Wednesday, May 11, 2022

மீண்டும் உங்களோடு சேர்த்துக்கிடுங்க சாமியோவ்!!

 


ஐயா கருப்ப (blog) சாமி!!

பெரிய மகள் திருமணம், கால் எலும்பு முறிவு, பேரன் பிறப்பு, மகள் மருமகன் பேரனுக்கு கொரோனா, மீண்டும் பெரிய மகள் கருத்தரிப்பு, இளைய மகளுக்கு திருமணம், பெரிய மகளின் இரண்டாவது குழந்தை குறை பிரசவம், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றும் கொண்டு வரும் பெரிய பொறுப்பு, மாமனார் இறப்பு, தாய்மாமன் இறப்புன்னு வரிசையா நிக்காம ஓடுனதுல உன்னைய கண்டுக்காம விட்டது தப்புதான்...

பிள்ளைகள் அதது எதிர்காலத்துக்காக ஓடும் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாம பின் தங்கி தனியா இருக்கும்போதுதான் உங்க அருமை தெரியுதுங்க...

நூத்துக்கணக்குல கமெண்ட் வேணாம், அஞ்சோ பத்தோ போதும்... அதிகமா ஷேரும், வீவர்சும்கூட வேணாம்.. நீங்களே எதாச்சும் பார்த்து என்னைய போரடிக்காம பார்த்துக்கிட்டா போதுமுங்க சாமி!!

என்னைய மீண்டும் உங்களோடு சேர்த்துக்கிட்டா மட்டும் போதும்!! காலத்துக்கும் உங்களுக்கு விசுவாசமா இருப்பேனுங்க.. மன்னிச்சு ஏத்துக்கிடுங்க....

நன்றியுடன்,
ராஜி.

17 comments:

  1. வருக சகோ நலமா ?
    எல்லாம் நீங்களே சொல்லி விட்டீர்கள் இனி நடப்பவை நலமா கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நலம் கிட்டினால் நல்லதுதான்ண்ணே.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே

      Delete
  2. வாங்க வாங்க ராஜி, வாழ்க வளமுடன்.
    நானும் ஜி போல சொல்கிறேன். இனி எல்லாம் நலமாக நடக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும், நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்கும் நன்றிங்க

      Delete
  3. நல்லதே நடக்கட்டும். தொடர்ந்து பதிவிட வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து பதிவிட ஆசைதான்.. காலம்தான் கை கொடுக்கனும்ண்ணே

      Delete
  4. வருக. பதிவுகள் மூலம் சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. சந்திக்கலாம்ப்பா.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  5. இவ்வளவு சோகங்களைச் சந்தித்துவிட்டீர்களா? இனிமேல் உங்களுக்கு நன்மைகளே விளையும் என நம்புங்கள். மீண்டும் எழுத வாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்மைகள் விளையும்ன்னு நம்பிக்கையில்தான் வாழ்க்கையே ஓடுது.. வருகைக்கும், கருத்துக்கும் நன்றிப்பா

      Delete
  6. வருக... வருக...

    அப்பாடா...! கடவுச்சொல் மறக்கலே...! + கைப்பேசி எண் மாத்தலே...!

    ReplyDelete
    Replies
    1. கைப்பேசி எண் மாற்றும் நிலைக்கு வந்து, இதே நம்பர்தான் வேணும்ன்னு அடம்பிடிச்சு வாங்கி வந்துட்டேன். கடவுச்சொல் என்னிக்குமே மறக்காது

      Delete
  7. ராஜி வாங்க வாங்க....நல்ல விஷயங்களும் வருத்தமான விஷயங்களும் கலந்து கட்டி இவ்வளவு நடந்திருக்கும் போது எப்படி வலைப்பக்கம் வர இயலும்? அதனால் எந்த வருத்தமும், குறையும் வேண்டாம். இனி நல்லதே நடக்கும் என்று நம்புவோம். பதிவுகள் தொடரட்டும். நிறைய இருக்கும் என்று நினைக்கிறேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நிறையலாம் எதுமில்லை கீதாக்கா. புதுசாதான் தொடங்கனும்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கீதாக்கா, துளசி சார்

      Delete
  8. வருக... வருக.. நலம்தானே..

    ReplyDelete
  9. வருக .வருக

    ReplyDelete
  10. வருக வருக

    ReplyDelete