தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில்
பாட ஆமா வில்லினில் பாட..............வந்தருள்வாய் பூமித்தாயே................
அதாகப்பட்டது என்னானா..... இன்னிக்கு
நம்ப பொம்மனாட்டாகள்லாம் "கேதார கௌரி விரதம்" இருக்காங்க... அது
எதுக்குன்னு சொல்லப்போறேன்..
ஆயுள் முழுக்க ஆதர்ச தம்பதிகளாக
வாழ்வதுதான் கணவன், மனைவியின் லட்சியமாக இருக்கும். அப்படி
இருக்க நினைக்குறவங்க இந்த விரதமிருந்தா... சிவன் அர்த்தநாரீஸ்வரரா அவதாரம்
எடுத்துப்போல உங்க ஆம்படையானும் தங்களை தன்னில் பாதியா ஏத்துப்பார்ன்னு
நம்புறாங்க...
"கேதாரம்" என்னும் இமயமலைச்சாரலில்
சக்திதேவி "கௌரி" என்னும்
அவதாரமெடுத்து சிவனின் இடப்பாகத்தை பெற்றதால இதுக்கு "கேதார கௌரி
விரதம்"ன்னு பேரு...
இந்த விரதமிருந்தா கணவன், மனைவி பிரிஞ்சிருந்தா ஒண்ணு சேர்வாங்க. அவங்களுக்குள் அன்பு
பலப்படும்.. குடும்பம் நல்லாயிருக்கும்ன்னு ஐதீகம்.
சக்தி தேவி ஏன் இந்த
விதமிருந்தாங்கன்னு அதுக்கொரு கதையிருக்கு...
தீவிர சிவபக்தரான பிருகு முனிவர்,
சிவனையல்லாது எத்தெய்வத்தையும் வணங்கமாட்டார். இதனால் , நாரதர் கலகத்தால்... முனிவர் வரும் வேளையில் சக்தி தேவி, சிவன் அருகில் மிக நெருக்கமா உக்காந்திருந்தார். இதைக்கண்ட பிருகு முனிவர், வண்டாய் மாறி.. சிவனை மட்டும் வணங்கி சென்றார்... தன்னை பிருகு
முனிவரும், சிவனும் அவமானப்படுத்தியதாக எண்ணி
கோவத்துடன் பூலோகம் வந்தார்.
சிவனுடன் தன்னை
ஐக்கியப்படுத்திக்கொண்டால்தான் தானும் சிவனும் ஒன்றாவோம் என நினைத்து.. வயல்வெளி
நிறைந்த கேதாரம் என்ற இடத்தில் கடுந்தவமிருந்து சிவனிடம் சரிபாதி உடலை வாங்கி...
அர்த்தநாரீஸ்வரராக அவதாரமெடுத்தனர்..
கேதார கௌரி விரதம் ஆண்டுதோறும்
புரட்டாசி மாதம் சுக்ல பட்ட தசமியில் ஆரம்பிக்க வேண்டும்.
அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க
ஆசுதோஷியாகிய சிவன் மிக விரைவாகவே வரம் கொடுத்து விடுவார் என்பது நம் ஐதீகம்
சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா
விரதங்களுள் கேதார கௌரி விரதமும் ஒண்ணு.
இந்நாளில் விரதமிருப்பவர்கள், வீட்டை சுத்தம் செய்து, தலை குளித்து
நாள் முழுக்க எச்சில்கூட விழுங்காமல்
உபவாசமிருந்து, அரிசி, வெல்லத்தினால் செய்த அதிரசம், 21 எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கிழங்கு, நோன்புக்கயிறு, அதிரசம், பழுத்த செவ்வரளி இலை, செவ்வரளி மொட்டு வைத்து கோவிலுக்கு சென்று அர்த்தநாரீஸ்வரரை வணங்கி, வீட்டில் வடை, கொழுக்கட்டை, சுய்யம், சாப்பாடு என படையல் போட்டு ஓம் நமசிவாய மந்திரம் ஜபித்து, அர்த்தநாரீஸ்வரராய், சிவசக்தி சொரூபனாய் முக்கண் முதல்வனை,
முப்புரம் எரித்தானை, முத்தலை சூலம் ஏந்தினானை மனதில் தியானம் செய்து மாலை பிரதோஷ
காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும்.
சிறப்பு வாய்ந்த இந்த விரதத்தினை
திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன் பிரம்மன் அனுஷ்டித்து உலகைப்
படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார்.
இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு
வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார் என ஐதீகம்.
இந்த பூலோகத்தில் கேதார கௌரி விரதத்தை
மனப்பூர்வமாய் விரும்பி அனுஷ்டிப்பவர்களுக்கு அந்த பரமேஸ்வரன் சகல செல்வங்களையும்
அளிப்பார் எனக்கூறி
வந்தனமாம் வந்தனம் வந்த சனத்துக்கு
நன்றியாம்
அறியாத தகவல்கள், அருமையான விளக்கம்.
ReplyDeleteநன்றி ...உங்கள் வருகைக்கும் ..கருத்துக்களுக்கும் ..
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDelete