைகள்
உனக்கு விரோதமானவை..,
நானும், நீயும் இணையும்
சாத்தியங்கள் அகராதியில் இல்லை!?
அப்படி என்றால் …
நமக்கான சம்பந்தம் பற்றிய
பிரயத்தனங்கள் வீணானவை தானே
இதில் நாமிருவருமே
நிதானித்து முடிவேடுக்க வேண்டும்....
என்னை சிறையிலும்...,
உன்னை வெளியிலும் அடிப்பதை விடுத்து…..
உன்னுடன் ஒப்புதலுக்காக
உடன்பட்டேன்.
எதிர்ப்புகளிலும்,சரி என்று
எத்தனை தடவைகள் சமாளிப்பது.., இது,
இறுதியான நாம் பற்றிய பார்வையாகட்டும்….
இதில் நீயும், நானும் உறுதியாய் இருப்போம்.
பயனற்ற பயணத்தில் நடத்து கொண்டதால்
உனக்கு கால்கள் வலிக்கிறது..
உள்ளே இருத்து துயரங்களை தின்றதால்
எனக்கு உள்ளம் வலிக்கிறது....,
அக வதைபுக்கள் நமக்குத் தானே
என்னுடைய காத்திருப்புக்களும்
உன்னுடைய துரோகமும்
இனி நிச்சயம் எதிர்த்துக் கொள்ள வேண்டும்...,
அதனால்,
நீ சிறை படு
நான் விடுதலை அடைகி்றேன் …….
ஆ ராசாவை பார்த்து கனி மொழி சொல்ற மாதிரியே இருக்கே? நீங்க டி எம் கே தானே? ஹி ஹி
ReplyDeleteஅதுக்குள்ள 2 ஓட்டா? இதுல ஏதோ கோல்மால் இருக்கு
ReplyDeleteI wanted to thank you for this great post!! I enjoyed every little bit of it, I have you bookmarked and waiting for all the new stuff you post.
ReplyDeleteNissan 200SX AC Compressor
ஒருவருக்கொருவர் சரியாக புரிந்து கொள்ளாமையால் வெளிப்படும் விரக்தி உணர்வு.. அழகாய் இருக்கிறது கவிதை...
ReplyDeleteசகோ என்ன ஆச்சி, கவிதை ஒரே விரக்தி மயமா இருக்கே,,,
ReplyDeleteஇருந்தாலும் ஒரு மெல்லுணர்வு தங்கள் கவிதையில்..
அழகிய கவிதை...
ReplyDeleteகவிதையிலும் கலக்க என் வாழ்த்துக்கள்...
எப்படி ஓடிப் பார்த்தும் கடைசியில்
ReplyDeleteஅது ஒரு முட்டுச் சந்திலேயே போய்முடிகையில் வேறென்ன செய்ய முடியும்
நேருக்கு நேராக சந்தித்து பைசல் செய்துதானே ஆகவேண்டும்
அ ந்த நிலையை மிக நேர்த்தியாகச் சொல்லிப் போகும்
பதிவு மிக மிக அருமை
மிகத் தரமான பதிவு வாழ்த்துக்கள்
நல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துகள்.
கவிதையில் ஒரு மென்சோகத்தை உணர்ந்தேன் தங்கையே. அழகான எளிமையான வார்த்தைகளால் அமைந்த கவிதையை மிக ரசித்தேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் - அட்வான்ஸாகவே!
ReplyDeleteநல்ல கவிதை.... ஏனோ ஒரு சோகம்....
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துகள்.
Neenga Kavithaiyum eluthuvingalaa Sago.? m...m... Kalakkunga!
ReplyDeleteTM 8.
ராஜி...கவிதை நல்லாயிருக்கு.ஆனால் சிறைப்படுவதால் நாங்கள் விடுதலையாவோம் என்று நம்புகிறீர்களா !
ReplyDeleteகவிதைக்கு தலைப்பே..அருமை..
ReplyDeleteமுடிவும் தலைப்பில் அமைந்தது சிறப்பு..
அன்போடு அழைக்கிறேன்..
அழுகை அழ ஆரம்பிக்கிறது
வலிதரும் கவிதை வரிகள் அருமை!..
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி .வாழ்த்துக்கள் சகோ .
அருமையாக இருக்கிறது!
ReplyDeleteசி.பி.யின் கமெண்டைப் படித்தபின் திரும்ப வாசிக்க... :-)
சுகமான சோகம்! நன்றி!
ReplyDeleteமனத் துணிவுடன் இறுதி முடிவு எடுத்துத் தானே ஆக வேண்டும். நன்றாக உள்ளது ஏமாற்றம், விரக்திக் கவிதை. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com