Monday, March 05, 2018

ஹாஸ்பிட்டல்ல இப்படிலாம் நடந்துக்கலாமா?! - ஐஞ்சுவை அவியல்

என்னாங்க மேடம்! ரொம்ம்ப யோசனையா இருக்கீங்க!?

ஒண்ணுமில்ல மாமா. ராஜி பதினைந்து நாட்கள் ஹாஸ்பிட்டல்ல தங்க வேண்டிய சுழல். நோயாளியாய் தங்கி இருந்தா நோயின் வேதனையில் மத்த விசயம் புரிஞ்சு இருக்காது. ஆனா, இவ நோயாளிகூட தங்கி இருந்ததால, நிறைய விசயங்கள் அவ பார்த்திருக்கா.  அங்க, நோயாளிகளும், அவங்களோடு தங்கி இருக்கவுங்களும், அவங்களை பார்க்க வர்றவங்களும் பண்ற ரவுசு பத்தி பேசிட்டிருந்தோம். சாப்பாட்டு நேரத்தில் நோயாளிகளின் படுக்கைமேலயே வச்சு சாப்பிடுறதும், கைக்குழந்தைகள், வயசானவங்கன்னு நோயாளிகளை பார்க்க கூட்டி வர்றதும்,  பிளாஸ்டிக் கவர்களில் பழம்லாம் வாங்கிட்டு வர்றதும், பிக்னிக் ஸ்பாட் மாதிரி விதம் விதமான சாப்பாட்டை கொண்டு வர்றது, அளவுக்கு அதிகமான சாப்பாட்டை அங்கயே கொட்டுறதுன்னு அவங்க பண்ற அட்ராசிட்டி இருக்கே! இது எல்லாத்தையும்விட கொடுமை கேன்சர் ஆஸ்பிட்டல்லயே சாம்பார், ரசம், சாப்பாடு,  காஃபி, டீ, பால் இவைகளைலாம் சுடச்சுட பிளாஸ்டிக் கவர்ல கட்டிக்கொடுக்குறதுதான். இதையெல்லாம் டாக்டர்களும் கண்டும் காணாதமாதிரி போய்டுறது வேதனைன்னு ராஜி சொல்றா மாமா.

ஆமா,  சித்தார்த்தனை மூப்பு, நோய், மரணம்ல்லாம் தெரியாம, அரண்மனைக்குள்ளயே வச்சு வளர்த்த மாதிரி உன் ஃப்ரெண்ட் ராஜியை வீட்டுக்குள்ளயே வச்சு வளர்த்தாங்களா என்ன?! என்னமோ புதுசா சொல்லுற மாதிரி சொல்றா. இதையும் நீ கேட்டுட்டு வந்து இருக்கே. இந்த மாதிரி இம்சைலாம் இருக்கக்கூடாதுன்னுதான் இப்பலாம் நிறைய தனியார்   ஹாஸ்பிட்டல்ல நோயாளிகளுக்கு தண்ணி உட்பட எல்லாமே அவங்களே கொடுத்துடுறாங்க, கூட இருக்கவுங்க வெளில போய் சாப்பிட்டுக்கனும். எந்த சாப்பாட்டு பொருளும் வார்டுக்குள் அனுமதி இல்ல.

எல்லா ஹாஸ்பிட்டல்லயும் இப்படி நடக்குறது ஓக்கே., கேன்சர் ஹாஸ்பிட்டல்லயாவது பிளாஸ்டிக்கை அனுமதிக்காம இருக்கலாமில்ல.  அதான்.

இப்படியே பேசிட்டிருங்க ரெண்டு பேரும். உங்க புத்திசாலித்தனத்தை நாலு பேரு மெச்சிப்பாங்க.

ஆமா, எதுக்கெடுத்தாலும் நாலு பேர், நாலு பேர்ன்னு சொல்றாங்களே ! அந்த நாலு பேர் யார் மாமா?!

வேற யாரு?! ஊரு, உறவுசனங்கதான்...

அதான் இல்ல. அம்மா, அப்பா, குரு, தெய்வம். இந்த நாலு பேர்தான் நீங்க சொல்ற நாலு பேர். அம்மாக்கும் கடவுளுக்கும் தன் பிள்ளைகள்ன்ற பாசத்துல கெட்டது எதும் தெரியாது, அதேநேரம் சின்ன விசயத்துக்கும்  உச்சி குளிர்ந்து பாராட்டுவாங்க.  அப்பாக்கு  நாம எத்தனை உயரத்துக்கு போனாலும் திருப்தி வராது. அதேநேரம் சின்னதா ஒரு கெட்ட விசயம்ன்னாலும் வெளுத்து வாங்கி நம்மளை சரிபண்ண பார்ப்பார். குரு... இவர் தராசு முள் மாதிரி, தப்பை சுட்டிக்காட்டுவதோடு நல்லதுன்னா பாராட்டுவார். அதனால, இந்த நாலு பேர்கிட்டயும் ஒருசேர நல்ல பேரு எடுத்துட்டா மத்த எல்லார்க்கிட்டயும் நல்ல பேரு எடுத்துடலாம். அதனாலதான் நாலு பேர்ன்னு சொல்றாங்க.

அட, இது புது தகவலா இருக்கு புள்ள!

சரி இனி கேள்வி நேரம்...





ருத்தர் தன்னோட பசங்களுக்கு பொம்மை வாங்கப் போனாரு. அவர் கையில நூறு ரூபாய் வச்சிருந்தாரு.ஒரு யானை பொம்மையோட விலை அஞ்சு ரூபாய். குதிரை பொம்மை விலை ஒரு ரூபாய். ஒரு நாய்க்குட்டியோட விலை இருபத்தஞ்சு பைசா.

அப்படின்னா, அவரு மொத்தமா நூறு பொம்மைங்களை நூறு ரூபாய்க்கு வாங்கியிருந்தா ஒவ்வொன்னுலேயும் எத்தனை பொம்மைகள் வாங்கியிருப்பார்!? இதுக்கு பதில் சொல்லு பார்க்கலாம்..

சரி யோசிக்குறேன். அதுக்கு முன்  ஒரு ஜோக் 
ஜோக்கோடு ட்விட்டர்ல சுட்ட ஒரு தத்துவம்...

ஆதாம் ஏவாள் அறியாமல் 
ஆப்பிள் எடுத்த பிழையை
மன்னிக்காத கடவுளா?!
உங்களின் அத்தனை பிழையை
மன்னிப்பார்?!

தத்துவம் சொன்னதுலாம் ஓக்கே. என் கேள்விக்கு பதில் சொல்லு...

பதில்தானே?! அடுப்பில் பால் வச்சிட்டு வந்திருக்கேன். வந்து சொல்றேன் இருங்க.

நன்றியுடன்,
ராஜி

20 comments:

  1. மக்களுக்கு ஹாஸ்பிடலில் உள்ள பேஷ்ண்ட்களை எப்படி கவனித்து கொள்ளுனும் என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள் மேலும் நோயாளிகளை வந்து கவனித்து கொள்பவர் அவந்து அமர்ந்து சாப்பிட என்று ஒரு ரூம் ஒதுக்கி இருந்தால் அங்கே சாப்பிட வசதியாக இருக்கும் சில சமயங்களில் நோயாளிக்கு பிடித்த ஆனால அவர் சாப்பிடக் கூடாத உணவை அவர் முன்னால் அமர்ந்து சாப்பிடுவார்கள் அது மிகக் கொடுமை

    ReplyDelete
    Replies
    1. சில பெரிய ஹாஸ்பிட்டல்களில் இப்படி சாப்பிட ஒரு ஷெட் கட்டி இருக்காங்க சகோ. ஹாஸ்பிட்டலில் சுத்தம் சுத்தமா இல்ல. எங்க பார்த்தாலும் பிளாஸ்டிக், சாப்பாட்டு கழிவுகள்...

      Delete
  2. நான் உங்களுக்கு தெய்வமா அல்லது குருவா?

    ReplyDelete
    Replies
    1. இதில் சந்தேகமென்ன?! தெய்வம்தான்! அதும் என்னிடம் இதுவரை தன் முகத்தை காட்டியதில்லை.. நீங்களும் என்னிடம் முகம் காட்டியதில்லை. அதனால் என்னை பொறுத்தவரை நீங்க எனக்கு கடவுள்தான் சகோ

      Delete
  3. மருத்துவமனையில் நம் மக்கள் நடந்து கொள்ளும் விதம் ரொம்பவே மோசம் தான். தலைநகரில் இருக்கும் மருத்துவமனைகள் நிலை சொல்லி மாளாது.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம் அம்மா சொல்லி இருக்காங்கண்ணா. வடநாட்டுக்காரங்க சுத்தத்தில் நம்மைவிட பின்தங்கி இருக்காங்கன்னு...

      Delete
  4. ஆம் மருத்துவமனை என்பதை பலரும் மறந்து விடுகின்றனர்.

    நகைச்சுவை ஸூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. நாம மறக்காம இருப்போம்.

      Delete
  5. இலவச மருத்துவம் மனை என்றதும்.............ஹூம்......என்னத்தச் சொல்ல, நீண்ட காலத்துக்குப் பிறகு அவியல்.... நன்று.///விடுகதை........அத அப்பாலிக்கா பாத்துக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. அது விடுகதை இல்லை கணக்கு புதிர்ண்ணே

      Delete
  6. நல்ல புதிர்!

    6 சரியான பதில்கள் இருக்கின்றன!

    பதில் 1) 3 யானை, 81 குதிரை, 16 நாய் பொம்மைகள்
    பதில் 2) 6 யானை, 62 குதிரை, 32 நாய் பொம்மைகள்
    பதில் 3) 9 யானை, 43 குதிரை, 48 நாய் பொம்மைகள்
    பதில் 4) 12 யானை, 24 குதிரை, 64 நாய் பொம்மைகள்
    பதில் 5) 15 யானை, 5 குதிரை, 80 நாய் பொம்மைகள்
    பதில் 6) 100 குதிரை பொம்மைகள்

    ReplyDelete
    Replies
    1. விடை சரிதான் சகோ

      Delete
  7. கேன்சர் ஹாஸ்பிட்டல்லயாவது பிளாஸ்டிக்கை அனுமதிக்காம இருக்கலாமில்ல. அதான்.

    மருத்துவமனைகள் வியாபாரத் தலங்களாகி வெகுநாட்கள் ஆகிவிட்டன சகோதரியாரே
    பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால்தான் பயன்படுத்த அனுமதித்தால்தான் இன்னும் அதிக அளவில் கேன்சர் நோயாளிகள் அம் மருத்துவமனையில் சேர்வார்கள்
    வியாபாரம் அமோகமாக நடக்கும்

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான்ண்ணே. இப்பலாம் டாப் வியாபார தலங்களில் கல்வி நிறுவனம், ஆன்மீகத்தலங்கள், ஹாஸ்பிட்டல்ன்னு ஆகிட்டுது.

      Delete
  8. ஆஸ்பத்திரி வேதனை

    ReplyDelete
  9. நல்ல பதிவு. அந்த நாலு பேர் யாருன்னு சொன்னதுக்கு நன்றி. கடைசி ஜோக் மாதிரியே ஒன்னு வாட்சப்ல வந்தது: "ஆதம் ஏவாள் சீனாவில் பிறந்திருந்தால் ஆப்பிளுக்கு பதிலாக பாம்பை சாப்பிட்டு இருப்பார்கள். நமக்கும் இன்று எந்த பிரச்சினையும் இருந்திருக்காது."

    என் வலை தளம்: http://onlinethinnai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்ன ஜோக் பத்தின படத்தை ஏற்கனவே பதிவா போட்டாச்சு சகோ. இதோ உங்க பதிவுக்கு வந்துக்கிட்டே இருக்கேன்

      Delete
  10. மருத்துவமனை வேதனை சற்றே அதிகம். சிவன் பார்வதி கற்பனை அருமை.

    ReplyDelete
    Replies
    1. இதில்லாம அங்க வேலை செய்யுறவங்க அட்ராசிட்டியும் தாங்க முடியுறதில்லை.

      Delete