Monday, November 26, 2012

நீயின்றி நானில்லை..., என் காதல் பொய்யுமில்லை..,



                          
உனக்காக இதயத்தையும்..,
விழிகளையும்.., வானையும்...,..
தென்றலையும்.., நிலவையும்..,
பறவைகளையும்..., பூக்களையும்
தூதுவிட்டேன்...,
என் காதலை
உனக்கு உணர்த்த சொல்லி?!


பூவானது வாடி வந்து சொன்னது
நீ மறுத்து விட்டாய் என்று
கலங்கி போய் வந்தன கண்கள்
உணர்ந்துகொண்டேன்


வான் இருண்டு போனது
நீ துரத்திவிட்டதால்
நிலவானது தேய்ந்து போனது
நீ பாராமுகமாய்
அனுப்பிவிட்டதால்


எனக்கு காரணம்
சொல்ல தெரியாமல்
தென்றலோ திசை மாறி
சென்றுவிட்டது

பறவையோ சோகமாய் வந்தது
இதயம் மட்டும் தூதாய் போய்
இன்றும் வர மறுக்கிறது


ஒரு வேளை
என் இதயத்தை
மட்டும் வைத்து கொண்டு
எல்லாவற்றையும்
திருப்பி அனுப்பி விட்டாயோ


இதே நினைவில் வாழ்கிறேன்
நான்...
என் இதயம் உன்னிடத்தில்
தஞ்சமாய் இருப்பதால்..... 

19 comments:

  1. உங்களது இதயமும் உன்னவுடைய இதயமும் ஏக்கமாய் இணைத்துள்ளது தூக்கமின்றி தவிக்காதே துனைவருவான் உனை அடைவான்

    ReplyDelete
  2. வாவ்!கலக்கலான கவிதை, கடைசி வரியை எதிர்பார்க்கவில்லை! அற்புதம்.

    ReplyDelete
  3. கவிதை வரிகள் அழகு

    ReplyDelete
  4. கவிதையில கலக்குறீங்க..
    கலக்குங்க..கலக்குங்க..

    ReplyDelete
  5. வயசு கூட கூட காதலும் சுவை கூடும் என்பது உறுதியாகிறது அக்கா .. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ம்க்கும் ஏற்கனவே என்னை கிண்டல் அடிப்பாங்க. இதுல வயசு கூட கூடன்னு போட்டுட்டிங்களா?! இனி கும்மியடிப்பாங்க சகோ

      Delete
    2. ஐம்பதிலும் காதல் வரும் என்று சொல்லுவார்களே அதுதான் இந்த காதலா?

      Delete
    3. எண்பதுலயும் வரும் சகோ!

      Delete
  6. // நிலவானது தேய்ந்து போனது
    நீ பாராமுகமாய்
    அனுப்பிவிட்டதால்
    //

    அருமையான உவமை ... அழகிய எழுத்து நடை

    ReplyDelete
  7. kavithai .....



    arumai...

    ReplyDelete
  8. நல்ல வரிகள் சகோதரி... அருமை...

    ReplyDelete
  9. அருமையான உவமைகளை அழகாக சொல்லி செல்லும் இனிய காதல் கவிதை இதயத்தை கவர்ந்து செல்கிறது சகோ .

    ReplyDelete
  10. நல்ல கவிதை.... பாராட்டுகள்.

    ReplyDelete
  11. கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete

  12. இயற்கையின் நிகழ்வுகளை வைத்து இனிய கவிதை வடித்த சகோதரிக்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. வாவ்! அருமை.

    "என் இதயத்தை
    மட்டும் வைத்து கொண்டு
    எல்லாவற்றையும்
    திருப்பி அனுப்பி விட்டாயோ"....

    ReplyDelete
  14. இதயம் படுத்தும் பாடு எனலாமா?
    இதயத்தை வைத்து அசத்தப் பட்டுள்ளது.
    அருமை.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  15. மனம் கவரும் அழகான
    கவிதை சகோதரி..
    நினைவினில் ஊஞ்சலாடுகிறது....

    ReplyDelete