Saturday, April 28, 2012

யார் பெறுவார் இந்த அரியாசனம்?!



ஒரு முறை விசுவாமித்திர முனிவர் கடுமையான தவம் செஞ்சுக்கிட்டு இருந்தார். அவருடைய தவம் முடிஞ்சு வேண்டும் வரம் வாங்கிட்டா  இந்திரனுடைய பதவிக்கே ஆபத்து வந்துடும். அதை இந்திரன் விரும்பலை. எனவே தனது பதவியைக் காப்பாத்திக்க ஆசைப்பட்டான் இந்திரன்.

அதுக்காக தன்னோட சபையில டான்ஸ் ஆடுற  ரம்பை, ஊர்வசி ரெண்டு பேரையும் கூப்பிட்டு , ரெண்டு பேரில் ஒருத்தரை அனுப்பி முனிவரின் தவத்தைக் கலைச்சுட சொல்லி அனுப்ப நினைத்தான்.

ரெண்டு பேரில் யாரை அனுப்புறது ன்னு இந்திரனுக்குப் புரியலை. இதை கேள்விப்பட்ட ரெண்டு பேரும் நானே போறேன்னு  போட்டி போட்டனர்.



""யாராவது ஒருத்தங்க மட்டும்தான் போகனும். உங்க ரெண்டு பேருல  யாரை அனுப்பலாமென்னு நீங்களே சொல்லுங்கள்,'' ன்னான் இந்திரன்.

""டான்ஸ் ஆடுறதுல  என்னை அடிச்சுக்க யாருமே இல்லை. அதனால  நான் தான் பூலோகத்திற்குச் போவேன்,'' ன்னு ரம்பை சொன்னா.

""ரம்பை டான்சுல மட்டும்தான் பெட்டர். நான் பேச்சு, சமையல்ன்னு எல்லாத்துலயும் பெட்டர் ன்னு உங்களுக்கே தெரியும். அப்படி இருக்க  என்னை விட பெஸ்ட்  வேற யார் இருக்க முடியும்,'' ன்னு  ஊர்வசி சொன்னா.

ரெண்டு பேருடைய பேச்சையும் கேட்ட இந்திரனுக்கு ஒன்னுமே புரியலை. ரெண்டு பேருல யார் பெஸ்ட்ன்னு  முடிவுக்கு வர அவனால்முடியவிலலை.இந்த நேரத்துல  நாரதர் அங்க  வந்தார். இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான்.

""இந்திரதேவா, ஏன் சோகமா  இருக்க?'' ன்னு கேட்டார் நாரதர்.

""ஐயா! விசுவாமித்திர முனிவர் கடும் தவம் செஞ்சுக்கிட்டிருக்கிறார். அவரது தவத்தைக் கலைக்க என் டான்ஸ் குழுவுல இருக்குற  ஒருவரை அனுப்ப நினைச்சு, .  அவங்க  ரெண்டு பேரையும் வரவச்சேன். ஆனா, இப்ப இவங்க ரெண்டுப் பேருல  யாரைப் பூலோகத்திற்கு அனுப்புறது ன்னு  புரியல...'' ன்னான்  இந்திரன்.

""ரெண்டு பேரையும் உன் சபையில டான்ஸ் ஆட சொல்லலாம்.  யார் சூப்பரா  டான்ஸ் ஆடுறாங்களோ   அவளை பூலோகத்திற்கு அனுப்பலாம்ன்னு...'' சொன்னார் நாரத முனிவர்.

மறுநாள் இந்திர சபையில் ரம்பை, ஊர்வசி யின் டான்ஸ் புரோகிராம்  நடந்தது. டான்ஸை பார்க்க   தேவர்களும், எல்லா  கலைகளையும் உணர்ந்த கலைவாணர்களும் சபைக்கு வந்து இருந்தனர்.

டான்ஸ்  ஆரம்பம் ஆச்சு. ரெண்டு பேரும் சளைக்காமல் ஆடினாங்க.

ஒருத்தருக்கொருவர் விட்டுக் கொடுக்கலை. ரெண்டு பேருமே சூப்பரா டான்ஸ்  ஆடினாங்க. யாருடைய டான்சுலயும் குத்தம்  சொல்ல முடியலை. ரெண்டு பேருமே சரிசமமாக ஆடினாங்க. ரெண்டு பேருடைய டான்சுல  யாருடைய டான்ஸ் பெஸ்ட்ன்னு   ஜட்ஜ்மெண்ட் சொல்ல முடியாமல எல்லாரும் குழம்பி போய்ட்டாங்க.

இந்த நேரத்த்ல  நாரத முனிவர் எழுந்து, ""இந்திரனே, இங்கிருக்குற  யாராலும் முடியாத காரியத்தைச் செய்யக்கூடிய ஒருத்தன் பூலோகத்தில் இருக்கான். அவன் பேரு விக்கிரமாதித்தன். உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை ஆண்டு சகல கலைகளையும் படிச்சவன் விக்கிரமாதித்தன்.  நாட்டியக் கலையை  சூப்பரா  படிச்சு பாஸ் பண்ணவன். அவனை இங்கு கூட்டி வரச் சொல்லி அவன்  முன்னாடி ரம்பை, ஊர்வசி ரெண்டு பேரையும் ஆடச் சொன்னா,  யார் பெஸ்ட்ன்னு  அவன் சொல்லிவான்,'' ன்னு சொன்னார்.

உடனே இந்திரன் தப்போட தேரோட்டியை  கூப்பிட்டு,  உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்திற்கு போய்  உடனே விக்கிரமாதித்தனை இங்கு கூட்டிக்கிட்டு வா'' ன்னு சொன்னான்.

  தேரோட்டிக்கு விக்கிரமாதித்தனை இந்திரலோகத்திற்கு கூட்டி வர இஷ்டமில்லை. "ஒரு மானிடன் இந்திர லோகத்திற்கு வருவதா?' ன்னு நினைச்சான்.

இதை தெரிஞ்சுக்கிட்ட நாரதமுனிவர், ""தேர்ரோட்டி, விக்கிரமாதித்தனை அவ்வளவு சாதாரணமாக நினைத்துக்காதே! தேவர்களுக்கெல்லாம் மேலானவன் . இங்கு எழுந்துள்ள சிக்கலான பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடியவன் அவன் ஒருத்தனே. எனவே, லேட் பண்ணாம அவனை இங்கு கூட்டி  வா,'' ன்னு சொன்னார்.

தேரோட்டியும் அரை மனசோட பூலோகத்திற்குச் போனான். விக்கிரமாதித்தனை பார்த்து  இந்திரன் அவனை கூட்டி வர சொன்னதை  சொன்னான்.

விக்கிரமாதித்தன் நேரா காளிகோயிலுக்குச் போனான். காளியிடம் எலுமிச்சம் பழமும் திருநீறும் ஆசியும் வாங்கிகிட்டு  இந்திரலோகம் போக கிளம்பினான். தேவலோகத்திலிருந்து வந்த விமானத்தில் ஏறுறதற்காக விக்கிரமாதித்தன் வலது காலை எடுத்து வைத்தான்.

இடது கால் தரையில் இருச்சு. அந்த நேரத்துல  தேரோட்டி, "இந்த மானிடன் இந்திரலோகத்திற்கு வருவதா?' ன்னு நினைச்சு விமானத்தைத் திடீருன்னு கிளப்பிட்டன்.

இதை தெரிஞ்சுக்கிட்ட விக்கிரமாதித்தன் தன்னோட வலது காலின் பெருவிரலைத் தேர் படிக்கட்டுல  அழுத்தமாக ஊணிக்கிட்டான். தேரோட்டி எவ்வளவு டிரை  செஞ்சும் விமானத்தை அவனால் மேலே கிளப்ப முடியவிலை.

உடனே தேரோட்டி விக்கிரமாதித்தனிடம் மன்னிப்புக் கேட்டுக்கிட்டு பின்னாடி விமானம் தேவலோகம் நோக்கி போச்சு.

இந்திரன் விக்கிரமாதித்தனை எதிர் கொண்டழைத்தான். தங்கத்துல செஞ்ச சேரை கொடுத்து உக்கார வச்சான்.  விக்கிரமாதித்தனிடம் எல்லா மேட்டரையும்  சொல்லி  அவன்கிட்ட  ஒரு பாரிஜாத மாலையைக் கொடுத்தான்.

""விக்கிரமாதித்தரே! ரம்பை, ஊர்வசி ரெண்டு பேருல யாரை நீங்க செலக்ட் பண்றீங்களோ அவ கழுத்துல இந்த மாலையை போடுங்கன்னு னான் இந்திரன்.

போட்டி ஆரம்பமாச்சு. ரெண்டு பேரும்,  முன்ன மாதிரியே ஒருத்தருக்கு ஒருத்தர் சளைக்காம ஆடினாங்க. விக்கிரமாதித்தனுக்கு யாரை செலக்ட் பண்ரதுன்னு  புரியலை.

போட்டி முடிவுஞ்ச  பிறகு, ""தேவேந்திரா, ரெண்டு பேரும் தனித்தனியாக ஆடினாங்க. அதனால, ரெண்டு பேருல யார் சூப்பரா டன்ஸ் ஆடுனாங்கன்னு என்னால கண்டுபிடிக்க முடியலை.    நாளைக்கு  ரெண்டு பேரையும் ஒண்ணா  ஆடச் சொல்லின்ங்க. அதைப் பார்த்தப் பின்னாடி என்னுடைய தீர்ப்பை சொல்றேன்,'' னான் விக்கிரமாதித்தன்.

மறுநாள் காலையில விக்கிரமாதித்தன் நந்தவனத்திற்கு போனான். அங்கு இருந்த பூவையெல்லாம் கிள்ளிக்கிட்டான். அதை  ரெண்டு பூச்செண்டுகளாகக் கட்டிகிட்டான். அதுக்குள்ள நிறைய வண்டுகளை வச்சு   கட்டினான்.

இரவு டன்ஸ் புரோகிராம்  நடக்கும் போது, தான் ரெடி பண்ணி வச்சிருந்த  பூச்செண்டுகளோட சபைக்கு போனான். டான்ஸ்   ஸ்டார்ட் ஆகறதுக்கு முன்னாடி , ""வெறுங்கையோடு  ஆடினா அழகாக இருக்காது. இந்தப் பூச்செண்டுகளை  பிடிச்சுக்கிட்டு ஆடினால அழகா இருக்கும்,'' ன்னு  சொல்லி விக்கிரமாதித்தன் ரெண்டு பேர்கிட்டயும்  ஆளுக்கொரு பூச்செண்டைக் கொடுத்தான்.

ரம்பையும், ஊர்வசியும் விக்கிரமாதித்தன் கொடுத்த பூச்செண்டுகளுடன் டான்ஸ் ஆட ஆரம்பிச்சாங்க. டைம் ஆக ஆக ரம்பை தன்னை மறந்தா. கையில் பிடித்திருந்த பூச்செண்டை அழுத்திப் பிடித்தவாறு வெறி பிடிச்ச மாதிரி  ஆடிக் கிட்டிருந்தா. பூச்செண்டை அவள் அழுத்திப் பிடிச்சதால  அதுக்குள்ளிருந்த வண்டுகள் அவ கையைக் கொட்டத் தொடங்கின. வலி தாங்காத ரம்பை ஆட்டத்தை மறந்தா. தாறுமாறாக, ஆட ஆரம்பித்தா. தாளம் தவறி ஆட ஆரம்பித்தா.

ஆனா, ஊர்வசி நிதானமாக ஆடியதால் பூச்செண்டை மென்மையாகக் கையில் பிடித்துக் கொண்டிருந்தா. இதனால் வண்டுகள் அவளை ஒன்றும் செய்யவில்லை. தாளத்துக்குத் தக்கவாறு அவள் ஆடினா.

இதிலிருந்து ஊர்வசியே சூப்பரா டான்ஸ் ஆடினான்னு   தீர்ப்பு சொன்னான் விக்கிரமாதித்தன், இந்திரன் கொடுத்த பாரிஜாத மாலையை அவளுக்கு போட்டான்.

விக்கிரமாதித்தனின் தீர்ப்பை பார்த்து  ஆச்சர்யப்பட்ட  இந்திரன் அவனைப் பாராட்டி, தான் இந்திரப் பட்டம் ஏறியப்போ பரமேசுவரனால் அவனுக்குப் பரிசாக கொடுத்த  தங்க சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக கொடுத்தான்.

  ரொம்பவே அழகான அந்த சிம்மாசனத்துக்கு முப்பத்திரெண்டு படிகள் இருந்தன.ஒவ்வொரு படியிலும் ஓர் அழகிய பதுமை இருந்துச்சு. சிம்மாசனத்தில் ஏறதா இருந்தா  ஒவ்வொரு பதுமையின் தலைமீது கால்வைத்துத் தான் ஏறவேண்டும்.

இந்த சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசா தந்த  இந்திரன், ""இந்த சிம்மாசனத்தில் உக்காந்துக்கிட்டு  ஆயிரம் வருசம்  சிறப்பாக ஆட்சி செய்யனும்ன்னு   வரமும் கொடுத்தான்.

ரத்தின மயமான அந்த சிம்மாசனத்துடன் விக்கிரமாதித்தன் உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை வந்து இப்ப இருக்குற அரசியல்வாதி போல இல்லாம நாட்டை நல்லவிதமா ஆண்டான்.

17 comments:

  1. இந்தக்கதை முன்பே கேள்வி பட்டிருக்கேன். திரும்ப படிக்கவும் நல்லாதான் இருக்கு.

    ReplyDelete
  2. என்னதிது... அப்புவுக்குச் சொல்ல வேண்டிய கதைல்லாம் எங்களுக்குச் சொல்லிக்கிட்டு... நான் போய் நிரூவை வரச் சொல்றேன் இதைப் படிக்க. அதுசரி... ரம்பையும் ஊர்வசியும் ஆடினது எந்தப் பாட்டுக்கு... வொய் திஸ் கொலவெறிடா..?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அருமை .., சிறுவயதில் பள்ளிக்கூடங்களில் கேட்டு மறந்துபோன கதை அதன் பிறகு இப்போதுதான் வாசிக்கும் பாக்கியம் கிடைத்து. வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றி ..!

    ReplyDelete
  5. சர்தான்..... சகோ உங்க பாணியில கதை சொல்றீக .....ம் ம் ம்

    ReplyDelete
  6. கதை ரொமப நல்லா இருககுக்கா... எனக்குத் தெரியாத புது விஷயம் இது. Thankyou Verymuch!

    ReplyDelete
  7. டைரக்டர் ஹரியோட ஆசனம் அவர் சம்சாரம் வனிதாவுக்குத்தான் ஹி ஹி

    ReplyDelete
  8. தெரிந்த கதை - உங்கள் பாணியில்.... வாழ்த்துகள்....

    ReplyDelete
  9. கதை மிக அருமையாக இருந்தது இன்று இரவு என் குழ்ந்தைக்கு சொல்ல ஒரு நல்ல கதை கிடைத்துவிட்டது மிகவும் நன்றி

    ReplyDelete
  10. உங்கள் பாணியில் கதை சொன்ன விதம் அருமை ! பாராட்டுக்கள் !

    ReplyDelete
  11. நான் இப்போதான் முதன் முறையாக அறிகிறேன் இந்தக்கதையை.
    நன்றி ராஜி !

    ReplyDelete
  12. கதை சொல்லிப்போனவிதம் அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. ம்ம்ம்ம் நல்ல கதை அக்கா

    ReplyDelete
  14. ரத்தின மயமான அந்த சிம்மாசனத்துடன் விக்கிரமாதித்தன் உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை வந்து இப்ப இருக்குற அரசியல்வாதி போல இல்லாம நாட்டை நல்லவிதமா ஆண்டான்.


    சூப்பர் பஞ்ச்..

    ReplyDelete
  15. கதை சொன்ன விதம் அருமை...நன்றி சகோதரி...

    ReplyDelete