Monday, January 09, 2012

கண்ணாடி...,


புற அழகை காட்டும் கண்ணாடி,
அறியுமா மனித மனமும்
அதனுள் ஒளிந்திருக்கும் சூதும்??
அதை அறிய


கண்ணாடிக்கும் கூட,

கண்ணிரண்டு வேண்டும்,
அந்த கண்களும் போதாமல்,
கண்ணாடியும்(Mirror) கூட கண்ணாடி(Specs) போடும்.

24 comments:

  1. மனதில் ஓடும் சூது எண்ணங்களை மனிதர்கள் மட்டுமல்லம்மா... கண்ணாடி அறிந்தால்கூட ஆபத்துதான்! கண்ணாடி ஸ்பெக்ஸ் போடாது சிதைந்தே போகும் என்று தோன்றுகிறது. நல்ல கவிதைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. இதுக்குதான் வம்பெ வேணாம்னு நான் கூலிங்க் கிளாஸ் பொட்டிருக்கேன்

    ReplyDelete
  3. கண்ணாடிக்கு தெரிஞ்ச என்னவாகும் யோசிக்கவே பயமா இருக்கு இருப்பினும் நல்ல பகிர்வு

    ReplyDelete
  4. கண்ணாடியும்(Mirror) கூட கண்ணாடி(Specs) போடும்.///

    எப்படியெல்லாம் யோசிக்கறிங்க?

    ReplyDelete
  5. ஒஸ்தி படம் பார்த்தியாம்மா தங்கச்சி ஹி ஹி...? அதுலதான் சிம்பு கண்ணாடி கண்ணாடின்னு விரல் சொடுக்குவார்...!!!

    ReplyDelete
  6. யம்மா கண்ணாடிக்கு நம்ம மனசில் இருப்பது தெரிந்தால் வீட்டுக்குள்ளே இருக்க முடியுமாக்கும் அவ்வ்வ்வ்....

    ReplyDelete
  7. சிறுக சொன்னாலும் பொருத்தமான வரிகள், சூப்பர்'ம்மா....!!!

    ReplyDelete
  8. சி.பி.செந்தில்குமார் கூறியது...
    இதுக்குதான் வம்பெ வேணாம்னு நான் கூலிங்க் கிளாஸ் பொட்டிருக்கேன்//

    டேய் நீ எதுக்கு கூலிங்கிளாஸ் போட்டுருக்கேன்னு உண்மையை சொல்லட்டுமா ராஸ்கல்...

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. மனசுல இருக்ற எல்லாம் கண்ணாடிக்கு தெரிஞ்சா எவ்வளவு மேக் அப் போட்டாலும் நம்மளை அசிங்கமாத்தான் காட்டும்...

    ReplyDelete
  11. கவிதை அருமை அக்கா..
    ஆனால் தமிழ் கவிதைக்கு ஆங்கிலத்தில் அர்த்தம் சொன்னால்தான் புரியும் என்கிற நமது நிலை மட்டும் கூசுகிறது...

    ReplyDelete
  12. சும்மா நச்சுன்னு நல்லா சொல்லியிருக்கீங்க.

    ReplyDelete
  13. 'நாய்கள் ஜாக்கிரதை' போய் 'கண்ணாடிகள் ஜாக்கிரதை' தொங்கும்.:))

    ReplyDelete
  14. அய்ய்யோ கண்ணாடி மனம் அறிந்தால்
    அல்லது மனம் காட்டக்கூடுமானால்
    அது ஆபத்தாக அல்லவா போய்விடும்
    யார்தான் கண்ணாடி பக்கம் போவார்கள்
    வித்தியாசமான அருமையான சிந்தனை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. கண்ணாடியே கண்ணாடி போட்டனும்மா??? நல்லா யோசிக்கிறீங்க....

    ReplyDelete
  16. //கண்ணாடிக்கும் கூட,
    கண்ணிரண்டு வேண்டும்,//

    கண்ணாடி கண்ணாடி போட்டாலும் கூட மனித மனதை வாசிப்பது கஷ்டம்தான். கவிதை அருமை.

    ReplyDelete
  17. அசத்தல் சகோதரி...
    ஈரடியில் ஓர் குறளை சொன்னதுபோல
    நச்சுன்னு ஒரு குறுங்கவிதை...

    ReplyDelete
  18. முகத்துக்கு நேர முகம் காட்டும் அதன் நிறம் காட்டும்
    ஆனால் மறைமுகமும் காட்டும் அதன் அகமும் காட்டும்
    மாயக்கண்ணாடியே.....

    அருமை அருமை...

    ReplyDelete
  19. அதைத்தான் சொன்னார்கள் கண்ணாடி சொல்லும் உண்மையென்று.சிந்தனைக் கவிதை அற்புதம் ராஜி !

    ReplyDelete
  20. ம்....ம்... அப்படி மட்டும் காட்டத் தொடங்கிவிட்டால் யாரும் கண்ணாடியில் தன்னைப் பார்க்க மாட்டார்கள். அடுத்தவரைத் தான் பார்க்க முயல்வார்கள். அருமையான சிந்தனை. பாராட்டுகள் ராஜி.

    ReplyDelete
  21. கண்ணாடிக்கு கண்ணாடி போட விரும்ம்பும் உங்களது கவிதை அருமை.

    ReplyDelete
  22. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜி...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..

    வித்தியாசமான சிந்தனை..

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete