சில்க் த்ரெட் நூல்ல செய்யுற ஜுவல்சுக்குதான் இப்ப மவுசு அதிகம். பார்க்க செம அழகு. நல்ல ஜொலிஜொலிப்பா இருக்கும். எல்லாவித கலர்லயும் செய்யலாம். வளையல், கம்மல், மணிமாலை, ஹேர்க்ளிப்ன்னு எல்லாமே செய்யலாம். பழகிட்டா செம ஈசி.. இதுக்கு மூலப்பொருட்கள் எல்லா பேன்சி ஸ்டோர்லயும் கிடைக்குது. அதிகபட்சம் 25 ரூபாய்ல ஒரு கம்மல் செய்யலாம். ஆனா, ஆரம்பவிலை 120ரூபா. வேலைப்பாடு அதிகரிக்க, அதிகரிக்க விலை கூடும். ஒரு கம்மல் செட்டை ஒரு மணி நேரத்துல செஞ்சுடலாம்...
ஸ்கேல் இல்லன்னா நோட்ல நூலை சுத்தி மொத்தம் 15 இழை இருக்குற மாதிரி எடுத்துக்கனும்....
இடைவெளி விட்டு மேல படத்துல இருக்குற மாதிரி நூலை கோர்த்துக்கிட்டு வரனும்.
நூலை எல்லா இடத்துலயும் சுத்திட்ட பிறகு கம்மலுக்குள் க்ளூ வச்சு நூலை ஒட்டி மிச்ச மீதி நூலை வெட்டிடனும்.
கம்மல் பேஸ் ரெடி.....
ஒரு கம்பில முத்தை கோர்த்துக்கிட்டு செஞ்சு வச்சிருக்கும் கம்மலை கோர்த்துக்கனும்.
அதேமாதிரி இன்னொரு பக்கத்து கம்பில இன்னொரு முத்தை கோர்த்து இன்னொரு கம்மலை கோர்த்து க்ளூ போட்டு ஒட்டிக்கனும்.
எப்ப பாரு ஜிமிக்கை கம்மல்ன்னு செஞ்சு போட்டுக்குறதுக்கு பதிலா புது டிசைன்ல தொங்கட்டான் ரெடி.
ரெண்டு கம்மலும் ஜாயின் பண்ண இடம் தெரியாம இருக்க ரன்னிங்க் ஸ்டோன் ஒட்டிக்கனும்.
கம்மல் பேஸ்ல க்ளூ தடவிக்கனும்...
சின்ன பிளாஸ்டிக் ரவுண்ட்ல நூலை சுத்தி கம்மல் பேஸ்ல ஒட்டிக்கிட்டு நமக்கு விருப்பப்பட்ட மாதிரி கல், முத்துன்னு வச்சு அலங்கரிச்சுக்கலாம்.
தொங்கட்டான் ரெடி...
வட்ட வடிவ கம்மல் பேஸ்ல சில்க் த்ரெட்டில் இருவது இழை எடுத்திக்கிட்டு நெருக்கமா சுத்திக்கிட்டு ஃபேஃப்ரிக் க்ளூவை வைச்சுக்கனும்.
இன்னொரு ஃபேஃப்ரிக் க்ளாத்லவட்டவடிவமா வெட்டிக்கிட்டு கம்மல் பேசை வச்சு ரெண்டுத்தையும் ஒட்டிக்கனும்.
என் பசங்களுக்கு கருப்பு கலர்ன்னா இஷ்டம். அதனால பெரியவளுக்கு ஒன்னு. சின்னவளுக்கு ஒன்னு..
என் பசங்களுக்கு கருப்பு கலர்ன்னா ரொம்ப இஷ்டம்... அதுல ஜிமிக்கி செஞ்சு தரச்சொன்னாங்க. கைவண்ணம் பகுதில பதிவிட ஒன்னும் செய்யலியேன்னு இருக்கும் நேரத்துல கேட்டதால சுடச்சுட செஞ்சு பதிவு போட்டாச்சு.
நன்றியுடன்
ராஜி
எல்லாமே அட்டகாசமா இருக்கு ராஜி க்கா...
ReplyDeleteநுண்ணிய வேலைகள். கைவண்ணம் அருமை. பாராட்டுகள்.
ReplyDeleteஅழகோ அழகு....
ReplyDeleteஅசத்துங்க.
ReplyDeleteமிகத் திறையுடன் செய்கின்றீர்கள் சகோதரி/ ராஜி! மிகவும் அழகாக இருக்கின்றன. பாராட்டுகள்
ReplyDeleteதுளசிதரன், கீதா
அனைத்துமே அழகு ராஜி. அதிலும் கடைசிக்கு முந்திய படத்தில் உள்ளது வெகு அழகு.
ReplyDelete