வலி, அவமானம், வேதனை, தியாகம்லாம் பெண்ணினத்துகே உரியதுன்னு நினைச்சுக்கிட்டிருக்கோம். ஆனா
பாவப்பட்ட உயிரினம் எதுன்னு கேட்டா அது ஆணினம்தான். விட்டுக்கொடுத்தல், உணர்ச்சியினை வெளிக்காட்ட முடியாமை, பொறுப்புணர்ச்சின்னு போற்றத்தக்க பல விசயங்கள் ஆணிடம் உண்டு. தேதி நினைவில்
கொள்ள முடியாமை, ஒரு நேரத்தில் ஒரு விசயத்தில் மட்டுமே
கவனம் செலுத்தமுடியும், அவசரம், கோவம் மாதிரியான சில குணங்களால் ஆண்களுக்கு கெட்டப்பேரு.
ராமாயணத்துல அதிகம் பேசப்படாத கதாபாத்திரங்களில் சத்ருக்ணன் பாத்திரமும் ஒன்று. அப்பாத்திரம் பற்றிய குறிப்புகள் மிகக்குறைவு. மொத்த ராமாயணத்துலயும் அவர் வாய் திறந்து பேசினதா சொல்லப்படும் தருணங்களை விரல்விட்டு எண்ணிடலாம். தசரத மகாராஜாவுக்கு பிள்ளையில்லாத குறையை போக்க, புத்திரகாமேட்டி யாகத்தை நடத்த, அதில் கிடைத்த பாயாசத்தை அறுபதினாயிரம் மனைவிமார்களில் பட்ட மகிஷியான கோசலைகும், அன்புக்கு பாத்திரமான கைகேயிக்கு இருபங்காக கொடுத்தார். தங்களுக்கு கிடைத்த பாயாசத்திலிருந்து கொஞ்சமென சுமித்ரைக்கு கைகேயியும் கோசலையும் சுபத்ரையிடம் கொடுத்தனர்.
கோசலைக்கு விஷ்ணுவின் அம்சமான ராமரும், கைகேயிக்கு விஷ்ணு கையிலிருக்கும் சக்கரம் பரதனாகவும், சுமித்தரைக்கு ஆதிசேஷன் லட்சுமணனாகவும், விஷ்ணு கையிலிருக்கும் சங்கு சத்ருக்ணனாகவும் அவதரித்தன. லட்சுமணன் எப்படி ராமர்மேல் பாசம் வைத்திருந்தானோ அதுமாதிரியே பரதன்மேல் மிகுந்த பக்தியும், அன்பும் வைத்திருந்தான் சத்ருக்ணன்.சத்ருக்ணன் பாசக்காரன் மட்டுமல்ல
சிறந்த நிர்வாகத்திறன் கொண்டவர், மக்களின் தேவையை உணர்ந்து அதற்கேற்ப
செயல்படுபவர், வீரதீரத்துல் லட்சுமணனுக்கு சற்றும்
சலைத்தவனில்லை. அதேநேரம் ராமன், பரதனைப்போல சாந்தசொரூபியாய் இல்லாம லட்சுமணனைப்போல கோவக்காரன். நீதிநேர்மை,
மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பவன். ராமன் திருமணத்தின்போது சீதையின் மூன்றாவது
தங்கையான ஸ்ருதகீர்த்தியை மணந்தான்.
திருமணம் முடிந்த, சில மாதங்களில், பரதன், தன் தாய்மாமன் வீட்டிற்குப்
புறப்பட்டபோது, பரதனுடன் சத்ருக்ணனும் சென்றுவிட்டதாய்
புராணங்கள் சொல்கிறது.
அதன்பிறகு
தசரதன் இறந்த செய்தி கேட்டு, பரதனுடன் சத்ருக்ணன் நாடு
திரும்பும்போதுதான் அவனைப்பற்றிய குறிப்புகள் மீண்டும் ராமாயணத்தில் வருகிறது. !
ராமனும், சீதையும், லட்சுமணனும் காட்டிற்குச் சென்றதைக்கேட்டு, முதலில் வருத்தமடைந்து, பின்னர் தன் அண்ணனான லட்சுமணன்மீது கடுங்கோபம்
கொள்கிறான். அப்பா, அம்மாக்களை, சிறைபிடித்தாவது, ராமன் காட்டிற்குச் சென்றதைத் தடுத்திருக்க வேண்டாமா? எனக் கோபம்கொள்கிறான். இதனை பரதனுடனும் பகிர்ந்து கொள்கிறான்.
பரதனுடன்
பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஆடை அலங்காரத்தோடு தனது எண்ணம் பலித்ததை எண்ணி
மகிழ்ச்சியாய், மந்தரை அந்த பக்கமாய் வருகிறாள்.,
இதனைப்பார்த்த சத்ருக்ணன் கோபம் கொள்கிறான்!
மந்தரையின் முடியைப் பிடித்திழுத்து கைகேயின் அரண்மனை விட்டு வெளியேத்த இழுத்து
செல்கிறான். இதனைப் பார்த்த கைகேயியின்
தோழியர், கைகேயிடம் சென்று நடந்ததைக்
கூறுகின்றனர்! உடனே கைகேயி வந்து சத்ருக்ணனிடம், மந்தரையை விடுவிக்கும்படி சொல்கிறாள். அந்தக் கைகேயியையும் கடிந்து
கொள்கிறான் சத்ருக்ணன். , மந்தரையை கொல்லத் துடிக்கிறது அவன் மனம். அப்போது பரதன் அங்கு
வருகிறார். பெண்களைத் துன்புறுத்துவது சரியல்ல. இதனை ராமன் கேள்விப்பட்டால்,
உன்மீது கோபம் கொள்வார். மந்தரையை விட்டுவிடு என சத்ருக்ணனுக்கு ஆலோசனை
கூறுகிறார். பரதனின் ஆலோசனைப்படி மந்தரையை விட்டுவிடுகிறான் சத்ருக்ணன்.
உடனே சத்ருக்ணன்
சாந்தமடைந்து மந்தரையை விட்டு விடுகிறான்.
இதன்பின், ராமர், சீதா, லட்சுமணனை திரும்ப அழைத்துவர, பரதனுடன், சத்ருக்ணனும் செல்கிறான்.
சித்ரகூடத்தில் ராமர் தங்கியிருந்த இடத்தை முதலில் கண்டு பிடித்தது
சத்ருக்ணந்தான். ராமனை சாஷ்டாங்கமாய்
விழுந்து வணங்கி, பரதனுடன் அழைக்கிறார்.
மந்தரை, கைகேயியை சத்ருக்ணன் கடிந்துக்கொண்ட தகவல் தெரிய வந்து விடுகிறது! பரதனுடன், ராமனுடைய பாதுகையைப் பெற்று, நாடு திரும்ப எத்தனிக்கும்போது, ராமன் சத்ருக்ணனை அழைத்து, நீ அன்னை கைகேயிடம் அன்பு பாராட்டவேண்டும். ஒருபோதும் கோபித்துக் கொள்ளக்கூடாது, மந்தரையையும் நிந்திக்கக்கூடாதென அறிவுரை கூறிகிறார். பிறகு பரதனுடன், சத்ருக்ணன் நாடு திரும்புகிறார். பரதன், நாட்டின் பரிபாலனத்தை சத்ருக்ணனிடம் ஒப்படைத்து, கிட்டத்தட்ட தவவாழ்வினை அரண்மனையிலிருந்தபடியே ராமனை போலவே பரதனும் வாழ்ந்தான். பரதன் சார்பாக திறம்பட நாட்டினை ஆண்டான் சத்ருக்ணன்.
இதன்பின் சத்ருக்ணன் பற்றிய தகவல்கள் ராமர், இலங்கையிலிருந்து திரும்பும் போதுதான் மீண்டும் வருகிறது. அனுமார் வந்து பரதனிடம், ராமனின் வருகையைத் தெரிவிக்கிறார். உடனே, பரதன் தம்பி சத்ருக்ணனை அழைத்து, பிரமாதமாக வரவேற்க ஏற்பாடு செய் என்கிறார். இதற்காக வழிகளை செப்பனிட்டு, கட்டிடங்களை அலங்கரித்து நகரை அழகுமிக்கதாக, சத்ருக்ணன் மாற்ற ஏற்பாடு செய்தான். ராமர் பட்டாபிஷேகம் இனிதே நடந்து முடிந்தது.
அதன்பிறகு மீண்டும் சத்ருக்ணன் பற்றிய தகவல்கள், லவணாசுரன் என்னும் அசுரன் கொடுமைகள் பற்றி ரிஷிகள் புகார் கூறும்போதுதான் வருகிறது. பட்டாபிஷேகம் முடிந்து, பல ஆண்டுகள் கழிந்து, லவணாசுரன் கொடுமைகள் பற்றி அறிந்த ராமன், அவனைக் கொல்ல பரதனை அனுப்பலாமென ஆலோசிக்கிறார். அப்போதுதான் சத்ருக்ணன் அண்ணன் ராமனிடம் அந்த வாய்ப்பு தனக்கு அளிக்கப்பட வேண்டும் எனக் கோருகிறார். தம்பியின் வேண்டுதல் கேட்டு மகிழ்ந்த ராமன், ஆஹா! நீயே அதற்குச் சிறந்தவன். நீயே அவனைக் கொல்! நீ அவனை ஜெயித்து வந்தபின், லவணாசுரன் ஆண்டுவந்த மது நாட்டின் அரசனாக பட்டாபிஷேகம் செய்விக்கிறேன் என ராமன் கூறியதைக் கேட்ட சத்ருக்ணன், தன்னுடைய பண்பை இவ்விடத்தில் வெளிப்படுத்துகிறார்.
நான் லாவணாசுரனைக் கொல்கிறேன் எனக்கூறியது என் வீரத்தை வெளிப்படுத்தத்தான். என் அண்ணா பரதன். அவனே அதனையும் ஆளட்டும்! அதற்குத் தாங்கள் உத்தரவிட்டாலே மகிழ்வேன் என்கிறார். ஆனால் ராமரோ, வென்றவன் அவனே அரசாளவேண்டும். ஆக வென்றால் நீதான் மகுடம் சூட்டிக்கொள்ள வேண்டும். இது ராமனின் உத்தரவு. மறுப்பு கூறாதே! உத்தரவிட்டு பெரும்படையை சத்ருக்ணனுடன் ராமன் அனுப்பி வைக்கிறார். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நினைவுப்படுத்தவேண்டும். லவணாசுரனை வெல்ல சத்ருக்ணன் புறப்படுபோது சீதை கர்ப்பிணியாய் இருந்தாள். ராமனின் சந்தேகத்திற்கு மீண்டும் ஆளான சீதை, காட்டுக்கு சென்று வால்மீகி ஆசிரமத்தை சரணடைகிறாள். இந்த வால்மீகி ஆசிரமத்தில் சத்ருக்ணன் ராமர் படையுடன் வந்து ஒருநாள் தங்குகிறார். அப்போது சீதைக்கு லவகுசர்கள் பிறக்கின்றனர். பிறகு ஏழு நாட்கள் பயணம் செய்து யமுனை நதிக்கரையில் இருந்த சயவன மகரிஷியின் ஆசிரமத்தை அடைந்து அங்கு லவணாசுரன் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்துக்க்கொண்டு, சத்ருக்ணன் கடும்போர் புரிந்து கடைசியில் அவனை தன்னுடைய அம்பினால் கொல்கிறார். அனைவரும் அவனை வாழ்த்துகின்றனர்.
ராமன் வாக்களித்தபடி மது நாட்டுக்கு மன்னனாகி, புதிய மதுராவை உருவாக்குகிறான். இன்றைய மதுரா சத்ருக்ணனால் நகரமாக உருப்பெற்றதுன்னு குறிப்புகள் சொல்லுது. பனிரெண்டு வருடங்கள் ஆண்டபின் மீண்டும் அயோத்தி நோக்கி வருகிறார். வழியில் மீண்டும் வால்மீகி ஆசிரமத்தில் தங்குகிறார். அப்போது லவ-குசர்கள் ராமனின் கதையை இசையாக்கிப் பாடுவதை கேட்கிறார்.
அயோத்தி சென்று ராமரை சந்திக்கிறார். ராமருடனேயே வாழ விரும்புகிறார். ஆனால், ராமரோ, சத்திரிய தர்மம், ராஜபரிபாலனம் செய்வதுதான். ஆக தொடர்ந்து மதுராவை ஆள்வதே சரி. அதனைக் கடமையாகக் கொண்டு செயல்படு என அனுப்பி வைக்கிறார். அதன்பிறகு சத்ருக்ணன் பற்றிய தகவல் மீண்டும் ராமர், தனக்குக் கடைசி காலம் வந்துவிட்டதை உணர்ந்து கொள்ளும்போதுதான் வருகிறது. இதனை அறியும் சத்ருக்ணன், தன்னுடைய இரு மகன்களுக்கும் பட்டாபிஷேகம் செய்துவிட்டு, ராமனைத் தேடி வருகிறார். ராமன் சரயு நதியில் இறங்கி, மூழ்கும்போது, அவரைப் பின்பற்றி, சத்ருக்ணனும் மூழ்கிவிடுவதாக ராமாயணம் சொல்லுது. சத்ருக்ணன், மதுராவை நீண்ட நாள் ஆண்டார் எனவும் மதுராவில் சொல்லப்படுது. எது உண்மைன்னு சத்ருக்ணன் மட்டுமே அறிவார்.
ராமாயணத்தில் சொற்ப இடங்களில் வந்தாலும் சகோதரர்கள்மீது அளவற்ற பாசம், நீதி நேர்மை, திறமை, வீரம்ன்னு சகல நல்ல குணத்துடன் வாழ்ந்த சத்ருக்ணன் பேர் பரதன், லட்சுமணன் அளவுக்கு பேசப்படலைன்னாலும் பாயம்மல் -திருச்சூர் (கேரளா), முனிக்கேஷ் - ( ரிஷிகேஷ் ரெடி) கன்ஸ்டிலா அருகில் - மதுரா - உத்தரப்பிரதேசம் என மூன்று இடத்தில் தனிக்கோவில் அமைத்து சத்ருக்ணனை வழிபடுகின்றனர்.
பேசப்படாத கதாபாத்திரத்துடன் மீண்டும் வருவேன்...
நன்றியுடன்,
ராஜி
சுவாரஸ்யமான கதை. சீதைக்கு தங்கை இருப்பதை இப்போதுதான் அறிந்தேன்!
ReplyDeleteவாட் ஈஸ் திஸ் சகோ?! ஜனகனுக்கு சீதை கண்டெடுத்த பெண், சீதை அரண்மனை வந்தபின் அவருக்கு மூன்று மகள்கள் பிறந்தன. ஊர்மிளா, மாண்டவி, ஸ்ருதகீர்த்தின்னு மூணு பெண்கள் பிறந்தாங்க, இவங்க முறையே லட்சுமணன், பரதன், சத்ருக்ணனை மணந்தனர். இதை ஊர்மிளா பதிவிலேயே சொல்லி இருந்தேனே!
Deleteஅதெல்லாம் எங்கேங்க ஞாபகம் இருக்கு!
Deleteசோ சேட்
Deleteஸ்ரீராம் நீங்க போட்டுருக்கற உங்க ஐடி படம் ரொம்பவே உங்களுக்குப் பொருத்தமா இருக்கு ஹா ஹா ஹா ஹ அஹா...
Deleteகீதா
எதுவுமே தற்செயலாய் நடப்பதில்லை கீதாக்கா. எல்லாமே தன்செயலாலே நடக்குது
Deleteதேடி தேடி சொல்கிறீர்கள் சகோதரி... அருமை...
ReplyDeleteஆமாம்ண்ணே. தெரிஞ்சதை, கேட்டதை அப்படியே பதிவிடுவதில்லை. இன்னும் பல தளங்களுக்கு போய் உறுதிப்படுத்திக்கிட்டுதான் பதிவு போடுவேன்.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே. உள்குத்திருந்தால் வெளிப்படையா சொல்லவும்
சீதைக்கு தங்கை இருப்பதை
ReplyDeleteஅதுவும் மூன்றாவது தங்கை இப்போதுதான் அறிந்தேன்!
முன்னரே ஊர்மிளா பதிவில் சொல்லி இருக்கேன்ண்ணே
Deleteசத்ருக்ணன் பற்றிய செய்திகளுக்கு நன்றி சகோ. அதிகம் பேசப்படாத கதாபாத்திரங்களைப் பற்றி படிக்கும்போது சுவாரஸ்யமாக இருக்கிறது.
ReplyDeleteஅதிகம் கவனிக்கப்படாத இடத்திலும் விரும்பக்கத்தக்கதான விசயம் எதாவது இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
Deleteசிறப்பான தகவல்கள்....
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
Deleteஅறியாத பல தகவல்கள். சத்ருக்னன் பற்றி எல்லாம் அதிகம் தெரிந்ததில்லை.
ReplyDeleteதுளசிதரன் : ஓ சீதைக்குத் தங்கைகள் இருந்து அவர்களை ராமனின் சகோதரர்களெ தான் மணக்கிறார்களா? அதுவும் சரி இப்ப நீங்க சொல்லியிருப்பதும் சரி எல்லாமெ புதியவை எனக்கு
சுத்தம், ராமாயணம் கதையின் ஆரம்பமே தெரிலைன்னா எப்படி?! கதை தெரியாதுன்னு கதை விடுறீங்களா துளசி சார்?!
Delete