Thursday, December 20, 2018

வாபரன், வா(பா)பர் ஆன கதை - எருமேலி, ஐயப்பனின் அறுபடை வீடுகள்

காதல், காமம், கோபம், பக்தி என எந்த உணர்வுமே  நம்பிக்கை சார்ந்தது. மற்ற உணர்ச்சிகளை நிரூபிக்க வாய்ப்பிருக்கு. ஆனா, பக்தி?! கடவுள் எங்கன்னு கேள்வி கேட்டால், என்னென்னவோ சொல்லி விளங்க வைக்க பார்ப்பாங்க.  எத்தனை குட்டிக்கரணம் அடிச்சு பார்த்தும் முடியலியா!? கடவுள் நம்பிக்கை உனக்கு வராது. உன்  டிசைன் அப்பிடின்னு சொல்லிட்டு போய்டுவாங்க. சிலர், கடவுள் எனப்படுபவர் நீர், நிலம், ஆகாயம், பறப்பன, ஊர்வன, மனுசனை  படைச்சு, ஆக்கல், காத்தல், அழித்தல் தொழில் செய்யும் ஆதிகாலந்தொட்டு வருபவர் அல்ல. எப்பயோ, எந்த காலத்திலேயோ வாழ்ந்த மனிதனின் கதையே கண், காது, மூக்கு வச்சு பில்ட் அப் கொடுத்து இப்ப சிவன், விஷணு, பிரம்மா, முருகன், சக்தின்னு கும்பிடுறோம்ன்னு சொல்வாங்க.  


இந்தக் கூற்று உண்மையா இருக்க வாய்ப்புண்டு. உதாரணத்துக்கு, சமகாலத்தில் வாழ்ந்து இன்னிக்கு கடவுளுக்கு இணையாய் போற்றப்படுபவர்கள் ஆதிசங்கரர், சங்கராச்சாரியார்,  சாய்பாபான்னு அடுக்கிக்கிட்டே போகலாம். இம்புட்டு ஏன், கடவுள் இல்லைன்னு சொன்ன பெரியாரையும் சாமியாராக்கி வச்சிருக்குதுங்க நம்புபவர்களுக்கு கடவுள், நம்பாதவருக்கு வெறும் கற்சிலை. இதுமாதிரி ஒரு கதைதான் எரிமேலி வா(பா)பர் சாமி கதை.


பேரை கேட்கும்போதே பலருக்கும் சந்தேகம் வரும். இது, முஸ்லீம் பேர் மாதிரி இருக்கேன்னு. மாதிரிலாம் இல்லீங்க. அதான் உண்மை. கடவுளுக்கு மதம் இல்லை. மனிதனின் வசதிக்கும், சுயநலத்துக்காகவும், அவரவர் நம்பிக்கை சார்ந்தும் உண்டானதே கடவுளர்களும், மதங்களும். மத்தபடி கடவுள் மதம், மொழி, இனத்துக்கு அப்பாற்ப்பட்டவர். சரி நாம எரிமேலி கதைக்கு வருவோம். இந்து கடவுளான ஐயப்பனுக்கும், வா(பா)பருக்கும் எப்படி நட்பு ஏற்பட்டதுன்னு பார்க்கலாமா?!


ஐயப்பன் கதை சின்ன குழந்தைக்குக்கூட தெரியும். அதனால், நாம புலிப்பால் கொணர, காட்டுக்குள் ஐயப்பன் வரும்போதிலிருந்து பார்க்கலாம். காட்டுக்குள் வந்து தாய்ப்புலியை தேடி ஐயப்பன் வரும்போது, காட்டின் எல்லையில், ஐயப்பனுக்கு   துணையாக சிவன் தன்னுடைய பூதகணங்களை அனுப்பினார்.  அப்படி அனுப்பப்பட்ட பூதகணங்களின் தலைவனே இந்த வாபரன். (முருகனுக்கு வீரவாகு மாதிரி) .  மகிஷி  எருமைதலையுடனும் மனித உடலுடன் இருந்தவள். அவளை வதம் செய்ததால் அந்த இடத்துக்கு எருமைகொல்லி என்றழைக்கப்பட்டு இன்று எருமேலி, எரிமேலி என அழைக்கப்படுது.   மகிஷியுடனான போரில் ஐயப்பனுக்கு துணையாக வாபரண் குழு கலந்துக்கொண்டது. போரின்முடிவில் மகிஷி  வதம் முடிந்தபின், அந்த மகிழ்ச்சியில் வாபரனும், அவரது சகாக்களும் சேர்ந்து வேடமணிந்து நடனமாடினர். அதுவே இன்றளவும்  கடைப்பிடிக்கப்படும் பேட்டைத்துள்ளல் நிகழ்வு. பின்னர், புலியோடு அரண்மனைக்கு திரும்பும் ஐயப்பனோடு, காட்டின் எல்லைவரை வந்து வழியனுப்பும்போது,  ஐயப்பன்,  வாபரனை அழைத்து வனத்தின் எல்லையான எருமேலியிலேயே தாங்கள் தங்கி இருக்கவேண்டுமெனவும்,  தன்னை தரிசிக்க காட்டு வழியாக சபரிமலை வரும் பக்தர்களை கொடிய வனவிலங்குகளிலிருந்து காத்து வருமாறும் கட்டளையிட்டார். அதன்படியே வாபரணும், அவரது சகாக்களும் அங்கேயே தங்கி காட்டின் காவல்தெய்வம் ஆயினர். தர்ம சாஸ்தா வேறில்லை, பேட்டை சாஸ்தா வேறில்லையென அரண்மனையில் தன் தந்தையான பந்தள மகாராஜாவுக்கு ஆன்மீக உபதேசம் செய்தான். 


பேட்டைசாஸ்தாவான வாபரனுக்கு தந்தையை கோவில் கட்டவும், தன் அம்பு விழும் இடத்தில்  தனக்கு பதினெட்டு தத்துவ படிகளுள்ள ஒருகோவிலும், தனக்கு இடப்பக்கம்,  தன்னை மணக்க வரங்கேட்ட உருவமும், மனமும் மாறிய மகிஷிக்கும் கொஞ்சம் தள்ளி மஞ்சமாதான்ற பேரில் ஒருகோவிலும் கட்டுமாறு கட்டளையிட்டுவிட்டு மறைந்தார். அதன்படி பந்தள மன்னன் பரிவாரங்களுடன் கோவில் கட்ட சபரிமலைக்கு புறப்பட்டுச்சென்றார். எல்லோரும் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும்போது வாபரன்,  மன்னனை சந்தித்து அவரை யாரும் அறியாமல் பொன்னம்பலமேட்டிற்கு கூட்டிச்சென்று தர்ம சாஸ்தாவிடம் சேர்த்தார். மன்னன் மீண்டுமொருமுறை உபதேசம் பெற்றார். எஞ்சியிருந்த சந்தேகங்களும் தீர்ந்து தெளிவுபெற்றார் மன்னன். வாபரன் மீண்டும் யாருமறியாமல் மன்னனை பரிவாரங்கள் தூங்குமிடத்தில் கொண்டு  வந்து சேர்த்தார். பந்தள மன்னன் ஐயப்பனின் கட்டளையின்படியும் அகத்திய முனிவரின் உபதேசங்களின்படியும் முதலில் எருமேலியில் வாபரனுக்கும், பின் சபரிமலையில் ஐயப்பனுக்கும் மஞ்சள்மாதாவிற்கும் கோயில்கள் அமைத்து பிரதிஷ்டை செய்து உற்சவமும் நடத்தினார். இதுதான் எருமேலி பேட்டைசாஸ்தாவான வாபரன் கதை. அன்றுமுதல் தன் சன்னிதியிலிருந்து பேட்டைத்துள்ளி, சபரிமலைக்கு செல்லும் பக்தர்களை காப்பாற்றி வருகிறார் வாபரன்.


வா(பா)பர் சாமி கதை...
நம் நாட்டினுள்  800 ஆண்டுகளுக்குமுன் இஸ்லாமியர் நுழைந்தனர். வந்த நோக்கமே வேறு. அவர்கள் நோக்கம் நிறைவேறியது. பிளவுப்பட்டிருந்த நம்நாட்டு மன்னர்கள் பல்வேறு காரணங்களுக்காக அவர்களிடம் சரணடைந்தனர். அதில் பந்தள மன்னர் ராஜசேகரன் வாரிசுகளும் ஒருவர். அமீர்காதி செய்னுதீன் பஹதூர் பாவா பா வர் முசலியார்ன்ற இஸ்லாமிய குடும்பத்திற்கு எருமேலியிலும், பதினெட்டாம்படியிலும் பள்ளிவாசல் அமைத்து ஐயப்ப பக்தர்களிடம் நிதிவசூல் செய்துக்கொள்ள அனுமதித்து செப்புபட்டயம்  எழுதி கொடுத்தார் பந்தளமன்னர். எருமேலி பளளிவாசலில் சமாதி வைக்கப்பட்டுள்ள முஸ்லீமின் பெயர் பாபர் என்றும் பெதருதீன் என்றும் சிக்கந்தர்ஷா என்றும் அலியார்தங்ஙள் என அவர்களுக்குள்ளேயே பல சர்ச்சைகள் உண்டு.  

பள்ளிவாசல்களை அமைத்துக்கொண்ட இஸ்லாமியர்கள், வா(பா)பர் கொள்ளைக்காரனாய் இருந்தவரெனவும், அவரை அடக்க வந்த ஐயப்பனுக்கும், அவருக்கும் கடுமையான போர் பலகாலம் நடந்ததாகவும், இறுதியில் வா(பா)பரை வென்று, தன்னுடைய நண்பராக்கி, காவல்தெய்வமாய் எருமேலியில் நிறுத்தினார் எனவும், போரில் வா(பா)பரை வெல்லமுடியாமல் போன ஐயப்பனுக்கு சொந்தமான எருமேலியை ஐயப்பன் வாபருக்கு தந்ததாகவும், அதனாலாயே முதல்மரியாதையை வாபருக்கு செலுத்தி, அவரிடம் அனுமதி பெற்றப்பின்னே, சபரிமலைக்கு செல்லவேண்டுமெனவும் இருவேறு கருத்துகள் உலவுது.   நம்மாளுங்கதான் எதை சொன்னாலும் நம்புவாங்களே! இந்த கதையையும் நம்பினர்.

இஸ்லாமியர் இந்தியாவில் வந்தது 800 ஆண்டுகளுக்கு முன்.. அப்படி இருக்க ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த ஐயப்பன் வரலாற்றில் 800 ஆண்டுகளுக்கு முன்வந்த  வாபர் எப்படி  நுழைந்தார்?! ஐயப்பன் அவதாரமெடுத்தார்ன்னே வச்சுக்கிட்டாலும், இறைவனால் ஒரு கொள்ளையனை, அதிலும் மனிதனை வெல்லமுடியாதா?! அப்படியே வெல்லமுடியலைன்னா அவர் என்ன கடவுள்?!  எதையும் யோசிக்காமல் வாபர சுவாமிதான் பேட்டை சாஸ்தா என்பதை மறந்தனர். 40நாட்கள் விரதமிருந்து இருமுடி சுமந்து செல்லும் பக்தர்கள் விரதமிருக்காத  வாபர் சாமி சமாதியில் இருக்கும் ஆட்களிடம் விபூதி வாங்கி பூசிக்கொள்கிறார்கள். அங்கு ஓம்ன்ற பிரணவ குறியீடு மறைந்து பிறைச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.  

கடவுள் என வரும்போது ஜாதி, மதம் பேதம் பார்க்கக்கூடாதுதான். ஆனா, வாபர் சாமியை நம்பும் இஸ்லாமியர் ஐயப்பனை நம்பாததும், அவருக்கு மதிப்பளிக்காததும் வேதனையே! ஆனால், ஐயப்ப பக்தர்கள் ஒருபோதும் பேதம் பார்ப்பதில்லை. எருமேலியில் ஐயப்பனுக்கு பெரியம்பலம், சிற்றம்பலம் என  இரண்டு கோவில்கள் இருக்கு. வில்லும், அம்பும் ஏந்தி நிற்கும் கோலத்தில் ஐயப்பன் சிலைகளை இங்கு காணலாம். சிற்றம்பலமான சிறிய கோவிலில் வர்ணம் பூசி  நடனமாடியபடி பேட்டை துள்ளலை சடங்கை செய்தவாறே பெரிய கோவிலான பெரியம்பலத்தில் வந்து பேட்டை துள்ளலை முடிப்பர். 

மகரவிளக்கின்போது எருமேலியில் நடக்கும் அம்பலப்புழா, ஆலங்காடு எனப்படு பேட்டைத்துள்ளல் நிகழ்வு பிரசித்தம். மாசி மாத கார்த்திகை நட்சத்திரத்தில் தொடங்கி உத்திரம் நட்சத்திரம் வரையிலான பத்து நாட்களுக்கு பிரம்மோற்சவம் நடக்கும்.  வாபரை இந்துக்கள் வணங்குதலைப்போல  அங்கிருக்கும் இஸ்லாமியர் ஐயப்பனை நம்புவதில்லை.    நம்பிக்கை என்பது இருவருக்குமே இருக்கனும். அதைவிட்டு ஒருத்தர் மட்டும் நம்பி பலனில்லை. அப்படி ஒருவருக்கு நம்பிக்கையும், இன்னொருவருக்கு  அவநம்பிக்கையும் இருந்தால் எப்படி?! அதுக்கு அந்த உறவே வேணாம்ன்னு இருக்கலாமே!!

படங்கள் முகநூலில் சுட்டது...
அடுத்த பதிவு சபரிமலை பத்தி...
நன்றியுடன்.
ராஜி

9 comments:

  1. சிறு வயதில் நானும் ரொம்ப நாள் பாபர் எப்படி இங்கு என்று குழம்பியதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. குழம்பினாலே தெளிவு பிறக்கும்.

      Delete
  2. வாவர் கதை, மற்றும் பேட்டை துள்ளள் அறிந்ததுதான் என்றாலும் உங்கள் பதிவின் மூலம் கூடுதல் விஷயங்கள்....

    ஆரவல்லி சூரவல்லி படிச்சுட்டு தொடரும் போட்டு அதுதான் இங்கு தொடர்ந்திருக்கோன்னு வந்தா ஐயப்பன்...அது எப்ப முடிப்பீங்க ராஜி...அது வரதுக்குள்ள முதல் பகுதி மறந்தே போயிடாம இருக்கனும் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆரவல்லி சூரவல்லி கதை அடுத்த புதன்கிழமை பதிவா வரும். முதல்பகுதியை மறக்கமாட்டீங்க கீதாக்கா. அப்படியே மறந்தாலும் நான் லிங்க் கொடுப்பேன்ல அதுல போய் படிச்சு தெரிஞ்சுக்கலாம்.

      வாவர் கதை இடைச்சொருகல்கள் கீதாக்கா. சபரிமலை பற்றிய குறிப்புகளில் பாபர்சாமி எந்த இடத்திலும் இல்லை. வாபரனே வாபரானார்.

      Delete
  3. மிக அருமையான கட்டுரை.

    ReplyDelete
  4. அன்பு ராஜி,
    எத்தனையோ விஷயங்களில் நாம் வழி மாற இவர்கள் காரணமாகிவிட்டார்கள். இது போலப் பதிவுகளாவது அனைவரையும் போய்ச் சேரட்டும்.

    ReplyDelete
  5. பக்திக்கு பேதம் தேவையில்லை... அருமையாகச் சொன்னீர்கள் சகோதரி...

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு. எல்லாவற்றிலும் இடைச் சொருகல்கள்... எல்லாமே மதம், அரசியல் மயம். ஒன்றும் சொல்வதிற்கில்லை.

    ReplyDelete