Saturday, January 14, 2012

போகி...,பழையன கழிதலும், புதியன புகுதலும்.....

                                

      பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படும் போகியானது பழையன கழித்து புதியன புகுத்தும் நாளாக கருதப்படுகிறது. பழயவற்றவையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாக கருதப்படுகிறது.  பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகை “போக்கி” என்றழைக்கப்பட்டு நாளடைவில் மருவி  “போகி” என்றானது.

      அன்றைய தினம், வீட்டில் தேங்கியிருக்கும் குப்பைகள், தேவையற்ற பொருகளை அப்புறப்படுத்திவிட்டு வீடு சுத்தமாக்கப்ப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் அவ்வப்போது நீக்கப்படவேண்டும் என்பதே இதில் மறைந்துள்ள தத்துவமாகும். 
                                 


    பொங்கல் கொண்டாட்டம் என்பது வெறும் மூன்று நாட்கள் மட்டுமல்ல அதற்கான ஆயத்தங்கள் மார்கழி பொறந்த உடனே ஆரம்பிச்சுடும், வீட்டை சுத்தம் பண்ணி, சுண்ணாம்பு அடிப்பது, துணி எடுப்பது, அதை தைக்க குடுத்து, நடையா நடந்து வாங்கிவருவது, சமையல் பொருட்கள் வாங்கி வருவது, விறகை காய வைக்குறதுன்னு பெருசுங்கலாம்  பிசியா இருப்பாங்க.
      பொட்டு பொடுசுங்க லாம் என்ன துணி வாங்கலாம், அதை எந்த மாடல்ல எங்க தைக்க குடுக்கலாம்ன்னு பிளான் பண்ணும்ங்க. பொம்பளை பிள்ளைங்கள்லாம் கோலம் போட்டு பழகுறது, மருதாணி கிள்ளி வந்து அரைச்சு வைக்குறதுன்னும் இருப்பாங்க. ஆம்பிளை பசங்க கபடி, கிரிக்கெட், சைக்கிள் போட்டிலாம் எங்கே வைக்கலாம். எந்த நடிகரோட படம் எந்த தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது? எந்த ஷோ போலாம்ன்னு பிளான் பண்ணுவாங்க.

         போகி அன்று அதிகாலையில் எழுந்து வீட்டு வாசல்ல குப்பைகள், உபயோகமற்ற பாய், சாக்கு பைலாம் போட்டு எரிச்சு குளிர் காய்வோம். பின்பு, வீட்டை சுத்தம் பண்ணும் அம்மாவுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லி உபத்திரவம் கொடுப்பேன். பரணை மேல் ஏறி வாடகை கொடுக்காமல் குடியிருக்கும் எலி, கரப்பான் பூச்சி, தேள், பூரான் குடும்பத்தைலாம் வம்படியா காலி பண்ணுவேன்.
                  
                    3 வருசத்துக்கு முன்னாடி காணாமல் போன அப்பாவின் பல்துலக்கும் பிரஷை கண்டுபிடிச்சு குடுத்துட்டு, அப்பாவின் செண்டிமெண்ட் பேனாவை எங்கேயோ மறந்து காணாம போக்குறதும், கேஸ் அடுப்பை கழுவுறேன்னு, நல்லா எரியுற அடுப்பை ரிப்பேர் ஆக்குறது, லைட்லாம் தொடைக்குறேன்னு போட்டு உடைக்குறதும் எனக்கு கைவந்த கலை. அதுக்காக அப்பா அடிக்க துரத்த, பக்கத்துவீட்டு ஐயர் மாமி வீட்டுல தஞ்சம் புகுவதும் பதிவுக்கு அப்பாற்பட்ட கதை.
 

19 comments:

  1. மிக அருமையான அனுபவங்கள் ரஜி.இனிய பொங்கல் வாழ்த்தகள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  2. பதிவிற்கு அப்பாற்பட்ட கதையும் சுவை.தமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள் சகோதரி..

    தமிழ் புத்தாண்டு தினத்தை தீர்மானிப்பது அரசியல் வாதிகளா?இலக்கியவாதிகளா?

    ReplyDelete
  3. இந்த மாதிரி கலாட்டாக்கள்லாம் எல்லா இடத்துலயும் நடக்குது போலருக்கு... அனுபவங்கள் மிக ரசனையாக இருந்தது தங்கச்சி... உனக்கும் வீட்டிலுள்ள அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. என்றும் மங்கா பொங்கல் நினைவுகளுடன்
    பொங்கல் சிறப்புப் பதிவினை மிக மிக அருமையாகக்
    கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. கடைசி பத்தி சூபரு...:)

    ReplyDelete
  6. பொங்கல் நினைவுகள் மற்றும் போகிக் கலாட்டாக்கள் அருமை.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ராஜி.

    ReplyDelete
  7. போகி நல்லாத்தான் இருக்கு..

    பழையன கழிதலும் புதியன புகுதலும்.. எனும் அடிப்படையில் புதிய ஃபலோவராக அதிரா உள்ளே வந்திருக்கிறேன்:)))).

    ReplyDelete
  8. >>வீட்டில் தேங்கியிருக்கும் குப்பைகள், தேவையற்ற பொருகளை அப்புறப்படுத்திவிட்டு வீடு சுத்தமாக்கப்ப்படும்.

    அடடா, அப்போ பொங்கல்க்கு நீங்க வேற வீடு குடி போறீங்களா? அய்யோ பாவம்

    ReplyDelete
  9. கடைசி பத்தியின் காமெடி சூப்பர்... எல்லோர் வீட்டுலயும் இது நடக்கும். நன்றாக உள்ள பொருள்களை சுத்தமாக்குகிறேன் என சொல்லிக்கொண்டு ரிப்பேர் பண்ணுவது.உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிமையான பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  11. பழையன அனைத்தையும் கொளுத்தி அழித்டுவிட முடியாதுதான்.நல்ல் நினைவுகள் மிஞ்சட்டும்.

    ReplyDelete
  12. காமெடியாக சொல்லியிருக்கீங்க. நல்ல பதிவு.

    இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அருமையான அனுபவங்கள்..தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. Ketta Porutkal mattumalla. Ketta Ennangalum agala vendum. Arumaiyana sinthanai. Arumai. Pongal Vaalthukkal Sago.

    TM 8.

    ReplyDelete
  15. அருமையான அனுபவங்கள் சகோதரி.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
    மனதிற்கினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. ராஜி...ஈழத்தில் நான் காணவில்லை போகிப்பொங்கல் என்கிற ஒன்றை.ஆனாலும் ஒரே பகிடிதானப்பா !

    ReplyDelete
  17. என்னாஆஆஆ சேட்டை..!! :) பொங்கல் வாழ்த்துகள்ங்க...

    ReplyDelete
  18. எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete