Wednesday, November 25, 2015

கார்த்திகை தீபம் - நினைவுமீட்டல்

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளைக்கு முன்னாடி நம்ம பதிவில் தீப தரிசனம் பற்றி விரிவாக நமது புண்ணியம் தேடி போற பயணத்தில் பார்த்தோம். அப்ப, கார்த்திகை தீபம் பார்க்க, மலைக்கு செல்லுமுன் அண்ணாமலையாரை தரிசித்து விட்டு மலைமேல் தீப தரிசனம் செஞ்சோம். அப்ப மேக மூட்டமாக இருந்துச்சு. இந்தமுறை பகல் பொழுதிலேயே நாம் தீபம் ஏற்றும்முன் மலை மேல் போய் பார்க்கனும்ன்னு முதல்லியே முடிவு பண்ணி கிளம்பிட்டோம். 
ஆனா, வீட்டில் இருந்து புறப்படும் போதே சூரியன் மறைஞ்சு சந்திரனும் உதயமாகி விட்டான். நாம எப்ப நேரத்திற்கு புறப்பட்டு இருக்கோம்?ன்னு வீட்டில் ஒரே திட்டு. நான் என்னங்க பண்ணட்டும்?! கார்த்திகைக்கு சாமிக்கு படையல் போட்டு கிளம்ப வேணாமா?!! ஒரு வழியா எல்லா வேலையையும் முடிச்சுட்டு கிளம்பினா,  திருவண்ணாமலைக்கு 15கி. மீ முன்னயே ட்ராப்ப்ப்ப்ப்பிக்.  தீபம் பார்த்துட்டு அண்ணாமலையாரை தரிசிக்க சென்ற போது நள்ளிரவு நேரம் ஆகிட்டு. சரி, அருணாசலேஸ்வரா! நீயே துணைன்னு அவரை  கும்பிட்டு பயணத்தை தொடர்ந்தோம்....,
சாமி தரிசனம் முடிச்சுட்டு மலையேற ஆரம்ப்ச்சோம். மூணாவது வருசம் போன போது பாதை தெளிவா இருந்துச்சு. இந்தமுறை சரியான வழிகாட்டி இல்லாததால எங்களுக்கு முன்னாடி போனவங்களை பார்த்து பின்தொடர்ந்து போனோம். பாதை சிறிது கரடு முரடாகவே இருந்தது .
ஒருவழியா பாதி மலை ஏறிட்டோம். மலைமேல் இருந்து பார்க்கும் போது கோவில் சின்னதா தெரிஞ்சுது. மேல போக போக கோயில்லாம்  மேக மூட்டத்துக்கிடையில் தெளிவின்றி இருந்துச்சு.
வேண்டுதலுக்காகவும், தீபம் ஏற்றும் கைங்கரியத்தில் நம்ம பங்கும் இருக்கட்டும்ன்னு நாம நெய் எடுத்துக்கிட்டு மலை மேல கொண்டு போய் கொடுக்கலாம்.  பாரம் சுமக்க முடியாதவங்களுக்காகவே மலைமேல் சிலர் சின்ன சின்ன பாட்டில்களில் நெய் விக்குறாங்க. அதேசமயம், அங்க குளிருக்கு இதமாக சுக்கு காபியும் கிடைக்கும். நாங்கள் போன போது அங்க இருந்தவங்க கூட தூங்கிட்டாங்க.
அதோ தூரத்தில் தெரியறதுதான் ”மகாதீபம்” . அங்கேயும் நெய்லாம் விக்குறாய்ங்க. மேலும் அங்க கவனமாக நிக்கனும்.செல்ஃபி எடுக்குறேன்னு பாறைகளில் அசால்ட்டா நிக்கப்படாது. ஏன்னா,  பக்தர்கள் கொண்டு செல்லும் நெய்யும், தீபத்துக்காக நெ நெய்யும் சிந்தி எல்லா இடமும் வழுக்கும். நாங்க போனபோது கூட சிலர் வழுக்கி விழுந்துட்டாங்க.ஒரு பெரியவர் கீழ விழுந்து கால்களில் அடிபட்டு தூக்கிட்டு போனாங்க. மேலும் காத்தும் அளவுக்கு அதிகமாக வீசும்.  அதனால, கவனமா நிக்கனும்.  

கார்த்திகை மாசம் ஓடும் மேகங்களைப் பார்த்து..., மழை மேகம்லாம் கார்த்திகை தீபம் பார்க்கப் போகுதுன்னு எங்க ஊர் பக்கம் சொல்லுவாங்க. கார்த்திகை தீபம் அன்னிக்கு கண்டிப்பா மழை பெய்யும். அட்லீஸ்ட் சிறுதூறலாவது இருக்கும். அதனால கவனமா மலை மேல் ஏறனும், நிக்கனும், தீபத்தை தரிசிக்கனும்.
தூரத்தில் தீபத்தை கண்டதும் மனதிலும், உடலிலும் இனம்புரியாத ஒரு சிலிர்ப்பு. அண்ணாமலையானுக்கு அரோகரா! ன்னு  சொல்லி.., கைக்கூப்பி, இறைவனை தொழுது.., எல்லோருக்கும் நன்மைவர பிரார்த்தித்து கொண்டு கொண்டுபோன நெய்யினை தீபத்தில் ஊத்தினோம். அப்படியே தீபத்தின் முன்னே ஒரு செல்பியும் எடுத்துக்கிடோம்.
மலைஉச்சியில் நல்ல குளிராக இருந்ததால, அங்க உதவிக்கு நின்ற பக்தர்கள் சிலர் தீபத்துக்கு அருகில் நெருப்பு பற்ற வைத்து குளிர் காய்ஞ்சுக்கிட்டு இருந்தாங்க. அதே மாதிரி, அங்க சேவைக்காக இருப்பவர்கள் பக்தர்கள் கொடுக்கும் உணவுப்பொருள் மற்றும் தண்ணீரையும் மனமகிழ்வுடன் வாங்கிக்கிறாங்க.
மலைமேல  பக்தர்கள் கூட்டம் சுமாரா இருக்கு. எல்லோரும் தீபத்தை காணும் ஆவலில் கஷ்டப்பட்டு மலை ஏறி வந்திருந்தாங்க. திருமணமானவர்கள், நண்பர்கள், காதலர்கள், வயதானவர்கள், குடும்பத்துடன்  என  தினுசு தினுசா மலைமீது ஏறி கார்த்திகை தீபத்தை தரிசிக்க வந்திருக்காங்க .
நானும் பரவசத்துடன் தீபத்தை கண்குளிர பார்த்து, வணங்கி, வேண்டி அண்ணாமலையாருக்கு அரோகரா! ன்னு தீபத்தை தரிசிச்சுட்டு இருந்தோம். அப்போ, ஒரு குரல்.  தீபதரிசனம் செஞ்சவங்கலாம், கவனமா பாறையில் இறங்கி போங்க.  காத்து பலமா வீசுது. பாதை ஓரமா போவாதீங்க. பாறைலாம்  நெய் கொட்டி வழுக்குது, கவனமாபோங்க. எதிர்க்க வர்றவங்களுக்கு, பின்னாடி வர்றவங்களுக்கும் அடுத்தவர்களுக்கு வழி விடுங்கன்னு. ஒருத்தரை ஒருத்தர் போட்டி போட்டுக்கிட்டு முந்தாதீங்க. அண்ணாமலையாருக்கு காணிக்கை செலுத்துங்கன்னு அந்த குளிரிலும் சிவனடியாரது குரல் கணீர்ன்னு கேட்டுச்சு.


நாங்களும் பயபக்தியோடு அங்க இருந்த தற்காலிக உண்டியலில் காசு போட்டுட்டு, விளக்கில் இருந்து வழிந்த நெய்யை அவர்கள் ஒரு சிறிய பாட்டிலில் பிடித்து தர, அந்த புனிதமான நெய்யை வீட்டுக்காக கொண்டு வாங்கிக்கிட்டோம். வீட்டில்  இருந்து லைவ் டெலிகாஸ்ட்ல பார்த்துக்கிட்டு இருந்த என்னை. மலைமீது வரை வர உடல் வலுவும், மனதைரியத்தையும் தந்த இறைவனுக்கு  நன்றி சொல்லி தீபத்தை வணங்கினோம் .  
குளிரிலயும், பனித்துளிகளுக்கிடையிலும் எந்த பாதிப்பும் இல்லாம ஆரவாரத்தோடும் கம்பீரமா, அடிமுடி காண முடியாத ஜோதிமயமானவனே தீபம் ரூபம் கொண்டு “மகாதீப”மாய்  பிரகாசித்து, அங்கு வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.
நாங்களும் மனமுருக தீபத்தை கும்பிட்டு, கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக்கிட்டு அடுத்து வரும் பக்தர்கள் கூட்டத்திற்கு இடம் விட்டு கீழ இறங்க ஆரம்பித்தோம்.
நாங்க இறங்க ஆரம்பிக்கும்போதே லேசா விடிய ஆரம்பிச்சிடுச்சு. இளங்காலை வெளிச்சத்துல மின் விளக்கு அலங்காரத்தில் கோவில் ஜொலிச்சுது. மலை இறங்க ஆரம்பிச்சோம்.
விடிந்தும் விடியாத அந்த் அதிகாலை பொழுதிலும் பக்தர்கள் உற்சாகமா மலை ஏறியும், இறங்கிட்டயும் இருந்தாந்தாங்க.  மலைப்பாதையில் இருக்கும் சின்ன சின்ன கல்லுலாம் காலை பதம் பார்த்துச்சு. மலை மேல ஏறும்போது இந்த அவஸ்தை தெரில. 
நாங்க முழுசா மலை இறங்கும் முன்னமயே அண்ணாமலையார் கோவிலில் இருந்த மின்விளக்குகள்லாம் அணைச்சுட்டாங்க. நீங்க விளக்கையெல்லாம் அணைச்சு இருட்டாக்கிட்டாலும் நான் இருக்கேன் இறைவன் இருக்கும் இடம் காட்ட வெளிச்சம் நான் தருகிறேன் என ஆதவன் நல்லா ஒளிவீச ஆரம்பிச்சுட்டான். ஜோதிரூபமான இறைவனும், அவன் அம்சமான மலையும் ஆதவனின் வெம்மையை தாங்க முடியும். நம்மால முடியுமா?! எப்படா மலையை விட்டு இறங்குவோம்ன்னு ஆயிடுச்சு. அடிக்கடி மரநிழல் தேடி ஒதுங்க வேண்டியதாகிடுச்சு.
நின்ற இடத்துல இருந்து திரும்பி பார்த்தோம். ஐயோ! இவ்வளவு பெரிய மலையிலா நாம் ஏறி இறங்கினோம்”ன்னு நினைக்கும்போது, அதற்கு சக்தியும், அவனை தரிசிக்கும் புண்ணியத்தையும் கொடுத்த இறைவனுக்கு நன்றி கூறி அங்க இருந்தே திருக்கோவிலின் முழு கோபுர தரிசனத்தையும் கண்டுகளித்தோம். 
இங்க இருந்து பார்க்க நகரத்தின் அழகும், முழுகோவிலும், எல்லா கோபுரங்களும், ஒரே நேர்கோட்டில் தரிசனம் செய்ய முடிந்தது .
வெயில் நல்ல சுட்டெரிக்க ஆரம்பிச்சுடுச்சு. ஆனாலும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் அண்ணாமலையாரை தரிசிக்க தீப வடிவில் தரிசிக்க எதையும் பொருட்படுத்தாது மலை ஏறிக்கிட்டிருந்தாங்க.
ஒருவழியா, மலையடிவாரத்துக்கு வந்துட்டோம். அங்க, மலையடிவாரத்தில் முலைப்பால் தீர்த்தத்தில் முகம் கைகால் நனைத்து, நாங்க போன வழியில் இருக்கும்  பீம தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், பாத தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும். அல்லிச்சுனை, அரளிச்சுனை, வழுக்குப்பாறைச் சுனை, அரசன் சுனை, மயிலாடும்பாறைச் சுனை, ஊத்துக்குட்டைச் சுனை, பவழக்குன்றுச் சுனை,  கழுதைக்குறத்திச் சுனை, சாரங்கன் சுனை, கரடிச் சுனை, தனக்கமரத்துச் சுனை, புங்கமரத்துச் சுனை, நெல்லிமரத்துச் சுனை, ஆலமரத்துச் சுனை, குமார சுனை, கல்சுத்தி மரத்துச் சுனை. இதுமட்டுமில்லாம ஆள் இறங்கிக் குளித்திடும் அளவுக்கான தொல்லாங்கன் சுனை, இடுக்குச்சுனை, வலக்கையால் பாறையைப் பிடித்து இடக்கையால் மட்டுமே நீர் அருந்தும் ஒறட்டுக்கை சுனைலாம் இரவில் தரிசிக்க முடியாமல் போனது.
மலையடிவாரத்துல ”குகை நமசிவாயம்  கோவிலி”ன் அருகே உள்ள ஆஸ்ரமங்களில் காலையில் அன்னதானம் சிறப்பாக செய்து இருந்தனர். சாம்பார் சாதம், தயிர் சாதம், பிரிஞ்சு சாதம் என ஃபுல் கட்டு கட்டிட்டு அங்கிருந்து கிளம்பினோம். அடுத்து எங்களுக்கு தரிசனம் தர சீக்கிரம் கூப்பிடுப்பான்னு வீட்டுக்கு வர வண்டி பிடிச்சோம்.

போன கார்த்திகை தீபத்தின்போது எடுத்த படங்கள் இப்போதான் பதிவிட முடிஞ்சது.

10 comments:

  1. அருமையான தொகுப்பு,,, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  2. அருமையான பதிவு.

    உங்கள் அனுபவத்தைச் சிறபாகச் சொல்லியிருக்கீங்க.

    பகிர்வுக்கும் படங்களுக்கும் நன்றிகள் ராஜி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பதிவை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோ

      Delete
  3. சரியான காலத்தில் மழை பெய்யாமல், உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடிய வல்லமை படைத்த மழையே... சரியாக பெய்வதன் காரணமாக உயிர்களுக்கு வாழ்வைக் கொடுத்து, காக்கும் வல்லமை படைத்ததும் நீயே...

    இணைப்பு : →அனைவரும் இங்கு சரிசமமென உணர்த்திடும் மழையே...!

    ReplyDelete
  4. சூப்பர் க்கா.. மலைக்கு மேலே போகலாம்னு இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்....தேங்க்யூ

    ReplyDelete
    Replies
    1. திருவண்ணாமலை மலை மேல போகலாம் அபி. ஆனா, கொஞ்சம் கஷ்டம்

      Delete
  5. அருமையான பதிவு. ..நாங்களும் போக வேண்டும் என்ற ஆசை வருகிறது....அருமை

    ReplyDelete
  6. அழகான அண்ணாமலையாரின் தீப தரிசன விவரணம். நேரில் செல்ல நினைத்துச் செல்ல முடியாமல் இருக்கின்றது. ஒரு முறையேனும் சென்றுவிட வேண்டும். சாதாரண நாளிலாவது என்று அதுவும் சுனைகளில் நீர் இருக்கும் போது..

    மிக்க நன்றி சகோ உங்கள் மூலம் விவரங்கள் அறிந்ததற்கு

    ReplyDelete