Tuesday, January 24, 2012

உன் மகவாக...,


காதலிக்க காட்டிய அக்கறையை
ஏன் கல்யாணத்தில் காட்ட
மறந்து மறுத்து விட்டாய் !

உன் கண்களில் இருக்கும்
என் உருவத்தை ஏனோ ..
கண்ணீரில் கரைக்கிறாய் ..
காரணம் ஆயிரம் இருக்கும்
அதற்காக காதலை மறுப்பதா?

அன்பே!
சூழ்நிலை காரணமாய்
நீ என்னை மறந்து
வேறொரு வரை திருமணம்
செய்தாலும் ..

உன்னை வாழ்த்த வருவேன் ..
அதுதான் என் கடைசி சந்திப்பு
என நினைக்காதே ?

நீ என்னை ஏமாற்றியதற்காக
உனக்கு வலியை தருவேன் ..!
வயிற்றில் எட்டி உதைப்பேன் ..
உன் கருவறையிலிருந்து அழுது
கொண்டே வெளிவருவேன் ..
அப்போதும் உன் உயிராக ……

 

24 comments:

  1. கவிதை அருமை தோழி..முடிவு நன்று..வாசித்தேன்..வாக்கிட்டேன்..நன்றி.

    ReplyDelete
  2. காதல் வலிக்கவிதை சிறப்பாக இருக்கு

    ReplyDelete
  3. வித்தியாசமான சிந்தனை...

    ReplyDelete
  4. நீ என்னை ஏமாற்றியதற்காகஉனக்கு வலியை தருவேன் ..!வயிற்றில் எட்டி உதைப்பேன் ..உன் கருவறையிலிருந்து அழுதுகொண்டே வெளிவருவேன் ..அப்போதும் உன் உயிராக //…

    வழக்கம்போல வித்தியாசமான சிந்தனை
    அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அருமையான சோகமான கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. //நீ என்னை ஏமாற்றியதற்காகஉனக்கு வலியை தருவேன் ..!வயிற்றில் எட்டி உதைப்பேன் ..உன் கருவறையிலிருந்து அழுதுகொண்டே வெளிவருவேன் ..அப்போதும் உன் உயிராக //…

    அருமை.

    சோகமான கவிதை.

    ReplyDelete
  7. இந்தக் கவிதை புரிஞ்சதா இல்லையானு எனக்கு புரியல... ஆனால், கவிதை நல்லாயிருக்கு...

    ReplyDelete
  8. அதாவது... இறந்து உனக்கு குழந்தையாகப் பிறப்பேன். சோகம்தான்.

    ReplyDelete
  9. உன் கருவறையிலிருந்து அழுதுகொண்டே வெளிவருவேன் .. அப்போதும் உன் உயிராக//

    நல்லா வந்திருக்கு சகோதரி...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. கடைசிப் பாரா மட்டுமே தனிக் கவிதை! மனதில் நின்றது இந்த மென்சோகம் சுமந்த கவிதை. நன்றும்மா!

    ReplyDelete
  11. ஒரே அழுகாச்சியா இருக்கு..
    போங்கக்கா...

    ReplyDelete
  12. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. நெகிழ்ச்சியான கவிதை ! பாராட்டுக்கள் ! நன்றி!

    ReplyDelete
  14. காதலின் வலியைச் சபிக்காமல் "நீ எனக்கு இனியும் வேணும்" என்கிறதை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ராஜி.
    அசத்தல் கவிதை !

    ReplyDelete
  15. அப்போதும் உன் உயிராக ……

    உன் மகவாக...! சோகமாக இழைக்கும் கவிதை!

    ReplyDelete
  16. ஆஹா... பயங்கர மெரட்டலா இருக்கே... ஜஸ்ட் கிட்டிங்...நைஸ்...

    ReplyDelete
  17. //உன் கருவறையிலிருந்து// இந்த வார்த்தைகளை மட்டும் வெட்டி விட்டால் அக்மார்க் தரம் மிகுந்த கவிதை...இது என் கருத்துமட்டுமே.(சுஜாதா ஸ்டைலில் சொன்னேன்.) தப்பாக நினைக்காதீர்!

    ReplyDelete
  18. வேதனையையும் இதமாய்த் தாங்கும் வரமல்லவா அது! கனக்கும் கரு, கவிதையிலும்! பாராட்டுகள் ராஜி.

    ReplyDelete